Wednesday, May 27, 2009

இழவு வீட்டில் சுண்டல் விற்கிறார்கள் - வந்து வாங்குங்கள்

என்னத்தை சொல்ல.. ? வியாபாரத்தில் இவர்களிடமிருந்து கற்க நிறைய இருக்கிறதென்பதைத் தவிர

21 comments:

Anonymous said...

பத்ரி கைச் சுதந்திரம்.
அவசர அவசரமாக கண்காட்சிக்குப் போட்ட காந்தி கண்ணதாசன் 'பயங்கரவாதி'கள் பற்றிய புத்தகத்தை விற்கக்கூடாது என்பதற்காகப் பயந்து மொட்டைமாடியிலே விற்ற வியாபாரியும் தலைமை எடிட்டரும். சொக்கன் என்ற அரைவேக்காட்டை வைத்து இப்படியாகத்தான் வீரப்பன் வதம் வீரப்பன் செத்த இரண்டு நாட்களுள்ளே படுபிற்போக்குத்தனமாகப் போட்டார்கள்.

இதுகூட செல்லமுத்தூ குப்புசாமி எடிட் பண்ணக்கொடுத்த புத்தகத்திலே சிலவற்றைப் போட்டால் தமிழகத்திலே விற்கமுடியாது என்று பாராகவன் வெட்டிவிட்டதாகத் தகவல். இதைத் தனி அஞ்சலிலே தெரிவிக்கும் செல்லமுத்து குப்புசாமிக்கு வலையிலே கேட்டபோது சொல்லத் தெம்பில்லாமல் போய்விட்டது. குடுமி இன்னமும் விற்கவேண்டிய புத்தகத்திலே. வெட்டியதகவல்கள் எல்லாம் பா ராகவன் பின்னால் எழுதத்தொடங்கிய வல்வெட்டித்துறை திருவேங்கிடம் புத்தகத்திலே சேர்த்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடலாம்.

இப்படி மற்றவன் இரத்தம் காயமுன்னால் எழுதி விற்றுப்பிழைப்பதற்கு வேறு எதையாவது விட்டுப் பிழைக்கலாம். தூ! எவரும் எதையுமே செய்யமுடியாதென்ற திமிரே. கொழுவி ஒரு நாளைக்குக் கத்தும். பின்னூட்டத்திலே மூன்று பேர் கத்துவார்கள். அவ்வளவுதான். There is nothing called bad publicity. இல்லையா? இவர்கள் எதையும் செய்யவிடாது வேறு ஏதாவது செய்யமுடியுமென்றால் செய்யுங்கள். அல்லது விளம்பரத்தை இந்த திவசப்பார்ப்பனர்களுக்குத் தவிருங்கள்.

தமிழகத்திலே பதிவிலே வெட்டமட்டுமே திராவிடக்குஞ்சுகளுக்குத் தெரியும் என்பதே இந்த ஆசாமிகளின் திமிருக்குக் காரணம்.

எவன் எவன் எல்லாம் வீதிவிபத்திலே பொசுக்கென்று போகிறான். இவர்கள் மட்டும் இன்னமும் உலாவுகின்றார்கள் :-(

Agila said...

:-(
இது உண்மையானால் மிக மிக மலிவான விளம்பர உத்தி.

Anonymous said...

இணையத்திலே எழுதித்தள்ளூம் வினவு போன்ற தோழர்கள் இப்புத்தகம் விற்கும் கடைகளிலே புகுந்து இப்புத்தங்கங்களைக் கொழுத்தித் தள்ளமாட்டார்கள்.

பிரபாகரன் என் ஹீரோ கலைஞர் என் ஸோரோ என்று பதிவு பதிவாக தடாலடி உல்லாங்கட்டி எறியும் பதிவர்கள் இப்புத்தகத்தின் பதிப்பாளர் எழுதியவர் வீடுகளுக்கு முன்னாலே சென்று ஈழத்தமிழர் இழவு விட்டிலே சுண்டல் விற்பவர்களே உங்கள் மகளின் இழவு வீட்டிலே சுண்டல் விற்பீர்களா என்று கத்திப் போராட்டம் நடத்த தெம்பு கொண்டிருக்கின்றார்களா?

