தமிழக மீனவர்களை புலிகள் கடத்தியதும் கொலை செய்தது தொடர்பிலும் புலிகள் தமது மறுப்பை வெளியிட்டு விட்ட நிலையில் தற்போது கடல்புலிகளின் பேட்டிகள் மற்றும் கதைகள் என பெரும் எடுப்பில் ஒரு பரப்புரை அங்கு நடைபெற்று வருகிறது.
தொலைக்காட்சியில் வெளியான இரு இலங்கைத் தமிழ் நபர்களின் பேட்டியில் சரியான தயார்ப்படுத்தல் இல்லாமல் பேசியதாலேயோ அல்லது மிகச் சரியான பயிற்சி கொடுக்கப்படாமல் விட்டதாலேயோ அவர்களால் கோர்வையாக பேச முடியவில்லை. 1 நிமிடத்துக்கும் குறைவான அவர்களின் வீடியோ வாக்குமூலம் 3 தடவைகளுக்கு குறையாமல் வெட்டி வெட்டி ஆரம்பிக்கிறது. அதாவது தொடர்ச்சித் தன்மை இல்லாமல் உதாரணமா நாங்கள் மன்னாரிலிருந்து வெளிக்கிட்டு என்ற இடத்தில் கட்பண்ணி அடுத்த காட்சியில் போட்டில ஆயுதம் எடுக்கப் போகும் போது என்ற மாதிரி அவர்கள் அவர்கள் பேசுவது அவ்வப் போது திருத்தி திருத்தி தொகுக்கப் படுகிறது. Better luck next time
தவிர புலிகளின் ஆயுதக் கப்பல்களிலிருந்து படகுகளில் ஆயுதங்களைப் பெற்று மன்னாரில் அவற்றை இறக்க வேண்டுமெனில் ஆயுதக் கப்பல் இந்தியாவிற்கு அருகாக எங்கோ நிற்கிறதென்று அர்த்தம். ஆனால் வழமையாக சர்வதேசக் கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து எடுத்து வரப்படும் ஆயுதங்கள் முல்லைத்தீவு பகுதியிலேயே தரையிறக்கப்படும். புலிகளுக்கு இலகுவானதும் அதுவே. மன்னார் இந்தியாவிற்கு அருகாமையிலும் முல்லைத்தீவு அதற்கு எதிராக இலங்கையின் அடுத்த கரையிலும் உள்ளது.
மன்னார் கடலைப் பொறுத்தவரை அங்கு புலிகளின் இராணுவ மேலாதிக்கம் குறைவு என சொல்லலாம். முல்லைத் தீவு கடலோடு ஒப்பிடும் போது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை கப்பல்களின் பயணப் பாதையாக இது இருப்பதனாலும் புலிகளின் தென் தமிழீழத்திற்கான கடற்பாதையாக முல்லைத் தீவு ஊடான கடல் இருப்பதாலும் இக்கடலிலேயே புலிகளின் இராணுவ மேலாதிக்கம் அதிகம்.
மன்னார் கடலைப் பொறுத்தவரை அது பெருமளவில் உணவு வழங்கல் மற்றும் பொருள் வழங்கலுக்கான பாதையாகத் தான் பயன்படுகிறது. தமது இயக்கத்திற்கான மீன்பிடியில் ஈடுபடும் புலிகள் பயன்படுத்தும் கடலாகவும் அது தவிர சில அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்து (மீனவர்களின் துணையுடனும்) தருவிக்கவுமே அக்கடல் பெருமளவில் பயன்படுகிறது.
இந்த நிலையில் மன்னார் கடலின் அருகில் எங்கோ ஆயுதக்கப்பல் நிற்கிறதென்றால் அது இந்திய கடலில் தான் நிற்க வேண்டும். அல்லது இந்திய துறை முகங்களில் எங்காவது நிற்க வேண்டும். :)
அடுத்த கதை இன்னும் சுவாரசியமானது. அதாவது அப்படி நிற்கும் ஆயுதக் கப்பலை இந்தியா தாக்கினால் பிடித்து வைத்திருக்கும் 12 பேரை புலிகள் கொலை செய்து விடுவதாய் மிரட்டுகிறார்களாம். புலிகளை மலினப்படுத்துதல் என்ற பெயரில் இந்தியா தன் இமேஜை கெடுத்துக் கொள்ளப் போகிறது. உண்மையில் இந்தியாவிற்கு அருகில் ஒரு ஆயுதக் கப்பல் நிற்கிறது என்றால் இந்தியா பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறது. ? எங்கோ சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டு உட்பட்ட 12 புலிகளை பிடித்து இழுத்து வந்து சாகடித்த இந்திய கடற்படை தமது அருகில் இருந்து ஆயுதங்கள் இறக்கி செல்ல விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறதாம்...:)))
புலிகள் ஆயதங்களை எடுத்து வரும் போது அவற்றைக் கீழே இட்டு மேலே மீன்களை போட்டு மறைப்பார்களாம். யாரும் பார்த்து விடக் கூடாதென்பதற்காக. அவ்வாறு மறைத்து எடுத்து வரும் போது 5 தமிழக மீனவர்கள் அவர்களின் படகுககளில் உரிமையோடு ஏறி எங்களுக்கு இன்று மீன் அகப்பட வில்லை. உங்களிடம் மீன்கள் உள்ளதா என மீன்களை கிளறினார்களாம். அப்போ அடியிலிருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டார்களாம். அதை புலிகள் தமது தலைமைக்கு அறிவித்தார்களாம். அதனால் அவர்கள் எப்படியாவது பிரச்சனையை முடித்து விட்டு வரச் சொன்னார்களாம். எனக்கு கொட்டாவி வருகிறது. இருந்தாலும் சொல்லி முடிக்கிறேன். அதனாலை அந்த மீனவர்களை புலிகள் சுட்டு விட்டு போனார்களாம். பிறகு மரியா எண்ட வள்ளத்தில 6 புலிகள் எங்கையோ போனவையாம். அவை வள்ளத்தில பெயரை அழிக்க முயற்சித்தவையாம். ஆனா முடியேல்லையாம்.
