Tuesday, October 10, 2006

குழப்பியின் கதை

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை நாராயணசுவாமி எழுதுகிறார். மாத்தையாவின் கதையை திருவடியான் எழுதுகிறார். விட்டால் எனது கதையையும் யாரேனும் எழுதி அதை படிக்க எனக்குக் கிடைக்கின்ற வேளைகளில் சொல்லொணாச் சிரிப்பையும் அழுகையையும் ஒருங்கே பெறுகின்ற துர்ப்பாக்கிய நிலை எனக்கு வாய்த்துவிடலாகாது என்ற அவசரத்தில் எனது கதையை எழுதத் தொடங்குகிறேன். ஆயின் கொழுவியின் கதை என்றுதானே தலைப்பிடுதல் பொருத்தம் எனினும் குழப்பியின் கதை என்பதே எனது தெரிவாகிறதெனில் அது ஏன்?

யார் அந்த குழப்பி?

அவருக்கும் கொழுவிக்கும் என்ன தொடர்பு?

கொழுவி யார்..? இது வரை யார் யார் மீது இவர் தொடர்பான சந்தேகங்கள் விழுந்துள்ளன?

தமிழ்மணத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட முதல் வலைப்பதிவு என்ற பெருமை ஏன் கிடைத்ததது.?

குழப்பிக்கும் கொழுவிக்கும் எங்கே ஏன் எப்படி தெறித்தது?

இவை பற்றிச் சொல்வதே குழப்பியின் கதை.

இதனை குழப்பிக்கு அர்ப்பணிப்பதே இதன் பெயரில் குழப்பி வர காரணம்.

இனி வரும் நாட்களில் குழப்பியின் கதை..

3 comments:

Anonymous said...

ஆகா கிளம்பிட்டாங்கய்யா..
கிளம்பிட்டாங்கயயா..

Anonymous said...

Please provide the appropriate link to the articles. I will be useful to us.... :-)

கானா பிரபா said...

ஒரு மார்க்கமாத்தான் எல்லாம் நடந்துகிட்டிருக்கு

குழப்பிய வச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலியே