Saturday, May 19, 2007

கடத்தல் நாடகம் கிளைமாக்ஸை எட்டியது:)

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

புதினம்

45 comments:

Anonymous said...

We all indian peole know this drama by Indian Govt RAW.

They cannot separte any tamil people like this way.

The next shooting will be Soon, May be some problem with current actors, so muharjee will be the Hero. He is going to tell, he is abducted by LTTE.

Anonymous said...

இது பழைய செய்தி


//
இதன்பின்னர் இழுவைப் படகை
மாலைதீவின் கடலோரக் காவல்படையினர் பீரங்கிவேட்டுக்களைத் தீர்த்து மூழ்கடித்ததோடு படகில் இருந்து ஜவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தென்னிந்தியாவைச் சேர்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் மலையாள மொழி பேசுகின்றார் எனவும் மலைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.//

மாலைதீவுச்சம்பவத்திற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்கலாமோ?

Anonymous said...

படகுக்காக மீனவரை புலிகள் கைது செய்தார்களாம்.. ஆனால் அவர்களை விடுதலை செய்வதற்கு தோதான இடத்தை விமானத்தில் சென்று பார்த்து வந்தார்களாம்..

அய்யோ அய்யோ.. அய்யய்யோ

அறிஞ்சது முகர்ஜிகளின் மூளையளவு..

Anonymous said...

சார் நாஞ்சொல்றதுதான் உண்மை இல்லாட்டி அழுதிடுவேன்

சட்னி சாம்பார்

Anonymous said...

Muharjee brain needed for NASA and ISRO, பெரிய பருப்பு, இவர் சொன்னா எல்லாரும் நம்பிடுவோமாம்

Anonymous said...

I saw another here from IDLI VADAI, who the hell is that. He seemed to be brother of Muherjee.

http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_8038.html

இட்லி யோட தமிழ் பற்று வாழ்க ...

i think he needs some real experience to understand the real world.

Anonymous said...

There is another thread here about LTTE

http://tamilarangam.blogspot.com/2007/05/blog-post_1643.html

Just i'd like to tell you for him, I've not got any blogger. I'll do create soon to explain/truth to you though i'm indian i understand what's happening in Eelam. I don't understand you guys like KARUNA. I'm 100% sure, if LTTE was not born now there is no tamil in srilanka. They are the only true to save Tamil people now. They don't expect you to be part of Tamil Eealam, Atleast do your work.

If you were born 100 years ago, you would Gandhi, Subash Sandra Pose all are bloody people to ask for independence while we were ruled by English.

Anonymous said...

மினி வான் ஊர்தியை பூச்சி மருந்தடிக்கிற பிளேனெண்டு மாத்திய புதினம் பெடியளை சட்னியிலே சாம்பாலாக்குவோம்

Anonymous said...

ஒண்ணரைப்பக்கநாளேடு

A `Q' branch official said the fishermen had told the police that the Tigers celebrated the bombing of the Katunayake airport, bursting crackers and distributing ice cream to hostages. A similar celebration was organised when the Tigers bombed an oil depot. At the first place of stay, when there was an air raid, they were ordered to rush inside bunkers. On two other occasions, they were asked to lie down.

Anonymous said...

'mike said...
There is another thread here about LTTE

http://tamilarangam.blogspot.com/2007/05/blog-post_1643.html

Just i'd like to tell you for him, I've not got any blogger. I'll do create soon to explain/truth to you though i'm indian i understand what's happening in Eelam. I don't understand you guys like KARUNA. I'm 100% sure, if LTTE was not born now there is no tamil in srilanka. They are the only true to save Tamil people now. They don't expect you to be part of Tamil Eealam, Atleast do your work.

If you were born 100 years ago, you would Gandhi, Subash Sandra Pose all are bloody people to ask for independence while we were ruled by English.'

இன்னாயா சொல்றாரு இவரு?
அய்யா மைக்..முதலில் ஒலுங்கா டைப் அடிக்க கற்றுக் கொள்..அப்புறம் சுபாஸ் சந்தர போஸ்-க்கு சரியான spelling என்னானு பார்த்து வச்சுக்க..இந்த எழவுலே பிளாக் வேற ஆரம்பிச்சு..கிழிஞ்சது போ..!

'though i'm indian i understand what's happening in Eelam.'

இவுங்க ஈழப் பிரச்சனை பற்றி எழுதி நாம் விளங்கி....விளங்கிடும்.

மைக்கு...நீ ஒன்னும் புதுசா இலங்கை பிரச்சனை பற்றி எழுத வேண்டாம். இலங்கை பிரச்சனை பற்றி நாங்க என்ன நம்ப வேண்டும்,என்ன நம்பக் கூடாதுனு கொழுவி அண்ணாவும்,ஈழ பாரதி அண்ணாவும் எங்களுக்கு சொல்லுவாங்க...நீ கொஞ்சம் ஒத்துபா..!

Anonymous said...

//முதலில் ஒலுங்கா டைப் அடிக்க கற்றுக் கொள்..//

மணியண்ணை.. நீங்களும் கூட ஒலுங்காவை ஒழுங்கா எப்படி எழுதுவதுண்ணு spelling சரியா கத்துக் கொள்ளுங்கோ.. ஒரு வேளை தமிழ் தானே.. அது யாருக்குத் தேவைன்னு நினைச்சீங்களோ என்னமோ.. என்னா நான் சொல்லுறது..

Anonymous said...

Hi Mani,

I've all the rights to tell the truth to IDLI VADAI AND SOME PEOPLE, who don't understand the freedom of ruled countries. What about Nelson Rolihlahla Mandela, Through his 27 years in prison, still he is one of respectful person. After Eelam you guys will give respect everyone who supports for Eealam including me. We are somehow help them in someway.

Don't envy on me.

I don't bother about what you say, i'll be back asap, currently i'm learning how to do blogging.

Anonymous said...

ஒலுங்கன் சூப்ப்பர்....

'Don't envy on me.'

அட கருமமே..இன்னாத்துக்கு உம்மேலே 'envy'..? சுபாஷ் சந்திர போஸ் spelling தப்புனு சொன்னது தப்பா...நாம் தமிழர்கள்...

Anonymous said...

மைக் அண்ணா...சரி..உங்ளுக்கு முழு உரிமையும் இருக்கிறது.எழுதுங்கள்... ஆனால் ஈழப் பிரச்சனை வேறு..LTTE ஆதரவு பிரச்சாரம் வேறு. இந்த மாதிரி பிரச்சார பீரங்கிகள் வலையுலகில் ஆயிரம் பேர் உள்ளார்கள்.ஆகவே இரண்டையும் கலக்கி அடிப்பதை தவிர்க்கவும்.

அதுசரி..இது என்ன...

'After Eelam you guys will give respect everyone who supports for Eealam including me.'

துண்டை போட்டு, இடம் பிடிக்க நீங்களும் போட்டியில் இறங்கி விட்டீர்களா?

அண்ணாத்த..ஈழ மக்களின் பிரச்சனையை 'நமக்கு மரியாதை கிடைக்கும்' என்ற ரீதியில் பார்ப்பது ஒரு மோசமான அணுகு முறையாகும்.


மண்டேலா எதற்கு இந்த பின்னூட்டத்தில் வந்தார் என புரியவேயில்லை.

theevu said...

சற்றுமுன் பிந்திய செய்தி

வி.புலிகள் எங்களை கடத்தவில்லை.திரும்பிய மீனவச்சிறுவன் வாக்குமூலம்.இலங்கை கடற்படையே எங்களை கடத்தியது.

செய்திமூலம் மக்கள் தொலைக்காட்சி

Anonymous said...

காலை செய்தித்தாள் படித்த போதே நினைத்தேன், கொழுவி பதிவிடுவாரென..

விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒரே ஒருவர் தான் ஊடகத்தாரிடம் பேச அனுமதிக்கப்பட்டாராம்! அவரும் கூட பிடித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்று உறுதிப்படுத்திக் கொண்ட விதத்தைக் கேட்ட போது, எனக்கு ஏனோ சினிமா கதாநாயகர்கள் கடைசி பாட்டில் ஒற்றை மச்சம் மட்டும் வைத்துக்கொண்டு வந்து, கதாநாயகிகளின் அப்பாக்களை ஏமாற்றுவது நினைவுக்கு வந்தது.

பிரபாகரனின் படங்களை மாட்டிய அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாலும், கட்டுநாயக்கா விமான தளத் தகர்வு, எண்ணை ஆலை தகர்வின் போது இனிப்புகள் கொடுத்து மகிழ்ந்ததாலும் அவர்கள் தான் புலிகள் என்று புரிந்து கொண்டார்களாம் இந்த மீனவர்கள்!

கோடம்பாக்கத்தில் சான்ஸுக்கு அலையும் ஏதோ ஒரு உதவி டிரைக்டர் உருவாக்கிக் கொடுத்த ஸ்கிரிப்டு மாதிரி இருந்தது அந்தப் பேட்டி...

