Wednesday, September 07, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும்-2

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம். இதனை எழுதியவர் பழ.நெடுமாறன்.

இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.

'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நு}ற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது. அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.

மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார்.

அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம், 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள்.

முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள்.

இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன். கோட்சேயின் மறுபிறவி இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை.

நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.

அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் து}துவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர்.

தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினி, தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள். வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்து, ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது.

வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும், படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள். வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணி, பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள்.

ஊரணி அரசு மருத்துவமனையில் நு}ற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர். வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.

(இன்னும் வரும்)

31 comments:

Anonymous said...

Evidence ?

Anonymous said...

//Evidence ? //

செத்துப்போன மக்களும் எரிந்து போன ஊர்களும் இழந்து போன சொந்தங்களும்

Anonymous said...

துன்பியல் சம்பவம்.

Anonymous said...

//துன்பியல் சம்பவம்.//

இதை இந்தியா சொல்ல வேண்டும்

Anonymous said...

samething goes to Rajive the great 'paratha puthra'

Anonymous said...

//செத்துப்போன மக்களும் எரிந்து போன ஊர்களும் இழந்து போன சொந்தங்களும்//

Blah blah blah ! :-D
And with that goes the crediblity of your blog.

Thanks

Anonymous said...

another significant fact.

LTTE killed all other factions fighting sinhalese in its quest for dominance.

prabakaran is equally responsble.

Anonymous said...

in the world all of are are responsible for all things wich happening around us.
u have some
i have some
kozuvi has some

i blame u
u blame me
kozuvi blame us

Anonymous said...

hmm... all the comments are from anonymous... including mine :-|

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

தோற்றுப் போகின்ற வெறுப்பில் புலிகளே இந்த கொலைகளை செய்து விட்டு அமைதி காக்க சென்ற படையினர் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.

கொழுவி said...

//INDIANS ARE IDI.......//

என ஆரம்பித்த பின்னூட்டம் ஒன்றினை வெட்டி அகற்றியிருக்கிறேன். குறித்த நண்பர் வார்த்தைகளில் மரியாதை காட்டுவது நல்லது.

Anonymous said...

ஒரு வருடத்துக்கு முன்பு ஓகஸ்ட் 05,2004ல் வல்வைப்படுகொலை
தொடர்பாக நான் எழுதிய கட்டுரை
கட்டுரை அது தொடர்பான
விபரங்களுக்கு.
http://karikaalan.blogspot.com/2004/08/blog-post_05.html

மற்றையவர்கள் இதுதொடர்பாக எழுதிய
பதிவுகள்,விவாதங்கள் என்பனவற்றை
யாழ் இணையதளத்தில் காணலாம்
இங்கே சட்டி-
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1740

Anonymous said...

எங்கும் இந்திய இராணுவ மயம் அப்போ யாழ்குடாவின் ஒரு உரில் தமது தோட்டத்தில் ஒரு தந்தையும் அவரின்20 வயது மகளும் வேலை செய்தபடி நிக்கிறனர் அந்த வழியால் இந்திய இராணுவ சிறுஅணியொண்று ஜீப்பில் ரோந்து வருகிறனர். அவர்கள் அந்த தந்தையிடமும் மகளிடமும் உங்களிற்கு LTTE தெரியுமா என கேட்க தந்தை தெரியாதையா என்று சொல்லியபடி சைகையாலும் காட்டுகிறார்.

ஒருவன் உடனே மகளை நோக்கி யு எல் டி டி எண்டு கேக்க மகள் பயந்து இல்லை இல்லை யென்று சொல் அவனோ உன்னை விசாரிக்க வேண்டும் எங்களுடன் வா என்று அப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து செல்ல தந்தையே ஒவ்வொரு இராணுவத்தினரின் காலையும் பிடித்து அய்யா விடுங்கய்h பிள்ளைக்கு எதுவும் தெரியாதைய்யா என்று கத்த மகளும் அப்பா அப்பா என்னுகத்த .வந்தவர்கள் இந்தியில் ஏதோ சொன்னபடி தந்தையை தாக்குகிறார் கள் ஒருவனின் இரும்பு சப்பாத்து கால் தந்தையின் வயிற்றில் இறங்க தந்தை சுருண்டு விழுகிறார்.

