Wednesday, June 20, 2007

பிரபாகரனின் மகன் குறித்து ஆராயும் இந்திய உளவுத்துறை

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம்
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

தமிழீழ தேசியத் தலைவரின் புதல்வர் கொண்டுள்ள போரியல் திறன்கள் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என்பதால் அவர் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகளிடம் 7 விமானங்களும் பயிற்றப்பட்ட 9 விமானிகளும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானங்கள் யுத்த களங்களில் தாக்குதல் நடத்தும் திறன் மிக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

Anonymous said...

Guys,

Why are yiu thinking too much of yourself..Do you think 10 aeroplanes & 10 pilots , Indian airforce is fearing you..?. With all these 16 years after Rajiv's death have you acheived eelam..?..but you just last the support of tamil people in TamilNadu . Don't think too much about your LTTE just because Indian army had faced some casualaties in 1989. That time that happened because you had the support of Tamil People in TamilNadu.Indian army did not come to fight gainst you.But now the situation is completely different Nobody likes you in TamilNady except vaiko and Nedumaran.

-Stan

தேவன் said...

மருந்தடிக்கும் புலிவிமானங்களுக்கே இந்திய பாதுகாப்பு இப்படிப் பயந்தால், பாகிஸ்தான் விமானப்படை பேதி அல்லவா பருக்கப் போகிறது, இதை வெளிப்படையாக வேறு சொல்லி மானத்தை அல்லவா வாங்குகிறது.

கொண்டோடி said...

என்னடாப்பா கவிஷனும் கொழுவியும் ஒரே வார்ப்புருதான் வைச்சிருக்கிறியள் எண்டதுக்காக ஒராளின்ர தொழிலை இன்னொராள் செய்ய வெளிக்கிட்டிட்டியளோ?

Anonymous said...

Dear devan,

who told ypu Indian Army is frightening for your LTTE airforce..? Can you elobrate..? dont live in dreams...You know kargil War..? Dont live in frog under well...LTTE is not able to beat even a ant like srilankan army..they are going to beat India Is it..? Mudalla ungal srilankan army'a thokkadikka parunga..sir.....

---Stan

M.K.Stalin said...

தமிழீழத்திலையும் வாரிசு அரசியல்தானா? தம்பி சாள்ஸ் அன்ரனி உன் அப்பா என் அப்பவுக்குத் தம்பி நீ எனக்கு தம்பி.. நான் வருங்காலத் தமிழகம் நீ வருங்கால தமிழீழம்...வாழ்க தமிழ் வளர்க தமிழர்தம் உணர்வு...நீயும் நானும் இன்று தளபதிகள்...வெற்றி நம் பக்கம்

Anonymous said...

புலிகளின் விமானங்கள் இந்தியாவிற்கு ஆபத்தானவை என புலிகளோ ஈழத் தமிழரோ ஒரு போதும் கருதவில்லை.
ஆனால் இந்தியாவோ தனது பாதுகாப்பிற்கு அவை அச்சுறுத்தல் எனச் சொல்லி தனது மருவாதையை கெடுத்துக் கொள்கிறது. 10 குட்டி விமானங்களால் இந்தியாக்கு என்னைய்யா ஆபத்து..
போங்க போய் வேலையை பாருங்க..

தேவன் said...

At 3:41 AM, Anonymous said…

Dear devan,

who told ypu Indian Army is frightening for your LTTE airforce..? Can you elobrate..? dont live in dreams...You know kargil War..? Dont live in frog under well...LTTE is not able to beat even a ant like srilankan army..they are going to beat India Is it..? Mudalla ungal srilankan army'a thokkadikka parunga..sir.....

---Stanஅன்புடன் பெயரிலிக்கு!
நான் எங்கே சொன்னேன் அப்படி, இந்தியப் பாதுகாப்புத் துறை அல்லவா சொல்கிறது. தன்மானத்தை விற்றாவது சிங்களத்துக்கு புண்ணியம் செய்ய வேண்டும் என்ற அதன் துடிப்பு உங்களுக்குத் தெரிய வராதது தானே!