Anonymous said...

Editorial
Coincidence or Stage-managed: possibly with a view to frame the opposition?


--------------------------------------------------------------------------------

Dhivehi Observer, 18 May 2007

The late eighties and Gayoom's popularity is waning. Then 3rd November 1988 � Tamil mercenaries, Weapons, Indian Assistance.

Fast forward 19 years. Gayoom's popularity is at an all-time low. Then 16 May 2007 - "Tamil Tigers", Weapons, Indian Assistance.

Sounds familiar? A coincidence?

If the incident where the Maldivian Coast Guard sank a vessel that was allegedly gun-running for the LTTE seems to be news that sounds too good to be true for Gayoom when he so badly needed some positive news, then, it may be because it is too good to be true.

In the late eighties when Gayoom's popularity was declining and the Indians were having a really bad time with the IPKF in Sri Lanka, and badly needed a success story, the November 3rd attack in 1988 proved to be exactly what they were looking for. Gayoom's popularity rose overnight, and the then Indian Prime Minister, the late Rajiv Gandhi had his success story. Therefore, it is of little surprise that political analysts believe that the Indians were behind the attack. ".... in 1989 India rushed its gun-boats to Maldives by engineering a Tamil rebel group to "invade" Maldives. India enacted this drama in the Indian Ocean in the name of stabilizing the region. But the whole episode was manipulated by the Indians to signal that the Indian Ocean belongs to her."

Now once again, Gayoom's popularity is at its lowest. His party, the DRP, is in disarray. His own brother has left the party, forming his own "faction" in the Majlis so as to speak. His brother-in-law Abbas Ibrahim has just suffered the humiliation of a vote of no confidence, which he barely won. He had to resign. He then had to face the embarrassment of being replaced by their "servant boy" Gasim Ibrahim, voted in by both parties. Things are definitely not looking rosy for Gayoom.

In a similar vein, when Gayoom used the Indian donated vessel "Huravee" (formerly INS Tillanchang) to attack innocent civilians on Namoona Dhoni, the Indian government was heavily criticized- no less by their own media among others. One Indian journalist claimed that "And now it (India) is looking the other way while an aged autocrat in the Maldives unleashes repression. India's support to Gayoom is not just unprincipled, it is imprudent" Deccan Herald. Moreover, the whole incident received a range of criticism from international human rights organisations. Therefore the Indian government badly needs a story where they could justify to the international community that they were right to gift the fast attack craft to the Maldivian government.

Suddenly there we have it. An incident where a Maldivian fishing dhoni discovers a vessel (identified as Sri Krishna, an Indian vessel stolen allegedly by the LTTE on 27th April 2007 as stated by Mr. D. MUKHERJEE, Director General of Police in Tamil Nadu,) in the Maldivian territorial waters allegedly carrying a consignment of LTTE weapons and explosives; and the Maldivian Coast Guard using the Indian donated vessel Huravee sinks the boat with a little help from big brother India.

PERFECT. Gayoom has his headline news and the Indians have their justification.

Is this sheer good luck for both Gayoom and India? Or is this a stage-managed incident; possibly with a view to blame the opposition?

There are several questions that raise severe doubts about the timing and the manner of what happened that makes one thinks that it's the latter rather than the former

Firstly, are these Indian nationals really members of the LTTE? The LTTE are hard-core separatists fighting a guerilla war in Sri Lanka that is over 24 years old. They have perfected the art of suicide bombing and evade capture at any cost. It is highly unlikely that any member of the LTTE would allow themselves to be captured by the Maldivian Coast Guard by jumping into the sea when they know that there is a probability that they could end up in the hands of the Sri Lankan military later on. It is much more likely that if they were the LTTE, then they would commit suicide by swallowing the cyanide capsules that they normally wear around their necks. Furthermore, the LTTE has never involved themselves in the affairs of the Maldives or has never been accused of or been caught using the Maldivian territory for any of their covert activities. Why would the LTTE supremo Mr. Prabhakaran suddenly decide to use the Maldivian territorial waters (and that too in the Southern end of the Maldives far away from the Indian subcontinent) for his gun-running operations? Surely he would realize the negative international impact that would be caused by involving the territory of a third state in his fight with the Sri Lankan government?

Furthermore, an organization such as the LTTE that has the capability to purchase weapons (and air craft) worth millions would be able to invest in a portable GPS system that would ensure that they were sailing in the right direction? After all, one could purchase such a devise from the high street of practically any country. Why would they risk losing weapons worth thousands of dollars by letting their vessel set sail without having something so cheap and simple that would guide them across the high seas? The Chief Government Spokesperson Mundhood claimed that "they were very bad navigators." Far from it. They were probably in the exact place that they were supposed to be.

And most importantly, why were the Indians involved in this operation? The Maldivian Coast Guard is a highly trained professional force. Several thousands of our hard-earned money is allocated to our defence budget. It is their duty to protect our waters and that's what the people of Maldives pay them for. According to their own statements "Coastal Surveillance" is one of their allocated tasks. Therefore, why on earth do they need the assistance of the Indian air force to carry out �a surveillance operation'? Surely they should be able to carry out their own surveillance to check if there were other "gun-running" vessels in the area? Or is our Coast Guard only capable of harassing unarmed civilians on a dhoni without calling big brother for help? And why does the scores of Indian marines be needed to deal with one rogue vessel?

To give them the benefit of doubt, the Coast Guard maybe merely following orders but is the Indian assistance "pre-ordained" by Gayoom? By allowing "big brother" India to once more involve itself in what would any archipelagic or coastal state would see as their own national duty, Gayoom appears to once more compromise our independence as well as making our Coast Guard the laughing-stock of the region.

It is highly probable that the incident is one that is stage-managed by Gayoom, possibly with a view to blame the opposition. This is the kind of thing that is right up the Dictator's sleeve. By framing the opposition Gayoom would hope to lower their popularity thereby raising his, and at the same time let the Indians justify the donation of the fast attack craft. Statements to that effect would be given by those captured (with a little help with the "translation" from India!) He would decorate the Coast Guard by lauding them with medals and arrest the opposition leaders.

And those on board the vessel will be quietly repatriated back to India.

".... in 1989 India rushed its gun-boats to Maldives by engineering a Tamil rebel group to "invade" Maldives. India enacted this drama in the Indian Ocean in the name of stabilizing the region. But the whole episode was manipulated by the Indians to signal that the Indian Ocean belongs to her."


http://www.dhivehiobserver.com/editorial/Editorial_1805200711828.htm

Anonymous said...

Hi Mani

"ஆனால் ஈழப் பிரச்சனை வேறு..LTTE ஆதரவு பிரச்சாரம் வேறு"

About your statement

I dont agree with you at all. You know more than 95% tamil people supports LTTE. Remaining people are just trying to destroy themseleves and Tamil people but say we also work for Eelam. But they get all the benefits from Mahinda Govt. Everyone knows except few like you guys.

That's the reason you guys needs some more brain to understand the real world.

Anonymous said...

Hi Mani,

"இந்த மாதிரி பிரச்சார பீரங்கிகள் வலையுலகில் ஆயிரம் பேர் உள்ளார்கள்."

Don't care about what you say, i'll be 1001th person. Always be positive not only here everywhere.

Anonymous said...

At 3:02 PM, செல்வமணி said…
மைக் அண்ணா...சரி..உங்ளுக்கு முழு உரிமையும் இருக்கிறது.எழுதுங்கள்... ஆனால் ஈழப் பிரச்சனை வேறு..LTTE ஆதரவு பிரச்சாரம் வேறு. இந்த மாதிரி பிரச்சார பீரங்கிகள் வலையுலகில் ஆயிரம் பேர் உள்ளார்கள்.ஆகவே இரண்டையும் கலக்கி அடிப்பதை தவிர்க்கவும்.

அதுசரி..இது என்ன...

'After Eelam you guys will give respect everyone who supports for Eealam including me.'

துண்டை போட்டு, இடம் பிடிக்க நீங்களும் போட்டியில் இறங்கி விட்டீர்களா?

அண்ணாத்த..ஈழ மக்களின் பிரச்சனையை 'நமக்கு மரியாதை கிடைக்கும்' என்ற ரீதியில் பார்ப்பது ஒரு மோசமான அணுகு முறையாகும்.


மண்டேலா எதற்கு இந்த பின்னூட்டத்தில் வந்தார் என புரியவேயில்லை.