அவர்கள் மகளை ஜீப்பில் தூக்கி போட்டுகொண்டு போய்விடுகிறனர்.

காயம்பட்ட தந்தை போய் ஊரில் சிலரை அழைத்து கொண்டு அருகிலிருந்த முகாமிற்கு சென்று மகள் அங்கிருக்கிறாளா என விசாரிக்கிறார்.அவர்கள் இல்லையென்று கூறிவிட அருகிலிருந்த மற்றைய முகாம்கள் காப்பரண்கள் என்று எல்லா இடமும் தேடி கிடைக்கவில்லை.

அன்று மாலை இராணுவத்தினர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு மயங்கிய நிலையில் காயங்களுடன் கை எலும்பு முறிந்த படி வைத்திய சாலையில் கொண்டுவந்து போட்டு விட்டு போய்விட்டனர்.
வைத்தியர்கள் அவளது உயிரை காப்பாற்றினாலும் அவளிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவளின் மனநிலை பாதிக்கபட்டு விட்டது.
தனத மகளிற்கு நடந்த நிலையை பார்த்து தந்தை விரக்தியில் மதுபோதையில் காப்பரணில் இருந்த இராணுவத்துடன் பிரச்சனை பட அவர்கள் தந்தையை சுட்டு கொன்று விட்டார்கள்.

Anonymous said...

ராஜீவ்காந்தியின் உயிர் தான் உயிரா?
மற்றவர்களின் உயிர் எல்லாம்
மயிரா?

//தோற்றுப் போகின்ற வெறுப்பில் புலிகளே இந்த கொலைகளை செய்து விட்டு அமைதி காக்க சென்ற படையினர் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்//.

கடைசியில் தோற்று அவமானத்துடன்
திரும்பியது யார்?வரலாறு சொல்லுமே?
நடந்ததை.ஏன் நடந்து கொண்டிருப்பதை
சொல்லுமே அசாம், கஸ்மீர்,மணிப்பூர்
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள்.

Anonymous said...

//கடைசியில் தோற்று அவமானத்துடன்
திரும்பியது யார்?//

யாரய்யா தோற்றது? நீங்கள் உங்களால் முடியாத போது சிங்கள அரசுகளுடன் சேர்ந்து வெளியேற்றினீர்கள். புலிகள் தங்களுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் பேயுடனும் கூட்டுச் சேர்வார்கள்.

Anonymous said...

சத்தியனின் பின்னூட்டம் குறித்து சொல்வதானால், எங்கே எல்லாம் புட்டுப் புட்டு வைக்கப்பட்டு விடுமோ என அறிந்து பதட்டத்துடன் எழுதியிருப்பதாக தெரிகிறது.

Anonymous said...

அடப் பார்றா.. யாருமே தங்கடை பெயரை வெளியிடுறாங்களில்ல..இதுவே ஒரு பரிசுப் போட்டியென்றால் போட்டுத்தாக்குவாங்க.. தங்க பெயர் இடம் காலம் எல்லாம் போட்டு...

ஈழநாதன்(Eelanathan) said...

//இந்த கட்டுரைகளும்....வலைப்பதிவுகளும் திட்டமிட்ட ஒரு மூலை சலவை உத்தியே...//

மூலையை ஏன் சலவை செய்யவேணும்

Anonymous said...

see my fellow tamil block admin. & others

Pls. try to stop such anti indian article. i am fully aware about the human right voilatins done by indian army.

see the reality now. act wisely. now such type of article will never help to achive any good thing for eela tamils.

many anti tamils in tamilnadu(like 'cho' and 'the hindu' type) are egerly waiting to make us to fight. so i am pleading to you to stop such harah language aginst indian army.

me too an indian tamil.still 'eela thamizhar having vast majority of support here in tamil nadu. very few anti tamils are here.

so act wise and avoid such arguments. it wont help.

Anonymous said...

so act wise and avoid such arguments. it wont help.


100% CORRECT. PLEASE STOP THIS. THIS IS NOT LIKE 'THANKAR PACCAN'ISSUE OR OTHER SUCH TO DISCUSS . THIS IS LIFE ISSUE OF INNOCENT HUMANS.

so Plase stop to aruge or post such anti indian stuffs.