மானம் மரியாதை கொஞ்சமேனும் உங்கள் குறிகளிலே ஒட்டிக்கிடந்தால் சும்மா பதிவுக்காச்சியும் பிரபாகரன் இருக்கிறார் படுக்கிறார் நடக்கிறார் வருவார் தருவார் என்று அலட்டிக்கொள்வதிலும்விட ஒரு வாரத்துக்கு உள்ளே இப்படியான திவசப்பார்ப்பனர் வீடுகளின் முன்னே தர்ப்பையை விட்டுத் தண்ணீர் தெளித்து மண் வாரியள்ளித் தூற்ற தைரியம் உள்ளதா?

இந்த வன்மூறையற்ற அறப்போராட்டம் முடியாவிட்டால் வீரப்பிரதாபமாகவோ வெட்டுவோம் கொல்லுவோமென்றோ வன்முறையான பதிவுகளையும் பின்னூட்டங்களையும் போடாதீர்கள். அவற்றையும் வைத்துப் பிழைக்கும் கூட்டம் இது. இரண்டு தளை தட்டும் வெண்பாக்கள் நடுவிலே ஈழத்திலே இரத்தம் என்று பத்தி எழுதும் பத்ரிகைப்பரம்பரை இது.

Anonymous said...

புலிகள் சாவிலும் வாழ்வோம் என்றார்கள் புலிகளின் சாவில் இவர்கள்
வளநினைக்கிரர்கள்

Brahmnan said...

அடடே தைரியத்தைப் பற்றியெல்லாம் 'அனாநிகள்' பேசுகிறதுகள். எவன் எவனையோ இலங்கை ராணுவம் போட்டுத் தள்ளுறான். உங்களையெல்லாம் போடலையாடா?

Anonymous said...

பங்காலி தெவசத்துல தெப்பை போட்டு பொன்னை கரையேத்துற அம்பி
இலங்கை ரானுவம் போட்டு தள்லத்தான் பாக்கறான் அதுக்கு இப்போ என்னய்யா?

Anonymous said...

ஏண்டா டேய்,

சங்கரராமன் கொலை, சங்கராச்சாரியர் கிளுகிளுப்பு பற்றியெல்லாம் புத்தகம் போட வேண்டியது தானே ?

அப்ப எங்கடா இருந்தீங்க

ஜனகன் ஞானேந்திரன் said...

கிழக்குப்பதிப்பகம் பரபரப்பில் இலாபம் தேடும் நோக்கத்தோடுமட்டுமே இந்த நூலை இப்போது கடையில் வைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இந்த மலிவான வணிக உத்தி, நடந்துகொண்டிருக்கும் பாரிய மனித அவலத்தினிடையே முகம் சுளிக்க வைக்கும், வேதனை தரும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இந்தச்செயலுக்கான தம்மளவிலான எதிர்ப்பினை அரசியல் ஈடுபாட்டாளர்கள் செய்ய முன்வர வேண்டியிருக்கிறது.

இந்நூலின் உருவாக்கம் தொடர்பாக anonymous இங்கே சொல்லியிருக்கும் தகவல்களுக்கு நன்றி. பதிவர் பெயரிலியின் வலைப்பதிவில் இந்நூல் தொடர்பான இதற்கும் மேலதிகமான தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது நினைவிலிருக்கிறது.

வணிகத்துக்கென வெளியிடப்படும் நூல் "எவரையும்" நோகடிக்காமலிருக்கும் தணிக்கையை செய்துகொள்ளும் என்பது வெளிப்படையானது.