ஐயா மணி தெரியுமுங்க.
புலி எதிரி முத்திரை குத்தப்பட்ட சிங்களம் கூட ஒத்துக்கொண்டதில்லை தான் தமிழனுக்கும் எதிரி என்று, நீங்க சொல்லுங்க ஈழத்தமிழனில பாசம் பொங்கிவளிவதால்தான் உங்களுக்கு புலியையே பிடிக்காது என்று.
ஈழத்தின் தலைமையை ஈழம் தான் தெரிவு செய்வதை விட இந்தியாதான் தான் தெரிவு செய்யவிரும்புகிறது அதுதான் எமது தமிழ்கூட்டணிகாறரை சந்திக்க விரும்பாத மன்மோகன்சிங்குக்கு டக்ளஸ் ஐ சந்திக்க முடிந்திருக்கிறது.
இதுபோல்தானே ஐயா தங்கள்கரிசனையும் ஈழம் வேறு புலி வேறு என்று பிரித்துப் பார்க்கும் இரகசியம்.
காட்டாற்று வெள்ளம் ஊர், ஊராக அள்ளிக் கொண்டு போவது போன்ற சிங்களப் பயங்கராவாதத்துக்கு மடிகின்ற உயிர்கள் பற்றி வருந்தாத உங்கள் கரிசனை, வளுக்கி விழுந்தவன் மீது கவலைப் படுவது போல் புலிப் பயங்கரவாதத்தில் தான் உங்களுக்கு வருத்தம்.
இது காசுக்கு விற்கப் படும் கரிசனை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லவேண்டும் ஐயா?
வயிற்றுத்துன்பங்கள் கரையேறும் ஓடம் இந்த புலிஎதிர்ப்புவாதம் என்றும் சொல்லலாம் அல்லவா?

Anonymous said...

இந்தியத்தின் வறுமை பாதி, அதன் கல்விஅறிவின்மை பாதி சேர்ந்தே செய்த கலவை இந்திய அரசியல்,
அங்கே ஊரை அடித்து உலையில் போட்டவர்களுக்கும்,
நாடிதளர்ந்து ஆடம் கைவிட்டவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் முற்போக்குத்தனம் கொண்ட கழுதை ஐயா அந்த அரசியல்.
ஊடகம் என்ற கழுதை அங்கே சினிமாக்கூத்துக்களுக்கு பல்விளக்கி, கூட்டிக்கொடுத்து, பொதுநலவாதிகளை கெடுத்துவைத்து, அரச ஆசிபெற என்னவும் செய்து இப்படி பாழாய்ப்போன பிழைப்பு பிழைக்குது.

Anonymous said...

எங்க முகர்ஜி சாருக்கு மந்திரம் மாயாஜாலம் எல்லாம் அத்துப்படி. அவருக்கு ஞானக்கண் வேறு உண்டு.

Anonymous said...

மைக் அய்யா... உங்கள் வாதத் திறமை கண்டு பயந்து நடுங்கி போய் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நீங்கள் போய் உங்கள் பிரச்சார பீரங்கியை வெடிக்க செய்யுங்கள்.நன்றி.


தீவான்..வாங்க..நாம் பேசலாம்…
புலிகளை எதிர்த்தால் தமிழின எதிரியா? என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியாது.தமிழனுக்கு எதிரி என்று நீங்கள் சொல்லிவிட்டால் நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்ன? மாற்றுகருத்து கொண்டுள்ளோம் என்று சொல்லுங்கள்.அது சரியாக இருக்கும்.

‘எமது தமிழ்கூட்டணிகாறரை சந்திக்க விரும்பாத மன்மோகன்சிங்குக்கு டக்ளஸ் ஐ சந்திக்க முடிந்திருக்கிறது.’

இது சம்பந்தமாக http://sorithanankal.blogspot.com/2006/09/india-and-its-dirty-politics.html -பதிவில் நிறைய கருத்துக்கள் உள்ளதை நினைவூட்டுகிறேன்.

‘ஐயா தங்கள்கரிசனையும் ஈழம் வேறு புலி வேறு என்று பிரித்துப் பார்க்கும் இரகசியம்.’

இதில் என்னையா ரகசியம்… ஈழப் பிரச்சனை வேறு,புலிகள் வேறு நான் நினைப்பது என் கருத்து. என் கருத்தை கூட உங்களை கேட்டா ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்?

‘இது காசுக்கு விற்கப் படும் கரிசனை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லவேண்டும் ஐயா? வயிற்றுத்துன்பங்கள் கரையேறும் ஓடம் இந்த புலிஎதிர்ப்புவாதம் என்றும் சொல்லலாம் அல்லவா?’

புலி எதிர்ப்பு மற்றும் ஆதரவுக்காக பணம் தரப்படுகிறது என்றுதானே சொல்ல வருகிறீர்கள்... அட நீங்க வேற..என்னைப் போய் அந்த அளவுக்கு சொல்லிகிட்டு...

இந்த இரண்டு தரப்பினர் இல்லாமல் தமிழ் நாட்டில் மூன்றாவதாக இன்னொரு பிரிவினர் உள்ளனர்.80-களின் மத்தியிலிருந்து இந்த பிரச்சனை சம்பந்தமாக தமிழ்நாட்டிலும்,இலங்கையிலும் நடப்பவற்றை கூர்ந்து கவனித்துக் கொண்டு அது சம்பந்தமான புத்தகங்களை படித்துக் கொண்டு,இதே வேலையாக கூட்டங்கள் மற்றும் போராட்டங்களிலும் கலந்து கொண்டு,பல உதவிகளும் செய்து கொண்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி,தங்கள் வாழ்நாளின் prime time-ல் முக்கிய நாட்களை இழந்தவர்கள் ஆயிரகணக்கில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கிறார்கள். அந்த மாதிரி எளியோர்களில்தான் நானும் ஒருவன். அதன் தொடர்ச்சியாகத்தான் இணையத்திலும் அது தொடர்பான எழுத்துக்கள். முடிந்தால் இந்த இயக்கங்களின் மூத்த உறுப்பினர் யாராவது தெரிந்தால் தமிழ்நாடு அனுபவங்களை கேட்டுப் பாருங்கள்.ஆயிரம் கதைகள் சொல்லுவார்கள்.கால ஓட்டத்தில் சில தெளிவுகள் கிடைத்திருக்கலாம் அல்லது மாற்று கருத்துக்கு போயிருக்கலாம்.அவ்வளவுதான். அதற்கு காசுதான் காரணம் என்று கூறுவதை பார்க்கும் போது.. அந்த மண்ணோடு மண்ணாய் போன அந்த இனிய நண்பர்களின் முகமும்,அலைந்த அலைச்சலும்தான் நினைவுக்கு வருகிறது.நல்லது.

Anonymous said...

வறுமை, கல்விஅறிவின்மை, ஊரை அடித்து உலையில் போடுவது, கூட்டிக்கொடுப்பது, அரச ஆசிபெற என்னவும் செய்வது...

இதெல்லாம் உலகம் முழுக்க, எல்லா மக்களிடம் உள்ள பொதுவான விசயங்கள்… இந்த மாதிரி விசயங்களை ஒரு நாட்டோடு சம்பந்த படுத்துவதோ..இல்லை ஒரு குறிப்பிட்ட இன மக்களோடு இணைத்து பேசுவதோ அறீவீனத்தின் உச்ச கட்டம். நாம் இப்படி எழுதுவதோ, பேசுவதோ நாம் இன்னும் வளர வேண்டியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.

Anonymous said...

செல்வமணி அண்ணாத்தை நான் தீவான் அல்ல தேவன்.
சரி கடுப்பைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டேவருகிறேன் உங்கள் கருத்துக்கு.
பொதுவான புலிஎதிர்ப்புவாதம் ஈழத்தின் பெரும்பான்மை புலியை ஆதரிக்கிறதோ, அல்லவோ என்பது அல்ல அவர்கள் கவலை.
இந்தியப் புலிஎதிர்ப்புவாதத்துக்கு பிராந்தியங்களின் செல்வாக்குக் கணக்குவளக்குதான் தமிழன் பிணங்களுக்கு மேல் நின்று பார்த்துக் கொண்டிருப்பது, ஈழத்தமிழன் துன்பம் மட்டுமல்ல இந்தியத்தமிழன் துன்பங்களும் செல்லாதவைதான் மத்திக்கு, இந்தி இரத்தத்துக்கு வரும் நோய், நொடிக்குத்தான் இந்தியா மருந்து குடிக்கும்.
சிங்களப்புலி எதிர்ப்புவாதம் இது சொல்லித்தெரிய வேண்டியதே இல்லை.
ஈழத்தின் அப்பாவி உயிகளில் கொண்ட அக்கறையில் தயாரிக்கப் பட்ட புலிஎதிர்ப்புவாதம் அதைப் பற்றிப் பேசுவோம் இப்போது.
அந்த மக்கள் எதை சரிஎன்று கருதுகிறார்கள்,
அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்.
என அந்தமக்களின் விருப்பங்களுக்கு தோள்களைக் கொடுப்பவர்கள்தான் இந்த வகுப்புக்குள் வரலாம் ஐயா.
எனவே செல்வமணிஅணை உங்கட புலிஎதிர்ப்புவாததின் குணம் அறியமுடியாத தரத்தில் நாம் இல்லை.
மற்றும் புலிஎன்ற மக்கள் அமைப்பை பரிகாசம் செய்கின்ற உங்கள் போன்றவர்கள் இந்திய அரசியல் யோக்கியத்தை நாம் சோன்னால் கோவம் வருகிறதா இல்லை அது அறியாமையின் உச்சக்கட்டமா?
மாலதீவின் அதிகாரத்தை கையகப்படுத்த புளொட் அமைப்பை ஏவிவிட்டது போலவே இலங்கையின் அதிகாரத்தை கையகப்படுத்தவே இலங்கைப் போராட்டக் குழுக்களை உருவாக்கி வளர்த்தது றோ
எனவே அந்த போராட்ட புரளிகளை விரட்டியதில் எமக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன் ஐயா?