Anonymous said...

இந்தியா மன்னிப்பு கேட்டுட்டா உங்க பிரச்சனை எல்லாம் தீந்து போய்விடுமா ?
இல்லை தமிழீழம் தான் கையில் கிடைச்சுடுமா ?
எது முக்கியமோ அத விட்டு விட்டு இப்படி வெளிநாட்ல உட்கார்ந்துகிட்டுபேசிக்கிட்டு இருக்கீங்க.

Anonymous said...

AS A INDIAN YOU HAVE RIGHTS TO DEFENCE YOUR PEOPLE AND YOUR ARMY SAME AS WE DO TOO AS A EELA TAMILAN SO DON'T FORGET IT
STOP CRYING

Anonymous said...

புலிகளின் முஸ்லீம் படுகொலைகள், ஐனநாயக படுகொலைகள், எல்லாம் படங்களோடு வலைப்பதிவினில் போடலாம். அவற்றைப் பற்றி ஆராய்ந்து எவ்வளவும் எழுதலாம். அதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் இதில் இல்லை. ஆகவே இந்த பதிவை நிறுத்துக

கொழுவி said...

பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காமைக்கு முதற்கண் மன்னிக்கவும்.

என் பதிவு இந்தியாவைச் சீண்டும் பதிவாகத் தெரிகிறதா?
இதுவொரு சாதாரண வலைப்பக்கம். அவ்வளவு தான்.
மேலும் இக்கட்டுரையை எழுதியது பழ.நெடுமாறன். இதில் தலைப்பு உட்பட ஒரு சொல்கூட மாற்றம் செய்யவில்லை.

இக்கட்டுரையை நிறுத்தச் சொன்னவர்களில் சிலரின் ஆதங்கம் புரிகிறது.
ஆனால் இந்தியா ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று இறுமாப்போடு எழுதுபவர்க்கு என்ன பதில் சொல்வது?
மன்னிப்புக் கேட்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் இப்படியெல்லாம் நடந்ததென்றாவது ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவமோ சுயவிமர்சனமோ இருக்கிறதா என்பதே கேள்வி. அரசாங்கத்தை விடுங்கள். சாதாரண பிரசையாக இருக்கும் பலருக்கு இப்படியெல்லாம் நடந்து என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா?

இங்கே புலிகளின் சகோதரப்படுகொலைகளையோ முஸ்லீம் படுகொலைகளையோ யாரும் மறுக்கவில்லை. அதற்குப் பதிலடியாகத்தான் இந்தியராணுவம் இப்படுகொலைகளைச் செய்தது என்று பின்னூட்டமிடுவது எந்தளவு அப்பத்தமென்று பின்னூட்டமிடுபவருக்கே தெரியும்.

முஸ்லீம் படுகொலைகளைப் படங்களுடன் பதிவாகப் போடுங்களேன். யார் வேண்டாமென்றது? எத்தனை பதிவுகள் தமிழ்மணத்திரட்டியில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பக்கங்களில் வந்துவிட்டன?
நானே அதை எழுதவேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அதே நேரம் முஸ்லீம்களின் தாண்டவத்தைப்பற்றிய பதிவேதும் இதுவரை வரவில்லை. அதுபற்றி யாரும் எழுதப்போவதுமில்லை. அதற்காக அப்படியேதும் நடக்கவில்லையென்றில்லை.

இந்தியா எல்லாத்தையும் மறந்துவிட்டு அது முன்னேறிச்செல்வதாகச் சொல்கிறார் சடையம்.
சரி. அப்படியே போகட்டும். அதற்கென்ன? இங்கே வலைப்பதிவுகளில் ராஜவ் கொலை பற்றி யாருமே கதைப்பதில்லையா?
பிரபாகரனைத் தூக்கில் போடு என்று யாரும் ஏழுதுவதில்லையா? "துன்பியல் சம்பவம்" என்று சொன்னதை யாரும் நையாண்டி செய்வதில்லையா?
நான் கேட்கிறேன், ஈழத்தமிழர் தரப்பிலிருந்து ஒரு கொலைக்காக (வேண்டுமானால் ராஜீவோடு இறந்த இருபத்திச் சொச்சப் பேரையும் சேர்த்துக்கொள்வோம்) வருத்தமாவது தெரிவிக்கப்பட்டது (அதிகார பூர்வமாக).
ஆனால் நூறுமடங்குக் கொடுமைக்கு சிறுவருத்தம்கூட வரவில்லையே? குறைந்தபட்சம் அப்படி நடந்ததென்றாவது எங்கேயும் சுயவிமர்சனம் நடந்ததுண்டா?

