Friday, January 26, 2007

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெயரில் புதிதாய் ஒரு வலைப்பதிய எண்ணியுள்ளேன். எல்லாம் ஒரே உலகமே எல்லாரும் உறவினரே என அர்த்தம் தொனிக்கும் இத் தலைப்பின் கீழ் நான் எழுத நினைத்துள்ள பதிவுகளின் முன்னோட்டம் இது.

எங்கடை பலாப் பழத்துக்கு அடுத்த வீட்டில விலை பேசுறான் வடக்கத்தையான்.

தமிழ் ஆண்களின் வேட்டியை விழுங்கிய வட இந்தியரின் குர்தார்.

ஆ.. கொப்புரானே.. முஸ்லீம்கள் எங்களை அடுத்துக் கெடுத்தனர்..

சில ஊளையிடும் தமிழரும் அவர்களின் உணர்வுகளும்

இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிடவும் சிலரைத் தயார் செய்துள்ளேன். பிறரின் பின்னூட்டங்கள் எனது கருத்துக்களை கேள்விக் குறியாக்கினால் ஒருபோதும் வெளியிட மாட்டேன்.

9 comments:

Anonymous said...

சரியான நேரத்தில் பொருத்தமான பதிவு. ;-)
ஆனா யாரும் பதில் சொல்ல முடியாம கேள்வி கேட்டாலோ அல்லது உங்கட பிழையளை கண்டுபிடிச்சிற்றாலோ அந்தப் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதிக்கக் கூடாது சரியோ?
;-))))

Anonymous said...

ஹி...ஹி.....கிளம்பிட்டங்கையா..கிளகிளம்பிட்டங்க.

Anonymous said...

உனக்கு "உணர்வுகள்" கொஞ்சம் கூட இல்லவே இல்லை.

:-))

Anonymous said...

நக்கல் பண்ணுடாப்பா நளினம் பண்ணாதயடாப்பா.

Anonymous said...

அவரு தனக்கு வால் பிடிச்சு எழுதினா தான் வெளியிடுவாரு.. இல்லேன்னா தானாவும் எழுதிப் போடுவாரு. மற்றவங்கள் கேள்வி கேட்டா அமுக்கிடுவாரு. அதனாலேயே அவரோட நேர்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது. பாவம். பெரிசா பனர் மட்டும் கட்டிட்டார்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என..

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்..

Anonymous said...

அண்ணோய்.. இந்த தலைப்புக்கு கீழேயே.. மற்ற கோயில்களை இடிச்செறியிறது பற்றியும் எழுதுங்கோ.. சுவாரசியமா இருக்கும்..

Anonymous said...

உணர்வுகள் ஊளையிடுமா... ஊஊஊஊஊஊ.. கனடாவில தாங்கள் என்ன செய்யினமோ அதையே மற்றவனும் செய்வான் எண்டு எதிர்பாக்கிறது ஈழத்தமிழ் நண்டுகளுக்கு பொதுவான விசயம் தானே.. அரோகரா.. யாதும் ஊரே யாவரும் கேளிர்

Anonymous said...

நாம் எமக்குள் சண்டையிடுவதை விடுத்து ஒரே நோக்கில் இயங்கலாமே.. என்ன நினைக்கின்றீர்கள்.

Anonymous said...

நீங்களும் ஒன்று இரண்டு மூன்று எனப் போட்டு ஒரு தொடர் எழுதலாமே.. வயிற்றெரிவு மூளைச் செயலின்மை ரத்த அழுத்தம் கோபம் எரிச்சல் மற்றும் குளிர் தாங்காமை போன்ற வியாதிகளுக்கு அதில் தீர்வு சொல்லலாமே..