Sunday, June 19, 2005

நரிகளின் போர்க்குணம்

நரிகளுக்கு நேருக்கு நேர் நின்று சண்டை செய்கின்ற போராட்ட குணமோ அல்லது அதற்கான மூர்க்க குணமோ இல்லையாயினும் தந்திரத்தரத்தால் எதனையும் சாதிக்க கூடியது.

தன் தேவைக்கேற்ப அரவணைத்தும் தேவை முடிந்ததும் ஏறி மிதித்தும் தானும் ஒரு சர்வ வல்லமையுள்ள மிருகம் என்பதனை அது பல தடவைகளில் நிரூபிக்கிறது என ஒரு மிருக வள ஆராய்ச்சி நிலையம் முடிவு செய்கிறது.

நரிகள் தொடர்பாக பல சுவையான புராண கதைகள் உள்ளன.

ஒரு முறை ஒரு நரி தனது அயலில் உள்ள சிங்கத்தின் குகையும் குகை சார்ந்த பிரதேசங்களையும் தளம்பல் நிலையிலேயே தொடர்ந்து பேண வேண்டும் என்ற நோக்கில் புலிகளை அரவணைக்க முடிவு செய்தது.

புலிகளை மட்டுமல்லாது மான், மரை, பன்றி, கழுதை என எல்லா மிருகங்களையும் அது தன் வசம் இழுத்தது.

ஆயினும் காலப்போக்கில் புலிகள் தவிர்ந்த மற்ற எல்லா மிருகங்களும் நரியின் கூடாரத்தில் குடிபோதையில் மயங்கி கிடக்க புலிகள் மிகத்துல்லியமாக நரியின் கபடத்தனத்தை புரிந்து கொண்டன.

அக்காலத்தில் காட்டில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது. அந்த காட்டினில் கால் வைக்க காத்திருந்த நரிகளுக்கு இது வாய்ப்பாகி போனது.

ஏற்கனவே புலிகள் நரிகளின் குள்ளத்தனத்தை உணர்ந்து நரிகளோடு முரண்பட்டு நின்றதனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகள் இனத்தையே அது ஒழித்துக்கட்ட முடிவு செய்தது.

புலிகளை மட்டுமல்லாது அங்கு காட்டில் வசித்த அப்பாவி மிருகங்களையும் நரி சித்திரவதை செய்து கொன்றது. அணில்கள் மீன்கள் கொக்குகள் முதலான பல விலங்குகள் நரிகளால் கொல்லப்பட்டன.

இப்படி நரிகளுக்கும் புலிகளுக்குமான பல தொடர்புகளை சொல்லுகின்ற புராண கதைகள் இருக்கின்றன.

இப்போது நரிகளின் சில இயல்புகளை பார்க்கலாம்.

பக்கத்தில் யார் உருப்பட்டாலும் அதற்கு பிடிக்காது.

சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் சலசலக்கும்.

ஒரு விடயத்தை ஊதிப் பெருப்பிப்பதில் நரிக்கு நிகர் நரியே தான்.

புலிகள் மீது தீராத பகையும் வன்மமும் உள்ள போதும் நேரடியாக தீண்ட பயம்.

பனங்காட்டு நரிகள் தவிர்ந்த மற்றய நரிகளுக்கு பக்கத்தில் சிறு சலசலப்பு கேட்டாலும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

நரிகள் சந்தேக பிராணிகள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குள்ளத் தந்திர புத்தி மட்டும் இல்லாவிட்டால் அதனால் எதுவும் செய்ய முடியாது.

காட்டில் எவராயிருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும்.

நேர்மையாக ஒரு போதும் சண்டையிட்டதில்லை. முதுகில் குத்தும் ஒரு விலங்கு.

16 comments:

-L-L-D-a-s-u said...

இந்த நரியின் உதவி வேண்டுமென்று புலி கதறும் ..

புலிக்கும் நரிக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கா?

Anonymous said...

//ஏற்கனவே புலிகள் நரிகளின் குள்ளத்தனத்தை உணர்ந்து நரிகளோடு முரண்பட்டு நின்றதனால் //

ஆரம்பம் முதலே நரியின் குடும்பத்தை சேர்ந்த ஒரு உறுப்பினரிடம் தான் புலி இல்லை பூனை என்று (பொய்) சொல்லி அவர்களை நம்ப வைத்து (புலி) கழுத்தறுத்த கதையை அடுத்த பாகத்தில் சொல்லுவீர்களோ? அதே போல நரியின் இருப்பிடத்தில் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை கள்ளத்(தோணி)தனமாக கவர்ந்து சென்று தான் புலி இன்றாளவும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அதற்கடுத்த பதிவில் போடுவீர்களோ?

Anonymous said...

