முதலில் சிறு குழப்பம். பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் அன்ரனி
சிலவருடங்களின் முன்னர் தம்மை இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டமை
எமக்குத் தெரிந்த உண்மை. தனது உயர்தரப் பரீட்டைக்குத் தோற்றாமல் அவர்
இணைந்துகொண்டார்.
இற்றைக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களின் முன்பு சாள்ஸ்
வெளிநாட்டுக்குப் படிக்க வந்ததாக செய்திகள் வெளிவந்தன. கூடவே பிரபாகரனின் மீது
கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சாள்ஸ் விமானப்படை தொடர்பான ஏதோ
படிப்பதாகத் தகவல்கள் வந்தன. இதில் அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்
என்ற தகவல் குழப்பகரமானது.
சரி, அவற்றை விட்டுவிடுவோம்.
இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் விமானப்படை பற்றி அவ்வப்போது சிறிலங்காவும் இந்தியாவும்
புலம்பிக்கொண்டிருந்தன. புலிகள் தமது விமானப்படைத் தாக்குதலைச் செய்வதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்பிருந்தே இவை கடுமையாகப் புலம்பத் தொடங்கிவிட்டன.
அப்போதெல்லாம் புலிகளின் விமானப்படைக்குத் தலைமை தாங்கியவர் கெனடி என்ற நிலவன்
என்றே நாம் அறிகிறோம்; இத்தகவல் இயலுமானவரை வெளி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.
சாள்ஸ் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருப்பதாகச்
சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் சடுதியாக இன்னொரு கதை வந்தது.
சாள்ஸ்தான் புலிகளின் விமானப்படைத் தளபதியென்று அந்தக் கதை சொன்னது. சாள்ஸ்
படிப்பு முடிந்து நாடு திரும்பினாரா? (வெறும் இரண்டு வருடத்துக்குள் படிப்பு
முடித்தாரா என்பது இன்னொரு கேள்வி) நாடு திரும்பிய சாள்ஸை புலிகளே
விமானப்படைத்தளபதியாக மாற்றினார்களா அல்லது இந்த ஊடகங்கள்தாம் மாற்றினவா என்பதை
நாமறியோம்.
[புலிகளின் விமானபடைத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட
படங்கள், மாற்றம் நடக்கவில்லையென்பதைச் சொல்வதாகவே தெரிகிறது]
சரி... இனி நான் கதைக்கப் புறப்பட்ட வாரிசு அரசியலுக்கு வருவோம். புலிகளின் வாரி அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அது சொல்லும் வாரிசு அரசியலையும் தவிர்த்து விடுகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் அண்மையில் நடந்த படகு வெடிவிபத்தொன்றில் கடுமையாக விழுப்புண்ணடைந்தார். தற்போது அவர் தேறிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் களப்பணியாற்றிய மூத்த தளபதி, தானே நேரில் நின்று பரிசோதனையை நடத்துவதோ உயிராபத்தான பணிகளைச் செய்வதோகூட முக்கியமற்றவையாகக் கருதி விட்டுவிடுவோம்.
ஆனால் அந்த வெடிவிபத்தில் கேணல் சூசை மிகக்கடுமையாகக் காயமடைய, அவரது மகன் சாரங்கன் கொல்லப்பட்டுள்ளார். தான் மட்டுமன்றி தனது மகனையும் உயிராபத்தான அச்சோதனையில் ஈடுபடுத்திய தந்தையின் வாரிசு அரசியல் எப்படிப்பட்டது?
[இங்கு, சாரங்கன் போராளியா அல்லது சூசையின் மகன் என்ற முறையில் சோதனையில் கலந்துகொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே வன்னியில் போராளிக்கும் பொதுமக்களுக்குமான மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கும். அதுவும் தற்போது இன்னும் நெருக்கம்]
தனது மகனையும் உயிராபத்தான பணியில் ஈடுபடுத்திச் சாகக்கொடுக்கும் தளபதியின் வாரிசு அரசியல் பற்றியும் நாம் பேசவேண்டும்.
இது தவிர்த்து வேறும் பல சம்பவங்கள் போராட்டத்திலுண்டு.
விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞன் எனக் கூறப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு மூத்த போராளி. களத்தில் வீரச்சாவடைந்த தன் மகனுக்கு சீருடையுடன் நின்று கொள்ளிவைத்த போராளி அப்பன் தான் இந்தக் கவிஞன். (தொன்னூறுகளின் தொடக்கத்தில் புலிகளின் வித்துடல்களை புதைப்பதில்லை; எரிப்பதுதான் நடைமுறையிலிருந்தது)
தற்போதும் மிகத்தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு போராளி தமிழ்க்கவி. படைப்பாளியான இவரின் இளையமகன் களத்தில் வீரச்சாவு. தனது இன்னொரு மகனையும் தானாகவே முன்வந்து போராளியாக இணைத்தவர். இவரது மகள் வயிற்றுப்பேரனும் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்.
தற்போது விடுதலைப்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருப்பவர் பொன்.தியாகம். முதிய வயதிலும் முழுநேரப் போராளியாகச் செயற்படுபவர்.
கணேஸ், தினேஸ் என்று இவரது இரு மகன்கள் இயக்கத்தில் போராடி வீரச்சாவடைந்தனர். மூத்தவர் எண்பதுகளிலேயே வீரச்சாவு. மூன்றாவதாக மகளும் தேன்மொழி என்ற பெயரில் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே இருவர் வீரச்சாவென்பதல் இவர் களப்பணிகளில் இருந்து விலத்தி, அரசியல் வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனாலும் சண்டைக்குச் செல்லும் உத்வேகத்தோடு விடாமல் போராடினார்.
