Saturday, November 08, 2008

புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எங்ஙனம் போர் நிறுத்தம் ? புலிகளின் பதில்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அண்மையை அறிக்கையொன்றில் புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எவ்வாறு இலங்கையில் போர் நிறுத்தமொன்றினை மேற்கொள்ள இயலும் என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது அக்கூற்று குறித்து கேள்வியெழுப்பிய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பதில் அளித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் ஒன்றிற்கு எமது தரப்பில் எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. எப்போதும் போர் நிறுத்தம் ஒன்றிற்குத் தயாராகவே இருக்கின்றோம். இருதரப்பு போர் நிறுத்தம் ஒன்றிற்கான ஏற்பாடுகளைச் செய்வது இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் புலிகள் இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களுக்கான தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.

இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின் சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் - 2002 இல் நோர்வே அனுசரணையோடு உருவாகிய போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும் புலிகள் அப்போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதான அதிகாரபூர்வ அறிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 comments:

மோகன் கந்தசாமி said...

///ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பதில் அளித்திருக்கிறார்///

Hai Kozhuvi,

Which media was that?

Mohan Kandasamy

Anonymous said...

http://tamilnet.com/art.html?catid=13&artid=27429

ஜோசப் பால்ராஜ் said...

ஒவ்வொரு முறையும் செம அடி வாங்கியவுடன் போர் நிறுத்தத்திற்கு வருவதும் சமாதானக் காலத்தில் தங்களை நன்கு தயார்படுத்திக் கொண்டு மீண்டும் போரில் இறங்குவதும் இலங்கை அரசுதானே தவிர புலிகள் அல்ல என்பது தான் உண்மை. ஆனால் நம் தமிழகத்திலேயே சில அரசியல்வியாதிகள் அதை திரித்துக் கூறிக்கொண்டுள்ளார்கள் என்பது தான் வேதனை.
கடைசியாக நார்வே நாட்டினரின் மூலமாக ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் இருந்தும் தன்னிச்சையாக விலகியது இலங்கை அரசு தானே?

Anonymous said...

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான, விமான-தலைப்படைத் தக்குதலை நிறுத்தி விட்டு, அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முயல வேண்டும் என்ற கோரிக்கையை,

இலங்கை அரசுக்கு, இந்திய மக்களின் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்துமாறு கோரி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இயக்கம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே!
தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் போரை நிறுத்த வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக ஏற்று அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றின.

ஆனால், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் கொல்லப்படுவது நீடிக்கிறது. இந்திய அரசு போர் நிறுத்தம் குறித்து இலங்கையுடன் பேசவே இல்லை என இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இதன் தொடர்பாக, போர் நிறுத்தம் என்றால், இருதரப்பும் அதை ஏற்க வேண்டும் மாறாக இலங்கை அரசை மட்டும் வற்புறுத்துவது பொருந்தாது என்றும், விடுதலைப் புலிகள் போரை நிறுத்த மாட்டார்கள் என்றும் பரவலாக கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் எனவே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியால் நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் இதற்கான சரியான பதிலை கூற இயலாது. எனவே இலங்கை அரசுப் படைகளுடன் மோதிக் கொண்டிருக்கும், மறு தரப்பின் நிலையைத் தெளிவுப்படுத்தக் கோரி பத்திரிகை, ஊடகங்கள் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க வேண்டுகோளை விடுத்தது.

போராடி வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், குறிப்பாக விடுதலைப் புலிகளும், போர் நிறுத்தம் குறித்து கருத்தை வெளியிட வேண்டுமென்று நவம்பர் 7-ஆம் தேதி அறிக்கை ஒன்றை கட்சியின் சார்பில் வெளியிட்டோம்.
இச்செய்தியைக் கண்டவுடன் 7-ம் தேதி இரவே இணைய தளத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைப் பொறுப்பாளர் பி.நடேசன் திட்டவட்டமான பதிலை வெளியிட்டுள்ளார்.

முதல் தேவை போர் நிறுத்தமே என்பதை விடுதலைப்புலிகள் தொடக்கம் முதல் வற்புறுத்தி வருவதாகக் கூறும் நடேசன் Òஇலங்கை அரசு தான், படைகொண்டு போரை நடத்தி வருகிறது. தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே தமிழ்மக்கள் போராடி வருகிறோம். எனவே இலங்கை அரசு போரை நிறுத்தினால் தாங்களும் தற்காப்புப் போர் நடத்தி வருவதையும் நிறுத்தி விடுவோம்Ó என்று கூறுகிறார்.

இதன் மூலம் விடுதலை புலிகளும் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்பது தெளிவாகி விட்டது.
எனவே இந்த அறிவிப்பினை அடிப்படையாக் கொண்டு இந்திய அரசு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்.
நார்வே நாட்டின் முயற்சியால் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாத்ம் 22-ம் நாளன்று போர் நிறுத்த ஒப்பந்தம், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கு இடையில் கையெழுத்தானது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை, இலங்கை அரசு 2008 ஜனவரி 16ம் நாளன்று ரத்துச் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்து, நார்வே நாட்டுப் பிரதிநிதிகளையும் திருப்பி அனுப்பி விட்டது.

போர் நிறுத்தத்தை இலங்கை அரசு கைவிட்டதை நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாண்டு, பின்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாகக் கண்டித்து ஜனவரி 4, 2008 அன்று அறிக்கை வெளியிட்டன.

ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான்-கி-மூனும், இலங்கை அரசின் செயலைக் கண்டித்தார். அமெரிக்க அரசும், அமைதி வழியில் அல்லாது ராணுவ ரீதியில் சிக்கலைத் தீர்க்க முயல்வது வெற்றி பெறாது என்பதோடு, வன்முறையும், உயிர்ச் தேசமுமே அதிகப்படும் என எச்சரித்துள்ளது. கனடாவும் இலங்கை அரசைக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு, மக்களுக்கு எதிரான போரை பல நாட்டுப் படைகள், ஆயுத உதவிகளுடன் இலங்கை அரசு நடத்தி வருகிறது.

எனவே பொறுப்புள்ள ஒரு அரசு என்ற முறையில் இலங்கை அரசு போர் நிறுத்தத்ததை அறிவிக்க வேண்டும். இந்திய அரசு அதை வலியுறுத்த வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழிகாண இந்திய அரசு முயற்கிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைப்புலிகள் போர் நிறுத்த வேண்டும் உடன்பாடுட்டுக்கு ஆதரவு தெரிவித்தததை வரவேற்பதுடன் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்று இந்திய மக்கள், தமிழ்மக்கள் சார்பில் இலங்கைத் தமிழ் மக்களின் தலைவர்கள் அனைவரையும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வேண்டுகிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் மனித, ஜனநாயக அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க உலக மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக இந்தியத் தமிழ்மக்கள் இது குறித்து,

மாறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு உரிமைகள் மீட்கப்படும் வரை குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி கேட்டுக் கொள்கிறது. தடைகளைத் தாண்டி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மீண்டும் உறுதியை தந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனமார பாராட்டுகிறது.