நேர்மையாக ஒரு போதும் சண்டையிட்டதில்லை. முதுகில் குத்தும் ஒரு விலங்கு. ஆமாம், இதற்கு நரிபெரும்புதூரில் புலி நேருக்கு நேர் நின்று வீர தீரமாக சண்டை போட்ட காட்சி உட்பட பல உதாரணங்களை சொல்லலாம்.

கொழுவி said...

தவறுக்கு வருந்துகின்றான் கொழுவி:

பிற்குறிப்பு: இது காட்டில் இருக்கும் நரிகள், சிங்கங்கள் பற்றிய ஒரு மிருக பதிவு. வேறெந்த நரிகள் பற்றியும் எமக்கு தெரியாது.

இப்பிற்குறிப்பினை போடாது விட்டதனால் சிலர் தவறாக அர்த்தம் கொள்ள முற்படலாம். தவறு எங்களது தான்.

கொழுவி said...

ஐயா டாசு!
நீங்கள் கேக்கிற அந்த ரெண்டு மிருகங்களுக்கிடையிலயும் தொப்புள்கொடி உறவு இருக்கா இல்லையா தெரியாது.
நீங்கள் சுட்டிய பதிவு, இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா செய்ய வேண்டிய உதவிகளைப்பற்றிச் சொல்கிறது. என்னவோ தப்பாப் புரிஞ்சுகொண்டிருக்கிறியளோ எண்டு தோணுது.

கொழுவி said...

பனங்காட்டு எலி மற்றும் புளி!
நீங்கள் சொன்ன சம்பவங்கள் எனக்குத் தெரியாதே. நரிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்கிறீர்கள், அவர் நரியில்லையா? மேலும் அஃறிணைகளுக்கு உயர்திணைகளுக்குரிய இலக்கணத்தைப் பாவிக்கிறீர்களே,
எனக்கெண்டா ஒண்டுமே விளங்கேல. நான் கேள்விப்பட்டதுகளத் தானே சொன்னன்.

Anonymous said...

என்ன கொழுவி நரிகள் சண்டைக்கு வருதா? நீர் காட்டு நரிகளை பற்றி தானே எழுதினீர். ஏன் இந்த நரிக்ள் உதவி ஸ்ரீ பெரம்புடூர் பற்றி கதைக்குதுகள். அங்கும் நரி காடு நரி எல்லம் இருக்கா

முகமூடி said...

// புலிகள் மீது தீராத பகையும் வன்மமும் உள்ள போதும் நேரடியாக தீண்ட பயம். // நல்ல நகைச்சுவை இது... நீங்கள் எந்த நரியை பற்றி சொல்கிறீர்களோ தெரியாது, ஆனால் எனக்கு தெரிந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது... மெலும் எனக்கு சொன்ன கதையின் படி புலிதான் இதுவரை நரியை பார்த்து 'வராதே வராதே' என்று அழுதிருக்கிறது...

// புலிகளை மட்டுமல்லாது மான், மரை, பன்றி, கழுதை என எல்லா மிருகங்களையும் அது தன் வசம் இழுத்தது. // அல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்... ஆனால் காட்டை தான் மட்டுமே ஆளவேண்டும் என்று நினைக்கும் புலிகளுக்கு இரையாவதை விரும்பாமல் பாதுகாப்புக்காக அதுகளாக நரிகளை தேடி போனதுகள்...

// அக்காலத்தில் காட்டில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது. // ஆனால் புலி அவ்வப்போது ஊருக்குள்ளும் போய் மத்த மிருகங்களை மட்டுமல்ல, மனுசங்களையும் அடிக்க ஆரம்பிக்க மனுசங்களுக்கும் புலி மேல கோபம் வந்தது...

கொழுவி said...

//ஆனால் எனக்கு தெரிந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது... //

அதை நாமும் குறிப்பிட்டுள்ளோம். பனங்காட்டு நரி தவிர்ந்த மற்றய நரிகளுக்கு சிறு சலசலப்புக்கெல்லாம் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

தவிர நரிக்கதைகள் குறித்து நிறைய புராண கதைகள் இருக்கின்றன. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதிய புராண கதைகளை படித்து விட்டு நீங்கள் கூறுகிறீர்கள்.

மு. சுந்தரமூர்த்தி said...

கொழுவி said...
// அக்காலத்தில் காட்டில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது. //

mugamoodi said...
//ஆனால் புலி அவ்வப்போது ஊருக்குள்ளும் போய் மத்த மிருகங்களை மட்டுமல்ல, மனுசங்களையும் அடிக்க ஆரம்பிக்க மனுசங்களுக்கும் புலி மேல கோபம் வந்தது... //

புலிமேல கோபம் வர்ர மாதிரி மனுசங்களுக்கு சிங்கம் மேல ஏங்க கோபம் வரமாட்டேங்குது? சிங்கத்துக்கு ஆயதம் கொடுக்கனும்னு வேற முகமூடி மனுசரு (இல்ல நரியா?) சிபாரிசு பண்றாரே!