இது தவிர புலிகளுடன் தமிழக பொலீசார் பேச்சுக்கள் வேறு நடாத்தினார்களாம். விட்டால் நடுக்கடலில் சந்தித்துப் பேசினோம் என்றும் சொல்வார்கள் போல.
மீண்டும் மீண்டும் சொல்வது போல நெருக்கடி காலங்களில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை தமிழக மீனவர்களின் உதவியுடனேயே புலிகள் தமது பிரதேசத்திற்கு தருவித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களை பகைத்துக் கொள்வதற்கு புலிகள் முன்வருவார்களா..
ஆரம்பத்தில் சிங்கள மீனவர்களாக பிடிபட்டு பிறகு இரவோடு இரவுகளாக தமிழ் மீனவர்களாக மாறி பின்னர் விடுதலைப் புலிகளாகத் தோற்றம் பெற்ற அந்த அப்பாவி 6 மீனவர்களும் சுதந்திரமாக பேசக் கூடிய நிலை வரட்டும். உண்மைகள் வெளியே வரும்.
ஆகக் குறைந்தது புலிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுவதற்காக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்ற வகையில் இந்த கதையை சோடித்திருந்தாலாவது அதில் ஒரு அரசியல் இராணுவ முதிர்ச்சி இருக்கும். அதை விட்டு விட்டு சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்வது போல காதில பூச்சுத்துற வேலையை பார்க்கும் போது என்ன இழவு உளவுத்துறையோ என எண்ணத் தோன்றுகிறது. நிறைய தமிழ்ப்படம் பார்ப்பார்கள் போலும்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து அலுமினியம் செம்பு பித்தளைக் கடத்தலென நடாத்திய நாடகங்கள் பெருமளவில் வெற்றியைப் பெறாத நிலையில் மர்மமும் திகிலும் கலந்து வழங்கினால் மக்களைச் சென்றடைய முடியும் என நம்புகின்ற தமிழக பத்திரிகைகளின் வழியிலேயே உளவுத்துறையும் சித்தித்திருக்கிறது.
இது தமிழக மக்கள் மத்தியில் புலிகளுக்கு சார்பான அலையேதும் வந்துவிடக் கூடாதென்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதிலும் பார்க்க இந்தியா இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்கும் போது தமிழகத்தில் அது எந்த ஒரு கொந்தளிப்பையும் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.
ஆக இந்தியா வெளிப்படையாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. ஆனால் இதற்காக இத்தனை நாடகங்களைச் செய்யத் தான் வேணுமா..?
இறுதியாக புலிகள் ஆயுதங்களை எடுத்துவர மீன்பிடி வள்ளங்களை பயன்படுத்துவதில்லை. அதற்காக அவர்களிடம் மிகை வேக படகுகள் உள்ளன. அவற்றை இந்த பாடலில் பார்க்கலாம்.
27 comments:
நான் ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொன்னது போல புலிகள் எளிதாக பிடிபட்டார்கள், எளிதாக உண்மையை ஒத்துக்கொண்டார்கள் எனபதெல்லாம் கொஞ்சமும் நம்பக்கூடியதாக இல்லை. புலிகள் எளிதாக பிடிபடுவர்களும் அல்ல, அவர்கள் எளிதாக உண்மையை சொல்பவர்களும் அல்ல என்பது எல்லா இந்திய தமிழர்களும் அறிந்ததே. புலிகளை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களைப்பற்றி மாயாவிகள், மாவீரர்கள் என்ற எண்ணம் எல்லா இந்திய தமிழர்களுக்கும் உண்டு. ஏதோ அண்டா குண்டா திருடிய திருடனைப் பிடிப்பது போல பிடித்தோம், அடித்தோம் உண்மையை ஒத்துக்கொண்டார்கள் என்று சொல்வது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை.
பராசக்தி கால வதைவசனம் அப்பிடித்தான் இருக்கும்.
தமிழக உளவுப்படை என்னமா கதை திரைக்கதை வசனம் அமைக்கிறார்கள்
தமிழ் சினிமாவுக்கு போனால் சூப்பர் சூப்பர் ஹிட் மசாலா படமெல்லாம் எடுக்கலாம்
ஆமாம் இந்தியாவுக்கு இதே வேலையாகி போய்விட்டது...ராஜீவ் கொலையின் போது இப்படிதான் ஒரு'திரைக்கதை'யை உருவாக்கினார்கள்.பத்பனாபா கொலையின் போதும் இப்படிதான்... அமிர்தலிங்கம் கொலையின் போதும் இப்படிதான் திரைக்கதைகள் உருவாகின.அதுதான் எப்போதும் உன்மையையே பேசும் புலிகள் மறுத்து அறிக்கை கொடுத்து விட்டார்களே... எல்லோரும் நம்பிவிட்டு போகவேண்டியதுதானே..மடப்பசங்க...இதில் தூக்கத்திலிருக்கும் கொழுவியை வேறு disturb பண்ணிகிட்டு!!