சனச்சமுத்திரத்தின் அலைகளூடும் அதிர்வினூடும் தெரியும் இந்த நூலின் நீலநிற நீர்ப்பிம்பத்தினை, இங்கே பின்னூட்டமிட்டுள்ளவர்களின் உணர்ச்சி தெறித்துவிழும் கோபச்சொற்களை மெல்ல நூல் களைந்து அவிழ்க்கத்தொடங்கும்போது விரியும் சிறுசிறு சிந்தனைகள் எனக்கு ஆர்வம் தருகின்றன.

ஜனகன் ஞானேந்திரன் said...

இந்த நூல் எவ்வாறு வணிக வெற்றி பெறப்போகிறது?

வீதி வீதியாக சுவரொட்டிகள் ஒட்டப்படவிருக்கிறதா? லட்சக்கணக்கில் செலவழித்து தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டப்படவுள்ளதா? வீதி வீதியாய்க் கொண்டுபோய் வீடுதட்டி பரப்புரைக்கப்போகிறார்களா? பெரும்பாலும் இல்லை என்ன?

சனம்தான் இதனை அலையலையாய்ப் 'போய்' இணையத்திலும் கடையிலும் வாங்க வேண்டும்.

தான்பிரீன் தொடரும் துயரத்தை விட, நிலமெலாம் ரத்தத்தை விட, எதிர்ப்பும் எழுத்தும் நூலை விட கருப்பு எம் ஜீ ஆரும் பிரபாகரனும் தலைப்பானவுடன் அதிகம் விற்கப்பட்டும் வாய்ப்பு கிடைக்கிறது.

இது தனிமனித வழிபாடு எனும் தெரிந்தே வளர்க்கப்படும் அரசியல் ஊன நிலையின் வணிக அறுவடை.

கிழக்குப்பதிப்பகம் இந்தப்புத்தகத்தை விற்கும் மோசடி, பிரபாகரனையும் கருப்பு எம்ஜீ ஆரையும் நாம் மக்களிடம் ஏற்கனவே விற்றிருக்கும் மோசடியை தெளிவாக இனம்காட்டிவிடுகிறது.

ஈழத்தின் ரத்தம் தெறித்த நிலங்களின் மக்கள் இப்புத்தகம் மலிவாகவும் பாதுகாப்பாகவும் வழங்கப்பட்டால் முண்டியடித்து வாங்க மாட்டார்கள் என்கிறீர்களா? ஈழத்தமிழ் புலம்பெயரிகள் இணையத்தில் வாங்கித்தீர்க்க மாட்டார்கள் என்கிறீர்களா?

//தமிழகத்திலே பதிவிலே வெட்டமட்டுமே திராவிடக்குஞ்சுகளுக்குத் தெரியும் என்பதே இந்த ஆசாமிகளின் திமிருக்குக் காரணம்.//

அதுவும் காரணம். வேறெது காரணமாயிருக்கலாம்?

ஜனகன் ஞானேந்திரன் said...

எந்த மலிவான அரசியல் வணிக உத்தியைப்பயன்படுத்தி நாம் பிரபாகரனை விற்று வைத்திருக்கிறோமோ, தலைவர் வழிபாட்டினூடாக மட்டும், தனிமனித சாகசங்காட்டலின் ஊடாக மட்டும் அரசியல் செய்திருக்கிறோமோ, மனித முகமொன்றின் குறியீட்டையே ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் இடையறாத போரடட்ட வரலாறாக குறுக்கி விற்றிருக்கிறோமோ அதன் விளைவாகவே இப்புத்தகம் விற்றுத்தீர்க்கப்படமுடியும். வேறெதனாலும் அல்ல. சேகுவேரா புத்தகங்களுக்கும் இது பொருந்தும்.

