Friday, April 10, 2009

கருணாநிதியை மரியாதையாக நடாத்துங்கள்.

உலக சரித்திரத்தில் பல மனிதர்கள் தமது சொத்து சுகங்களைப் பேணுவதற்காக பலதரப்பட்ட தடவைகள் தன் மக்களை ஏமாற்றி ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஓடிய கருணா சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் காலடியில் வீழ்ந்தபோது பெருந்தன்மையோடு கேட்டார். உன்னை எப்படி நடாத்த வேண்டும் என்று. தன்னை ஒரு அமைச்சராக நடாத்த வேண்டுமென்று கருணா சொன்னார். மகிந்தவும் பெருந்தன்மையோடு கருணாவை தனது கட்சியில் அமைச்சராக்கினார்.

இலங்கைச் சிக்கலிலும் கருணாநிதி எந்த மாதிரியான தகிடுதத்தங்களை மேற்கொண்டாலும் தன் வாக்குறுதிகளை தானே காற்றில் பறக்க விட்டாலும் - தமிழ் மக்களின் சார்பில் சொல்கின்றேன். மகிந்தவைப் போல - எட்டப்பனை மரியாதையாக நடாத்திய வெள்ளையரைப் போல - அவரையும் மரியாதையாக நடாத்துங்கள்.

25 comments:

Anonymous said...

viraivil amma aatchiku vandhu thathavai gundu katta jail uku thooki selvaargal. appa sollatum ivarai eppadi nadatha vendum endru.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அம்மா வந்தால் கட்டாயம்,சென்ற முறை செய்த "மரியாதை" செய்வார்.
நம்புங்கள்.

சொக்கலிங்கம் said...

பிரபாகரனை மரியாதையாக நடத்துங்கள் எண்டும் ஒரு பதிவு போடலாமே...

Anonymous said...

அம்மா ஆட்சிக்கு வந்து பிரபாகரனை தூக்கில் போட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள் இல்லையா கொழுவி.

கொழுவி said...

சொக்கலிங்கம்.
பதிவெல்லாம் எதற்கு.. அது குறித்து அறிவிக்கத்தான் கலைஞர் இருக்கிறாரே.. அவர் பார்த்து கொள்வார்.

--

கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..

--

நாமக்கல் சிபி said...

/
கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..//

அதே!

Anonymous said...

correct!

யட்சன்... said...

நிதர்சனங்கள் கொடூரமானவை....

அதை ஜீரணிப்பது சிரமம்தான்....

கலைஞர் நிதர்சனங்களை சொல்லியிருக்கிறாரென நினைக்கிறேன்.

கலைஞர் நிலையில் யாரிருந்தாலும் இத்தகைய நிலையைத்தான் எடுத்திருக்க முடியும்....

கலைஞர் ஒன்றும் மகானில்லை...ஆசா பாசங்களிடையே சிக்கித்தவிக்கும் அற்ப பதர்களில் ஒருவரே....

உண்மைத்தமிழன் said...

///கொழுவி Says :
6:53 AM

சொக்கலிங்கம்.
பதிவெல்லாம் எதற்கு.. அது குறித்து அறிவிக்கத்தான் கலைஞர் இருக்கிறாரே.. அவர் பார்த்து கொள்வார்.

--

கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..///

ஆமோதிக்கிறேன் கொழுவியாரே..!

ttpian said...

அவசர அறிவிப்பு
பெரியார் மடம்,வீரமனி சுவாமிகளின்,சிறப்பு பூஜை...
சொனிஅ குடும்பத்தினர் ந்லம் வேண்டி...
சிறப்பு அழைப்பு...கருனனிதி குருக்கல்...
அனைவரும் வருக....அருல் ஆசி பெறுக....
கட்டளை விசாரனை
பெரியார் திடல்...பூஜை சங்க நிர்வாகிகல்!

Anonymous said...

சோழ பரம்பரையை பத்தி படித்திருப்போம் தற்போது அதே போன்ற பரம்பறை தான் தமிழ் நாட்டை ஆன்டுகொன்டிருக்கிரறது அதுதான் நிதி பர‌ம்பறை

ARV Loshan said...

இதைத் தான் ஒரே பந்துல பல சிக்ஸர் எண்டு சொல்றதோ????

//கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..//

வழி மொழிகிறேன்.. புரிஞ்சு கொள்ளுங்கையா..

Anonymous said...