//ஆகக் குறைந்தது புலிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுவதற்காக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்ற வகையில் இந்த கதையை சோடித்திருந்தாலாவது அதில் ஒரு அரசியல் இராணுவ முதிர்ச்சி இருக்கும்.//
இப்படி சொல்லியிருந்தாலாவது தமிழக மக்கள் நம்பியிருக்க வாய்ப்புண்டு. அதை விட்டு விட்டு கதை எழுதுகிறேன் பேர்வழி என்ற கணக்கில் கதை சொன்னால் யார் நம்ப போகிறார்கள். உண்மையில் உளவுத்துறையில் உளவு என்றால் என்ன என்று தெரிந்தவர்கள் தான் இருக்கிறார்களா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு.
//புலிகள் மறுத்து அறிக்கை கொடுத்து விட்டார்களே... //
அந்த அறிக்கையில் கூட இந்தியாவையோ அல்லது தமிழக பொலீசார் பற்றியோ ஒரு வார்த்தையை கூட புலிகள் விடவில்லை. இலங்கை அரசைத்தான் குற்றம் சுமத்தியுள்ளார்கள். அந்த அளவுக்கு கவனம் பேணும் புலிகள் இடையில் மறித்தார்கள் என்ற காரணத்திற்காக மீனவர்களை சுட்டார்கள் என்பது.. அந்த கதையை எழுதியவர்களின் அறிவிலித்தனத்தைக் காட்டுகிறது.
Producer : Srilankan Govt
Direction : India Cetnral Govt @ CPI
Script : D.G.P Muharji
Dialog : D.G.P Muharji
Camera : D.G.P Muharji
audience : இளிச்ச்வாயான் தமிழன்
இந்த பட்ம் கண்டிப்பா 100 நாள்தான்
மூலக் கதை: டெல்லி சிஸ்டர் அன்ட் பிரதர்ஸ்
திரைக்கதை: காவற்துறை
கதானாயகன்: முகர்ஜி
வில்லன்: கலைஞர்
விளம்பரம்; த ஹிண்டு
இது ஒரு சிலோன் இந்தியக் கூட்டுத் தயாரிப்பு
இதை யாரும் வேடிக்கையாக நினைக்கவேண்டாம். இந்த புனைகதைக்குப் பின்புறமாக ஒரு சதி இருக்கிறது. இந்திய இராணுவம் வன்னிக்குள் போகலாம்????. யார் அறிவார்? எல்லாம் அவனுக்கே வெளிச்சம்.
"புலிகள் ஆயதங்களை எடுத்து வரும் போது அவற்றைக் கீழே இட்டு மேலே மீன்களை போட்டு மறைப்பார்களாம். யாரும் பார்த்து விடக் கூடாதென்பதற்காக. அவ்வாறு மறைத்து எடுத்து வரும் போது 5 தமிழக மீனவர்கள் அவர்களின் படகுககளில் உரிமையோடு ஏறி எங்களுக்கு இன்று மீன் அகப்பட வில்லை. உங்களிடம் மீன்கள் உள்ளதா என மீன்களை கிளறினார்களாம். அப்போ அடியிலிருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டார்களாம்."
நம்பும்படியா இல்லயே, கப்பல்வந்தால் சிறீலங்கா நேவி வருவதற்க்குள் ஆயுதங்களை இறக்கப்பார்ப்பார்களா? மீன்பிடித்து அதனால் மறைத்துக்கொண்டு இருப்பார்களா?
இந்திய மீனவர்கள் விடுதலைப்புலிகலின் படகுகலை மடக்கி பிடிக்க முடியுமென்றால் சிறிலங்கன் நேவிக்கு புலிகளின் படகுகளை பிடிப்பது சுமா ஜிஜிப்பி,
இந்திய மீனவர்கள் ஏறி விலத்தி பார்த்தவுடன் ஆயுதங்கள் தெரிந்ததா? ஆயுதங்கள் என்ன மீன்களா? பெட்டியில் அடைக்காமல் கடல்தன்ணீரிற்கு பாதுகாப்பு இல்லாமல் கொண்டுவருவார்களா? கப்பலில் இருந்து என்ன ஒவ்வொண்று ஒவ்வொன்றாகவா இறக்குவார்கள்.
//நம்பும்படியா இல்லயே, கப்பல்வந்தால் சிறீலங்கா நேவி வருவதற்க்குள் ஆயுதங்களை இறக்கப்பார்ப்பார்களா? மீன்பிடித்து அதனால் மறைத்துக்கொண்டு இருப்பார்களா?//
முதலில் மன்னார் கடலூடாக புலிகள் ஆயுதங்களை கடத்தி வருவதே இல்லையே.. அவ்வாறு கடத்தி வர வேணுமென்றால் பாக்கு நிரிரையிலும் கப்பல்கள் நிற்க முடியாது. அவ்வாறாயின் இந்தியாவிற்கு அண்மையாக எங்கோ நிற்கிறதா..?
புலிகள் முல்லைத்தீவு கடல் ஊடாகவே ஆயுதங்களை எடுத்து வருகிறார்கள்.
This is not a story and this is a fact. LTTE, being a terrorist organization, is responsible for this barbaric act. We, the perople of Tamil Nadu, would request the Indian Goernment, to send the troops to the LTTE are to wipe them out. Then only our fishermen can do the fishing peacefully.
சட்னி சாம்பார் இந்தப்போஸ்டை பார்ப்பாங்களா ப்ளீஸ் ஷங்கர் க்ருபாக்கும் பாஸ்டன் போண்டாவுக்கும் பார்வேர்ட் செய்திடுங்க
இது தமிழக மக்கள் மத்தியில் புலிகளுக்கு சார்பான அலையேதும் வந்துவிடக் கூடாதென்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதிலும் பார்க்க இந்தியா இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்கும் போது தமிழகத்தில் அது எந்த ஒரு கொந்தளிப்பையும் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.
kumar
"This is not a story and this is a fact. LTTE, being a terrorist organization, is responsible for this barbaric act. "
RAVIKUMAR MLA WROTE A ARICAL in JUNIOR VIKATAN. READ IT OR GO TO HELL.