ஈழச்சூழல் கிடக்கட்டும், தமிழ்நாட்டில் ஈழப்போராட்டத்துக்கான ஆதரவைச்சம்பாதிப்பதற்கான பிசினசை நாம் இதே சிரித்தபிரபாகான் படங்களைக்கொண்டும், இதே பரபரப்பூட்டும் வாழ்க்கைச்சம்பவங்கள் கொண்டும், இதே சாகசங்களைக்காட்டியும், இதையும் தாண்டிய குருதி சிதறும் சனங்களின் உயர்துல்லியப் படங்களைக்காட்டியும் தானே செய்திருக்கிறோம்?

ஏற்கனவே நாம் செய்துகொடுத்த சந்தைப்படுத்தலில் பத்ரி லாபம் பார்க்க வெளிக்கிடுறார். எமக்கு கோபம் வருகிறது.

ஜனகன் ஞானேந்திரன் said...

//இணையத்திலே எழுதித்தள்ளூம் வினவு போன்ற தோழர்கள் இப்புத்தகம் விற்கும் கடைகளிலே புகுந்து இப்புத்தங்கங்களைக் கொழுத்தித் தள்ளமாட்டார்கள்.

பிரபாகரன் என் ஹீரோ கலைஞர் என் ஸோரோ என்று பதிவு பதிவாக தடாலடி உல்லாங்கட்டி எறியும் பதிவர்கள் இப்புத்தகத்தின் பதிப்பாளர் எழுதியவர் வீடுகளுக்கு முன்னாலே சென்று ஈழத்தமிழர் இழவு விட்டிலே சுண்டல் விற்பவர்களே உங்கள் மகளின் இழவு வீட்டிலே சுண்டல் விற்பீர்களா என்று கத்திப் போராட்டம் நடத்த தெம்பு கொண்டிருக்கின்றார்களா?//

செய்தால் "ஈழத்தமிழ் ஆதரவாளர்கள்" திருப்பி அடித்து கிளர்ந்து எழுந்து கொன்றுவிடமாட்டார்கள்?

இந்தப்புத்தகத்தை ஏன் கொளுத்துகிறார்கள் என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத இருட்டுக்குள் வைத்தல்லவா நாம் மொத்தத் தமிழச்சூழலுக்கும் பட்ம் காட்டியிருக்கிறோம்?


##

//எவன் எவன் எல்லாம் வீதிவிபத்திலே பொசுக்கென்று போகிறான். இவர்கள் மட்டும் இன்னமும் உலாவுகின்றார்கள் :-(//

//அடடே தைரியத்தைப் பற்றியெல்லாம் 'அனாநிகள்' பேசுகிறதுகள். எவன் எவனையோ இலங்கை ராணுவம் போட்டுத் தள்ளுறான். உங்களையெல்லாம் போடலையாடா?//

இரண்டு "ஒரே" அரசியல்கள் மாறி மாறிப் போட்டுத்தள்ளுகின்றன. காலங்காலமாக, இத்தனைக்குப்பிறகும்.


##

கிழக்குப்பதிப்பகத்தார் மீதான எமது நியாயமான கோபத்தோடு அவர்களுக்கான சந்தைப்படுத்தலை ஏற்கனவே செய்துவிட்டிருக்கும் எம்முடைய மலிவு அரசியல் வணிகத்தையும் இனி மாற்றி, ஆகக்குறைந்ததது இந்தப்புத்தகத்தை ஏன் திட்ட வேண்டும் என்ற அடிப்படை அரசியல் அறிவையாவது சனம் பெறும் வண்ணம் ஈழ அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுக்க வழி பார்க்க வேண்டும்.

##

கிழக்குப்பதிப்பகத்தின் இந்த அயோக்கியத்தனத்துக்கு எனது கண்டனங்கள்.
இப்புத்தகத்தின் அரசியலைத் தோலுரியுங்கள்.
எக்காரணம் கொண்டும் விளம்பரம் கொடுக்காதீர்கள்.
வாங்காதீர்கள்!

Anonymous said...

