வலைப் பதிவுகளில ஆங்காங்கே மூத்த பதிவர் மூத்த பதிவர் அப்பிடின்னு சொல்லுறாங்களே.. இன்னிக்கு கூட எங்கேயோ பாத்தேனே.. எனக்கொரு சந்தேகமுங்க.. அந்த மூத்த பதிவர் என்றால் என்ன மீனிங்கு..?
அதாவது ரொம்ப நாளா அதாவது வலைப்பதிவுகள் ஆரம்பமான காலம் தொடக்கம் வலைப்பதிவுகள் எழுதுவோரைத் தான் மூத்த பதிவர் என்று சொல்லுறாங்களா.. நான் கூட ஆரம்பத்தில இருந்தே எழுதுறேனே.. நானும் ஒரு மூத்த பதிவரா... ?
அல்லது வயசில ரொம்பப் பெரியவங்களைத் தான் மூத்த பதிவர் என்று சொல்லுறாங்களா.. ? அப்பிடின்னா அந்த வயசுக் கணக்கு என்ன.. ? எத்தனை வயசுக்கு மேல போனால் மூத்த பதிவர் என சொல்லுவாங்க.. ?
தப்பா நினைச்சுக்காதீங்க.. நானெல்லாம் ஒரு மூத்த பதிவரா என அறிஞ்து கொள்கிற ஆர்வம் தான் இது..
இவ்வண்ணம்
லிட்டில் பாய்
கொழுவி
13 comments:
இங்க இன்னிக்கு ஆட்டையப் போடலாமா
இந்தச் சந்தேகம் உங்களுக்கு வந்ததால் "நீங்கள் மூத்த பதிவரே"
என் பின்னூட்டத்தை வெளிவிடவும்.
//லிட்டில் பாய்//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா?
அப்படின்னா நீங்க மூத்த பதிவர்தான்!
அப்பப்போ "சமீபத்தில்" என்ற வார்த்தையையும் உபயோகிக்கவும். அப்பதான் நீங்க மூத்த பதிவர்னு ஒத்துக்குவோம்!
yes you are a senior blogger
நிணைச்சா கும்பலா சேர்ந்துப்பாங்க...
யாராவது சின்னபையன் என் பதிவை படிக்க வாங்கன்னு எத்தனை வாட்டி கூப்பிட்டாலும் போகமாட்டாங்க.. எதுனா குத்துற மாதிரி எழுதிபுட்டா ஒழிச்சுக்கட்ட சனிக்கிழமை ராத்திரி மீட்டிங்க் போட்ருவாங்க... நீங்க எப்புடி?
எங்கே எனது பின்னூட்டம்?
ரணகளமாகிவிடும் வரலைனா!
வயசுக் கணக்குப்படிப் பார்த்தா.............
23 வயசுக்கு மேலே இருந்தா 'மூத்த' பதிவர்னு சொல்லலாமாம்:-)
வாய்யா இளைய தளபதி
எனக்கும் இதே சந்தேகம்.பதில் கிடைத்தால் சொல்லி அனுப்புங்கள்.
http://dharumi.blogspot.com/2005/07/29_11.html
இந்த பதிவு எழுதப்பட்ட காலத்தில், மூத்த பதிவர் எனறு ஒருவரைக் கட்டம் கட்ட முயற்சித்தார்கள்..
அது 2008லும் நடந்தது..
ஆக, நான் கேட்டக் கேள்வியும், நீங்க கேட்டது கிட்ட தட்ட ஒன்னு தான்..
ஆனா, என் கேள்வியின் அர்த்தம் மூத்தப் பதிவர் யாரோடு நிக்கவில்லை.. :P
மூத்தபதிவராகிய நான் ஒருமுறை 2007ல் எழுதிய பதிவு இது
Post a Comment