Sunday, September 11, 2005

இரயாகரனுக்கு பதில்

வணக்கம். இரயாகரன்! தங்கள் பதிவில் இது பற்றி உங்கள் கருத்தென்ன எனக் கேட்டவிட்டு அங்கு பதிலிட உங்கள் team members இவர்களை மட்டும் அனுமதித்திருக்கிறீர்கள். நான் உங்கள் team member இல்லாத படியால் என்னால் அங்கு பின்னூட்டம் இட முடியவில்லை.

Comments on this blog are restricted to team members.
You're currently logged in as
கொழுவி who is not a team member of this blog.

ஆகவே இங்கு எனதில் பதிகிறேன்.

ராயகரன்! நான் அறிந்த வரை நிதர்சனத்தின் செய்தி கப்சா! முன்பே செய்தி வெளிவந்த மாதிரி நடந்த சம்பவம் தான் உண்மை. அதனை புலிகளின் ஊடகங்களை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நிதர்சனம் ஒரு லூசுத்தனமான இணையம். அதனை இணையம் என்று ஏற்றுக்கொள்வதே முடியாத காரியம். அதிலும் அதனை நீங்கள் புலிகளின் மைய ஊடகம் என்கிறீர்கள்.

புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேர்ந்த சேரலாதன், அந்த இணையம் தவறான செய்திகளை பரப்புவதாகவும் தங்களுக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பேதும் இல்லை எனவும் சில காலங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

என்னைப் பொறுத்தவரை நிதர்சனம் ஒரு சின்னப்புள்ளை விளையாட்டுத்தளம்.

பாருங்கள், பேராசியருக்கு சப்போட் பண்ணுகிறோம் என புறப்பட்டு அந்தச் சிறுமி இதற்கு முன்பே 3 நபர்களுடன் தொடர்புற்றிருந்தாள் என எவ்வளவு வக்கிரமாக எழுதியிருக்கின்றனர்.

திரும்பவும் சொல்கின்றேன்.. நிதர்சனம் புலிகளுக்கு ஆதரவாக எழுதுகிறது என்பதற்காக அது புலிகளின் மைய ஊடகமாகி விடாது. அது ஒரு லூசுத்தளம்.

தவிரவும் உலகளாவிய ஊடகங்கள் நிதர்சனத்தில் இருந்து தான் செய்தியினை பெறுகிறன என்று எழுதியிருக்கிறிர்கள். நான் அறிந்த வரை என்னவோ நிலைமை தலைகீழாகத்தான் இருக்கிறது.

நிதர்சனத்தின் தற்போதைய செய்தி வெறும் கப்சா என்கிறார் வன்னியிலுள்ள புலிகளின் மைய ஊடகத்தை சேர்ந்த ஒருவர்.

8 comments:

கொழுவி said...

அதுமட்டுமன்று,
அச்சிறுமி ஏற்கெனவே 3 பேருடன் பாலியல்தொடர்பு கொண்டிருந்தாளென மருத்துவப் பரிசோதனையால் எப்படி நிரூபிக்க முடியும்?
அதைவிட 'நீண்டகாலமென்று' எவ்வளவு காலத்தைக் குறிக்கலாம். அச்சிறுமிக்கு இப்போதுதான் பதினான்கு வயது?
மேலும் அச்சிறுமி முல்லைத்தீவை வசிப்பிடமாகக்கொண்டவள். அந்த 'நீண்டகாலம்' முல்லைத்தீவிலிருந்தே ஆரம்பித்திருக்காது. மேலும் முல்லைத்தீவில் வைத்து இந்திய றோ அச்சிறுமியைத் தயார்ப்படுத்தியிருக்க முடியாது.
சிலவேளை இச்செய்தியில் உண்மையிருந்திருந்தாற்கூட (நான் அறிந்தவரையில் பேராசிரியருக்கெதிரான சக்திகள் பற்றிய சில செய்திகள் உண்மை) நிதர்சனத்தின் இந்தச்செய்தி மூலம் அனைத்தும் அடிபட்டுப்போகும்.

Anonymous said...