இந்தியா மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று 'நான்' ஒற்றைக்காலில் நிற்கவில்லை. புலிகளும் அப்படி நினைப்பதாகத் தெரியவில்ல. ஏதோ நான் ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் சார்பாகவோ புலிகளின் சார்பாகவோ எழுதுவதாக நினைத்துக் கருத்தாடுகிறீர்கள்.
இது பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரை. குறிப்பிட்ட ஒரு படுகொலைச் சம்பவத்தை ஆவணப்படுத்தியுள்ளார். இதற்குள் ஆதாரங்கள் கேட்கும் அநாமதேயத்துக்கு என்ன பதிலுரைப்பதென்று தெரியவில்லை. பேசாமல் நான் பார்த்த சம்பந்தப்பட்ட சம்பவங்களை மட்டும் எழுதினாலே இப்படியொரு கட்டுரை எழுத முடியும்.

இப்படியெல்லாம் நடந்ததென்று ஏராளமானோருக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இந்தியா சார்பாகக் கருத்தாடுவார்கள். புலிகள் பற்றி, அவர்களின் தவறுகள், படுகொலைகள் உட்பட எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டு நான் அவர்களின் பக்கம் நிற்கிறேன். ஆனால் பலருக்கு தங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை பிறர் எழுதுவது பிடிப்பதில்லை. இதற்குள் வேடிக்கை என்னவென்றால் புலிகளுக்கு சுயவிமர்சனம் பிடிக்காது என்று அவர்களே சொல்லிக்கொள்வது தான்.

ஆகவே இக்கட்டுரை தொடரும். ஆனால் தேவையற்ற, விரும்பத்தகாத பின்னூட்டங்கள் நிறுத்தப்படுமென்று கூறிக்கொள்கிறேன். இப்பதிவை ஏன் நிறுத்த வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. இதைத் தன்மையாகச் சொன்ன அன்பர்களுக்கு என் மனவருத்தத்துடன் கூடிய மறுப்பே பதிலாக அமையும்.

முஸ்லீம்களைப் பற்றி நானோ மற்றவர்களோ எழுதாமலிருப்பதற்கு 'இந்த நேரத்தில் இவற்றைக் கிளற வேண்டாம்' என்ற எண்ணமே காரணம். ஆனால் இதே எண்ணத்தை இந்தியாவுக்கு இந்த நேரத்திற் பொருத்தலாமா என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இது புலிகள் சார்பு ஊடகங்களில் ஏற்கெனவே வந்துவிட்ட கட்டுரை.
தமிழகத்தில் பத்திரிகையிலேயே வந்துவிட்ட கட்டுரை. அதாவது இந்தியாவுக்குள்ளேயே அச்சுவடிவில் வந்துவிட்ட கட்டுரையை நான் இங்கே இணையத்திலிடுகிறேன். குறைந்தபட்சம் பத்து இணையத்தளங்களிலாவது இக்கட்டுரை இருக்கிறது.
ஆகவே இதை நிறுத்துவதால் எதுவும் வந்துவிடப்போவதுமில்லை. அல்லது என் கட்டுரையைப் பார்த்து இந்திய அரசாங்கம், தான் ஈழத்தமிழர் மேல் கொண்டிருக்கும் கரிசனையைக் குறைத்துக் கொள்ளுமென்றோ நான் நினைக்கவில்லை.
பிரச்சினை, இக்கட்டுரையை தார்மீக அடிப்படையில் அணுக முடியாதவர்களுக்குத்தான்.