முகமூடி said...

மு. சுந்தரமூர்த்தி நல்லா பாருங்க "இது காட்டில் இருக்கும் நரிகள், சிங்கங்கள் பற்றிய ஒரு மிருக பதிவு."ன்னு கொழுவி சொல்லியிருக்கார்.. நானும் அந்த அர்த்தத்திலேயே சொல்லியிருக்கேன்... சிங்கங்களுக்கு ஆயுதம் தரனும்னு நான் சொன்னதா நீங்க எத குறிப்பிடுறீங்க...

//முகமூடி மனுசரு (இல்ல நரியா?) // நான் மனுசந்தான்... ஆனா நரின்னு மத்தவங்கள நம்ப வைக்க நிறையா பேரு முயற்சி பண்றாங்க...

Anonymous said...

கொழுவி அவர்களுக்கு,

நரிகளில் "கள்ளத்தனமாக தோனியேரி" இன்று why go என்ற நிலையிலிருக்கும் நரியும் அடங்குமா? ...

நிற்க. நீங்கள் வேண்டுமானால் நான் நரிகளைப்பற்றித்தான் பதிவிட்டேன் என்று நழுவலாம்... உண்மை எல்லோருக்கும் தெரியும். ஒரு முகமூடி புலிகளின் போர்க்குணம் பற்றி பதிவிட்டால் நீங்கள் ஒட்டு மொத்த இந்தியர்களையும் நரியென்று பதிவிட்டதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

--பாண்டி.

Anonymous said...

கோழுவி......என்னண்டு இப்படி எல்லாம் எழுத வருகிறதொ......
இது சும்மா மரியாதைக்கு கேட்ட கேள்வி.


இதுக்கு போய் நீரும்
ஹி ஹி .......எல்லாம் உங்கள் ஆதரவு தான் எண்டு சிலர் எழுதின மாதிரி எழுதிப்போடாதயும்.

இங்க சிலபேர் கண்டனம் தெரிவிச்சிட்டு போயிருக்கினம். இத பாக்க அவருக்கு நீர் இந்தியாவை பற்றி எழுதினமாதிரி கிடக்காம். என்ன செய்வம் அவனவனுக்கு தொப்பி அளவு போல போட்டு பொட்டு பாத்து குழம்புறாங்கள்.

Anonymous said...

:-)))

Anonymous said...

பாண்டி

கொழுவி ஒட்டுமொத்த இந்தியர்களை எல்லாம் நரியென்று சொல்லவில்லை. எனவே நிங்கள் அதற்காக இரத்தம் கொதிக்க தேவையில்லை. இப்படிப்பட்ட எதிர்பதிவுகள் போடவில்லையென்றால் அப்புறம் நரிகள் எக்காளமாக ஊளையிட ஆரம்பத்துவிடும்.

அவர் சொல்வது முற்றிலும் சரி.
நரி அதன் உணவை கூட சுயமாக வேட்டையாட முடியாத துப்பு கெட்ட மிருகம். சில சின்ன மிருகங்களை அதிலும் பலம் குறைந்த மிருகங்களை தான் கவர்ந்து செல்லும்(இது கூட காட்டு நரிகள்தான் நாட்டுக்குள் இருக்கும் நரிகள் இது கூட செய்ய முடியாத கேவலமான ஜென்மங்கள்). பெரும்பாலும் புலி அல்லது சிங்கம் வேட்டையாடிய எச்சத்தைதான் பிச்சையெடுத்து வயிறை நிரப்பும்.
இதைகளைவிட மனிதர்களுக்கு பயன்படும் ஆடுமாடுகள் எவ்வளவோ மேல் ஆனால் நரிகளுக்கு தாங்கள் அதுகளை விட மேல் என்று பொல்லாத நினைப்பு வேறு உண்டு.

இப்படிக்கு

நரிக்குறவன்

முகமூடி said...

நரிக்குறவன் said //சில சின்ன மிருகங்களை அதிலும் பலம் குறைந்த மிருகங்களை தான் கவர்ந்து செல்லும்(இது கூட காட்டு நரிகள்தான் நாட்டுக்குள் இருக்கும் நரிகள் இது கூட செய்ய முடியாத கேவலமான ஜென்மங்கள்). பெரும்பாலும் புலி அல்லது சிங்கம் வேட்டையாடிய எச்சத்தைதான் பிச்சையெடுத்து வயிறை நிரப்பும். //

இப்பேற்பட்ட கேவலமான ஜந்துவின் உதவியால் தன் வயிற்றை கழுவி இன்னொரு ஜந்து பிழைத்து வாழும்... அதன் பெயர் நரிக்குறவன்