வேலைய பாரும்
அவரால புக் போட முடியுது புக் போடுகிறார். உங்க கேங்க் தானே 10 000 பலி 20 000 கொலை என்று உண்டியல் தூக்கி தமிழ் நாட்டில் ஆடியது.

-/பெயரிலி. said...

இப்புத்தகத்தைப் பார்க்கும்போது, எனக்கு இந்த saturday Night Live Skit ஞாபகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.
http://vids.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&videoid=57232199

களப்பிரர் - jp said...

நான் ஒரு பெரிய பதிவே போடவேண்டும் என்று இருந்தேன். நீங்கள் இவ்வளவு எளிமையாக தலைப்பிலேயே சொல்ல வேண்டியதை சொல்லி விட்டீர்கள்

மு. மயூரன் said...

கிழக்குப்பதிப்பகத்தின் வணிகத்திறமை, வணிகதேவை, வணிகத்தின் இயல்பு மனிதாபிமானம் எல்லாம் கடந்தது. எதையும் தாண்டி கேவலமானது.

ஜனகனின் நீண்ட பின்னூட்டம் இன்னொரு ஆழமான பக்கத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது.

பெயரில்லாதவர்கள் மேம்போக்காக எல்லாத்தையும் பார்த்து தம்முதுகை அறியாமல் ஆளையாள் போட்டுக்கொண்டிருப்பதைத்தவிர வேறு அரசியலறியாதவர்கள்.

இப்புத்தகம் சர்ச்சைக்குரியதாய் மாறுவதையிட்டு கிழக்கும் வணிகர்களும் மகிழக்கூடும்.

எனக்கு தோன்றுவது என்ன என்றால்,

//இப்படி மற்றவன் இரத்தம் காயமுன்னால் எழுதி விற்றுப்பிழைப்பதற்கு வேறு எதையாவது விட்டுப் பிழைக்கலாம். தூ! //

//தமிழகத்திலே பதிவிலே வெட்டமட்டுமே திராவிடக்குஞ்சுகளுக்குத் தெரியும் என்பதே இந்த ஆசாமிகளின் திமிருக்குக் காரணம்.//


//எவன் எவன் எல்லாம் வீதிவிபத்திலே பொசுக்கென்று போகிறான். இவர்கள் மட்டும் இன்னமும் உலாவுகின்றார்கள் :-(//

//இணையத்திலே எழுதித்தள்ளூம் வினவு போன்ற தோழர்கள் இப்புத்தகம் விற்கும் கடைகளிலே புகுந்து இப்புத்தங்கங்களைக் கொழுத்தித் தள்ளமாட்டார்கள்.//

//உங்கள் மகளின் இழவு வீட்டிலே சுண்டல் விற்பீர்களா என்று கத்திப் போராட்டம் நடத்த தெம்பு கொண்டிருக்கின்றார்களா?//

இதையெல்லாம் நக்கீரன் பிரபாகரனை அண்மையில் அட்டகாசமாய் விற்றபோதும் செய்திருக்கவும், செய்யச்சொல்லியிருக்கவும் வேணும் என்ன?

சிலர் சொன்னார்கள் பலர் சொல்லவில்லை.

நக்கீரன் பத்திரிகையின் வரைகலை முகப்புக்காக அதனை அமோக விற்பனைக்குள்ளாக்கியதில் எத்தனை வீதம் ஈழத்தமிழர்பங்கு?

பதி said...

பலர் மனதில் தோன்றுவதை தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்..

Anonymous said...