Anonymous said...

நீங்கள் ஒரு இந்தியனாக இருக்கவேண்டும் என்றுகூட நான் நினைக்கவில்லை சிங்களப் பணத்தின் கூலி ஈழத்தவனாகவே நீங்கள் இருக்க முடியும் உங்கள் அத்திவாரம் நாறாமல் இருப்பதற்க்காக வாசம் அடிக்கிறீர்கள் எனத்தான் நினைக்கிறேன்.

Anonymous said...

தேவன் நீங்கள் தீவான் இல்லியா? தீவான் என்ற சொல் என்பது இழிவாக கருதப்பட்டால் என் மன்னிப்புகள்.

கடுப்பை ஏன் கட்டுப்படுத்திக்கொண்டே வருகிறீர்கள்? அவிழ்த்துவிட்டுதான் பாருங்களேன்? என்ன நடந்துவிடப் போகிறது? பிரதர் இந்த மாதிரி தொழில் நுட்ப பேச்சல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.

'சிங்களப் பணத்தின் கூலி ஈழத்தவனாகவே நீங்கள் இருக்க முடியும்'

இப்போது ஈழத்தவனையும் கேவலமாக பேசத் தொடங்கியாகிவிட்டதா? அப்போ நீங்கள் புலிகளிடம் காசு வாங்கிதான் இந்த ஜால்ராவை இந்த அடி அடிக்கிறீர்களா?

ஒரு இந்திய தமிழனின் மொழி நடைக்கும்,ஈழத்தமிழனின் மொழி நடைக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிக்க தெரியாத நீங்கள் இந்திய அரசியல் யோக்கியதையை பற்றி எழுத வந்துவிட்டீர்...என் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டு, பிறகு என் அஸ்திவாரம் நாறுகிறதா இல்லையா என்பதை நன்றாக முகர்ந்து பார்த்துவிட்டு சொல்லவும்.

'அந்த மக்கள் எதை சரிஎன்று கருதுகிறார்கள்,
அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்.
என அந்தமக்களின் விருப்பங்களுக்கு தோள்களைக் கொடுப்பவர்கள்தான் இந்த வகுப்புக்குள் வரலாம் ஐயா.'

இதெல்லாம் அது ஒரு உள்நாட்டு பிரச்சனையாக இருந்தபோது... இப்போது இலங்கை பிரச்சனை இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனை. இந்தியாவின் பாதுகாப்புகாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக எந்த கொம்பனிடமும் அனுமதியோ, ஆலோசனையோ கேட்கவேண்டியதில்லை.அது இயல்பாகவே நடந்தேறும்.


அவனவன் LTTE-யின் அறிவிக்கப்படாத spokesman-ஆக நினைத்துக் கொண்டு பேசுவதும்,அறிக்கை விடுவதும்... கொடுமைடா...

Anonymous said...

'அந்த மக்கள் எதை சரிஎன்று கருதுகிறார்கள்,
அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்.
என அந்தமக்களின் விருப்பங்களுக்கு தோள்களைக் கொடுப்பவர்கள்தான் இந்த வகுப்புக்குள் வரலாம் ஐயா.'

’’இதெல்லாம் அது ஒரு உள்நாட்டு பிரச்சனையாக இருந்தபோது... இப்போது இலங்கை பிரச்சனை இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனை. இந்தியாவின் பாதுகாப்புகாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக எந்த கொம்பனிடமும் அனுமதியோ, ஆலோசனையோ கேட்கவேண்டியதில்லை.அது இயல்பாகவே நடந்தேறும்.’’
அப்படிச் சொல்லுங்கள் புலிமேல் கல்லெறிவதன் நோக்கம்.
ஈழத்தில் ஏற்பட்ட கரிசனையின் பொருட்டால் அல்ல உங்கள் நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் ஈழத்துக்கு எதிரியாகவேண்டிய சூழ்நிலை என்று சொல்லுங்கள் இந்தவிதமான புரிஎதிர்ப்புவாதம் கூட ஈழத்தில் கொண்ட கரிசனையில் உருவாக்கப் பட்டது என்றால்தால் அது கௌரவமானதாக கணிக்கப்படுகின்றது.
முன்னாளில் பயங்கரவாதத்தை பயிற்சிகள் கொடுத்து இலங்கைக்கு ஏற்றுமதிகள் செய்த போது இருந்த கொள்கை தற்போதைய கொள்கைக்கு முரண்பாடாக இருந்திருக்காதோ?
மானைதீவை ஏப்பம்விட நினைத்த கொள்கை சர்வதேச கௌரவமுடையதுதானா?
ஒருநாட்டின் இறமைக்குள் தன்தேசியநலன்களுக்கு வழிதேடும் போக்கு சர்வதேச தரம்வாய்ந்ததுதானா?
இந்தியாவுக்கு வரும்பகை இலங்கையால்தான வரவேண்டும்?
இதுவரை பயங்கரவாதத்தின் கைகளுக்கு எட்டப்படாத இந்தியா?
தலையில காயம் வந்தால் கால்லை ஏன் ஐயா கட்டுப் போடுகிறீர்கள்?
பிராந்தியவாத அடிப்பையில் வள்ரும் புலிஎதிர்ப்புவாதத்தின் மூலவேர் புலிகளின் கொள்கைப் பற்று, பணபலம், படைபலத்துக்கு சோரம்போகாத கொள்கை உறுதி எனவே இந்த உண்மைநிலையை பறைஅறைந்து கொண்டு புலிஎதிப்புக்கொடியைப் பிடிக்கமுடியுமா?
'சிங்களப் பணத்தின் கூலி ஈழத்தவனாகவே நீங்கள் இருக்க முடியும்'

’’இப்போது ஈழத்தவனையும் கேவலமாக பேசத் தொடங்கியாகிவிட்டதா? அப்போ நீங்கள் புலிகளிடம் காசு வாங்கிதான் இந்த ஜால்ராவை இந்த அடி அடிக்கிறீர்களா?’’

மணிஅண்ணா சரி நீங்களே சொல்லுங்கள் புலி எந்த வல்லரசின் ஏவல் பிசாசு என்று.
புலியை மாபியா, பாசலிஸ்டுக்கள் என்று நிலவைப் பார்த்துக் குலைக்கும் நாயகளாக அவர்களால் கூட இப்படிப் பட்ட சேற்றைப் பூசமுடியாத மேன்மையான தகுதியில் புலிகளின் கொள்கைப் பாரம்பரியம் இருக்கிறது.
யாராவது சொல்வார்களா பணத்துக்காகத்தான் புலிகளின் போர் என்று, புலிகளுக்கு இலங்கை, இந்தியா தரமாட்டேன் என்று அடம்பிடித்ததா? இன்று இருநாடுகளும் புலிஎதிர்ப்புக்கு செலவிடும் தொகையில் பல இலங்கையயே வாங்கமுடியும் ஐயா?
இல்லை தமிழுக்கு உரிமைமதிப்பான ஒரு தீர்வைக் கைவிட்டு இந்த மக்கள்மீது கனமாக செலுத்தக்கூடிய ஒரு அதிகாரத்தீர்வை கேட்டால் புலிகளிடம் கொடுப்பதற்க்கு இந்த இரு அரசுகளுக்கும் மனம் வந்திருக்காதோ ஐயா? அத்திவாரத்துடன் உலுப்பிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சினையில் இருந்து தப்புவதற்கு?
புலிகளின் வேர்களுக்கு நீர் பாச்சிக் கொண்டிருப்பது புலத்தமிழர்களின் வியர்வைத்துளிகள்தான் ஐயா?
தவிர எமக்கு பணம் தரவேண்டும் என்றால் அவர்கள் அண்டை அரசுகளின் ஒட்டுண்ணிகளாய் அல்லவா இருக்க வேண்டும்.
யாவாரகரன் என்பவர கடைவாய் கிழிய கத்திக்கொண்டிருக்கிறார் புலிஎதிர்ப்பு. பாவம் இதில் என்ன பரிதாபகரம் என்றால், தன்சத்தம் புலிமதிப்பின் தரத்தை அடைந்துவிட்டதாக போனவாரம் கதை அளந்திருக்கிறார். கண்ட குப்பை, கூழம் எல்லாம் எப்படியாவது தன் தரத்தை உயர்த்த ஆசைப்படுவது இயற்கைதான் ஆனால் இந்த குப்பைக்குமா என்றுதான் எனக்குள் எழுந்தது.

