Friday, November 14, 2008

மகிந்தவுக்கு நன்றி

இந்தியாவில் வைத்து யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்பதை மகிந்த ராஜபக்சா உரத்து கூறியிருக்கிறார். ஈழத்தில் யுத்தம் தொடர வேண்டுமென்பதை இதை அங்கீகரிப்பதன் ஊடாக அண்டை அயல் நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன.
இனியொரு பொழுதில் ஈழத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரும் தார்மீக உரிமையையும் அவை இழந்து விட்டிருக்கின்றன. தொடரும் யுத்தத்தில் இனி ஈழத்தில் எந்த இடி விழுந்தாலும் இப்போதைய ஆன்மீக அமைதியை தொடர்ந்தும் காத்து மோனத்திலிருக்க ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் ஒன்றை மறுத்ததன் மூலம் அவ்வாறான மறுக்கும் ஒரு வாய்ப்பை புலிகளுக்கும் மகிந்த வழங்கியிருக்கிறார்.


2 comments:

Anonymous said...

நடேசனின் போர் நிறுத்த அறிவிப்பு
அரசியல் தெரயாதவர்களுக்கு - புலிகளின் பலவீனம்!
தெரிந்தவர்களுக்கு மகிந்தவின் பதிலை முன்னரே தெரிந்து வைத்த பொறி. இதன் மூலம் புலிகளின் யுத்தத்தை எதிர்காலத்தில் நியாயப்படுத்தும் அரசியல் நடவடிக்கை. புலிகளின் தாக்குதல்களின் போது யாரேனும் போர் நிறுத்தம் ஒன்றை கேட்டுவிடக் கூடாதென்பதற்கான முன் ஏற்பாடு.

Anonymous said...

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே (2)

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

ஈழ நிலத்தினில் எத்தனை நாள் இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை நாளின்னும் கூவி திரிந்திடுமோ x2
வாழும் வயதினில் வாச மலர் இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம் விரித்திடும் பாயில் சரிந்திடுமோ x2

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே (2)

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

அன்னை நிலத்தினில் காவற் கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற் பகை மடி மீதிற் சிரித்திடுவோம் x2
அண்ணன் நினைவினில் எம்மை மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம், அதற்கென அங்கு வெடித்திடுவோம் x2

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே (2)

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

தேசப் புயல் இங்கு வீசும் பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள் இனி பகை தீயில் எரிவதில்லை x2
நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும் நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில் விடுதலை கீதம் படித்திடுங்கள் x2

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே (2)

பச்சை வயலே பனங் கடல் வெளியே
எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே