நான் எழுதவிருக்கும் விபரம் அவருக்குத் தெரியாததல்ல. இன்னும் சொல்லப்போனால் இதனை நான் அவருக்குத் தனியே எழுதியிருக்க முடியும். அதை அவரும் விரும்பக்கூடும். எனினும் இது அவருக்கான பதில் இல்லையென்பதாலும் அவரின் கருத்தொன்றிற்கான பதிலென்பதாலும் சிலர் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் நம்மிட்பலர் ஆகையால் தவறான கருத்துருவாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதாலும் வேண்டுமென்றே இத்தகைய கருத்துருவாக்கங்களை விதைக்க முயற்சிக்க சிலர் விரும்பின் அவற்றை எதிர்கொள்ள எம்மைப்போன்ற ஒருமித்த கருத்துள்ள சிலர் உள்ளோம் என்பதை உணர்த்தவுமே இதனை எழுதுகிறேன்
அறியப்பட்ட பத்திரிகையாளரான திரு மாலன் ஐயா அவர்கள் தனது பதிவொன்றிற்கான பின்னூட்டப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.
ஆளணி ஆயுத வள இழப்புக்களுடன் ஒப்பிடும் போது நில இழப்பென்பதை ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என பூசி மெழுகாமல் கிழக்கினை இழந்ததென்பது ஒரு தோல்வியே என்பதை ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் களநிலவரத்தின் வெற்றி தோல்வியென்பது களத்தின் சாதக பாதக சூழல்கள் வளம் ஆயுத விநியோகம் யுக்தி இவற்றில்த்தான் பெருமளவில் தங்கியிருக்கிறது என்பதை வெறும் கொழுவி சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மாலனொன்றும் தாழ்ந்து விடவில்லையென்பதை நாம் அறிவோம்.
அவரது கூற்றை இன்னும் விரிவாக அவரது கருதுகோளின் வழியான முடிவிலிருந்தே பார்க்கலாம். அதாவது ஒருமித்த மக்கள் ஆதரவு இன்மையால் யாழ்ப்பாணமும் தொப்பிக்கல என திட்டமிட்ட வகையில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட குடும்பிமலை பகுதியும் சிங்கள இராணுவத்திடம் விழுந்தது என்னும் அடிப்படையிலேயே இப்போது சில சம்பவங்களை பார்ப்போம்.
1995 யூலை 9 சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களை கைப்பற்றியது. அதாவது புலிகள் மக்கள் ஆதரவை இழந்ததனால் அந்நிலங்கள் இராணுவ வசம் ஆகின.
என்ன அதிசயம்.. அடுத்த 5வது நாள் மக்கள் ஒருமித்த ஆதரவை புலிகளுக்கு வழங்கினர். அதனால் புலிகள் இராணுவத்திடமிருந்து நிலங்களை மீட்டெடுத்தனர்.
அதன்பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு 1995 ஒக்டோபர் மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்தனர். அதனால் மொத்த யாழ்ப்பாணமும் இராணுவ வசமானது. முன்னரைப்போல் அல்லாமல் இம்முறை உடனடியாக புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்காமல் கொஞ்சம் யோசித்து 96 இன் நடுப்பகுதியில் மீண்டும் ஆதரவை வழங்க புலிகள் முல்லைத்தீவை மீளக் கைப்பற்றினர்.
மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்து வன்னியின் பெரும்பாலான பகுதிகளை இராணுவத்திடம் இழந்தனர். மீண்டும் மக்கள் புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்க இரண்டு வருடங்களாக இழந்த நிலங்களை 2 நாட்களில் மீளவும் கைப்பற்றினார்கள்.
இப்படியாக மக்கள் ஆதரவை வழங்குவதும் பின்னர் விலகுவதுமாக விளையாடிக்கொண்டே வந்துள்ளனர் மாலனின் கருத்துப்படி..
முடிந்து விடாத ஒரு சமரின் சில களமுனைத் தகவல்களை வைத்து மக்களின் ஆதரவை புலிகள் இழந்து விட்டார்கள் எனச்சொல்லி வெளியே அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை நிறுவ வேண்டிய தேவை மாலனுக்கு இல்லையென்பதை நாம் அறிவோம்.
இது தவிர இன்னொரு இடத்தில் புலிகளின் செயல்பாட்டை ஏற்காத தமிழர்கள் வரிசையில் கருணாவையும் மாலன் இணைத்திருந்தார். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை அறியாதவராக அவர் இருந்திருக்க மாட்டார் என் நம்புவோம். இந்திய இராணுவத்தின் விதிகளை ஒழுக்கங்களை கடைப்படிக்கத் தவறுகின்ற ஒருவரை இராணுவத்தில் இருந்து விலத்தி வைப்பதானது அவர் இந்திய இராணுவத்தின் செயலை ஏற்க மறுக்கிறார் என்பதாகாது என்பதாகத்தான் நாம் புரிந்துள்ளோம்.
இப்படியெல்லாம் எழுதுவது புலிகளை புனிதர்களாக்குவதற்காக இல்லை. கூடுதலாகச் சொல்லப்போனால் கறைபடியாத கரங்களும் அவர்களுக்கில்லை. ஆயினும் பலரும் கூப்பாடு போடுகின்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையிலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர் ஒருமித்த கருத்தில் புலிகளை ஆதரிக்கின்றனர். (51 ஐ தாண்டினால் முடிவென்று சொல்லி யாரோ ஒருவரால் மிகுதி 49 பேரின் விருப்பங்களையும் சிதைப்பது தானே ஜனநாயகம்.)
புலிகள் மீதான விமர்சனங்களை உள்வாங்கியும் நாமே புலிகளை விமர்சித்தும் புலிகளை ஆதரிக்கின்றோம்.
12 comments:
aananganna makkal oru mayir pulikalukku..ithu antha malanukku theriyallinganna
அண்ணே,
என்ன கனநாளாக் காணாமற் போயிட்டியள்?
(இந்த இடுகையை எழுதினதுகூட ஒரிஜினல் கொழுவியா எண்ட சந்தேகமிருக்கு).
யாருமே கைப்பற்றாக குடும்பி மலையை தாங்கள்தான் கைப்பற்றினோம் எண்டு ராஜபக்ஷ குடும்பம் சொல்லுது. ஆனால் அங்க இந்திய இராணுவம் முகாம் அமைத்திருந்தது எண்டு புலிகள் சொல்லினம் (இந்திய இராணுவ அதிகாரி, தாங்கள் அங்க முகாம் அமைச்சிருக்கேல எண்டு சொன்னது தனிக்கதை. தங்கட இராணுவத்தைக் குறைச்சுச் சொன்னாலும் கருத்தளவிலகூட சிறிலங்கா அரசாங்கம் தோற்கக்கூடாது எண்ட கரிசனை காரணமாக இருக்கலாம்). ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில், தொன்னூறுகளின் தொடக்கத்தில், இரு தடவைகள் குடும்பிமலையை தாங்கள் கைப்பற்றியிருந்தோம் என்பதற்கான ஆதாரங்களை ரணில் வெளியிட்டுள்ளார்.
ஆக, குடும்பிமலை அப்படியொன்றும் சிம்ம சொப்பனமான, பகுதியாக இருக்கவில்லை.
ஆனால் ஆனையிறவு???
தமிழர்படையால் என்றுமே கைப்பற்றப்படாத, யாராலும் கைப்பற்றப்பட முடியாதென உலக வல்லுநர்கள் அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த, ஆனையிறவுப் படைத்தளத்தையும் அதனைச் சூழ இருந்த படைத்தளங்களையும் (சுமார் இருபதாயிரம் இராணுவத்தினரைக் கொண்டு காவல்காக்கப்பட்ட பகுதியது) புலிகள் கைப்பற்றியதை மாலன் எப்படி விளக்குவார்?
மாலனின் கருத்துப்படி பார்த்தால், ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி, உலகத்தமிழர்களே (தமிழ்நாடு உட்பட) புலிகளோடு நின்று தோற்கடித்த படைத்தளமாகத்தான் ஆனையிறவு இருக்க முடியும்.
இன்னொரு வகையிலும் இந்தக் கருத்தைப் பார்க்கலாம். அதாவது, குடும்பிமலை மீதான சிறிலங்கா அரசின் வெற்றியானது, சிங்களவர்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவளித்துப் பெறப்பட்ட வெற்றியாகக் கொள்ளலாம் (மாலனின் கருத்துப்படி). ஆகவே தமிழினப் படுகொலைக்கும், ஆக்கரமிப்புக்கும் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொண்டார் எனக் கருதலாம்.
பிறகெப்படி இணைந்த சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தனிநாடு சாத்தியப்படாது என்பது போன்ற வண்டில்களை விட்டுக்கொண்டிருக்க முடிகிறது? (சிங்கள மக்களோடு சேர்ந்து 'புதிய ஜனநாயகப் புரட்சியை'ச் செய்யும் தோழர்களுக்கும் மாலனுக்கும் தொடர்பில்லையென்பதால் இங்கே அந்தப்பிரச்சினையை எழுப்ப முடியாது.)
