Monday, July 23, 2007

என்னை ஏன் மறந்தாய்..? நிஜமான ஒரு வலி

இத்தனை நாளாய் விழி பூத்துக் காத்திருந்தும் பயனேதும் அற்ற நிலையில் என் ஏக்கத்தைச் சொல்லி விட வேறுவழியில்லாமல் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். உண்மையில் ஏன் என்ற கேள்விகளோடு மனது முழுக்க நிறையப் போராட்டம் இது நாள் வரை நடந்தது. இப்போதும் நடக்குது. அந்த வலியை இங்கே இறக்கி வைத்தால் விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இங்கே இதை சொல்கிறேன்.

மற்ற எல்லாப் பதிவர்களையும் மனிதர்களாக மதித்து விளம்பரப் பின்னூட்டம் இட்ட அரிய இனய தலமான தமிழ்.ஹப்லாக்.காம் காரர் ஏன் எனக்கு இதுவரை ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை. நானும் தினம் தினம் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. ஏன் இந்த எனக்கான ஓரவஞ்சனை..?

எல்லோரையும் தேடித்தேடி பின்னூட்டம் இடும் அரிய இனய தலக்காரர் கண்ணில் இதுவரை ஏன் நான் தென்படவில்லை? என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்..? உண்மையில் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.

16 comments:

-/பெயரிலி. said...

பின்கதவு திறந்த வீட்டுக்குள்ளைதான் நானோ ஹப்வள்லொக்கோ பூருவம். இப்பிடி பூந்து டிசே, சயந்தன் போல எத்தினை பேற்றை பின் கதவை மூடி தட்டினால் மட்டும் திறக்கும் தேவன் கோயிலாக்கியிருக்கிறமெண்டு தெரியுமோ?
:-)

ஆனா என்ரை திறந்த பின்கதவால ஹப்வள்லொக் வரக்காணம்... M 'n M மட்டும் வந்து புழுக்கை போட்டுட்டுப் போறார்

DJ said...

அண்ணே, பின்னூட்டப்பெட்டியைச் சந்தோசமாய் திறந்துவிட்டு இப்போது நான் மூடிவைத்திருப்பதற்கு உவர்தானனை முக்கிய காரணம்.

இப்பவும் உவர் தன்பரணிபாடும் கடிதங்களை அனுப்பிக்கொண்டுதானிருக்கிறார் (வடிகட்டி நல்லாய்தான் வேலைசெய்கிறது). புதுசாய் தினுசாய் ஒரு கஸ்டமர் உமக்காய் காத்திருக்கின்றார் என்றொரு மயிலை அவருக்கு அனுப்பிவிடுகின்றேன்... இப்படிக் காதலியைப் பிரிந்த காளையைப் போல நீர் புலம்புகையில் இந்த உதவிகூடச்செய்யாட்டி நாங்களெல்லாம் ஒரு மனுசரோ?

சினேகிதி said...

பிதாமகன்ல லைலா ஒரு முக்கியமான கேள்வி கேப்பா அவான்ர அப்பா..எனக்கு இப்ப அந்தக் கேள்வியை கொழுவித்தாத்தாட்ட கேக்கணும் போல இருக்கு!!!

பத்துப் பத்தா ஹப்்லொக் மெயிலை அழிச்சு அழிச்சு என் பிஞ்சு விரல்(:-)) நொந்து போய்க்கிடக்கு இந்தக் கிழட்டு வயசுல ஏன் ஹப்லொக் மெயில் வரேல்ல என்று அங்கலாய்ப்பு உங்களுக்கு grrrrrrrrr!

கானா பிரபா said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

-/பெயரிலி. said...

உங்கை ஆத்தில போட்டதுக்கு எனக்கு அங்கை குளத்திலை மிதக்குது பாத்தியளோ? ;-)

அதுசரி, கொழுவி, நீர் பெரிய கள்ளனப்பு. நான்தான் நீரெண்டதை எனக்குக்கூடச் சொல்லையில்லை, பாரும். உம்மோட நான் கண்ணைக் கட்டிக் கோவம்.

-/பெயரிலி. said...

/பத்துப் பத்தா ஹப்்லொக் மெயிலை அழிச்சு அழிச்சு என் பிஞ்சு விரல்(:-)) நொந்து போய்க்கிடக்கு/

பிஞ்ச விரலெண்டால் நோகத்தான் செய்யும். அப்பிடியிருக்கேக்கை, எவ்வளவுதான் அலுப்பங்களெண்டாலும், உதுக்கும்போய் ஹப்லொக்காரங்களுக்குத் தரும அடி அடிக்கிறதொண்டும் எனக்கெண்டால் நியாயமாப் படயில்லை. :-)

குழப்பி said...

நான் வேணும்னா காலையில் ஒரு பத்து சாயங்காலம் ஒரு பத்து பின்னூட்டம் போடட்டே?

கொழுவி said...

பெயரிலிதான் கொழுவியெண்டதை படிச்ச உடனை எனக்கு சந்தேசமாவும் கிடந்தது. அதே நேரம் கவலையாவும் கிடக்கு.. யாருக்கும் புரியாத மாதிரியா எழுதுறேன் நான்..? :))

எதுவோ பெயரிலி இணைய ரவுடியா இருக்கலாம். ஆனா நான் இணைய தாதா எண்டதை சிநேகிதியே சொல்லிட்டா..

Anonymous said...

அடடே.. கானா பிரபா தான் அந்த அரிய இனையத்துக்கு சொந்த காரரா.. எல்லோரும் வாங்கய்யா.. அவரை ரவுண்டு கட்டி...

சின்னக்குட்டி said...

உண்மையாய் சொல்றன் .. கொழுவியின்ரை ஆதங்கம் எனக்கும் இருந்தது தான்.

உந்த பின்னூட்டம் தரித்திரியம் என்று விளங்கினாலும். ..


இதுக்குள்ளை ஏதோ உளவியல் .இருக்கு போலை.. உதை பற்றி சிக்மன் பிராய்ட் என்ன சொன்னார் என்று ...சிநேகதியை கேட்டால் சொல்லுவா

கொண்டோடி said...

அதென்ன சின்னக்குட்டியர்,
நாலைஞ்சு தரம் பாத்திட்டன், சிக்மன்ட் பிராய்ட் எண்டு ஒராளின்ர பேரைச் சொல்லி அதுக்க சிநேகிதிய கொழுவி விடுறியள்?
ரெண்டு பேருக்கும் ஏதாவது கசமுசா இருக்கோ?
கொழுவி இதுபற்றி புலனாஞ்சு அறிக்கையொண்டு வெளியிட்டால் என்ன?

பெயரிலிதான் கொழுவி எண்டதை அறிஞ்ச உடன திகைச்சுப்போட்டன்.
அதை வெளியிட்டவர் எப்பிடி அந்த விசயத்தைக் கண்டுபிடிச்சிருப்பார் எண்டு எனக்கு விளங்கீட்டுது.
சயந்தனின்ர பதிவில 'கொழுவி பின்னூட்டம்' எண்டு பெயரிலி எழுதின பின்னூட்டத்தை நாலைஞ்சு பேர் நக்கலடிச்சதை வைச்சு அண்ணாத்தை குட்டை உடைச்சுப்போட்டார் போல.
இருந்தாலும், நக்கலடிச்ச எங்களுக்குத் தெரியாமல் போட்டுது உந்த விசயம்.

'கொண்டோடி பின்னூட்டம்' எண்டு ஒருவசனத்தை பெயரிலி எழுதினால் ஆச்சு... நானும் அவரும் ஒண்டு.
இணையப் பெருந்தலை பட்டம் கிடைச்சிருக்கிற நேரத்தில நாங்களும் கொஞ்சம்பங்கிட்டுக் கொள்ளலாம் தானே?

கொண்டோடி said...

உந்த 'அரிய இனய தல' விளம்பரங்களுக்குப்பின்னால தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் தான் செயற்படுது எண்டு எனக்கொரு சந்தேகம்.
பின்னூட்ட மட்டுறுத்தலை நாங்கள் கட்டாயப் படுத்தேல எண்டு அறிவிச்சு பெரிய ஜனநாயகவாதிகள் எண்ட பேரை எடுத்துக்கொண்டு, இன்னொரு வளத்தால எல்லாரையும் மட்டுறுத்தலைச் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குக் கொண்டு வந்திட்டினம் உந்த விளம்பரத்தால. இப்ப பாத்தியளெண்டா உந்த விளம்பரத்துக்கு மட்டும் பயந்துதான் ஏராளமான ஆக்கள் பின்னூட்ட மட்டுறுத்தலை நடைமுறைப்படுத்துகினம்.
இதிலயிருந்து என்ன விளங்குது???

உவர் பெயரிலியும் இவ்வளவுநாளும் மட்டுறுத்தல் செய்யாமல் தான் வைச்சிருந்தவர். ஒருக்காத்தன்னும் விளம்பரம் வந்ததோ? இல்லையே?
இதிலயிருந்து என்ன தெரியுது???

ஸ்ரீரங்கன் said...

கொழுவி அந்த நாசமாய்ப்போவரை ஏன் வருந்தி அழைக்கிறீர்?நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டுக்களை அவர்கள் அள்ளி இறைக்கின்றார்கள்.உமக்கும் அதோ,வந்துவிட்டது...

ஸ்ரீரங்கன்

வி.வாதன் said...

//உந்த 'அரிய இனய தல' விளம்பரங்களுக்குப்பின்னால தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் தான் செயற்படுது எண்டு எனக்கொரு சந்தேகம்.
பின்னூட்ட மட்டுறுத்தலை நாங்கள் கட்டாயப் படுத்தேல எண்டு அறிவிச்சு பெரிய ஜனநாயகவாதிகள் எண்ட பேரை எடுத்துக்கொண்டு, இன்னொரு வளத்தால எல்லாரையும் மட்டுறுத்தலைச் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குக் கொண்டு வந்திட்டினம் உந்த விளம்பரத்தால.//

இது விவாதத்திற்குரிய ஒரு விசயம் தான்.

ரவிசங்கர் said...

இங்க wordpress பிரச்சாரத்துக்கு வருந்துகிறேன் :) wordpressல் இது போன்ற வீணான பின்னூட்ட ipக்களை spam என்று குறித்து விட்டால் திரும்ப அவற்றைப் பார்க்க அவசியமில்லை. பின்னூட்ட மட்டுறுத்தலும் தேவைப்படாது. ஆனால், இதே ஆளால் பாதிக்கப்பட்டு என் blogger பதிவுகளில் இப்ப other, anonymous தெரிவுகளைத் தூக்கிட்டேன்

Anonymous said...

நல்லைக்கந்தனின் மெய்யடியார்களே, மடுமாதாவின் குழந்தைகளே, உங்களை இன்னமும் M 'n M வைரசு தேடிவந்து புழுக்கை போடவில்லையா? எம்மைப்போன்ற சில நல்லடியார்கள்மட்டுமேதான் ஆண்டவரின் அருட்பார்வை மாதாவின் தேவகடாட்சம் வாய்க்கப்பெற்றிருக்கிறோமா? :-)