திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.
1987 செப்டெம்பர் 15 அன்று திலீபன் தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்கள் பட்டினி கிடந்து அவனது கோரிக்கைகளை (காந்தி உண்ணா நோன்பிருந்து பெற்றுக் கொடுத்ததாக சொல்லப்படும்) இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில் செப்டெம்பர் 26 சாவினைத் தழுவிக் கொண்டான்.
திலீபனும் எங்களின் இளைய தலைவன்தான்.
1 comment:
ஒரு இந்தியத் தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன். இவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி
Post a Comment