முதலில் தப்பி வந்த மீனவர்கள் தெளிவாக அது புலிகளால் தாங்கள் தாக்கப்படவில்லை, சிங்களவர்களால்தான் தாம் தாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
கரும்புலிகளின் போர்மரபு எத்தனை தடவைகள்தான் இந்தியக் கடல் படைக்கு உயிர் பிச்சை ஈந்திருக்கிறது.
அப்படிப் பட்ட புலியின் மரியாதைக்கு சேறு பூச நினைக்கிறது றோவின் குரங்குப் புத்தி.
ஐயா இந்தியாவுக்கே றோ ஒரு ஒரு சொறி சிரங்கு நோய் என்று இன்னுமா புரியவில்லை.
எந்த அயல் நாட்டு உறவு ஐயா இந்தியாவுடன் செல்லம் பொழிகிறது.
மாலதீவுக்கு ஓர் பயங்கரவாதம், இலங்கைக்கு பயங்கரவாதம் என்று எல்லா அயல் நாடுகளுக்கும் இப்படி நாசகார சக்திகளை ஏவிவிட்டுக் கொண்டிருக்கும் றோ உள்ள வரை இந்தியாவை சுற்றி பகை தானாக வளராதோ?
ஐயா செல்வமணி,
சும்மா சும்மா சால்ஜாப்புக் (நன்றி: முத்தமிழறிஞர், தமிழர் தலைவர் மு.கருணாநிதி)கதை சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது.
இது தொடர்பில் சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றுக்கு உங்கள் மூளைக்கு எட்டியபடி ஏதாவது சாக்குப்போக்குகளையாவது சொல்லலாம்.
** பிடிபட்டவர்களாகச் சொல்லப்படுபவர்களின் காணொளி வாக்குமூலம் ஏன் துண்டுதுண்டாகப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் யாரோ எழுதிக்கொடுத்து அல்லது சொல்லிக்கொடுக்கச் சொல்லிக் கொடுக்கத்தான் அவர்கள் அதை ஒப்புவிக்கிறார்கள் என்பது அதைப் பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது. ஏன்?
** மன்னார்க்கடலில் கப்பலைக் கொண்டுவந்து நிறுத்திவைக்க முடியுமா?
** அவர்கள் சொன்ன வாக்குமூலத்தின்படி கப்பலைப் பலநாட்களாக நிறுத்திவைத்து அதிலிருந்து ஆயுதங்களைக் கடத்துகிறார்கள் என்றுபார்த்தாலும் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய இடம் நிச்சயம் இந்திய ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாகத்தான் இருக்க வேண்டும். இதை வரைபடம் பாரர்க்கத் தெரிந்த யாராலும் மறுக்க முடியாது. பலநாட்களாக புலிகளின் கப்பலைத் தரித்திருக்கவிட்டு இந்தியஅரசு பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற கதை உங்களுக்கு எப்படித் தெரிகிறது?
** மீன்களைப் போட்டு ஆயுதங்களை மறைத்துவருகிறார்கள் என்ற கதை சரிவரவேண்டுமாயின், மீன்கள் எப்படி வந்தன? அவை யாருடைய மீன்கள்? புலிகளே மீன்பிடிக்கிறார்களா? அவ்வளவு மீன்களையும் பிடிக்க எவ்வளவு நேரமெடுக்கும்? அதைவிட மீன்கள் பிடிபடுவதற்கான நிச்சயத்தன்மை எப்படி? இந்த மீன்பிடித்து மறைத்துவருவதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
** புலிகளினால் பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் 12 மீனவர்களின் பொருட்டுத்தான் புலிகளின் ஆயுதக் கடத்தலையும், புலிகளின் கப்பலையும் இந்தியஅரசு எதுவும் செய்யாமல் விட்டிருக்கிறது என்ற கதை எவ்வளவு பெரிய 'சால்ஜாப்பு'?
இதை எவனாவது நம்புவானா?(உங்களைப் போன்ற சிலர் நம்புவதாக நடிக்கலாம், அதன் அரசியல் வெளிப்படையானது)
இந்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேருக்காக இப்படியெல்லாம் செய்யுமா?
___________________________
அடிக்கடி மன்னார்க் கடற்பரப்பின் கரைவரை வந்து அன்றாடம் வயிற்றுப்பிழைப்புக்கு அல்லாடும் மீனவர்களின் கடல்வளத்தை அள்ளிச்செல்வது மட்டுமன்றி, அவர்களின் வலைகளுட்பட்ட தொழில் உபகரணங்களை தமிழக மீனவர்கள் அழித்துச் செல்லும்போதுகூட புலிகள் அவர்கள்மேல் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. மன்னார்க்கரை மீனவர்களால் தமிழக மீனவர்கள் பிடிக்கப்பட்டபோதுகூட அவர்களை மீட்டு பத்திரமாக தமிழகத்துக்கு அனுப்பிவைத்தவர்கள் புலிகள்.
கொண்டோடி....புலிகள் இந்த காரியத்தை செய்தார்கள் என்பதை என்னாலும்தான் நம்பமுடியவில்லை... ஆனால் என் பின்னூட்டத்தில் நான் கேட்க விரும்பியது.. புலிகள் எந்த அறிக்கைவிட்டாலும் நாங்கள் நம்பித்தான் ஆக வேண்டுமா? புலிகள் விட்ட சில அறிக்கைகளை பிரபாகரனே நம்பமாட்டேரே..இது ஊர் அறிந்த ரகசியமாச்சே!
