Saturday, November 08, 2008

சிறிலங்காவிற்கு அடிமையாக நான் தயார்

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்திற்குள்ளாயினர். இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தூதர், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று உறுதியளித்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
குமுதம்

------------------

போனால் போகட்டும் - தமிழ்த்தேசியத்தை தூக்கி கடாசி விட்டு சிறிலங்காவிற்கு அடிமையாகத் தன்னும் இருந்து விடலாம் என எண்ணத் தோன்றுகிறது. பின்னே தெற்காசிய பிராந்திய வல்லரசு நாடொன்றின் அடிமைச் சிட்டிசன் எனச் சொல்லிக் கொள்வது எவ்வளவு பெருமையானது.?

9 comments:

sathiri said...

நெசமாலுமா?? நம்பமுடியலை.அன்னிக்குககூட பசில் அண்ணாச்சி பிரணாப் தாத்தாகிட்டை இனிமேல் சுடமாட்டம் என்று கையைப்புடிச்சி சொன்னாரே..அவிங்க சொன்ன சொன்ன சொல்லை காப்பாத்திறவங்களாச்சே. அதே மாதிரி இவிங்களும் சொன்னதை நம்புறவங்களாச்சே. ஒண்ணுமே புரியலை கொழுவி

Anonymous said...

சிறீலங்காவுக்கு ஆயுதம் கொடுத்து தமிழக மீனவரையே கொல்லுவினமாம், பிறகு அது புலிகள் செய்ததெண்டு சொல்லுவினமாம்.

"சோ"மாரிக்கூட்டம் டெல்லியில் இருந்து தமிழகம் வரை இருக்கு

ARV Loshan said...

தெற்காசியப் பிராந்திய நாடொன்றின் அடிமை.... ம்ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு.. அப்பா ஸ்ரீ லங்கா எங்கேயோ போயிடுதுன்னு சொல்லுறீங்களா?

துப்பாக்கி குண்டுக்கு இலங்கைத் தமிழர்,இந்தியத் தமிழர் என்று வேறுபாடு இல்லையே..

King... said...

;)

Anonymous said...

இதத் தான் ஏத்தி விடுறதுன்னு தமிழ்நாட்டுல சொல்லுவாங்க!!!

கொழுவி said...

நாங்களும் ஏத்தி விட எவ்வளவோ முயற்சிக்கிறம். அசையுதே இல்லையே தேர்.. :(
எருமைத் தோலாலை இழுத்து மூடிப் படுக்கிறவனை எப்பிடி எழுப்புறது..

ஜோசப் பால்ராஜ் said...

போலி தேசியக் கும்மிங்கள எங்க காணோம்?
நாகப்பட்டிணம் மீனவர்கள் எல்லாம் என்னா ஆயுதம் கடத்திக்கிட்டுப் போனாங்களா? இல்லை அவங்கள புலிங்க சுட்டுட்டு இலங்கை கடற்படை மேல பழியப் போட்டுட்டாங்களா? என்ன சொல்லப் போறாங்க நம்ம போலி தேசிய வியாதிகள்?

இந்தப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு.........

Anonymous said...

நாகப்பட்டிண மீனவர்கள் இந்தியர்களே அல்ல!. அவர்கள் மாலத்தீவை சேர்ந்த மீனவர்கள். இந்தியக் கடல் பிரதேசத்தில் மீன் பிடித்ததால் இலங்கைக் கடற்படையினர் அவர்களை விரட்டி அடித்தார்கள். இதுதான் நடந்தது.

Anonymous said...

ஓ..
இந்திய கடற்பிரதேசத்தில வேறுயாரும் மீன்பிடித்தால் கூட அவர்களை திரத்த இலங்கை கடற்படைதான் வரணுமா.. ?
ஆகா