Wednesday, September 14, 2005

அறிந்தும் அறியாமலும்- ஓர் அதிகாலை விடியல்



அறியாதார் செய்த நெகிழத்தில் விடிகிறது காலை.
அறியாதாரின் தாளினால் துடைத்தலுடன்
அறியாதார் கழுவிப் -பின்
அறியாதார் சுத்திகரித்த நீரின் கழுவலுடன்
விடிகிறது காலை.

அறியாதானின் கட்டுரை வாசிக்கலாம் கழியும்வரை.
அறியாதார் செய்தவைதான் எல்லாமென்றாலும்
அறியாதான் ஒருவன் போகான் எனக்காய்க் கழிவறை.
அறிந்தோ அறியாமலோ விடிகிறது காலை இப்படியே.
------------------------------------------------------------

நெகிழம்: பிளாஸ்ரிக்

11 comments:

Anonymous said...

கவிதையும் கழிவறையிலேயே தோன்றியிருக்கும் போல.

Anonymous said...

ஏதோ பெரிய விஷயம் சொல்றீங்க போல கொழுவி..என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல :(

வீ. எம் said...

ஏதோ பெரிய விஷயம் சொல்றீங்க போல கொழுவி..என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல :(

Anonymous said...

/கவிதையும் கழிவறையிலேயே தோன்றியிருக்கும் போல./
அறியாதானின் பின்னூட்டம்

கொழுவி said...

கவிதை (இதை நீங்கள் தான் அப்படிச் சொன்னீர்கள்) தோன்றியது, எங்கள் சடையனின் கவிதையைப் பார்த்து.
எல்லாப் புகழும் சடையனுக்கே.

Anonymous said...

வசந்தன் வந்தார் எண்டால் கொளுவி வருகிரார்...பேந்து வன்னியன் வாறார்...எப்படியோ சந்திரவதனாக்காவின்ரை பதிவுக்ளின்ரை அமவுண்ரை நீர் பாஸ் செய்யாட்டி சரி.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

அறிந்தோ அறியாமலோ கழிகிறது காலை இப்படியே.

கொழுவி said...

ஐயா எல்லாம் அறிஞ்சவன்,
நீர் கருணாநந்தன் அல்லது ஜனநாயகம் வகையறா போல் பின்னூட்டமிடுகிறீரே. இது நியாயமா?
என்ன இருந்தாலும் சந்திரவதனாவின்ர றெக்கோட் உடைக்கிறது கஸ்டம்தான்.

பெயரிலி,
பாட்டொன்றைப்போட்டுத்தான் பின்னூட்டமிட வேணுமெண்டு நீங்களே ஏற்படுத்திக்கொண்ட கொள்கைக்காக இப்படியா சகட்டு மேனிக்குப் பாட்டுப் போடுவியள்.
குறைந்தபட்சம் என்ர மரமண்டைக்கு இந்தப்பாட்டுக்கும் பதிவுக்குமான தொடர்பு பிடிபடவில்லை, வி.எம். முக்கு இப்பதிவு புரிபடாதது போல.

-/பெயரிலி. said...

கொழுவி அண்ணை, அது பாட்டுக்கில்லை; உங்கட கழிவறைக்குப் பொருந்துறமாதிரி அதிலை தன்ரை பாட்டுக்கு வர்ற பீபீ சத்தத்துக்கு

கொழுவி said...

//கொழுவி அண்ணை, அது பாட்டுக்கில்லை; உங்கட கழிவறைக்குப் பொருந்துறமாதிரி அதிலை தன்ரை பாட்டுக்கு வர்ற பீபீ சத்தத்துக்கு
//


இப்ப நல்லா ரசிச்சன்.
நன்றி பெயரிலி.