'எடேயப்பா உவளை சண்டை ரீமுக்கு மாத்திவிடுங்கோ' என்று தானே முயன்று மகளை யாழ்செல்லும் படையணியின் தாக்குதல் அணியில் இணைத்துக் களமனுப்பிய கிழவன்தான் இந்தப் பொன்.தியாகம். ரணகோச என்ற பெயரில் முன்னேறிய படையினருடன் ஏற்பட்ட மோதலில் பள்ளமடுப்பகுதியில் மேஜர் தேன்டிமொழி வீரச்சாவு.
பெத்த பிள்ளைகள் மூன்றும் வளர்த்த பிள்ளை ஒன்றுமென நான்கு பிள்ளைகளைக் களமனுப்பிப் பலிகொடுத்த தகப்பன் இன்றும் முழுநேரப்போராளியாக தனது எழுபதுகளில் செயற்பட்டு வருகிறார்.
கடற்புலிகள் அமைப்பில் தாயும் மகனும் சுடுகலனேந்தி சமர் செய்த வரலாறுண்டு. ஒரே கடற்சண்டையில் இருவரும் பங்குபற்றி அதில் தாய் வீரச்சாவடைந்த சம்பவம் நடந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீதிநாடகம் வன்னியில் ஓர் எழுச்சியை உண்டுபண்ணியது.
இவையும் புலிகளிடத்திலுள்ள வாரிசு அரசியல்தான். இவை பற்றியும் நாம் பேச வேண்டும்.
சாள்ஸ் விமானப்படைப் பொறுப்பை வகித்தாற்கூட அதுவொன்றும் சும்மா காலாட்டிக்கொண்டிருக்கும் வேலையன்று. ஆபத்தில்லாத சொகுசு வாழ்க்கையுமன்று. எதிரிகளால் அதிகளவுக்குக் குறிவைக்கப்படும் துறையும்கூட.
சாள்ஸ் ஏதோ வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார் என்றளவுக்கு விமர்சித்துக்கொண்டிருந்தவர்களே, இப்போது அவர் மீண்டும்வந்து விமானப்படைத் தளபதியாக இருக்கிறார் என்று சொல்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலகாலம் கழித்து, சாள்ஸ் நாடு திரும்பவில்லை, அவர் வேறு ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கதை வரும்.
அதுவரைக்கும் இப்போதிருக்கும் கதையைப் பற்றி அலசுவோம்; ஆராய்வோம்; விமர்சிப்போம்; விவாதிப்போம்.
எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.
8 comments:
இங்கை பிரச்சனை, நீர் சொல்லுறதில்லை. ஆனா உதைக் கேக்கவேண்டிய ஆக்களின்ரை வாழமைப்புக்குள்ளை உதை விளங்கிக்கொள்ளுற பக்குவமும் திறந்ததன்மையும் இருக்குதோ எண்டதுதான் பிரச்சனை. ராமின்ரை மகளின்ரை பேரை ஒரு தம்பி பேசப்பிடாது எண்ட பக்குவத்திலை கொண்டிசன் போடுறவையிற்றை போய் உதை எப்பிடி விளங்கவைப்பீர்?
மற்றப்பக்கத்தால, நீ ஏன் போராடாம ஓடிப்போயிருக்கிறா? சிறுவர்படையணி எண்டமாதிரி வருவினம்.
அந்நியன்கள் சங்கற்றை படத்திலை வந்தால் மட்டும் கையத்தட்டுறவைக்கு ஏலுமெண்டால் சொல்லி விளங்கப்படுத்திப் பாரும்.
The Times of India வில் வந்தால்தான் நான் உங்கள் கட்டுரையை நம்புவேன்.
லேபிள்:- Hindu,Ram,Lankaratna
யோவ் கொண்டோடி,
தி ஹிந்துவில் இந்த செய்தி வரலை . அதனால் இதெல்லாம் உண்மையா இருக்காது.. நன்னா சுத்தறீளே ரீலை
முதலாவதா வந்து பின்னூட்டமிட்ட பெயரில்லாதவரே,
நீங்கள் உந்தப்பிரச்சினையில் சரியான மும்முரமாத்தான் நிக்கிறியள் எண்டது விளங்குது.
உது எல்லாருக்கும் விளங்குமெண்டு நானும் நம்பேலதான். ஆனா இப்பிடியான இடுகைகளை எழுத எங்களுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைக்குது. ஒருவகையில உப்பிடியான சந்தர்ப்பங்களைத் தாறவைக்கு நன்றியைத்தான் சொல்ல வேணும்.
prabakaran wife's brother died in war. he is ltte member.
தீவுக்கும் மற்ற அனானிகளுக்கு நன்றி.
பாலா பின்னூட்டத்தை வெளியிடவில்லையென்று சொல்லிப் பின்னூட்டமிட்டவரே,
உங்கள் பின்னூட்டம் தவறுதலாக இங்கு வெளியிடப்பட்டுவிட்டது.
நேடியாக பாலாவின் பதிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை.
இராமர் அணை, சேது சமுத்திரம் தொடர்பாக பாலாவுக்கு எதிர்க்கருத்துக்களை எழுதும் வலைப்பதிவில் உங்கள் பின்னூட்டத்தை வெளியிடச் சொல்லிக் கேட்பதுதான் முறை. இங்கு வேண்டாம்.
எனவே, தவறுதலாக வெளியிடப்பட்ட உங்கள் பின்னூட்டம் அழிக்கப்படுகிறது.
//prabakaran wife's brother died in war. he is ltte member.//
அனானி,
பாலச்சந்திரனின் கதை இப்பதிவோடு தொடர்பற்றது.
Post a Comment