ஆனால் புலிகள் எப்போதும் உண்மையே பேசினார்கள் என்பது போல் எழுதும் சில ஈழ நண்பர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
இந்த மாதிரி சம்பவங்களில் புலிகள்,இலங்கை மற்றும் இந்தியா நகர்த்தும் அரசியல் காய்களை சற்று கவனித்து விட்டு எழுதினால்கூட பரவாயில்லை.அப்படியில்லாமல் புலிகள் எதாவது அறிக்கை கொடுத்தால் போதும்..எடு ஜால்ராவை..காது கிழிகிறது.அனுராதபுரம் சம்பவம், நீச்சல்குள சினிமாபாணி கொலை,டீ கொடுத்தவரையே கொன்றது.. அப்போதும் இதே ஜால்ராதான் கிழிந்தது.உடன் சேர்ந்து சில தமிழ்நாட்டு ஜால்ராக்களும் கிழிந்தது.
அதுவுமில்லாமல் எழுதும் சிலபேர் அரசியல் மற்றும் ராணுவ ஆய்வாளர்கள் மாதிரி எழுதவேண்டியது.அதுவும் குளிருக்கு கோட்டு அணிந்து கொண்டு, சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து !!
கொடுமைடா சாமி!
//குளிருக்கு கோட்டு அணிந்து கொண்டு, சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து !!//
இது தவறு. இப்போ அங்கே சம்மர்.. :)
மற்றும்படி வெளிநாடுகளில் உட்கார்ந்து இருந்து கொண்டு ஆய்வுகளை எழுதுபவர்கள் குறித்து சிலாகித்து சொல்ல எதுவும் கிடையாது தான். ஆனால் இந்தியா தமிழக மீனவர் தொடர்பில் சொன்ன கதை பூச்சுற்றல் என்பதில் ஐயம் இல்லை.
இங்கே கொழுவி சொன்னதை கூட புலிகள் இதுவரை சொல்லவில்லை. அவர்களுடைய அறிக்கையில் இந்தியாவுக்கு எதிரான எந்த விதமான அம்சங்களும் இல்லை.
ஆனால் புலிகள் மன்னார் ஊடாக ஆயுதம் கடத்தினது மீன்பிடி படகில் ஆயுதம் கடத்துவது எல்லாமே இந்திய உளவுத் துறையின் அறிவிலித் தனத்தைத் தான் காட்டுகிறது. அவர்கள் இனிவரும் காலங்களில் பூகோள நிலைமைகளையும் கருத்திற்கொண்டு கதைகளை சோடிக்க வேண்டும்.
'இந்திய உளவுத் துறையின் அறிவிலித் தனத்தைத் தான் காட்டுகிறது. அவர்கள் இனிவரும் காலங்களில் பூகோள நிலைமைகளையும் கருத்திற்கொண்டு கதைகளை சோடிக்க வேண்டும்'
ஆமாம்..புலிகளின் சாமர்த்தியம் மற்றும் பொட்டு அம்மானின் உளவுப் பிரிவின் முன்னால் இந்திய உளவுத் துறையெல்லாம் சுஜுபி!
நம்பிவிட வேண்டியதுதான்.
அது சரி...ஆயுத கொள்முதலுக்கு இந்த தெற்காசிய ஆயுத சந்தையான Golden Triangle தொடர்புக்கு முன்னால் ஆயுதங்கள் எப்படி வன்னிகாட்டுக்கு சென்றது என்பது எங்களை போன்ற அறிவீலிகளுக்கு விளங்கவே இல்லை..மீன் பிடி படகுகளையும் அவர்கள் பயன் படுத்துவது இல்லையாம்.. சொல்கிறார்கள்...ஒரு வேளை சிட்டுக் குருவிகள் தூக்கி சென்று போட்டு இருக்குமோ?
இந்த பாழாய் போன பூகோளமும் நமக்கு புரியவில்லை.
ஒரு சந்தேகம்...தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இதை கேட்கிறேன்.
பொதுவாக சர்வதேச கடல் எல்லையில் நடைபெறும் ஆயுத கொள்முதலில் பொருளுக்கு பணம் ஏற்றுக் கொள்ளப்படாதாம்.பணம் ஏற்றுக்கொள்ள படவில்லை என்றால் வேறு எதை ஏற்றுக் கொள்வார்கள்?
புத்திசாலிகள் கூறினால் அறிவீலிகள் தெளிவு பெறுவோம்.
//ஆயுதங்கள் எப்படி வன்னிகாட்டுக்கு சென்றது என்பது எங்களை போன்ற அறிவீலிகளுக்கு விளங்கவே இல்லை..மீன் பிடி படகுகளையும் அவர்கள் பயன் படுத்துவது இல்லையாம்.. சொல்கிறார்கள்...ஒரு வேளை சிட்டுக் குருவிகள் தூக்கி சென்று போட்டு இருக்குமோ?//
ஐயா செல்வமணி.. புலிகள் ஆயுதங்களை வன்னிக் காட்டுக்குள் தருவிக்கிறார்கள் தான். சண்டைகளில் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றும் ஆயுதங்களை விட பிற நவீன ஆயுதங்கள் உலக சந்தைகளில் இருந்து பெறப்படுகின்றனதான். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. புலிகளின் பணபலம் இதனை சாத்தியமாக்குகிறது.
இங்கே என்ன எழுதியிருக்கிறது..?
