Friday, October 31, 2008

ராடர்களை இயக்கும் இந்தியர்கள் மீது சந்தேகம்!

இந்திய கதுவீ (ராடர்) கருவிகளை இயக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ள ஜே.வி.பி. கட்சி, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்தியை படையினர் சுட்டு வீழ்த்தியது என்பது பொய்யான தகவல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையினால் கதுவீ கருவிகளை இயக்கும் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாகவும் ஜே.வி.பி குற்றம் சாட்டியிருக்கின்றது.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலை புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வானூர்தி தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜே.வி.பி கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத், இந்தியா வழங்கிய கதுவீ கருவிகள் தரமற்றவை என்றும் கூறினார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் நவீன கதுவீ கருவிகளை பெறுவதன் மூலமே புலிகளின் வானூர்தி தாக்குதல்களை நிறுத்த முடியும். இந்தியா போலியான கதுவீ கருவிகளை வழங்கி ஏமாற்றுகின்றது எனவும் விஜித கேரத் தெரிவித்துள்ளார்.

வவுனியா படைத்தளம் மீது புலிகள் வானூர்தி தாக்குதல் நடத்தியபோது புலிகளின் வானூர்தி ஒன்றை சுட்டு விழுத்தியதாக படையினர் தெரிவித்திருந்தமை பொய்யான தகவல் என்றும் கூறிய அவர், அவ்வாறு சுட்டு விழுத்தப்பட்டிருந்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னாரிலும் கொழும்பிலும் வானூர்தி தாக்குதலை ஒரே நேரத்தில் புலிகள் நடத்தியிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, October 27, 2008

சளைத்தவர்கள் இல்லை. இந்தியாவிற்கு இலங்கை சவால்

கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக முறையிடப்படடுள்ளது.

Sunday, October 26, 2008

Thursday, October 23, 2008

சீமான் அமீரும் கைது ?

இயக்குனர்களான சீமான் அமீர் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. உறுதிப் படுத்த இயலவில்லை

Wednesday, October 08, 2008

தமிழகத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை

போர் வெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எழுச்சி கொண்டிருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது தமது தொப்புள் கொடி உறவுகளின் உரிமை போருக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
08.10.2008

தமிழக உடன்பிறப்புக்களுக்கு.....

ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் எமது அன்பிற்குரிய தமிழகத்து உடன்பிறப்புக்களே!

உயிர்காவத்துடிக்கும் குண்டுமழைக்கும் போர் வானூர்திகளுக்கும் நடுவே விடுதலைக்காக போராடும் உங்கள் ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்காக குரல் கொடுத்திருப்பது எமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.

ஈழத்தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாதவகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஈழத்தமிழரை பூண்டோடு ஒழித்துக்கட்டி தமிழரின் தாயக நிலத்தை ஒரு மயான பூமியாக்கும் விருப்புடன் சிங்கள அரசு இன அழிப்புப்போரை தொடுத்துள்ளது. இதற்கு சிங்களத்தின் அனைத்துக்கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கொடுத்துள்ளன. சிங்களப்படைக்கான ஆட்திரட்டலில் அனைத்துச் சிங்களக்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள இனம் ஒன்றுபட்டுத் தமிழரை அழித்தொழிக்க படை நடத்தி வருகின்றது.

இந்தப் போர் நெருப்பில் சிக்குண்டு எமது மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குண்டுகள் போட்டு எமது மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குடியெழுப்பிக் கலைக்கின்றார்கள். நிலம் விழுங்கி முன்நகரும் சிங்களப்படைகளிடம் இருந்து உயிர்பிழைக்க எமது மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மானத்துடனும் மிடுக்குடனும் வாழ்ந்து வந்த தமிழர்களை ஒரு நாடோடிக் கூட்டம் போல் மரநிழல்களுக்குக்குக் கீழும் தெருவோரங்களிலும் வாழ சிங்கள இனவெறியரசு நிர்ப்பந்தித்துள்ளது.

அவலப்படும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்களஅரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழினம் நாதியற்ற இனமல்ல. பூண்டோடு அழிப்பதற்கு விட்டில் பூச்சிகளுமல்ல. பெயரோடும் புகழோடும் இந்தப்பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் ஒரு வீர இனம்.