Anonymous said...

'புலியை மாபியா, பாசலிஸ்டுக்கள் என்று நிலவைப் பார்த்துக் குலைக்கும் நாயகளாக அவர்களால் கூட இப்படிப் பட்ட சேற்றைப் பூசமுடியாத மேன்மையான தகுதியில் புலிகளின் கொள்கைப் பாரம்பரியம் இருக்கிறது.'

ஹலோ..ஹலோ..ஒரு நிமிசம்..இந்த மாதிரி டப்பாவையெல்லாம் 'குப்பி கடிக்க' விரும்பும் எங்கள் தமிழ்நாட்டு நண்பர்களிடம் சொல்லுங்கள்.. ஒவ்வொரு ரோமத்தையும் எழுப்பிவிட்டு சிலிர்த்து கொள்வார்கள். எங்களை மாதிரி ஆட்களிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?

'மணிஅண்ணா சரி நீங்களே சொல்லுங்கள் புலி எந்த வல்லரசின் ஏவல் பிசாசு என்று.'

இல்லை..புலிகள் எந்த வல்லரசுக்கும் ஏவல் பிசாசாக இன்னும் மாறவில்லை என்பதே என் கருத்து.

'ஒருநாட்டின் இறமைக்குள் தன்தேசியநலன்களுக்கு வழிதேடும் போக்கு சர்வதேச தரம்வாய்ந்ததுதானா?'

அய்யா தேவன்..என்னயா ஆச்சு உங்களுக்கு?
ஒரு நாட்டின் இறமைக்குள் வான்படையையே நடத்திக் கொண்டு...நிழல் அரசாங்கம் நடத்திக் கொண்டு இறையாண்மையை பற்றி பேசுகிறீர்.ஏனய்யா கொள்ளிக் கட்டையை எடுத்து காது சொறிகிறீர்கள்?

'முன்னாளில் பயங்கரவாதத்தை பயிற்சிகள் கொடுத்து இலங்கைக்கு ஏற்றுமதிகள் செய்த போது இருந்த கொள்கை தற்போதைய கொள்கைக்கு முரண்பாடாக இருந்திருக்காதோ?
மானைதீவை ஏப்பம்விட நினைத்த கொள்கை சர்வதேச கௌரவமுடையதுதானா?'

அடடா..இதென்ன ஒப்பாறி.. இந்த கேடுகெட்ட அரசியல் சாணக்கியங்களைத்தானே வளர்ந்து வரும் எல்லா பெரிய நாடுகள் செய்து வருகின்றன.. எதிர்காலத்தில் தமிழீழம் அமையுமானால் தமிழீழ அரசாங்கமும் இதைத்தான் செய்யப்போகிறது. கில்லாடிக்கு கில்லாடி பொட்டுஅம்மான் திறம்பட இதை செய்து முடிப்பார்.இந்த மாதிரி உளவு நடவடிக்கை பற்றிய சந்தேகங்களுக்கு 'வான்கூவரிலிருந்து ரிஷி'கேட்கவும் அல்லது 'பரபரப்பு'இதழ்களை படிக்கவும். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திரிக்கும் என்றல்லாவா நினைத்தேன்.

இந்தியா மாதிரி பெரிய நாடுகள்... எல்லா எல்லைகளிலும் துப்பாக்கி சப்தம்.. என்ன செய்வது? ஒவ்வொரு நாடும் தன் தேசிய நலன்களுக்கு ஏற்றவாறு தான் நடந்து கொள்ளும் என்ற அரசியல் அரிச்சுவடி உங்களுக்கு தெரியாதா?

சின்ன நாடுகள், பலமான நாடுகளிடம் அரசியல் செய்யும் போதுகூட பல சிரமங்களை சந்திக்கவே வெண்டியிருக்கிறது.இந்தியாகூட அமெரிக்கா,சைனா மற்றும் ரஷ்யாவுடன் அரசியல் பண்ணும்போது பல சிரமங்களை படத்தான் வேண்டியிருக்கிறது.அமெரிக்கா இந்தியாவை அணுஆயுத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்து போட வைத்தது..எல்லாம் ஒரு வித arm- twisting தான்.

நாடுகளே இப்படி பட்ட அரசியல் நகர்வுகளை நகர்த்திக் கொண்டிருக்க ஆயுத குழுக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அந்தந்த குழுக்கள்தான் முடிவு செய்யவேண்டும். இல்லை நாங்கள் நட்டுகிட்டுதான் நிப்போம் என்றால் விளைவுகள் அதற்கு ஏற்றவாறுதான் இருக்கும்.

மோதல் போக்குகளைவிட, நட்பான அரசியல் சாணக்கியங்கள் பலனை தரும். புலிகள் இப்போது இந்தியாவுடன் கடைபிடிப்பது மோதல் போக்கை.ஒரு பயனையும் அளிக்காது.வேண்டுமானால் கொழுவி மாதிரி ஆட்களுக்கு கிண்டல் பண்ணுவதற்கு இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம்.

குப்பைகளை பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்..புரியவில்லை. ஆனால் குப்பைகளின் இயல்பே உயர பறக்க முயற்சிப்பதுதானே...எல்லா குப்பைகளும்தான்.

Anonymous said...

//புலிகள் இப்போது இந்தியாவுடன் கடைபிடிப்பது மோதல் போக்கை.//

எல்லாம் சரி.. இதுதான் பிழை.. எதை வைத்து சொல்லுறீங்கள் செல்வமணி..? ரஜீவ் கொலைக்குப் பிறகு புலிகள் இந்தியாவோடு பகைத்த தருணங்கள் எவை..?

அண்மைய மீனவர் தொடர்பான மறுப்பபு அறிக்கையில் எங்காவது இந்தியாவை புலிகள் சுட்டியிருக்கிறார்களா..?

Anonymous said...

'ரஜீவ் கொலைக்குப் பிறகு புலிகள் இந்தியாவோடு பகைத்த தருணங்கள் எவை..?'

ராஜீவ் கொலைக்கு பின்னால்தான் இந்தியாவோடு பகைத்தார்கள் என்று நான் கருதவில்லை.இந்த மோதல் போக்கு அதற்கு முன்பே..இன்னும் சொல்லப் போனால் IPKF நடவடிக்கைகளுக்கு முன்பே..ஏன் புலிகள் 'ராட்டையில் நூல் நூற்க' இந்தியாவில் பயிற்சி எடுத்ததாக சொல்கிறார்களே அப்போதே தொடங்கியிருக்கலாம் என் நான் கருதுகிறேன்.இலங்கை தொடர்பான இந்தியாவின் திட்டங்கள் LTTE-க்கு ஏற்புடையதாக இல்லை என என்று எப்போது புலிகள் கருதினார்களோ அப்போதே இந்த மோதல் ஆரம்பமாகிவிட்டது.

இப்போதும் இந்தியாவின் திட்டங்கள் மாறவில்லை.மாறப்போவதும் இல்லை.LTTE-யும் திட்டங்களை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே மோதல் தொடரும் என்றுதான் நான் கருதுகின்றேன்.

மற்றபடி மீனவர் அல்லது வேறு சம்பவங்கள் சம்பந்தமாக அறிக்கை வெளியிடுவது போன்றவையெல்லாம் வெளிப்படையான செயல்கள்.அதை புலிகள் என்றுமே கவனமாகவே செய்வார்கள்.உதாரணம்: துன்பியல் சம்பவம் தொடர்பான பாலசிங்கம் அறிக்கை.நான் சொல்லும் மோதல் கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் நடை பெறுவது.அது பொதுவாக வெளியே தெரியாது.

Anonymous said...

'புலியை மாபியா, பாசலிஸ்டுக்கள் என்று நிலவைப் பார்த்துக் குலைக்கும் நாயகளாக அவர்களால் கூட இப்படிப் பட்ட சேற்றைப் பூசமுடியாத மேன்மையான தகுதியில் புலிகளின் கொள்கைப் பாரம்பரியம் இருக்கிறது.'

