இந்த புத்தக வெளயாட்டுக்கு நம்மை யாருமே கூப்பிடல. திறந்த வூட்டுக்குள்ளார நாய் (அட என்னை நானே நாய்ங்கிறேன்) புகுந்த மாதிரி நானே புகுந்துக்ககிறேன். ப்ளீஸ் என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்கப்பா..
ஆமா இன்னி வரைக்கும் எழுதினவங்க யாராச்சும் சொல்லி அப்புறமாத்தானே எழுதினாங்க. ஆனா பாருங்க சொல்லிச் செய்வர் சிறியர் என்கிற மாதிரி சொல்லாமல் செய்வர் பெரியர்ங்க..
நாம எப்பவுமே பெரியவங்க தான் அதுக்காக சின்ன வயசில படிச்ச பிடிச்ச புத்தகங்களை மறந்திட முடியுமா என்ன?
சரி ஆட்டத்துக்கு போகலாமா? என்கிட்ட உள்ள புத்தகங்க ஒரு 100 ஐ தாண்டுமுங்க. பட்டியல் போட்டுரலாமா?
அம்புலிமாமாவில ஒரு அம்பது போடுங்க.. சரி போட்டாச்சா? இப்போ பால மித்ரால ஒரு முப்பது போடுங்க.. எவ்வளவுங்க ஆச்சு? எண்பதா? சரி லயன் காமிக்ஸ் அப்புறம் ராணிக் காமிக்ஸ் வகையறாக்கள்ள ஒரு அம்பது போடுங்க.. என்னா.. 100 தாண்டிச்சா..
இப்போ பிடிச்ச புத்தகங்களுக்கு வரலாமுங்க.
புத்தகம் நம்பர் ஒண்ணு: முரட்டுக்காளை கார்த் தோன்றும் இயந்திர உலகு
புத்தகம் நம்பர் இரண்டு: ஜேம்ஸ் பாண்டு தோன்றும் ஆபத்தான அழகி
புத்தகம் நம்பர் மூணு : லேடி ஜேம்ஸ்பாண்டு மாடஸ்தி தோன்றும் சுறா மீன்
புத்தகம் நம்பர் நான்கு: மாயாவி தோன்றும் லண்டனில் மாயாவி
காமிக்ஸ்சில நெறைய புக்குங்க இருந்தாலும் நமக்கு இந்த நாலும் புடிச்சதுக்கு காரணம் அதுங்க கதையமைப்பு தானுங்க..
நீங்க யாராச்சும் ஜெர்மன் இலக்கியங்கள் படிச்சிருக்கீங்களா? நம்ம டோண்டு சார் (அவரை நான் ஆசையா மாமான்னு கூப்பிடுவேன். அவரே சொன்னாரு அப்டி கூப்பிடுன்னு) அப்புறம் ஜெர்மனில இருக்ற முத்து. அப்புறம் இன்னொருவங்க.. அவுக பேரு என்னான்னா.. மறந்திடுச்சே.. ஆ.. சந்திரவதனா.. இவுங்க எல்லாம் ஜெர்மன் இலக்கியங்க படிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறன்.
சும்மா இல்லீங்க.. அட்டகாசமான நல்ல புஸ்தகம் எல்லாம் ஜெர்மனில இருக்கு.
Die Gute Masse அப்டீன்னு ஒரு புக்கு.. நம்ம மதி அக்....!!!! இல்லயில்ல மதி சொன்னாங்களே The Good Earth அதனோட ஜெர்மன் பதிப்பு. அதப் படிச்சிட்டு மறக்கவே முடியலைங்க. மனசுக்குள்ளை நின்னாடுது.
அப்புறம்.. Who says Elephants can't dance இந்த புக்கு பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா.. நம்ம ராம்கி அண்ணாச்சி(முன்னால ரஜினிங்கிற வார்த்தையை சேர்த்துக்கோங்க) சொன்னாரே தனக்கு படிச்ச ஆங்கில புஸ்தகம்னு. அதே தான். அதனோடை ஜெர்மன் பதிப்பு Wer sagt, können Elefanten nicht tanzen.அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது. எனக்கு புரியுது எதுக்காக அவருக்கு அந்த புக்கு பிடிச்சிருக்குன்னு. (எதுக்காகன்னா.. அவருக்கு எதுக்காக புடிச்சிருக்கோ அதுக்காக தான்).