KOLUVI AVARKALE
TAMILNATTU ARASIYALVATHIKALAI VIDA
MATHIYIL ULLA ATHIKARIKAL POWERFULLANAVARKAL.
INDHA NILAYIL VARATTU GHOSHANKAL
PALANALIKKAOVATHILLAI.
JAYA VENRAL ENNA NADAKKUM ENRU
UNGALUKKUM THERIYUM

King... said...

\\
கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..
\\

இது சரி, இதேபோல இன்னொன்றும்...

சவுக்கடி said...

தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!

மதி said...

/* கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..///

ஆமோதிக்கிறேன் கொழுவியாரே..! */

முற்றிலும் தவறான கருத்து

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் அதே காங்கிரஸ் அதே தமிழின படுகொலை. அதே ராணுவ உதவி, நச்சு வாயு கருணாநிதி சம்மதத்துடன் அனுப்பப்படும் தேவையா.

Anonymous said...

Vaiko insulted and wrong guided tamils problem.Now he is ready to start a TV channel for his business.All tamils will send their money to his pocket.

Anonymous said...

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
‘ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.

இது ஒரு சங்கப் பாடல். சங்கத் தமிழர்களை பற்றி வாய் கிழிய பேசி தமிழர்களை ஏமாற்றி வந்த கருணாநிதி இதை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

அடுத்த முறை அம்மா ஆட்சிக்கு வந்து, 'கருணாநிதி ராமர் பாலத்தை இடிப்பதில் ஊழல் செய்தார்' என்று கைது செய்ய நள்ளிரவில் போலிசை அனுப்பினால் கோழைமாதிரி 'ஐயோ கொல்றாங்களே' என்று ஓலமிடாமல் சங்கத் தமிழனின் வீரத்தோடு தானே உயிரை விடுவார் என்று எதிர்பார்ப்போமாக.

Anonymous said...

Very soon Vaiko will start a TV Channel for Tamils.All the problems will be solved,including Vaiko's pocket.

வரவனையான் said...

super!!!ATHU...................

Anonymous said...

சொத்துச்சேர்த்து வீங்கிப்பெருத்து, தமிழனை காட்டிக்கொடுத்து, தானும் கெட்டு மற்றவர்களையும் கெடவைத்து வாழுகின்ற வாழ்க்கை உனக்கு தேவையா கலைஞா??? எமக்கென்று தனி கலாச்சாரம், மொழி உண்டு. தழிழனை தலை நிமிர்ந்து வாழ விடு...

suresh said...

/* கருணாநிதியை விமர்சிப்பதென்பது ஜெக்கு ஆதரவளிப்பது போன்றது என்ற மூன்றாம் தர கழிசறை அரசியல் வரைவிலக்கணங்களில் இருந்து வெளியே வாங்கப்பு..///

ஆமோதிக்கிறேன் கொழுவியாரே..! */

முற்றிலும் தவறான கருத்து

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் அதே காங்கிரஸ் அதே தமிழின படுகொலை. அதே ராணுவ உதவி, நச்சு வாயு கருணாநிதி சம்மதத்துடன் அனுப்பப்படும் தேவையா.


you are correct.

இரா.சுகுமாரன் said...

//காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் அதே காங்கிரஸ் அதே தமிழின படுகொலை. அதே ராணுவ உதவி, நச்சு வாயு கருணாநிதி சம்மதத்துடன் அனுப்பப்படும் தேவையா.//

ஆக இன்றைய எதிரி கருணாநிதியும் காங்கிரசும் தான்.

ஆனா............ செயாவும் தானே............. மறக்கமுடியல............. !!

மதி said...

/*
//காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் அதே காங்கிரஸ் அதே தமிழின படுகொலை. அதே ராணுவ உதவி, நச்சு வாயு கருணாநிதி சம்மதத்துடன் அனுப்பப்படும் தேவையா.//

ஆக இன்றைய எதிரி கருணாநிதியும் காங்கிரசும் தான்.

ஆனா............ செயாவும் தானே............. மறக்கமுடியல.............
*/

உண்மைதான் ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தால் முதல் எதிரி கருணாநிதியும் காங்கிரசும் தான். இவர்கள் போனால்தான் தமிழீழம் பற்றி சிந்திக்க முடியும். அல்லது சீமான், பெ.மணியரன் மாதிரிதான் அனைவரும்.

தீப்பெட்டி said...

கருணாநிதியை கொஞ்ச காலம் கவனிக்காமல் இருங்கள். அவர் திரும்பி திருந்தி வருவார்
அவரை வைத்தே ஆட்டம் இருப்பதால் அதிகம் ஆடுகிறார்