ஆயுதங்களை தருவிக்க மன்னார் கடலை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதாவது தமிழக பொலிஸ் என்ன சொல்லியிருக்கிறது. ஆயுதங்களை கடத்தி அவர்கள் மன்னார் கடலூடாகவே சென்றதாகவும் அப்போது 5 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும் அது சொல்லியிருக்கிறது.
இப்போது புலிகள் ஆயுதங்களை தருவிக்க மன்னார் கடலை பயன்படுத்துவதில்லை என்பதை மீளவும் நினைவு படுத்துகிறேன். சர்வதேச கடல்களில் நிற்கும் ஆயுதக் கப்பல்களில் இருந்து (அவர்களது சொந்த கப்பல் அல்லது பிறரது கப்பல். புலிகளிடம் சொந்தமாக வணிக கப்பல்களும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.)
ஆயுதங்களை சிறிய வேகப் படகுகளில் புலிகள் எடுத்து வந்து சேர்க்கும் இடம் முல்லைத் தீவு. முல்லைகடலுக்கு வாய்ப்பாகவே அவர்களது ஆயுதக் கப்பல்கள் நிற்கும்.
தமிழக பொலீசு சொன்னது போல மன்னார் கடலூடாக ஆயுதங்களை கொண்டு வர வேண்டுமெனில் இந்தியாவிற்க சமீபமாக எங்கோ ஆயுதக் கப்பல் நிற்கிறது என அர்த்தம். அது தவிர ஆழங் குறைந்த பாக்கு நீரிணை பகுதியில் அதற்கான வாய்ப்பும் இல்லை.
முல்லைத் தீவுக் கடலூடாகவே புலிகள் ஆயுதம் கடத்துகிறார்கள் என்பது முழு உலகுக்குமே தெரிந்த நிலையில் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறது இந்திய உளவுத் துறை.
மன்னார் கடல் தமிழகத்தில் இருந்து மீனவர் துணையுடன் மருந்து பொருட்கள் எடுத்து வர பயன்படுகிறது.
செல்வமணி,
இந்திய அதிகாரத்துறை வெளியிடும் அறிக்கையை நம்பாதது போலவே புலிகளின் அறிக்கையையும் கண்ணை மூடிகொண்டு நம்ப வேண்டியதில்லை. புலிகள் மறுத்துவிட்டதால் "மட்டுமே" இவை கட்டுக்கதைகள் என்று யாராவது சொல்லியிருந்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக இங்கு சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
'தெற்காசியச் சந்தை' என்று நீங்கள் சொல்வதெல்லாம் குறைந்த மதிப்பீடு. இந்தியா போராட்டக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய சமகாலத்திலேயே புலிகள் சர்வதேசச் சந்தையில் ஆயுதங்கள் கொள்வனவு செய்திருந்தனர். அவை இந்திய ஆளும்வர்க்கத்துக்கு மறைக்கப்பட்டு தமிழகம் ஊடாகவே யாழ்ப்பாணம் வந்தன, அதற்கு எம்.ஜி.ஆர் முழுக்காரணமாக இருந்தார் என்பவை உங்களுக்கும் தெரிந்திருக்கும். தொடக்கத்திலேயே தெற்காசியச் சந்தைக்கு வெளியே புலிகளுக்குத் தொடர்பிருந்தது என்பது பொதுவான கருத்து. அது இங்குத் தேவையுமில்லை.
ஆனால் 'அந்தக் காலத்தில்' புலிகள் யாழ்ப்பாணத்துக்கு அயுதங்கள் கொண்டுவந்த முறையை வைத்துக்கொண்டு இப்போதைய சிக்கலை யோசிப்பது எவ்வளவு பொருத்தம்? அப்போது, சில நவீன கருவிகள் மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருந்தது. அத்தோடு வருடத்துக்கு ஓரிரு வள்ளங்கள் வந்து சேர்ந்தாலே போதுமானது. ஒரு கெரிலாக் குழுவுக்கு இதைவிட அதிகம் தேவையிருக்கவில்லை. இப்போது புலிகள் அரசுக்குச் சமமாக கொள்வனவு செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. சிறுரகத் துப்பாக்கிகளையும் அவற்றுக்குரிய தோட்டாக்களையும் விட மிகுதியானவற்றை கொள்வனவு செய்தே ஆகவேண்டும். இப்போதுபோய் அந்தாக்காலம்போல மீன்பிடி வள்ளத்தில் 'கடத்தி'க்கொண்டு சமாளிக்க முடியுமா?
ஆயுதங்கள் 'வன்னி'க்கு எப்படி வந்தன என்ற உங்கள் கேள்விக்கு மேலே அனானி ஒருவர் பதிலளித்துள்ளார். 'வன்னி' என்று நீங்கள் குறிப்பிட்டதன் மூலம் தொன்னூறுகளின் நடுப்பகுதியைக் குறிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சந்தேகமில்லாமல் முல்லைத்தீவுக்கடல் அதற்குப் பயன்பட்டது. முல்லைத்தீவுக்கடலில் புலிகளின் கப்பல்கள் தாக்கப்பட்டன. இந்தியா நேரடியாகவே புலிகளின் கப்பல்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டது.
1996 மார்ச் மாதம் புலிகளின் ஆயுதக் கப்பலொன்றை இந்தியா தனது விமானப்படை, கடற்படை மூலம் முல்லைத்தீவுக் கரையிலிருந்து 150 கடல்மைல் தொலைவில் வைத்துத் தாக்கியழித்தது. இதில் லெப்.கேணல் தோழநம்பி உட்பட்ட நான்கு கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.