இன்னும் நிறைய ஜெர்மன் புக்குங்க இருக்கு.. ஆனாலும் இனி தமிழ் புக்குங்களுக்கு வருவோம்..
நான் படிச்சு முடிச்ச சில புக்குங்க,
அப்பமா இடியாப்பமா: அப்பம், இடியாப்பம் பத்தி நல்ல தெரியாத செய்திகளை இந்த புக்கு சொல்லுது. இதை எழுதினவரு அப்பம் இடியப்பாம் சாப்பிடுறதில ரொம்ப பிரபல்யம். அவர் பேரை சொன்னாலே அவருக்கும் அப்பத்துக்கும் இடையில இருக்கிற தொடர்பை புரிஞ்சுக்கலாம். ஆனாலும் புஸ்தகத்தில தன்னோட அரைவாசி பெயரை தான் பயன்படுத்தியிருக்காரு!
யூதப்போராட்டத்தில் எனது சாட்சியம்: இதை எழுதினவரு யூதப்போராட்டத்தில ஆரம்ப காலங்களில் பங்கு பத்தினவராம். அப்புறம் போராட்டம் போரடிக்க எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னே தெரியல்ல. பிறகு ரொம்ப நாளுக்கப்புறம் மெடிக்கலுக்காக பிரான்ஸ் வந்தவரை அவரது மனைவி சும்மா இருக்கீங்க ஏதாச்சும் எழுதுங்கன்னு சொன்னதுக்காக இந்த புக்கை எழுதினாராம். அப்புறம் யூதப் போராட்டம் முடிஞ்சாப்புறம் யூதப்போராட்டம் முடிந்து விட்டதுன்னு கூட ஒரு புக் எழுதினாராம். (அது நான் இன்னும் படிக்கல.) இதெல்லாம் இந்த புக்கோட முன்னுரையில இவர் சொல்லியிருக்கார்.
அப்புறம் ஓம் ன்னு ஒரு புத்தகம். இத எழுதினவரு கொரில்லா குரங்குக என்றும் ஒரு புக்கு போட்டிருக்கிறாரு. நான் இன்னும் படிக்கல்ல அத.
இன்னும் கொஞ்ச லிஸ்டு இருக்கு
சூ..சூ.. சில கொறிப்புக்கள்
பதினாலாவது சந்திரன்
ரூபாத் தேசம்
ஆ.. இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன். சீனா சிங்கள வாணன்னு ஒருவர் போடுவார் பாருங்க புக்குக. அடடே..
பல் துலக்குவது எப்படி?
கண்ணாடி போடுவது எப்படி?
பவுடர் பூசுவது எப்படி..?
இந்த புக்குங்க எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணிச்சு.
சரிங்க.. ஆமா என்னை யாரும் அழைக்கலை.. அதுக்காக நான் அப்பிடி விட முடியுமா என்ன,
இவங்க தான் நான் கூப்பிடுறவங்க!
மாடர்ன் கேர்ள்..
முகமூடி
இணைய குசும்பன்
வரட்டுங்களா..
10 comments:
;-)
ஆஹா..
எழுத படிக்க தெரியாத என்கிட்ட போயி நான் படிச்ச 100 புக்க சொல்ல கூப்புடுறீங்களே அண்ணாத்தே... சரி கூப்பிட்டுட்டீங்க.... லிஸ்டோட வாரேன்...
>>நான் படிச்ச ராணி காமிக்ஸ் என்கிட்ட இன்னும் இருக்கு... செவ்விந்தியர்கள், எகிப்தியர்கள் (தப்பி ஓடிய இளவரசி) பத்தி எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியதே காமிக்ஸ்தான்...
புத்தக விளையாட்டு - முகமூடி ஸ்பெஷல் போட்டாச்சி மஸ்ட் டூ... பாத்துட்டு சொல்லுங்க
:):)
சூப்பருங்கண்ணா..
சரோசா தேவி புக்குன்னு யாராவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன்.. அட, நீங்க கூட ஏமாத்திட்டியேளே!
மஸ்ட் டூ, எனக்கொரு மின்னஞ்சல் போடும்.
கொழுவி,
இப்பதான் இதைப் படிக்கிறேன். ஜெர்மன் இலக்கியம் எதுவும் இதுவரை நான் படித்ததில்லை. நீங்க கொதே எழுதுன புத்தகம் ஏதாவது ( Faust, Egmont
Torquato Tasso .....)இப்படி ஏதாவது படிச்சுருக்கீங்களா?.
Post a Comment