Thursday, January 25, 2007

சேலை கட்டணும் சிங்குச்சா..

ஆரூரன் மாதுளன் மாதிலன் மற்றும் திவ்யா எனச் சிலர் அல்லது ஒருவர் அவரது மொழியில் வடக்கத்தையானின் உடையான பஞ்சாபியை அணிவது தமிழ் பெண்களின் கலாசாராத்திற்கு உகந்தது அல்ல என்று எழுதியதும் அதற்கு வரும் எதிர்வினைகளுக்கு விரல் சூப்பும் சின்னப் பிள்ளைகள் மனநிலையில் நின்று பதிலதிப்பதனையும் பார்த்திருக்கிறீர்களா..?

அதற்காக நான் எழுதிய பின்னூட்டம் ஒன்று வெளியிடப் பட வில்லை. எந்த வித ஆபாச ஆசாபாசத் தாக்குதலும் அற்று எழுதப் பட்ட அந்தப் பின்னூட்டம் வெளியிடப் படாமைக்கு ஒரே காரணம் அதில் கேட்கப் பட்டிருந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லாமையே..

தன்னால் (பட்டிமன்றத்தைப் போல ) வெட்டிச் சளாப்பக் கூடிய கருத்துக்களை அவர் அனுமதிப்பதுவும் தன்னால் பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அமுக்கித் தான் மட்டும் வாசித்து விட்டு அனுமதியாமலும் விடுவது அவரிஸ்டம் எனச் சொல்ல முடியாது.

தனது கருத்துக்களுக்கு பதில் தேவையில்லையெனில் பின்னூட்டப்பகுதியை அவர் மூடி விடலாம். தனது பதிவில் அவர் அனுமதித்து இருக்கும் கருத்து எல்லாமே மிதுளனோ மிதிலனோ அல்லது திவ்யாவோ வந்து பதில் சொல்ல முடியும் என நம்புகின்ற கருத்துக்கள். அவ்வாறு மிதிலனாலோ மிதுளனாலோ அல்லது திவ்யாவாலோ பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அவர் அனுமதிப்பதில்லைப் போலும்.

எனினும் இவ்வாறு கருத்து வீச்சைக் கம்மியாக்கிக் கொண்டோருக்கு பதில் எழுதும் போது எங்கிருந்தோ கேட்கும் அசரீரிக்கு ஏற்ப அவற்றைப் படியெடுத்து வைப்பது உண்டு.

தொடக்கத்தில் இருந்தே வருகிறேன்.
இங்கே நீலக் கலரில் உள்ளவை எல்லாம் மிதுளன் எழுதியவை. சிவப்புக் கலர் கொழுவி எழுதியது.

ஏனென்றால் சேலை இந்தியாவின் தேசிய உடை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்

பிறகெப்பிடி.. தமிழ் பொம்பிளையளும் சேலை அணிந்தால் அவ இந்தியா எண்டு தானே அறியாத ஆட்கள் நினைப்பினம்..

சரி உந்தப் பாரம்பரியம் எல்லாம் எப்ப தோன்றினது..? மனிதன் தோன்றி எத்தினை வருசத்தக்கு பிறகு அவை அவை தங்களுக்கான பாரம்பரிய உடைகளை தேர்வு செய்தவை..? என்ன என்ன காரணங்களை முன்னிட்டு தங்களுக்கான உடைகளை தேர்வு செய்தவை..? அப்பிடி தமக்கான உடைகளை தேர்வு செய்யும் போது என்ன என்ன காரணிகளை முன்னிறுத்தியவை எண்டு ஏதாவது தெரியுமோ..?

அது சரி வேட்டி எப்ப தமிழரின் பாரம்பரிய உடையானது. வேஸ்டி என்பது தானே அதனது மூலச்சொல்..
அதை தானே நாம் ட்... சேர்த்து வேட்டியாக்கினோம்.. நிமிஸத்தை நிமிடம் என்றாக்கியது போலவும்.. விஸயத்தை விடயம் ஆக்கியது போலவும்..

வேஸ்டியம் தமிழன் ஏதோ ஒரு மோகத்தில் அல்லது அவனது காலநிலைக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தனது பாரம்பரிய உடையாக்கியதாகத் தான் இருக்க வேண்டும். அப்பவும் உம்மைப் போல சிலர் அதற்கெதிராக குதித்திருப்பார்கள். ..