//நிதர்சனம் ஒரு லூசுத்தனமான இணையம். அதனை இணையம் என்று ஏற்றுக்கொள்வதே முடியாத காரியம். அதிலும் அதனை நீங்கள் புலிகளின் மைய ஊடகம் என்கிறீர்கள்.//

லூசுத்தளம மட்டுமல்ல புலிகளின் பெயரை மாசுபடுத்துவதற்கென்று இயங்கும் தளம்..எப்படித்தான் இதை இன்னும் அனுதித்து வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.இந்தத்திறத்தில் இந்த செய்தியை(?) சூரியன் இணையத்தளம் வேறு மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறது..
இவர்களுக்கெல்லாம் சொந்தமாகவேனும் சிந்திக்க முடியாதா?...

தமிழரங்கம் said...

நட்புடன் கொழுவிக்கு

எனது பதிவில் இடமுடியவில்லை என்பது உண்மை. சமூகவிரோத லும்பன்கள் நிதர்சனம் செய்தி போன்று எனது பெயரிலும் மற்றவர் பெயரிலும் செய்திகளைப் போடுகின்றனர். ஆட்களுக்கு இடையில் முரண்பாட்டை எற்படுத்தும் விதத்தில் வக்கரிக்கின்றனர். தமது சொந்த பாலியல் வக்கிரங்களையும், ஆணாதிக்க குதர்க்கங்களையும் பதிவிடுவதை தடுக்கவேண்டிய சூழல். நேர்மையாக விமர்சிக்க தயாரற்ற இந்த அரசியல் அனாமதேயங்களால் இந்த நிலை.

நீங்கள் குறித்த தளத்தில் உள்ள ஈமெயிலுக்கு பதிவை அனுப்பின், நான் அதில் பொடுகின்றேன். இது மாற்று ஏற்பாடு கண்டறியும் வரை.

மற்றும் நிதர்சணம்.கொம் இணையம் புலிகளின் உத்தியோகபூர்வமானவையல்ல. இதை அவர்கள் இடையிலும் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் அக்கபக்கமாகவே ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகின்றனர் உதாரணமாக பண்டரவன்னியன் படை,சங்கிலியன் படை என்ற பல பல பெயரில் உள்ளது போன்றதே இவை. இப்படி பற்பல உதாரணம் உண்டு.

இதில் கூட்டமைப்பின் பங்கு இதை உறுதி செய்யும் வகையில் இதற்கு பக்கபலமாக உள்ளது அல்லவா!

இதற்கு பலம் சேர்க்கும் வகையில் புலிகளின் மௌனம்!

பி.இரயாகரன்
11.9.2005

தமிழரங்கம் said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...

நட்புடன் கொழுவிக்கு
வணக்கம்

தற்பொது நீங்கள் உங்கள் கருத்தை பதிவில் போடமுடியும்;. அனாமதேய கொசுறுகளின் வம்பை தடுக்கும் வழிவகைகள் தொழல்நுட்ப ரீதியாக தெரியும்பட்சத்தில் அதை ஈமெயில் மூலம் எனக்கு அறியத்தரவும்;
பி.இரயாகரன்
11.09.2005

கொழுவி said...

உண்மையில் புலிகளின் மெளனம் விசனத்தை ஏற்படுத்துகின்றது. தவிரவும் தமிழ் ஊடகங்கள் மெளனித்து இருப்பதுவும் கோபத்தினை உண்டு பண்ணுகிறது.

ஆனால் நிதர்சனம் சொல்வது போல றோ வின் சதி என்பதெல்லாம் சும்மா பம்மாத்து. (ஆனந்த சங்கரியின் படத்துக்கு தலை மாற்றி ஒரு முறை அவர் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுபவர் போல நிதர்சனம் வெளியிட்டிருந்தது. அந்த அளவிற்கு புலிகள் பேய்த்தனமாக செயற்பட மாட்டார்கள் என்று நீங்களும் நம்புவீர்கள்.

பேராசிரியர் குறித்த சம்பவம் உண்மையே. ஆனால் அதனை புலிகளுடன் தொடர்பு படுத்தவே சகல புலியெதிர்ப்பு ஊடகங்களும் முன்னிற்கின்றன.

Anonymous said...

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=15771

Anonymous said...

SOME ONE USING RAYAGARAN'S NAME

SEE THIS FOLLOWING EXAMPLE