Wednesday, June 22, 2005

பேடுகளின் கொக்கரிப்பு.

பெடியன்கள்' எண்டு சொல்லி ஒரு வலைப்பக்கம் வந்திருக்கு.
போய்ப்பாத்தாப் பயமாத்தானிருக்கு. மண்டையோட்டுக்குறியோட கறுப்புப் பின்னணியும் பயங்கரமாயிருக்கெண்டா, அவயள் போட்டிருக்கிற தலைப்புக்களும் அப்பிடி. தாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதியளாம். போடுற பதிவுகளும் சும்மா வெளுத்து வாங்குது.

எடுத்த உடனயே வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுகினம். தளங்களை முடக்குகினமாம். பிறகு புலிகளின் வால்பிடியெண்டு கொஞ்சப்பேரச் சொல்லி அவளயவிட மற்றாக்கள வால்பிடிக்க வேண்டாமெண்டு எச்சரிக்கினமாம். நாலு கவிதை, சங்கர் ராஜி பற்றி ஒரு பதிவு, சு.ப. வின் படமொன்று என்று ஒரு சாம்பாறுத் தளம். பத்தாததற்கு, தோழர்களின் பின்னூட்டங்கள் வேறு அவர்களைக் குசிப்படுத்தியிருக்கக் கூடும். நல்ல வியாபாரத்தந்திரமுள்ள, விவரமான தீவிரவாதிகள் தான் அவர்கள். இல்லாவிட்டால் இவ்வளவு பேரை முட்டாளாக்கும் வல்லமை எப்படி வந்தது? இரண்டு நாள் கூட முடியவில்லை, அவர்களின் தளத்துக்கான பார்வையாளர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்டது. (நான் முதன் முதல் பார்க்கும்போது 31.)

அவர்களின் பெயர்களைப்பாருங்கள். கோமாளிகளின் பெயர்கள். உண்மையில் கோமாளிகள் தான் அவர்கள். தாங்கள் ஏதோ பயங்கமானவர்கள், ஏதோ ஒரு கொள்கையுடையவர்கள், (மற்றவர்களை முட்டாளாக்குவது தான் அது) தீவிரவாதிகள் என்று தோற்றம் தரத்தக்கவகையில் அவர்களின் தள அமைப்பும் பதிவுகளும் இருக்கிறது. இந்நேரத்தில் இயக்குனர் சூர்யா இயக்கி நடித்த ‘நியூ’ என்ற படம் தான் ஞாபகம் வருகிறது. அதில் வில்லன் ஒருவன் நடித்திருப்பான் கவனித்திருப்பீர்கள். கட்டுமஸ்தான பலர் புடைசூட நடுவில் வெளிச்சம் போட்டு ஒருவனின் மேல் கால்போட்டு இருக்கும் அந்தவில்லன் கடைசியில் ஒருவனா ஒருத்தியா எனத் தெரியாதவாறு வெறும் கோமாளியாக மாறும் காட்சி, ஞாபகமிருக்கா? அப்படித்தான் இந்தத் தீவிரவாதிகளும். அத்தனையும் கோமாளிக்கூத்து.

இதற்குள் கவலை கொள்ளத்தக்க விடயமென்னவென்றால், அவர்கள் ஒரு பதிவு போட்டார்கள், சில வலைத்தளங்களை முடக்கியிருப்பதாக.
உண்மையில் அது எவ்வளவு பேத்தலான கதை என்பது ஒருபுறமிருக்க எங்கள் வலைப்பதிவாளர்கள் அடித்த லூட்டிதான் தாங்க முடியாது. அதிலும் சுந்தரவடிவேல் அண்ணனும், ஸ்ரீரங்கன் அண்ணனும் அடித்த பின்னூட்டங்கள்தான் உச்சக்கட்டம்.
தளங்களை முடக்குதல் அராஜகப்போக்காம், இதனால்தான் ஈழப்போராட்டம் பின்தள்ளப்பட்டதாம். அது பாசிசமாம். ஜனநாயக ரீதியில் கருத்துக்களை முன்வைக்கட்டாம். தளங்களை முடக்க வேண்டாமாம். இப்படிப் போகிறது அவர்களின் வேண்டுகோளும் பின்னூட்டங்களும். (என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு)

சத்தியமா என்னால அடக்க ஏலாமப்போட்டுது சிரிப்பை. ஏதோ தொழில் நுட்பக் காரணங்களால் இயங்காமற்போன பதிவுகளை தாம்தான் முடக்கினோம் என்று அவர்கள் புரட்ட, இவர்கள் அறிவுரை சொல்ல, நல்ல நகைச்சுவைக்காட்சிதான் போங்கள். சுந்தரவடிவேலரையும் ஸ்ரீரங்கத்தாரையும் நினைக்கப் பாவமாத்தானிருக்கு. கூடவே தோழர்களையும். என்னத்தச் செய்ய? தலையிட அடிச்சுக்கொள்ளுறதத் தவிர.

சிரிப்புச் சிரிப்பா வருது
இவங்களை நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பா வருது.
வயிறு நோகச் சிரிப்பன்,
வயிறு வெடிக்கச் சிரிப்பன்.

5 comments:

Sri Rangan said...

கொழுவி,உமது கட்டுரை அவங்களைக் குறைத்து மதிப்பிடுகிறது.பொடியன்கள் அநுபவம் டக்ளசின் ஆட்கள்போல் தெரிகிறது.அவங்கள் இதயவீணைக்கோஷ்டிபோலதாமிருக்கு!

கொழுவி said...

கருத்துக்கு நன்றி சிறிரங்கன்.
இப்போதுதான் சென்று பார்த்துவந்தேன். பகிடி என்னெண்டா, ஈழநாதனுக்கு வலைப்பதிய அனுமதி குடுத்துப்போட்டு என்ர தளத்தை நிப்பாட்டி வச்சிருக்கினமாம் எண்டு கதை விட்டிருக்கினம். டோண்டு பாத்திட்டுவந்து பின்னூட்டம் போட்டபிறகுதான் போய்ப்பாத்தன்.
என்னத்த முடக்கிறாங்களோ, பிடுங்கிறாங்களோ தெரியேல.
-கொழுவி-

Anonymous said...

வணக்கம்...... கொழுவி.......
வலைபதிவ நிறுத்திவச்ச எண்டு...கதை விட..... அதை நம்ப...ஒரே....கொண்டாட்டம் தான் பொங்கள்.
ஈழ நாதனின் வலைபதிவு மற்றும் சிவராம் அவர்கள் பற்றிய பதிவு வெலைசெய்யவில்லை எண்டு தெடி புடிச்சிட்டு அவண்க்கள் விட்ட கதையிருக்கே அது இலங்கை லங்கா புவத் தோத்துபோம். :-))
ஆனா பாராட்டவும் வேணும் அவங்களை. யாரொட் பதிவு வேலைசெய்யேலை எண்டு பத்து கதை விட். அத நம்பவும் நாலு பேர்....அது தான் சுவரசியம்.

பெடியன்கள் said...
This comment has been removed by a blog administrator.
பெடியன்கள் said...

தோழரே உந்தன் கொக்கரிப்புகளுக்கு நாம் விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். பொறுத்திரும். உமது தளத்தை ஒரு மணித்தியாலங்கள் நாம் செயலிழக்க செய்திருந்தோம். எம் இயக்கத்துக்குள் இருந்த துரோகி ஒருவனால் எம்முடைய தாக்குதல் முழுமையாக வெற்றியளிக்கவில்லை. விரைவில் உமது தளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும். எம்மைச் சீண்டாதே!

- புதியோன்