சப்பையான முகமுள்ளவர்கள் அனைவரையும் சீனர்கள் என்று நாம் எடைபோடுவதில்லையா? வெள்ளைக்காரன் என்று வெளுத்த தோலுடைய எல்லோரையும் நம்மவர்கள் சொல்வதில்லையா? கருப்பாக இருந்தால் எல்லாம் கறுவல்கள் என்று நாம சொல்வதில்லையா? அதுபோன்றுதான் சேலை அணிந்தவர்களை இந்தியர்கள் என்று பிற நாட்டுக்காரர் தவறாகக் கருதுவார்கள். அப்போது நீங்கள் விளக்கலாம், அய்யா, அம்மா நான் இந்தியனல்ல, தமிழன் என்று.

தமிழர் தமது அடையாளத்தை உணர்த்த சேலை அணிய வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் பின்னர் சேலை அணிந்தால் அவர்கள் இந்தியர்களாக தவறாக நோக்கப் படுவர் எனவும் அப்போது நாமாகச் சென்று அய்யா அம்மா நான் இந்தியன் இல்லை தமிழன் எனவும் விளக்க வேண்டும் எனவும் சொல்லுகிறீர்கள். பஞ்சாபியை அணிந்து விட்டும் யாராவது தவறாக வட இந்தியப் பெண் என நினைத்தால் நாமாகச் சென்று அய்யா அம்மா நான் வட இந்திய பெண் இல்லை. தமிழிச்சி என விளக்கலாம். என்ன அணிந்தாலும் நாமாக விளக்கினால்த் தான் நாம் யாரென்று புரியுமென்றால் எது அணிந்தால்த் தான் என்ன..?

கொழுவி, வேஷ்டியில் இருந்து வேட்டி வந்தது என்று கூறுகின்றீர். அந்த வேஷ்டிக்கு வேர்ச்சொல் தருவீரோ? உம்முடைய அறிவின்படி வர்ஷசத்திலிருந்துதான் வருடம் வந்தது என்றும் சொல்வீர். ஏனென்றால் நீர் படித்த இடம் அப்படிப்பட்டது.

அரைகுறை அறிவாளிகள் சிலர் ஊரிலையும் வெளிநாடுகளிலும் கவிதை தமிழில்லை, சன்னல் தமிழில்லை என்று தங்களுக்குத் தெரியாதவற்றைத் தமிழல்ல என்றுசொல்ல அதுபோல நூல்களும் அச்சிட்டு வெளிவருகின்றன. அவர்களிடம் வகுப்பெடுத்த உங்களை மீட்டெடுப்பது கடினம்.

வேஸ்டிக்கு வேர்ச் சொல்லா.. வேட்டிக்கு வேர்ச்சொல் வேஸ்டி என்பது தெரியும் . வேஸ்டிக்கு எது வேர்ச்சொல் என அறிய நான் வடமொழி அறிந்திருக்க வேண்டும். ஜன்னல் என்பதில் இருந்து மருவியது சன்னல். இதற்கு தமிழில் அழகான சாளரம் என்ற சொல் உள்ளது.

அன்றாடம் வீட்டில் சாரம் கட்டும் நம் தமிழர்கள் அதற்குப் பதிலாக வேட்டி கட்டினால் குறைந்துபோக மாட்டார்கள

வேட்டிக்கும் சாரத்திற்கும் இடையில் நிறம் ( சில வெள்ளை நிற சாரமும் உள்ளன) மற்றும் துணி வேறுபாடு தவிர நன்றாக காற்றுப்புகும் என்பதில் ஒற்றுமை ஒன்று தான். வேட்டி கட்டினால் எந்த விதத்தில் தமிழர் கூடிப் போவார்கள். ?

முஸ்லீம்களின் வருகையுடன் வந்த சாரம் தமிழர்களிடம் நிலைத்திருக்கும்போது, தமிழர்களின் ஆடையான வேட்டி நிலைத்திருக்க வேண்டும்,

முஸ்லீம்களின் வருகையோடு சாரம் வந்தது போலவே வேட்டியும் வந்தது. இரண்டையும் வசதி கருதியும் கால நிலை கருதியும் ஏற்றுக் கொண்டோம். அது போலவே தமிழனின் வெளியேறுகையோடு பஞ்சாபியும் ஜீன்சையும் வசதி கருதியும் இலகு கருதியும் ஏற்றுக் கொள்ளலாம்.

சேலையும் வேட்டியும் தமிழரின் பாரம்பரிய உடையென்று ஆரூரனுக்கு சொன்னவர் யார்..?

இத்தனை முரண்கள் உள்ள போதும் நான் உமது தாய் தந்தையரையோ அல்லது படித்த இடத்தையோ இங்கே இழுத்து வரவில்லை. அதற்க காரணமும் நான் படித்த இடம் தான் என நீர் சொன்னால் மகிழ்வுறுவேன்.-

அனைத்து வகைப் பின்னூட்டங்களும் ஏற்கப் படும் (ஆபாசாப் பின்னூட்டங்களை என்ன செய்வாய் என ஒர அசரீரி கேட்கிறது.)