இவை மட்டுமன்றி முல்லைத்தீவுக் கரைவரை கப்பலைக் கொண்டுவந்துகூடப் புலிகள் தமது வழங்கலைச் செய்தனர்.
1998 ஆம் ஆண்டு அப்படிக் கரைக்கு வந்த புலிகளின் கப்பலொன்று சிறிலங்கா வான்படையால் குண்டுவீசி அழிக்கப்பட்டது. கரையிலிருந்து வெறும் அரை மைல் தொலைவில் இக்கப்பல் மூழ்க்கிக்கிடக்கிறது. (இப்போதும் கரையிலிருந்து இக்கப்பலின் மேற்பகுதியைப் பார்க்கலாம்.)
முல்லைத்தீவுக்கடல் ஆழமானதோடு, நேரடியாக சர்வதேசக் கடற்பரப்போடு தொடர்புடையது. இந்தியாவுக்கு எதிர்ப்பக்கமாக இருப்பதால் ஒப்பீட்டளவில் இந்திய ஆதிக்கம் குறைவானது. மேலும் புலிகளின் வலுவான கடற்படைத்தளங்கள் கிழக்குக் கடற்கரையிலேயே உள்ளன. இப்படியான பல்வேறு காரணிகளால் முல்லைத்தீவுக்கடலை அவர்கள் தேர்ந்தெடுத்து இன்றுவரை பயன்படுத்திவருகின்றனர்.
பூகோளம் பற்றிய கதை இங்கு ஏன் வந்ததென்றால், மன்னார்க்கடலினூடாக ஆயுதங்கள் கடத்துவதாகச் சொல்லப்பட்டதால்தான். கப்பல், படகு என்பவற்றைத் தெளிவாக வித்தியாசப்படுத்திக் கொண்டு, ஒரு கப்பலை மன்னார்க்கடற்பரப்புக்குள் கொண்டு வரமுடியுமா என்ற கேள்வியைக் கேட்டுப்பார்க்க வேண்டும். அப்படிக் கொண்டுவர முடியாத பட்சத்தில் (கொண்டுவந்தாலும்கூட இந்தியா என்ன பார்க்கிறது என்ற கேள்விக்கு விடை யாருக்காவது தெரியுமா?) கப்பல் நிறுத்தப்பட்டிருக்கவேண்டிய கடற்பகுதி இந்திய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகத்தான் இருக்கும். இதையும் யாராவது மறுக்க முடியுமா? அப்படியான சந்தர்ப்பத்தில், புலிகளின் கப்பல் குறித்து இந்தியா வேண்டுமென்றே பாராமுகமாக இருக்கிறதா?
இவற்றை மீறி இந்த ஆயுதக்கடத்தல் கதை உண்மையாக இருக்ககக்கூடிய வாய்ப்பு இருக்கிறதென்றால், அது இந்தியா புலிகளுக்கு உதவி செய்கிறது என்ற அடிப்படையில்தான் இருக்க முடியும்.
** ஆயுதக்கொள்வனில் பணப்பரிமாற்றம் நடப்பதில்லையென்றும், அதற்குப்பதிலாக என்ன பரிமாறப்படும் என்றும் செல்வமணி கேட்கும் கேள்வி இங்கு எவ்விதத்திலும் தொடர்புடையதாகத் தெரியவில்லை. கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் கப்பலுக்குப் போய் ஆயுதம் வாங்கும் சாத்தியம் இருக்கிறதா என்பது புரியவில்லை. விற்பனை ஒப்பந்தங்கள் வேறெங்கோ நடத்தப்பட்டு, ஆயுதங்கள் கடலிலோ தரையிலோ புலிகளின் கப்பல்களுக்கு மாற்றப்படும் என்றுதான் நினைக்கிறேன்.
மீன்களால் ஆயுதங்களை மறைத்து எடுத்துவருகிறார்கள் என்ற கதை தொடர்பில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். பணப்பரிமாற்றம் தொடர்பான இக்கேள்விக்குள்ளால் என்ன சொல்லவருகிறீர்கள்?
மீனை வாங்கிக்கொண்டு ஆயுதங்களை விற்கிறார்கள் என்றா? அப்படிப்பார்த்தாலும் உதைக்கிறது. புலிகள் ஆயுதங்களையும் வாங்கி, கூடவே அவற்றை மறைக்க மீன்களையும் வாங்கிக்கொண்டு வரவேண்டுமல்லவா?
;-)
இவற்றைவிட, இக்கதையின் பின்னணி தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் என்று நான் கேட்டவை தொடர்பில் விளக்கமேதும் கிடைக்கவில்லை.
'இவற்றைவிட, இக்கதையின் பின்னணி தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் என்று நான் கேட்டவை தொடர்பில் விளக்கமேதும் கிடைக்கவில்லை'
இந்த கதையின் பின்னணியை என்னாலும் நம்ப முடியவில்லை என்று என் பின்னூட்டதில்லேயே சொல்லியிருக்கிறேனே கொண்டோடி..
ஆனால் என் பின்னூட்டம், புலிகள் விடும் எந்த அறிக்கையையும் நம்பிக் கொண்டு கும்மி அடிக்கும் சில அரைகுறைகளை பற்றி..
'இப்போது புலிகள் ஆயுதங்களை தருவிக்க மன்னார் கடலை பயன்படுத்துவதில்லை என்பதை மீளவும் நினைவு படுத்துகிறேன்.'
ஓ..ஒரு காலத்தில் இந்த மன்னார் கடலையும், மீன்பிடி வல்லங்களையும் இவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை... அப்பாடா..நீங்களாவது எங்களுக்கு புரியும்படி பூகோள பாடம் எடுத்தீர்கள்.