’’ஹலோ..ஹலோ..ஒரு நிமிசம்..இந்த மாதிரி டப்பாவையெல்லாம் 'குப்பி கடிக்க' விரும்பும் எங்கள் தமிழ்நாட்டு நண்பர்களிடம் சொல்லுங்கள்.. ஒவ்வொரு ரோமத்தையும் எழுப்பிவிட்டு சிலிர்த்து கொள்வார்கள். எங்களை மாதிரி ஆட்களிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?’’
செல்வமணிஅண்ணை இதுவரையில் உங்கள் முக்கால் பங்கு வேசம் தோலுரிக்கப் பட்டு விட்டது எனநினைக்கிறேன் புலிஎதிர்ப்பு துவேசத்துக்கு தமிழர்மீதான அக்கறையின் வாசல்லால் வந்தது என்ற கூற்று அம்மணமாக்கப் பட்டுவிட்டது.
இதுவெறும் புலித்துவேசபித்ததில் வந்த புலிஎதிர்ப்புக் காச்சல் இதுக்கு மருந்தே இல்லை.
தமிழ்நாட்டுத்தமிழர்களின் இரத்தம் எம் இன்னல் கண்டு பொங்கி எழும், எம்வீரம் கண்டு பூரிக்கும், விதிவிலக்கு வயிற்றுத்துன்பங்களை எப்படியாவது கரையேற்றக் காத்திருக்கும் கொள்கைவாதிகள். ஈழத்தில் டக்ளஸ், சங்கரியார், சித்தார்த்தன் போன்றோருக்கு தமிழ்நாட்டிலும் நிட்சயமாக. உங்களுக்கு உரோமம் எழும்பிஆட வயிற்றுபகுதியில் மட்டும்தான் அந்த உணர்விருக்கும் என நினைக்கிறேன். (எம் உணர்வுகளை கொச்சைப் படுத்தினால் உங்கள் கோவணமே உரியும் வரைக்கும் எங்களாலும் பரிகாசம் பண்ண முடியும் ஐயா)

'ஒருநாட்டின் இறமைக்குள் தன்தேசியநலன்களுக்கு வழிதேடும் போக்கு சர்வதேச தரம்வாய்ந்ததுதானா?'

’’அய்யா தேவன்..என்னயா ஆச்சு உங்களுக்கு?
ஒரு நாட்டின் இறமைக்குள் வான்படையையே நடத்திக் கொண்டு...நிழல் அரசாங்கம் நடத்திக் கொண்டு இறையாண்மையை பற்றி பேசுகிறீர்.ஏனய்யா கொள்ளிக் கட்டையை எடுத்து காது சொறிகிறீர்கள்?’’
உங்கள்திருவாசகப்படி உலகத்தில் எல்லாப் போராட்டங்களையும் பரிகாசம் பண்ணுகிறது.
நான் சொல்வது சிங்களம், வேறு தமிழீழம் வேறு எம்மோடு சொறிந்து கொண்டிருக்கும் சிங்களத்துக்கு நாம் கொடுக்கும் தலைவலியை வேறுஎந்த நாட்டுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது அரச இறைமைக்குள் இந்தியநலன்களின் தலையீட்டையே சொல்லியிருக்கிறேன்.
ஐயா றோவின்பணத்துக்கு கொள்ளிக்கட்டையாய் மாறாதீர்கள் சொந்த இரத்ததுக்கே.

‘’இந்தியா மாதிரி பெரிய நாடுகள்... எல்லா எல்லைகளிலும் துப்பாக்கி சப்தம்.. என்ன செய்வது? ஒவ்வொரு நாடும் தன் தேசிய நலன்களுக்கு ஏற்றவாறு தான் நடந்து கொள்ளும் என்ற அரசியல் அரிச்சுவடி உங்களுக்கு தெரியாதா?

சின்ன நாடுகள், பலமான நாடுகளிடம் அரசியல் செய்யும் போதுகூட பல சிரமங்களை சந்திக்கவே வெண்டியிருக்கிறது.இந்தியாகூட அமெரிக்கா,சைனா மற்றும் ரஷ்யாவுடன் அரசியல் பண்ணும்போது பல சிரமங்களை படத்தான் வேண்டியிருக்கிறது.அமெரிக்கா இந்தியாவை அணுஆயுத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்து போட வைத்தது..எல்லாம் ஒரு வித arm- twisting தான்.

நாடுகளே இப்படி பட்ட அரசியல் நகர்வுகளை நகர்த்திக் கொண்டிருக்க ஆயுத குழுக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அந்தந்த குழுக்கள்தான் முடிவு செய்யவேண்டும். இல்லை நாங்கள் நட்டுகிட்டுதான் நிப்போம் என்றால் விளைவுகள் அதற்கு ஏற்றவாறுதான் இருக்கும்.

மோதல் போக்குகளைவிட, நட்பான அரசியல் சாணக்கியங்கள் பலனை தரும். புலிகள் இப்போது இந்தியாவுடன் கடைபிடிப்பது மோதல் போக்கை.ஒரு பயனையும் அளிக்காது.வேண்டுமானால் கொழுவி மாதிரி ஆட்களுக்கு கிண்டல் பண்ணுவதற்கு இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம்’’
இந்தியதேசியநலனின் கொள்கைப்போக்கே புலிமீது அவதூறு அளந்து கொண்டிருக்கிறது அதற்க்கு உங்களைப் போன்ற சிலர் கருவிகளாகி புலிஅலேயிக்கு மக்கள்கரிசனை என்ற பொய்நோய்க்காரணியை குற்றம் சாட்டுகிறீர்கள்.
ஐயா தமிழீழம் ஒன்றும் இந்திய ஐக்கியதுக்கு எதிரான நோய் இல்லவே இல்லை
இதைக்கண்டு பித்தம் கலங்குவது இந்திவெறி
இந்த இந்திவெறி அறவே இல்லாது ஒழிக்கப்படும் வரைக்கும் இந்தியாவில் இந்தியஐக்கியஉணர்வு முழைவிடும் என்றால் அது வெறும் கனவேதான்.
உங்கள் மடிக்குள் நோயை வைத்துக்கொண்டு எங்களை மருந்து சாப்பிடச்சொல்வது றொம்ப கேணைத்தனமாய் இல்லையா செல்வமணி அண்ணா?
உங்களைச் சுற்றி உங்கள் பகைக் குரோதங்களுக்கு நீங்களே நாற்று நட்டுக்கொண்டு வெடிச்சத்தமும் அவலமும் சுத்திச் சுத்தி படைஎடுக்குது என்றால் நாம் என்ன செய்யமுடியும்.
உங்கள் தேசியநலன் எங்கள் தேசியத்தின் கழுத்தை நெரித்தபோது எங்கள்தேசத்தின் உயிர்மூச்சை காப்பாற்ற வன்முறை ஒன்றே மருந்தாய் இருந்தது அப்போது விட்டுக்கொடுக்கும் போக்கென்றால் உயிரை விட்டுவிடுவதென்பதே அர்த்தமாகும்.
எனவே உங்கள் தேசியநலனின் அறுவடை ஒன்றிலேயே கருத்தாய் இருந்து அனாவசிய சொத்தைகளை மேலும் புலிகளின் மேல் சோடிக்காதீர்கள்

அற்புதன் said...

செல்வமணி அவர்களே,

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், இந்தியா தனது நலங்களை இந்தப் பிராந்தியத்தில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால்,ஈழத் தமிழர்களின் நலன்களை அங்கீகரிக்க வேண்டும்.ஒரு பக்கத்தால் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவியும் பொருள் உதவிகளையும் செய்து கொண்டு தமிழர்களின் போராட்டத்தை நசுக்கிக் கொண்டு , இந்தியாவைப் புலிகள் பகைக்கின்றனர் என்று கூறுவது எவ்வகையில் நியாயமாக இருக்கும்?இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் உங்களைப் போன்ற புலி எதிர்ப்பாளர்களுக்கும் இருக்கும் பிரச்சினை, தமிழீழத்தின் சுயாதிபத்தை அங்கீரிக்காமையே.அதனாலையே இந்தியா சிறிலங்காவிற்கு தமிழர்களை ஒடுக்க இராணுவ ரீதியாக ஆயுத உதவி செய்து வருகிறது.இந்தியா தனது பிராந்திய அரசியற் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்றால் ஈழத் தமிழர்களின் தேசிய இறமையை அங்கீகரித்துத் தான் ஆக வேண்டும்.இல்லாது விடின் வேறு நாடுகளின் செல்வாக்கு இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுவதை இந்தியாவால் தடுக்க முடியாது இருக்கும்.

இதை விடுத்து புலிகளையும் தமிழீழத் தமிழர்களையும் பகைத்துக் கொள்வதன் மூலம், தனது சுய பூகோள நலங்களை இந்தியா இழக்க நேரிடும்.தூர நோக்கற்ற கொள்கைகளைத் தொடர்ந்தும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பின் பற்றுவதன் வெளிப்பாடுகளே இவை.
என்றோ ஒரு நாள் நாங்கள் தவறு செய்து விட்டோம் என்றும் கூறுவார்கள் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள்.ஜே.ஆரின் சாணக்கியத்திற்கு முன்னர் பலியாகியதைப் போலவே.

Anonymous said...

