தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதையும் இலங்கையில் தமிழர் மீது ஏவி விடப்பட்டிருக்கும் யுத்தத்தை நிறுத்துமாறும் மத்திய அரசுக்கு SMS குறுஞ்செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அச்செய்தியின் முழு விபரம் வருமாறு
STOP KILLING TAMILS
காலமறிந்து களமறிந்து கலைஞர் ஆற்றியுள்ள இப்பணி அவரது அரசியல் முதிர்ச்சியையும் இலங்கைத் தமிழர்பால் அவர் கொண்டிருக்கும் அன்பினை உணர்த்துவதாகவும் தமிழக அரசியல் நோக்கர்கள் நோக்குகின்றனர். கலைஞர் அனுப்பிய செய்தி அனைத்து ஊடகங்களுக்கு forward செய்யப்பட்டுள்ளது.
6 comments:
ஆகா பாருங்கள் எங்கள் தமிழக முதல்வர் அரசு நிதியை எவ்வளவு திறமையாக பயன் படுத்துகிறார்.
தொலை பேசியில் பேசினால் 49 பைசா ஆகிவிடும் என்று 25பைசாவில் குறும்செய்தி sms அனுப்பி மக்களுக்கு நிதி சுமையை குறைத்துள்ளார்.
தன் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் தன் புதல்வர் ஸ்டாலினுக்கு ஆமாம் சாமி போடுபவருமான பெரம்பலூர் ராசா தானே தொலை தொடர்பு மந்திரி.
எது எதற்கு எல்லாமோ தொலை பேசியில் மன்மோகன், சோனியா, அந்தோனி இடம் உறவாடும் கலைஞர்க்கு ஒரு தொலை பேசியில் பேச வலிக்கிறதா, ஈழ்த் தமிழார் துயரம் பற்றி.
கலைஞரின் கபட நாடகம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவாக வெளியே வரும், திரை vilagum விரைவில்.
கருணாநிதியை தமிழர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர் திருந்தவேண்டும்.
மூன்று வார்த்தையாக டைப் செய்ய ஏது நேரம் ?
வெறும் STOP என்று மட்டும் அனுப்பியிருப்பார் என்பது நமது யூகம்.
மன்மோகன் ஜி, மற்றும் சோனியா ஜி உரையாடலை கீழே பாருங்கள்..
சிங்ஜி: மேடம், கலைஞர்ஜி ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கார்.
அனடோனீயோ மைனோ ஜி: அதான் பார்வேர்டு செய்தீர்களே ? ஒன்னும் விளங்கலை...ஜஸ்ட் STOP அப்படீன்னு இருக்கு....
இவர் அனுசக்தி ஒப்பந்தம் பற்றி சொல்றாரா ? புதிய தீவிரவாத சட்டம் பற்றி சொல்றாரா ? 3G ஸ்பெக்ட்ரம் அலகேஷன்ல கமிஷன் கொடுக்கிறத சொல்றாரா, இடஒதுக்கீட்டை சொல்றாரா ஒரு மண்ணும் விளங்கல..
ஒருவேளை இவர் தமிழரா இருக்கிறதால தமிழர் பிரச்சினை பற்றி ஏதும் சொல்றாறா ?
சிங்ஜி : சே...சே...தமிழர் பிரச்சினை பற்றியாவது, கலைஞர்ஜி பேசுறதாவது ? ஏதாவது குடும்ப தகறாறா இருக்கும் மேடம்...
சிங்ஜி : சே...சே...தமிழர் பிரச்சினை பற்றியாவது, கலைஞர்ஜி பேசுறதாவது ? ஏதாவது குடும்ப தகறாறா இருக்கும் மேடம்..
:):):)
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்.
மன்மோகன் சிங் தளதளத்த குரலில் கலைஞருக்கு ஏதோ சொன்னாராம்.என்னவாக இருக்கும்?
-Theevu-
Post a Comment