இங்கே இக்கட்டுரை பற்றி வாதிட என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. அதனால்தான் இத்தனை பின்னூட்டங்கள் வந்திருக்குமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. இது உண்மையில் நடந்த சம்பவங்களை ஆவணமாக்கி கட்டுரை. இதை யாராலும் மறுக்கவும் முடியாது.

எனக்குத் தெரியும் இதைப்பற்றி எமக்குள் திரும்பத்திரும்ப சண்டைபிடித்து எந்தப் பிரியோசினமுமில்லையென்று.
எமக்குள்ளான உறவுதான் விரிசலாகும். அதனாற்றான் பலர் அநாமதேயமாக வந்து கருத்திடுகிறார்கள்.
ஆனால் பதிவை நிறுத்தச் சொல்வது அநியாயம்.

அடுத்த பதிவிற் சந்திக்கும்வரை,
நன்றியுடன்,
-கொழுவி.

Anonymous said...

WELL DONE KOLUVEE KEEP IT UP

WHY SHOULD WE STOP THIS?

I AM FULLY SUPPORT THIS. TRUTH SHOULD COME OUT. NO MATTER WHAT

Amar said...

அதாரம் கொடுங்கள் கொழுவி.அதாரம் இருந்தால் நான் நம்ப தயார்.

அனால் அந்த அதாரம் என்பது புலிகளிடம் இருந்தோ , அல்லது நெடுமாறன் இடம் இருந்தோ வந்தால் நாம் நம்ப தயாராக இல்லை.

நம்பகமான , நடுநிலையான ஒரு பத்திரிக்கையோ அல்லது ஐ.நா சபை அறிக்கையோ கிடைத்தால் நான் நம்புகிரேன்.

Anonymous said...

கடைசியில் தோற்று அவமானத்துடன்
திரும்பியது யார்?வரலாறு சொல்லுமே?
நடந்ததை.ஏன் நடந்து கொண்டிருப்பதை
சொல்லுமே அசாம், கஸ்மீர்,மணிப்பூர்
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள்

//கடைசியில் தோற்று அவமானத்துடன்
திரும்பியது யார்?//

யாரய்யா தோற்றது? நீங்கள் உங்களால் முடியாத போது சிங்கள அரசுகளுடன் சேர்ந்து வெளியேற்றினீர்கள். புலிகள் தங்களுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் பேயுடனும் கூட்டுச் சேர்வார்கள்.

கடந்த கால சரித்திரத்தை புரட்டிப்பார்பது வேறு அதன் மீது உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதென்பது வேறு.....இன்று நாம் வரலாறாக ஏற்றுக்கொண்ட அனைத்துமே மாறுபட்ட திரிபு கருத்துக்கள் கொண்டவைதான்.....

ராஜீவின் கொலை...அதன் தொடர் நிகழ்வுகள்.... இந்தியாவிற்கு எத்தனை பெரிய இழப்பு மற்றும் சோகமோ....அதை விட பேரிழப்பும் பெரும் சோகமும் கொண்டது ஈழச்சம்பவங்கள்....அதில் இரண்டாம் கருத்தில்லை....ஆனால் அதையே வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்காமல்...இந்தியா அடுத்த இலக்குகளை நோக்கி வெற்றிகரமாகவே சென்று கொண்டிருக்கிறது.....சாதகமான சந்தர்ப்பங்களை உறுவாக்க தெரிந்த புலிகள் அதை சரியாய் பயன்படுத்தாமல்....இன்னமும் அடுத்தவனை ஓட்டை சொல்லி கொண்டிருப்பது....தன் இயலாமையை மறைக்கவா.....சிந்தித்து பாருங்கள்.....நண்பரே.....

இந்தியாவை....இந்தியனின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் இத்தகைய பதிவுகள் கடைகோடி ஈழத்தமிழனுக்கு வாழ்வில் எத்தகைய அதிசயத்தை நிகழ்த்திவிடும்...

see the reality now. act wisely. now such type of article will never help to achive any good thing for eela tamils.

many anti tamils in tamilnadu(like 'cho' and 'the hindu' type) are egerly waiting to make us to fight. so i am pleading to you to stop such harah language aginst indian army.

me too an indian tamil.still 'eela thamizhar having vast majority of support here in tamil nadu. very few anti tamils are here.

so act wise and avoid such arguments. it wont help.