தேவன் வந்துவிடுகிறேன்...

கொழுவி...விவாதத்தை ஆரம்பித்துவிட்டு ஸ்ரேயாவின் தொப்புளில் ஆராய்ச்சி செய்யப் போய்விட்டீர்..நல்ல காமெடியான ஆளய்யா நீர்.

Anonymous said...

‘’மற்றபடி மீனவர் அல்லது வேறு சம்பவங்கள் சம்பந்தமாக அறிக்கை வெளியிடுவது போன்றவையெல்லாம் வெளிப்படையான செயல்கள்.அதை புலிகள் என்றுமே கவனமாகவே செய்வார்கள்.உதாரணம்: துன்பியல் சம்பவம் தொடர்பான பாலசிங்கம் அறிக்கை.நான் சொல்லும் மோதல் கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் நடை பெறுவது.அது பொதுவாக வெளியே தெரியாது.’’
--------------------------------------------------------------------
இப்பதானே ஒதுக்கொண்டநீங்கள் புலிஎதிர்ப்பு என்பது இந்தியத்தேசியதின் ஒரு தேவைநிகழ்சி
அதற்க்காக உலக அரசியல் உதாரணங்கள் காட்டி ‘’இத்தகைய மோசடித்தனங்கள் எல்லாம் வெறும் மலிவானவைதான் உலக அளவில்’’
மீனவர்கடத்தல்கள் எல்லாம் புலிஎதிர்ப்பு நிகழ்சிநிரலுக்குள் வருபவைதான் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லையா செல்வமணி அண்ணா?
இல்லை ஒத்துக்கொள்வதானது தமிழ்நாட்டு இந்திய உணர்வுக்கு பாதகமாகிவிடும் என்ற பயமா?
சும்மாகிடந்த கொள்ளியை எடுத்து தலையை சொறிவதுதான் புலிகளின் போக்கு என்றால் யதார்த்த அறிவியலுக்கு நகைப்பானது.
உலக அரசுகளை எல்லாம் எதிரணியில் நிற்கவைக்கும் பூகோள சூழ்நிலைப் பாதிப்பு கொண்ட எமது புலிகளுக்கு 30 வருடங்களுக்கு மேல் அத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்து நிற்கின்ற திறமைக்கு இப்படி ஒரு கேணைத்தனமான அவதூறு தகுதி ஆகுமா?

“நாடுகளே இப்படி பட்ட அரசியல் நகர்வுகளை நகர்த்திக் கொண்டிருக்க ஆயுத குழுக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அந்தந்த குழுக்கள்தான் முடிவு செய்யவேண்டும். இல்லை நாங்கள் நட்டுகிட்டுதான் நிப்போம் என்றால் விளைவுகள் அதற்கு ஏற்றவாறுதான் இருக்கும்.”

இப்படி எத்தனை அடிவருடித்தனங்கள் அந்தப் பாதையில் நட்டுக்கிட்டுதான் இருந்தாலும், தமிழ்நாட்டு உறவுகளிடம் இருந்து வரும் ஆதரவு புட்டுக்கிட்டுத்தான் ஐயா இருக்கும் செல்வமணி அண்ணை!!!

Anonymous said...

ஐயா செல்வ மணி

A.C அறைக்குள்ள இருந்துகிட்டு ஒரு கற்பனை யில எழுதறது வேற, நிஜமா அதை அனுபவித்து எழுதறது வேற.

I've couple Srilankan Tamil friends, They lost atleast everyone in their family becuase of Srilankan Army. Just hearing their story, it makes me really sad.

If you want to see what's happening there, why don't you go to srilanka live with that people for a month. Then you write who is important to Tamil people. I accept what you say.

கொழுவி said...

என்னய்யா நடக்குது இங்கை..
நீங்க யாரும் இன்னும் கிளம்பலையா இந்த இடத்த விட்டு..
சரி சரி போயிட்டு அடுத்த பதிவுக்கு வாங்க..

Anonymous said...

நன்றி கொழுவி,

I'm going to sleep now. If Selvamani returns anything here please let me know. I'll be back tomorrow.

Anonymous said...

'செல்வமணி அவர்களே,

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்'

அற்புதன்..இந்த மாதிரி எழுதுவது, சொல்வது எதிராளியை மனோரீதியாக செயலிழக்க முயற்சிப்பது..இதை பற்றி dialectics-ல் நான் படித்திருக்கிறேன்.
எனவே இந்த யுக்தி வேண்டாமே.. கருத்தை நேரிடையாகவே சொல்லலாம்.

'இந்தியா தனது பிராந்திய அரசியற் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்றால் ஈழத் தமிழர்களின் தேசிய இறமையை அங்கீகரித்துத் தான் ஆக வேண்டும்.இல்லாது விடின் வேறு நாடுகளின் செல்வாக்கு இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுவதை இந்தியாவால் தடுக்க முடியாது இருக்கும்.'

நீங்கள் சொல்வதுஒரு விதத்தில் சரியானதுதான். ஆனால் இந்திய தீபகற்பம் மற்றும் ஈழப்பகுதியின் பூகோள அமைப்பு,தமிழ்நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் இது சாத்தியமில்லை என்பதே என் கருத்து.இந்திய அரசின் பார்வையில், ஆயுத குழுக்களும் தங்களுடைய credibility-ஐ இழந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

'இதை விடுத்து புலிகளையும் தமிழீழத் தமிழர்களையும் பகைத்துக் கொள்வதன் மூலம், தனது சுய பூகோள நலங்களை இந்தியா இழக்க நேரிடும்.என்றோ ஒரு நாள் நாங்கள் தவறு செய்து விட்டோம் என்றும் கூறுவார்கள் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள்.'

இதெல்லாம் ஒரு கணிப்பு அல்லது தங்களின் கருத்து என்ற அளவில்தான் ஏற்றுக் கொள்ள முடியும்.நாம் நம் கருத்தை பகிர்ந்துகொள்கிறோம் அவ்வளவுதான்.அனால் காலம்தான் எது சரி எது தப்பு என்று முடிவு செய்யப் போகிறது. பார்க்கத்தானே போகிறோம்.

Mike அண்ணா...ஏந்திருங்க..மணி வந்திருக்கேன்..போய் உச்சா இருந்திட்டு வந்து படுங்க...

Anonymous said...

’’ஹலோ..ஹலோ..ஒரு நிமிசம்..இந்த மாதிரி டப்பாவையெல்லாம் 'குப்பி கடிக்க' விரும்பும் எங்கள் தமிழ்நாட்டு நண்பர்களிடம் சொல்லுங்கள்.. ஒவ்வொரு ரோமத்தையும் எழுப்பிவிட்டு சிலிர்த்து கொள்வார்கள். எங்களை மாதிரி ஆட்களிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?’’


சொந்தசகோதரர் சாவுத்துன்பம் கூட தட்டி எழுப்ப முடியாத மனங்களையுமா தமிழ் உணர்வால் திறப்பிக்க முடியும்? இவர்களை வெறும் சில்லறைச் சத்தம் கேட்ட வைத்துப் பாருங்கள் மணிஅண்ணா இவர்கள் ரோமங்கள் கரகம், கதகளி எல்லாமே ஆடும்.

’இந்தியா மாதிரி பெரிய நாடுகள்... எல்லா எல்லைகளிலும் துப்பாக்கி சப்தம்.. என்ன செய்வது? ஒவ்வொரு நாடும் தன் தேசிய நலன்களுக்கு ஏற்றவாறு தான் நடந்து கொள்ளும் என்ற அரசியல் அரிச்சுவடி உங்களுக்கு தெரியாதா?

சின்ன நாடுகள், பலமான நாடுகளிடம் அரசியல் செய்யும் போதுகூட பல சிரமங்களை சந்திக்கவே வெண்டியிருக்கிறது

ஆகமொத்தத்தில் என்ன கூற வருகிறீர்கள் வல்லரசின் அதிகாரம் அறாயகப் போக்கில் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை எனவே கடந்தகால இந்திய அறாயகப் போக்கை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் புலிகளுக்கு எதிராக மேற்க்கொள்ளப் படும் நடவடிக்கைகளில் மட்டும் அந்த மோசடித்தனம் கொஞ்சமும் செலவுசெய்யப் பட்டாது என்று வாதாட வருகிறீர்களாக்கும் காரணம் ஏற்றுக் கொள்கின்றமையால் வரும் விளைவு பாதகமானது இந்திய ஐக்கிய உணர்வுக்கு
இந்தியத்துக்கு அன்னியச் செல்வாக்குவாணியை ஈட்டுவிப்பதற்கு இந்திய உயிர்களின் செலவினால் என்பதானது, இந்தியா என்றால் மத்திக்கு இந்திக்கு என்றே பொருள் அது வெளிச்சம் ஆகிவிடும் இந்தக் காரியத்தால் என்பதனாலா?
றோவின்பணம் தமிழ்நாட்டு தமிழ் உணர்வுக்குகூட காரியம்தான் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணங்கள் அல்லவா உங்களைப் போன்றோர் பணிகள்.
றோவின் சம்பளம் எங்கள் மீது சேறுபூச சேறானது உங்கள் ஜென்மம் செய்த புண்ணியமா?