காலம் பார்த்து விதைக்கிற பதிப்பகம் ஒன்றின் வடிகட்டிய அயோக்கியத்தனம் வெறும் வாதப்பிரதிவாதமாகவே உங்கள் பதிவிலே முடிந்து போகிறது. நக்கீரன் ஆஹா ஊஹூ என்று வெளியிட்டதற்காக கிழக்கும் வெளியிடலாம் என்ற வாதம், ஆளுக்கொரு கண்ணை நோண்டுங்கடா என்பதாகத்தான் தெரிகிறது. நக்கீரன் வெளியிட்டபோது தலையிலே தூக்கி ஆடாதீர்கள் என்று சொன்ன புலி ஆதரவாளர்கள் இருக்கலாம். இல்லாமலிருக்கலாம். ஆனால், அந்நேரத்திலே 200,000 மக்கள் கண்காட்சிப்பொருட்களாகக்கூடக் காணப்படாது அடைத்து வைக்கப்படவில்லை. 30,000 காவு கொடுக்கப்படவில்லை. ஐநா ஸ்ரீலங்கா செய்வது எல்லாம் சரியே என்பதாகக் கண்ணசைக்கவில்லை. நிகழும் கணங்களையும் தருணங்களையும் புரிந்துகொள்ளவேண்டும்.

புலம்பெயரிகளையும் ஈழத்தமிழர்களையும் இவற்றையென்ன இந்தியபெருவணிகர்களின் பதிப்புகளையும் படங்களையும் வாங்காதீர்கள் என்றுதான் இன்றும் சொல்கிறோம். அன்றும் சொன்னோம். இனிவருங்காலையும் சொல்வோம். இவை புலிகளை அண்டிப் பிறந்த கருத்துகளல்ல. புலிகளைப் பற்றி இவர்கள் போடும் + பாடும் பண்டங்களைப் பற்றிய கருத்துகளல்ல. இந்திய ஊடகங்களின் தனியே வர்த்தகம் மட்டுமே சார்ந்த கணக்கினைக் கருத்திலே கொண்ட எமது எதிர்க்கருத்துகளே. தமிழகத்திலே இப்படியான வியாபாரிகளுக்கு ஈடாக ஈழத்தமிழ் இழப்புகளை விற்றதிலே பதிவிலே பகலிலே பார்ப்பனர் என்பதாகச் சத்தம் மட்டும் போட்டுவிட்டு, மாலையிலே மொட்டைமாடிகளிலே அதே பதிப்பகத்தோடு முயங்கிப் படுத்தவர்களும் காரணமென்றே சொல்கிறோம்.

சொல்லப்போனால், நக்கீரன் புத்தகம் விற்றதை ஆமோதித்தீர்கள் என்பதற்காக கிழக்கு விற்பதையும் ஆமோதியுங்கள் என்பது ஆளுக்கொரு கொலை செய்துவிட்டுப் போங்கடா என்று சொல்வதாகத்தான் தெரிகிறது.

தமிழகத்திலே இவர்களைப் பற்றிய தெளிவு ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்று கேட்பவர்களுக்கு, எப்படியாக தமிழகம் சாராதவர்கள் ஊடறுத்துப் போய்த் தெளிவினை ஏற்படுத்தலாமென்றேனும் சொல்லலாமே? அநாநிகளின் கையறு கத்தல்வாதங்களும் மயூரன்களின் அரசியலனைத்துமறிந்த கையிலடி பிரதிவாதங்களும் நன்றாகத்தான் பின்னூட்டப்பெட்டிகளிலே இருக்கின்றன. ஆனால், கிழக்கிலே இருக்கும் காழ்ப்பினை அநாநி இங்கே உமிழ்கிறாரென்றால், அநாநியிலேயிருக்கும் தனது காழ்ப்பினை மயூரன் உமிழ்ந்துவிட்டுப்போகிறார் என்ற சிறிய தீப்பெட்டிக்குள்ளே நெருப்புக்குச்செடுத்து ஆளாள் தலையிலே உரசுவதோடு இழவு வீட்டிலே சுண்டல் விற்க விளம்பரம் கொடுப்பதாக முடிகின்றது. வெட்கக்கேடு.