100% CORRECT. PLEASE STOP THIS. THIS IS NOT LIKE 'THANKAR PACCAN'ISSUE OR OTHER SUCH TO DISCUSS . THIS IS LIFE ISSUE OF INNOCENT HUMANS.



இந்தியா மன்னிப்பு கேட்டுட்டா உங்க பிரச்சனை எல்லாம் தீந்து போய்விடுமா ?
இல்லை தமிழீழம் தான் கையில் கிடைச்சுடுமா ?
எது முக்கியமோ அத விட்டு விட்டு இப்படி வெளிநாட்ல உட்கார்ந்துகிட்டுபேசிக்கிட்டு இருக்கீங்க.

எனக்குத் தெரியும் இதைப்பற்றி எமக்குள் திரும்பத்திரும்ப சண்டைபிடித்து எந்தப் பிரியோசினமுமில்லையென்று.
எமக்குள்ளான உறவுதான் விரிசலாகும். அதனாற்றான் பலர் அநாமதேயமாக வந்து கருத்திடுகிறார்கள்

DEAR KOLUVI,


YOUR WISH. BESIDES REMEMBER YOU ARE CREATING CHANCES TO POST ARTICLES BY THE PEOPLE THOSE WHO ARE VERY INTERESTING TO MAKE US SPILT.

I BELEIVE YOU ALSO ADMIRE IT. NOW WHAT IS OUR NEED? HOW THESE WILL HELP FOR THAT????????????????????????????????????????????

EVERYBODY HAS THEIR OWN VIEWS. BESIDES WE HAVE SOCIAL RESPONSIBILITY ALSO.

கொழுவி said...

சமுத்திரா,
உங்களுக்கு ஆதாரங்கள் தந்து நிறுவ வேண்டிய தேவை எனக்கில்லை. ஆனால் நான் புலியல்லன் என்று நீங்கள் நம்பினால், நான் ஒரு சாட்சி.

அதைவிட இதன் முதற்பகுதியில் பழ.நெடுமாறனே வெளிநாட்டுப் பத்திரிகையை ஆதாரப்படுத்தியுள்ளார். அதை வாசியுங்கள். இதைப்பற்றியறிந்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
இப்படுகொலை பற்றி இதுதான் ஒரு கட்டுரையென்றில்லை. ஏற்கெனவே பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.

இதே இந்தியஇராணுவம் யாழ் வைத்தியசாலையில் நுழைந்து வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் உட்பட பலரைப் பட்டப்பகலில் கொன்றதை நம்புவதற்கு நீங்கள் ஆதாரங்கள் கேட்கலாம். இதை சர்வதேசப் பத்திரிகைகள் பதிவுசெய்யாமற்கூட இருக்கலாம்.
ஆனால் கல்வியங்காடு, அரியாலை, கொக்குவில், சுண்டுக்குழி, கோப்பாய், பருத்தித்துறை என்ற இடங்களில் நடந்த படுகொலைகளையும், சென்.ஜோன்ஸ், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, சென் பற்றிக்ஸ் போன்ற பிரபலமான பாடசாலைகளில் மக்கள் அகதிகளாகத் தங்கியிருந்தபோது அவற்றின்மீது எறிகணைகளை வீசி மக்களைக் கொன்றதையும், பின் புலிகள் தான் அங்கிருக்கிறார்களென்று தாம் நினைத்துத்தான் அத்தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள்(மேஜர் கோபாலன், சுகுமார்) சொன்னதையும் 'முறிந்த பனையில்' காணலாம்.

ஒக்ரோபர் 21 யாழ் வைத்தியசாலைப் படுகொலையைப் பற்றி, தானொரு வைத்தியரென்று கைகளையுயர்த்திக் கதறிய வைத்தியர் சிவபாதசுந்தரத்தை மிகக் கிட்டத்தில் வைத்துச் சுட்டுக்கொன்றது பற்றி, ஏறத்தாள இருபது மணிநேரம் பிணங்களோடு பிணங்களாகக் கிடந்த மிகச்சிலர் மட்டுமே உயிரோடு தப்பிப்பிழைக்கக்கூடியதாக நடத்தப்பட்ட இருநாள் தாக்குதல் பற்றி, படையினரின் சூறையாடல்கள் பற்றி, இவ்வளவும் உயரதிகாரிகள் வைத்தியசாலையின் எதிர்க்கட்டடங்களில் தம் கட்டளைத் தலைமையகங்களை வைத்திருக்கக்கூடியதாக நடத்தப்பட்டது பற்றி, முறிந்த பனையில் தெளிவாக நிறையச் சாட்சியங்களுடன் எழுதப்பட்டுள்ளது. கூடவே பாலியல் வன்முறைகள் பற்றியும் தாராளமான ஆதாரங்களோடு எழுதப்பட்டுள்ளது.