11 comments:

Anonymous said...

தமிழ்மணம் இப்போது நல்ல ஒரு கோமாளிக்கூட்டத்தால் களை கட்டுகிறது. ம்.. நல்ல சுவாரசியமாக இருக்கிறது.

வெற்றி said...

கொழுவி,
சரி...சரீரீ... அந்தப்பெடியனை இப்படி எல்லாரும் ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலாய்க்கிறியள்:))) ஏதோ பெடி சும்மா பரபரப்பா பதிவு போட்டு கன பின்னூட்டம் வரும் எண்டு போட்டிருக்கும்... இப்பிடி எதிர்வினையாய் வரும் எண்டு தெரிஞ்சால் பெடி போடிருக்குமே... :))

கொழுவி said...

கோமாளிக்கூட்டத்தால் களை கட்டுகிறது.

களை கட்டுவதற்கு பதிலாக சேலை கட்டினால் அதில தமிழர் கலாசாரமாவது இருக்கும்

Anonymous said...

கொழுவி,
நம்ம பின்னூட்டம் ஒண்ணு கூட வராம போச்சுங்க அங்க..

பெருசா ஒண்ணும் சொல்லல, "பெண்கள் என்ன உடுக்கிறதுன்னு முடிவெடுக்க ஒரு பதிவா? வீட்டு நாய்க்குட்டிக்கு அதிகப்படியா ஒரு கயிற்றைக் கட்டினால் கத்தித் தீர்த்திடும். பெண்களைச் சேலை கட்டச் சொன்னா என்ன கேள்வியா கேட்கப் போறாங்க, நல்லா சொல்லுவோம்னு சொல்லிருக்கார் போலிருக்கு" :)

ஒருவேளை டிசே சொல்வது போல் விதண்டாவாதமா நினைச்சிருக்கலாம் :)

Anonymous said...

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு..!!,
எங்கட வாக்கு சேலைக்குத்தான்..

கொழுவி சேர், முடிவா என்ன சொல்லுறீங்கள்?
சேலையா? சுடிதாரா?
நீங்களும் குழப்புற மாதிரிக்கிடக்கு.

கொழுவி said...

கொழுவி சேர், முடிவா என்ன சொல்லுறீங்கள்?
சேலையா? சுடிதாரா?

அதையெப்பிடி நான் சொல்ல..? அவங்க அவங்க தங்களுக்கு எது புடிக்குதோ அதை போட வேண்டியது தான்.

அதையும் தாண்டி உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேணுமென்றால்..

ஜீன்ஸ்

Anonymous said...

ஆஹா நம்மட favourite க்கு வாரீங்களே.!!
கொழும்பில tight denims அடிச்ச சிங்களப்பெண்களைப் பாத்துக்கொண்டே இருக்கலாமப்பா.
lassana kaallak godaththiyanawapang!!

Anonymous said...

kozuvi,
ஆரூரான் ஆர்வத்தில(கோளாறெண்டு நீர் சொன்னால் அது உம்மமட கருத்து) எழுதிப் போட்டர். போகப் போக சரியாயிடுவார். அவரில தப்பில்ல. நாங்கள் வளர்ந்தது அப்பிடி.

சின்னபுள்ளையில(சின்னப் புள்ளத்தனமெண்டு இதைதான் நீர் சொல்லுவீர்) நானும் ஏன் நீரும் கூட காலாச்சாரச் சீரழிவுக்குக் காரணம் பெண்களின் உடைகள் தான் எண்டு எத்தினை பட்டி மன்றம் பேசியிருப்பம் கேட்டிருப்பம்,பாத்திருப்பம்.
இப்ப இப்பதானே இந்த ஆணாதிக்கத்தனமெல்லம் விளங்குது அது போல ஆரூரான் போன்றவர்களுக்கும் விளங்கும்.

Anonymous said...

பொன்ஸ் சொல்வதை பார்தால் தன்னை விமர்சிக்கும் புண்ணூட்டங்கலை தவிர்பதிலே அருரன் நெல்லை சிவாவையே வென்ரிடுவார்போல் தெரிகிரதே?

Anonymous said...

//கோமாளிக்கூட்டத்தால் களை கட்டுகிறது.

களை கட்டுவதற்கு பதிலாக சேலை கட்டினால் அதில தமிழர் கலாசாரமாவது இருக்கும்//

:-))))))))))

Anonymous said...

//உம்முடைய அறிவின்படி வர்ஷசத்திலிருந்துதான் வருடம் வந்தது என்றும் சொல்வீர்..//

ஐயா ஆரூரன் அது உண்மை தானே.. பிதற்றுகிறீரே..