உலகின் மூத்த குடிகளில் தமிழினமும் ஒன்று. கொடியுடனும் படையுடனும் மாட்சியுடன் வாழ்ந்துவந்த பெருமைக்குரிய தமிழினம் இன்று தனக்கென ஒரு நாடில்லாது தவிப்பது ஒரு வரலாற்றுச்சோகம்.

தமிழர்க்கென்றொரு தனியரசை ஈழ மண்ணில் உருவாக்க உயிர்கொடுத்துப் போராடிவரும் உறவுகளுக்காகக் கடல்தாண்டிக் கரம் நீட்டும் தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டின் உதவி ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று சிங்கள அரசு கற்பனையில் மூழ்கியிருந்தவேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து சிங்கள அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.

சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம். உலகத்தமிழரின் பண்பாட்டுமையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம்.

"தானாடா விட்டாலும் தன் தசையாடும்" என்பதுபோல ஈழத்தமிழர்கள் அல்லற்படும்போதெல்லாம் தமிழ்நாடு தன் உணர்வலைகளை வெளிப்படுத்துவது வழமை. ஈழத்தமிழர்களின் இன்னல்களை போக்க இந்திய மத்திய அரசு உதவவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இத்தகைய அரசியல் சூழலில்தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தமிழின உணர்வுடன் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. சிங்கள அரசு நடத்தும் இன அழிப்புப்போருக்கு இந்தியாவின் பகைநாடுகள் ஆயுத உதவிகளை கொடுத்து வருகின்றன. உலகிலுள்ள மேலும் சில நாடுகள் சிங்கள அரசிற்கு பொருளாதார உதவிகள் செய்துவருகின்றன. இவ்விதம் உலகநாடுகளின் ஒத்தாசையுடன் சிங்கள அரசு போரை நடத்துகின்றது.

நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளினூடாக பலத்தையும்வளத்தையும் ஒன்றுதிரட்டி ஈழத்தமிழ்மக்களின் நியாயபூர்வமான விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு முனைகின்றது.

ஆனால், ஈழத்தமிழர்களோ தமது உரிமைக்காகக் கடந்த முப்பது ஆண்டு காலமாக அளப்பரிய தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புணர்வுடன் விடுதலைக்காகப் போராடுகின்றனர். ஈழத்தமிழரின் சுதந்திரப்போராட்டத்திற்கான ஆதரவையும் உதவிகளையும் எமது உடன்பிறப்புக்களான தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.

தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவு தமிழீழ மக்கள் என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டுத்தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக காட்டியுள்ள ஒருமித்த ஆதரவுகண்டு ஈழத்தமிழர்களும் எமது விடுதலை அமைப்பும் மகிழ்ச்சி அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டுத்தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெறவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் அவாவாகும்.

வாழ்க தமிழ் - மலர்க தமிழர்களின் ஒற்றுமை

நன்றி

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்."

பா.நடேசன்
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

Monday, October 06, 2008

தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு இந்திய மத்திய அரசு அறிவிப்பு

ஈழத்தமிழ்மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்டுவரும் இராணுவத்தாக்குதல்கள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறு, இந்தியாவிற்கான இலங்கைத்தூதரிடம், இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இலங்கைத்தூதுவரை நேரடியாக அழைத்து, இந்திய மத்திய அரசால் இவ்வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான செய்திகள் விரைவில்....

என ஒரு செய்தி 4தமிழ்மீடியா இணையத்தில் காணப்படுகிறது.
www.4tamilmedia.com

Thursday, October 02, 2008

STOP - கலைஞர் மத்திய அரசுக்கு SMS

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதையும் இலங்கையில் தமிழர் மீது ஏவி விடப்பட்டிருக்கும் யுத்தத்தை நிறுத்துமாறும் மத்திய அரசுக்கு SMS குறுஞ்செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அச்செய்தியின் முழு விபரம் வருமாறு
STOP KILLING TAMILS

காலமறிந்து களமறிந்து கலைஞர் ஆற்றியுள்ள இப்பணி அவரது அரசியல் முதிர்ச்சியையும் இலங்கைத் தமிழர்பால் அவர் கொண்டிருக்கும் அன்பினை உணர்த்துவதாகவும் தமிழக அரசியல் நோக்கர்கள் நோக்குகின்றனர். கலைஞர் அனுப்பிய செய்தி அனைத்து ஊடகங்களுக்கு forward செய்யப்பட்டுள்ளது.