முறிந்த பனை புலிகளின் புத்தகம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதை எழுதியதற்காகத்தான் புலிகளால் ராஜினி கொல்லப்பட்டார் என்று இன்றளவும் பெரும்பான்மையானவர்கள் (அவரின் குடும்பமுட்பட) சொல்லிவரும் வேளையில், அதைப் புலிசார்புப் புத்தகமாகச் சொல்ல முடியாது. அதில் புலிளைப் பற்றிக்கூட காட்டமான விமர்சனங்களுண்டு.

(அப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு ராஜனியைக் கொல்ல யார்யாருக்கெல்லாம் தேவையிருந்தது என்று ஊகிக்க முடியும். அதில் இந்தியாவுக்கு எவ்வளவு தேவையிருந்ததென்றும் ஊகிக்க முடியும்.) முடிந்தால் யாழ் வைத்தியசாலைப் படுகொலை பற்றிக்கூட என்னால் முறிந்தபனையிலிருந்து பத்திகள் எழுத முடியும்.

இப்புத்தகத்தை இந்தியாவிற் பெற முடியுமென்றே நினைக்கிறேன்.

கொழுவி said...

சடையம்,
இக்கட்டுரையில் உண்மைத்தன்மையில்லையென்று சொல்லும் உங்களுக்காகவேனும் நான் பதிய வேண்டிய அவசியமிருக்கிறதல்லவா?

இவை உண்மையில்லையென்று சொல்லும் நீங்கள், திட்டமிட்ட மூளைச்சலவையென்று சொல்கிறீர்கள். அப்படியானால் இவற்றை நம்பாமலிப்பது கூட திட்டமிட்ட மூளைச்சலவையென்று நான் சொல்லலாமா?

பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்ட இக்கட்டுரையை நான் போடுவது என் மனநோயாயிருக்கலாம். சொல்லப்போனால் என்னைப்போடச் செய்ததுக்குப் பல காரணிகள் உண்டு.
எனக்கு நன்றாகத் தெரியும். இவற்றைப் பாரத்து இருதரப்பிலுமே யாரும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. இடையில் தளம்பிக்கொண்டிருக்கும் ஓரிருவர் தெளிவடையலாம் அல்லது குழப்பமடையலாம். ஏன் இதையொரு பழிவாங்கும் பதிவாகக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
என்றாலும் தன்மையான கருத்தாடலுக்கு நன்றி.

கொழுவி said...

இந்தப் பதிவுக்கான பின்னூட்டமிடும் வசதியை நீக்கியுள்ளேன்.
விவாதத்தை இப்பதிவில் இத்துடன் முடித்துக்கொள்ளும் எண்ணத்தில்தான் அப்படிச் செய்தேன்.
சிலர் சீண்டும் விதமாகப் பின்னூட்டமிடுவதும் அதற்கு மறுத்து வேறு சிலர் பின்னூட்டமிடுவதும் ஆதாரங்கள் கேட்டு சிலர் பின்னூட்டமிட நானோ யாரோ ஆதாரங்களுடன் மேலும் பல படுகொலைகள் அட்டூழியங்கள் பற்றி எழுத, இப்படியே தொடர்ச்சியாப் போய்விடும்.
அத்தோடு இத்தொடரையும் நிறுத்துவதாகச் சொல்லிவிட்டேன்.
ஆகவே இவ்விவாதத்தை இத்துடன் நிறுத்தும் முகமாக பின்னூட்டங்களையும் இப்பதிவுக்கு நிறுத்தி வைத்துள்ளேன்.
நன்றி.
அன்புடன்
கொழுவி.