Anonymous said...

முதலில் ஈழப்பணத்தின் கூலி என்றீர்கள்..இப்போது 'றோ' பணமா? எப்படியும் என்னை பணக்காரனாக ஆக்கிவிடுவது என்ற தீர்மானத்தில் இருக்கிறீர்கள்.. நல்லது அய்யா..நீர் ஒருவராவது என் மீது அக்கறையாக இருக்கின்றீர்ரே..

ஆனால் றோ, வலையில் எழுதுவதற்கெல்லாம் காசு கொடுத்தால் இந்தியாவின் கஜானா காலி ஆகிவிடும். புலிகளை விமர்சனம் செய்தால் உடனே 'றோ'வின் பணம் அது இது என்று... ஏதோ இலங்கை சம்பந்தமா நாலு விசயம் படித்தோம்.
அது சம்பந்தமா எம் கருத்தை சொல்லுகிறோம்.தவறான கருத்து என்று தெரிந்தால் மாற்றிக் கொள்ளப் போகிறோம்.சரி என்று நினைப்பதை உச்சி மீது நின்று உரக்கச் சொல்வோம்.அவ்வளவுதான்..very simple.

'ஆகமொத்தத்தில் என்ன கூற வருகிறீர்கள் வல்லரசின் அதிகாரம் அறாயகப் போக்கில் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை எனவே கடந்தகால இந்திய அறாயகப் போக்கை ஏற்றுக் கொள்கிறீர்கள்.'

யார் அராஜகம் பண்ணினாலும் எற்றுக் கொள்ளமுடியாது நண்பரே..இந்தியா உட்பட...ஆனால் நான் சொல்ல வந்தது,யதார்த்த சூழ்நிலை இப்படி உள்ளது..சற்று அரசியல் நடவடிக்கைகளை மாற்றினால் நிலவரம் விரைவில் மாறுமே என்பதுதான்.இது கூட என் கருத்துதான்.ஒரு பார்வையாளனாகத்தான் இதை சொல்லுகிறேன்.உடனே இது இந்திய அரசாங்கத்தின் கருத்து என்று எடுத்துக் கொண்டு இந்தியாவை நார் நாராக கிழிக்க கிளம்பிவிட வேண்டாம். நாங்களே வேறு விசயங்களில் இந்தியாவை கிழித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு கருத்து வெளியிடும் உரிமையை இந்த ஜனநாயகம் ஒரளவுக்கு கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

'சொந்தசகோதரர் சாவுத்துன்பம் கூட தட்டி எழுப்ப முடியாத மனங்களையுமா தமிழ் உணர்வால் திறப்பிக்க முடியும்?'

சொந்த சகோதரர் என்று சொல்லுகிறீர்களே..
அமிர்தலிங்கம்,சபா,பத்மனாபா போன்ற இவர்களையும் சேர்த்துதானே?

கொழுவி said...

உங்களுக்கு ஒருக்கா சொன்னா கேட்கமாட்டியளோ.. ஆறுதலா ஒரு பிரேக் எடுத்திட்டு அடுத்த பதிவுக்கு வாங்கோ பாப்பம்..

Anonymous said...

‘’த சகோதரர் என்று சொல்லுகிறீர்களே..
அமிர்தலிங்கம்,சபா,பத்மனாபா போன்ற இவர்களையும் சேர்த்துதானே?’’

மணிஅண்ணா பத்மநாபா கொலை விவகாரம் றோவின் திருவிளயாடல்களில் ஒன்று, உமாமகேஸ்வரனுக்கு நிகழ்ந்த மாதிரியான ஒன்றுதான். தவிர மக்கள் அவலங்களில் பணம் பண்ணும் கருங்காலிகளுக்கு போர்க்காலம் இப்படி கடுமையான தண்டனை கொடுப்பது உலகளவிலேயே சகயம்தான். இதுவரைதன் பாதையில் இப்போராட்டம் கொண்ட கொள்கையில் குண்டுமணி அளவில் கூடத்தேயாமல் இருப்பதே அந்த சேதாரங்கள் எல்லாம் நியாயமானவைதான் என்பதை நிரூபிக்கிறது.
இந்தியஜனனாயகம், இந்தியபேச்சு சுதந்திரம்
ஜனனாயகம் என்ற ஆற்றல் எத்துணை நன்மை விளைவிக்கமுடியுமோ அத்தனையும் மேல் நாடுகளில் பார்த்தோம் அது எத்துணை கேடுவிளைவிக்க முடியுமோ அத்தனையும் பார்க்கிறோம் இந்தியாவில். ஒட்டுமொத்தத்தில் ஜனனாயகம் பெற்றெடுத்த நோய் இந்திய அரசியல், இதுவே ஜனனாயகத்தின் பெருமைக்கு கிடைத்த மாபெரும் அவமானம். உங்களோடு ஒட்டிக்கொண்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளை எல்லாம் பார்க வேண்டாம் எங்களுக்கும் பேர் ஜனனாயகம் என்ற அளவில் பேர் வாங்கப் பார்கிறீர்களா?
பேச்சுசுதந்திரமா? எதிர்கட்சி தலைவரின் பேச்சு சுதந்தியமே வீதிக்கு வந்ததை உலகமே பார்த்து ரசித்தது எம்போன்றவரின் பேச்சு சுதந்திரம் எங்கு வரவேண்டும்?
கலைஞ்ஞர், ஜெயலலிதா, அத்வானி எல்லோரும் ஒரேமேடையில் பேசட்டும் அவர்களை பாகிஸ்தான்-செல்வாக்கு மேடை ஏற்றித்தரவில்லை இவர்களே மக்கள் பிரதிநிதி என்று சிங்களச்-செல்வாக்கு மேடை ஏற்றிய டக்ளஸ், சங்கரியார் போல்.
எனவே ஊடகசுதந்திரம், ஊடகசுதந்திரம் என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் புறம்பாடும் பாட்டை நிறுத்துங்கள்.

‘’முதலில் ஈழப்பணத்தின் கூலி என்றீர்கள்..இப்போது 'றோ' பணமா? எப்படியும் என்னை பணக்காரனாக ஆக்கிவிடுவது என்ற தீர்மானத்தில் இருக்கிறீர்கள்.. நல்லது அய்யா..நீர் ஒருவராவது என் மீது அக்கறையாக இருக்கின்றீர்ரே..’’

புலிஎதிர்ப்பின் தாய்வேர் சிங்களமாகட்டும், றோவாகட்டும், ஒட்டுக் கொளுக்களாகட்டும் அவார்கள் குறிக்கோள் புலியை தோற்கடிக்கச் செய்வது மட்டும்தான் எனவே இவர்களின் ஆதிமூலத்தை கண்டு பிடிப்பது கடினம்தான் தேவையும் இல்லாததே எனவே உங்கள் சேவை சிறப்பானதாக இருந்தால் மூன்று வங்கிக் கணக்குகள் கூட உங்களுக்கு இருக்கமுடியும் வருமானம் பொழியச் செய்வதற்கு.

Anonymous said...

கொழுவி... sorry... கடைசியா இந்த வழ வழ பார்ட்டியிடம் ஒரு பதில்.

தேவன்... நீங்கள் சென்னை வரும்போது உங்கள் e-mail id-ஐ தெரிவியுங்கள். என் விலாசமும், தொலைபேசி எண்ணையும் தெரிவிக்கிறேன். நேரிலேயே வந்து என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள். அருமையான சிக்கன் கொழம்பும், இட்லியும் சாப்பிட ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் இருக்கிறது.வாங்க அழைத்து போகிறேன்.உடனே 'றோ' லஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறது என்று நினைத்து கற்பனை குதிரையை தட்டிவிட வேண்டாம்.இது நட்பு
ரீதியில் அழைப்பது.

தமிழ்நாட்டில் வந்து 'றோ' என்று சொல்லிவிடாதீர்கள்.அவனுக்கு தெரிந்ததெல்லாம் சினிமா அரங்கில் அமரும்'றோ'(Row)தான். ஈழ நண்பர்களை இந்த 'றோ' என்ற வார்த்தை பிடித்து ஆட்டுகிறது.

நன்றி தேவன்...வேறொறு விவாதத்தில் சந்திப்போம். மேடை அமைத்து கொடுத்த கொழுவிக்கும் நன்றி.

Anonymous said...

OK மணிஅண்ணை நன்றி உங்கள் பதில் பதிவுகளுக்கு மீண்டும் சந்திப்போம் இன்னொரு பதிவில் கொழுவிக்கும் நன்றிகள்.