******
பாரும் ஐசே!
ஒரு வசனத்தை வைத்து எத்தனை விதமாக விளையாடக் கூடியதாக இருக்கிறது?
கொண்டோடி!
நீர் பெரிய கில்லாடிதானப்பா. :)
சர்வஜன வாக்கெடுப்பு எடுப்போமா?
ஆதரிப்போருக்கு வேட்டி சேலை இனாம் ;-))
//வேட்டி சேலை இனாம்//
இந்த இழவு பிடிச்ச வேட்டி சேலை கலாசாரம் தான் ஜனநாயகம் என்றால் நாம் மண்டையில் போடும் கலாசார பின்புலம் உள்ளவாகளாகவே இருந்து விட்டு போகலாம்.
//இந்த இழவு பிடிச்ச வேட்டி சேலை கலாசாரம் தான் ஜனநாயகம் என்றால் நாம் மண்டையில் போடும் கலாசார பின்புலம் உள்ளவாகளாகவே இருந்து விட்டு போகலாம். //
இல்லையப்பா அதுதான் உண்மையான சனநாயகம் எண்டு மாலன் சொல்வார்
இப்படி பதில் தருகிறேன் என்கிற போர்வையில்... முகவரி தேடி அலைகிற சுயவிளம்பர நாயகர்களுக்கு, நீங்கள் விளம்பரம் தந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து உணருங்கள்.
என்ன நயினா . அவங்களை கோபிச்சுக்காதே
குப்பன்னு அடிச்சன் பக்கென்று ஏறிடும்
சம்ந்தா சம்பந்தா அல்லாமால் பேசிக்கிறன் என்று பார்க்கிறீயா
இப்படிதான் அவங்களும்
என்ன விட்டியாதம்
நான் குவாட்டர் பட்டை அடிச்சுக்குவேன் ,பீத்திக்குவேன்
ரெஸ்ட் கவூஸிலே ஒரு 16 குட்டியோட ஜாலி இருந்து கிட்டு
ஜானி வாக்கர் புளூ லேபல் இல்லை ..பாரின் சரக்காம் சொல்லிகிறாங்க
அடிச்சுக்கிட்டு பீத்திக்கு வாங்களாம்.. விஜபி ஜர்னசிஸ்ட்டுக்கள்
நானு என்னத்தை கண்டன்
இதுக்கு போய் கோயிச்சுக்குலாமா... பாவபட்டதுங்க விட்டுவிடு சார்
கொழுவி!
உங்கள் எழுத்தக்கள் உண்மையில் கலக்கல்
மாலன் இதைப் படித்தால் நாக்கைப் புடுங்கிக்கொள்ளப் போகிறார்.
மாலனின் பதிவைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.அறியப்பட்ட பத்திரிகைக்காரர் என்று சொல்லப்படுபவரின் அறியாமையைக் கண்டு சிரிப்புத் தான் வந்தது.அரசியலில் அடிப்படையான விடயங்களிலையே இவ்வளவு மட்டமான புரிதல்களைக் கொண்டிருப்பவர்களால் தான் தமிழ் நாட்டில் பத்திரிகைகள் நடாத்தப்படுவதனால் தான் என்னவோ அங்கு மக்களை இவ்வளவு எளிதாக ஏமாற்றக் கூடியதாக இருக்கிறது.மற்றப்படி மாலன் இன்னும் சில மாதங்களிற் குள்ளாகவே புலிகளும் தமிழ் ஈழ மக்களும் யார் என்பதை உணருவார்.அப்போது அவர் மீண்டும் தனது பதிவை வாசிக்கட்டும்.புன் நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
70 ம் ஆண்டிலிருந்து ஏன் அதுக்கு முதலிலேயிருந்து எல்லாருக்கும் தமிழிலைதான் சொல்லுறம்.விளங்கப்படுத்துறம்.ஆனால்
தமிழக பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் தமிழ் விளங்குவதில்லை.
ராய்ட்டருக்கு விளங்குற தமிழ் கூட இவைக்கு விளங்குதில்லை என்பதுதான் சோகம்.
நேரமிருந்தால் இந்த ஆய்வைப் பார்த்து கொஞ்சூண்டு இராணுவ அரசியல் அறிவையாவது மாலன் பெறட்டும்..
http://www.yarl.com/forum3/index.php?showtopic=26237
Post a Comment