'இந்தியா போராட்டக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய சமகாலத்திலேயே புலிகள் சர்வதேசச் சந்தையில் ஆயுதங்கள் கொள்வனவு செய்திருந்தனர். அவை இந்திய ஆளும்வர்க்கத்துக்கு மறைக்கப்பட்டு தமிழகம் ஊடாகவே யாழ்ப்பாணம் வந்தன, அதற்கு எம்.ஜி.ஆர் முழுக்காரணமாக இருந்தார் என்பவை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.'
கொண்டோடி...சில விசயங்களை பற்றி நீங்கள் எழுதலாம்..பாலசிங்கம் போன்றவர்கள் அதை புத்தகமாக எழுதலாம்.. அதில் எம்.ஜி.ஆருடன் இட்லி,தோசை சாப்பிட்டதையும் எழுதலாம்.ஆனால் எங்களால் அப்போதைய நிகழ்வுகள் எல்லாவற்றையும் சொல்ல முடியாது.ஆனால் இந்த இயக்கங்கள் எல்லாம் 80-களில் வளர்ந்த விதத்தை தமிழ்நாட்டு மக்கள் நேரிடையாக பார்த்தவர்கள்.விழலுக்கு இறைத்த நீர் தான் நினைவுக்கு வருகிறது.இது என் கருத்து.
'மீனை வாங்கிக்கொண்டு ஆயுதங்களை விற்கிறார்கள் என்றா? அப்படிப்பார்த்தாலும் உதைக்கிறது. புலிகள் ஆயுதங்களையும் வாங்கி, கூடவே அவற்றை மறைக்க மீன்களையும் வாங்கிக்கொண்டு வரவேண்டுமல்லவா?'
விசயங்களுக்கு நடுவே வந்த இந்த நகைச்சுவையை ரசிக்கிறேன்.
ஹிஹிஹ் கொழுவி...நீங்கள் சொல்கிற அளவுக்கு எங்கள் உளவுபடைகள் மோசமானதாக இருந்திருந்தால் எப்போதே பாரதம் பல துண்டுகளாக உடைந்திருக்கும்.
கடத்தபட்ட மீனவர்கள் திரும்ப வந்தால் கதை தெரிந்துவிடும்..பொறுமை. :)
இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்தால் இங்கே ஒன்றும் பெரிய புரட்சி எல்லாம் வெடிக்காது.
இருக்கும் ரெண்டு முனு அரசியல் அனாதை லூசுகளும், வலைபூக்களில் எழுதும் தமிழ் 'பற்றுடைய' மடையர்கள் மட்டும் தான் எதாவது பிதற்றி கொண்டு இருப்பார்கள்.
தேவன் said..
ஐயோடா..
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற அங்கலாய்ப்பில் காத்துக் கிடக்கும் புலி எதிர்ப்பு பித்தங்களுக்கு அவங்கட பௌகுத்தறிவு றொம்ப quality ஆனதுதான் என்பது நம்மளுக்கு தெறியாமல் போச்சேடா!
சிங்களவாதம்சரி, இந்தியவாதம்சரி புலிஅவதூறுகளை சொந்தத்தில் தயாரிப்பதற்க்கு உள்நோக்கம் கொண்டமை என்று குற்றம் சாட்டப்பட முடியாத தகுதியில் அவர்களின் கொள்கைப் பாரம்பரியம் இருப்பதாக என்றல்லவா எங்கட புலிஎதிர்ப்புக் காச்சல்கள் நினைத்துக் கொண்டிருக்கிறது.
கோவணமே அவிண்டுவிள ஓடவைத்தை ஓட்டத்தின் அநுபவம் இருக்கே அது சும்மாவா விடும்?
புலி allergy இல் வெறும் வாய்சப்பும் வருத்தம் இப்படி ஏதாவதை பிதற்றித்தானே வைக்கவேணும் அண்ணாச்சி!!
எறிந்த கல் எங்க பட்டாலும் நாய் தூக்குறது முன்னங்காலைத்தானாம். புலி அவதூறு செய்வதென்பது உடம்புமுழுக்க தேன் சுரக்கிற விடயம் இவங்களுக்கு, ஈழத்தின் சனத்தொகையின் ஒருவீதத்துக்குள் கூட வராத இந்த சிறுதொகையினர் நிட்சயமாக அவர்கள் பொதுநலச் சிந்தனை கருமிகள், சுயநலக் கிருமிகள், கதை கதையா அளக்கிறாங்கடா புலியைப் பற்றி, தின்னுற சோறு செரிக்க இது ஒன்றுதான் ஐயா இவங்கட பிராணத் தொழில்.
கண்ணை மூடிக் கொண்ட பூனை நினைக்குமாம் பூமி இருண்டுட்டுது என்று தங்களை மாதிரியே உலகெங்கும் விளங்காதவங்களே வாழுறாங்க என்ற நினைப்புத்தான் இவங்களை இப்படி வைக்குது.
நாட்பட்ட புறமுதுகு வலிகளின் வெறும் வாய்வேட்டுக்கள் காது கன்னத்தைக் கிழிக்குதையா.
திசைகள்யாவும் தமிழன் வீரத்தைப் பேசுகின்றகாலத்தில் அண்டை வன்சக்திகளின் பணத்துக்கு கற்பம் தரித்த போராட்டம் என்ற புரளிகளே!
ஏன் இந்த ஊழை நிலவைப் பார்த்து,
றொம்பக் கேவலமாய் உங்கள் மனசாட்சியே உங்களைப் பார்த்து சிரிக்கவில்லையா?
Post a Comment