எல்லாவற்றினையும் வெளிப்படையாகப் பேசுகிறோம் என்பதாகப் பாவனை செய்துகொண்டு, அந்நேரத்திலே எதைப் பேசினால், கவர்ச்சிகரமாக எடுபடுமோ அதைப் பேசுவதுதான் பதிப்பகங்களுக்குமட்டுமல்ல பின்னூட்டக்காரர்களுக்கும் தேவையானால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ரவி said...

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.

முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை.

ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது.

அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்.

எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்?

பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.

ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக

info

மு. மயூரன் said...

//நக்கீரன் புத்தகம் விற்றதை ஆமோதித்தீர்கள் என்பதற்காக கிழக்கு விற்பதையும் ஆமோதியுங்கள் என்பது//

என்று நான் சொல்லவில்லை.
மாறாக, கிழக்கை தூக்கியெறிய நிற்பவர்கள் நக்கீரனைத் தூக்கியெறிந்திருக்கவேண்டும் என்பதையும் இனி நக்கீரன்களைத் தூக்கியெறிந்தாக வேண்டும் என்பதையும் தான் சொல்லியிருந்தேன்.

இப்படி தலைகீழாகவே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் இந்த புதிய சீடக்குஞ்சு அநானி தன்பங்குக்கு தனது காழ்ப்புணர்வுகளையும் குச்சுரசிப்போயிருக்கிறார்.

ILA (a) இளா said...

இவுங்க செய்யறது சுண்டல்னா நக்கீரன் செஞ்சதுக்கு என்ன பேருங்க? உங்களுக்கு சாதகம்னா போற்றிக்குவீங்க, இல்லாட்டி சுண்டல் கிண்டல்னு. அட போங்க.
இந்தப் பின்னூட்டத்தை திட்டி வரும் அனானிகளுக்கு நன்றி

கொண்டோடி said...

//எல்லாவற்றினையும் வெளிப்படையாகப் பேசுகிறோம் என்பதாகப் பாவனை செய்துகொண்டு, அந்நேரத்திலே எதைப் பேசினால், கவர்ச்சிகரமாக எடுபடுமோ அதைப் பேசுவதுதான் பதிப்பகங்களுக்குமட்டுமல்ல பின்னூட்டக்காரர்களுக்கும் தேவையானால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை//

சரியாகச் சொன்னீர்கள்.
இது இவ்விடுகைக்கு மட்டுந்தானா?

மயூரன், இளா,

நக்கீரனை ஆதரித்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?
'நிலவுப்பாட்டு' என்ற பெயரில் எழுதும் தமிழகத்தவர் ஒருவர் தலைமையில் ஒரு கூட்டம் இதைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு கிழக்குப் பதிப்பகத்தின் இப்புத்தகத்தை விமர்சித்த யார் அப்படி நக்கீரனைத் தூக்கிவைத்து ஆடினார்கள் என்று சொல்ல முடியுமா?

நக்கீரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெயரையும் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி பொய்யான செய்திகளையும் கட்டுரைகளையும் கிசுகிசுக்களையும் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே அவற்றை எதிர்த்து நாங்கள் வலைப்பதிவில் எழுதியிருக்கிறோம்.

இவ்வளவு ஏன், சுமார் மூன்று வருடங்களின் முன்னர் நக்கீரன் பத்திரிகையைப் புகழ்ந்து குழலியோ தமிழ்சசியோ கட்டுரை எழுதிய காலத்திலேயே, ஈழப்போராட்டம் தொடர்பில் நக்கீரன் மிகைப்படுத்தப்பட்டட பொய்களையே கவர்ச்சிகரமான விற்பனை செய்து வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

------------
அனானியாகப் பின்னூட்டமிட்டது நானில்லை.
ஆனால் அது யாரென்பது தெரியாமல் தான் ஏனைய பின்னூட்டங்கள் வந்துள்ளனவென்பது சிரிப்பை வரவழைக்கிறது.