Friday, November 21, 2008

இந்தியக் கடற்படையின் பதிலடி

பல தேசத் துரோகிகள் இந்தியக் கடற்படையின் கையாகாலாத்தனம் என நையாண்டி செய்தும் சொரணையை சுரண்டிப் பார்க்கும் வகையிலும் பதிவுலகில் எழுதி வந்திருக்கிறார்கள். அந்த வாய்களுக்கு பெரிய இரும்பு பூட்டு போட்டுள்ளது இந்திய கடற்படை. சோமாலியா வரை சென்ற கடற்படையினர் சோமாலியா கடற்கொள்ளையரை பதம் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரிய பெரிய கப்பற் கொம்பனிகளின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறது இந்திய கடற்பேர்ப்படை.

இதற்கிடையே சில புல்லுருவிகள் சோமாலியாவில் அரசாங்கமே இல்லையென்ற துணிவில்த்தான் கடற்படை அந்தப் பக்கமாகச் செல்கிறது என்றும் சிறிலங்காவில் மகிந்த அரசு போன்ற சோமாலியா அரசொன்று அங்கிருந்தால் கடற்படை சோமாலியா பக்கம் தலைவைத்தும் படுக்காதெனவும் தலையில் அடித்து சத்தியம் செய்கின்றனர். அவர்களுக்கு மீனவர் வேசமிட்டு ராமேஸ்வரம் கடலுக்குள் அனுப்புவோம். அதனை விட சிறந்த தண்டனையை அவர்களுக்கு யாரும் கொடுக்க முடியாது.

6 comments:

Anonymous said...

:-)

Anonymous said...

சோமாலியா கடத்தல்காரர் தமிழக மீனவரை கடத்தி கொள்ளையில் ஈடுபடும் கடற்பகுதியில் மீன் பிடிக்க வைக்க உள்ளனராம்.

அவர்களை கண்ணுற்ற இந்திய படையினர் அட.. இது பாக்கு நீரிணை போல நமக்கெதுப்பு பொல்லாப்பு என்று திரும்பி விடும் என்பது சோமாலியா கடற்கொள்ளை காரரின் எதிர்பார்ப்பு.

ஆனால் சோமாலிய கடலில் மீன்பிடித்தாலும் அங்கும் சென்று கொடி நாட்டுவம் என்பது சிறிலங்கா கடற்கடையின் விருப்பு

Pot"tea" kadai said...

The vessel shot by Hindian Navy was Thai fishing trawler not the somalian pirates vessel and a fisherman was killed.

:(

Anonymous said...

Pirate mothership sunk by Indian navy was Thai trawler, say maritime experts

http://www.guardian.co.uk/world/2008/nov/26/piracy

Anonymous said...

Ship sinking: Thailand seeks 'clarifications' from India

http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/58FC0523A1C7104D6525750D00454F9B?OpenDocument

'Pirate ship' was civilian trawler'

http://www.google.com/hostednews/ukpress/article/ALeqM5i-A2M-X4pKSCzEojyl_yLWhM6Dqw

கொழுவி said...

பொட்டீகடை..
அடபாவமே அங்கையும் மீனவன்தானா..? :(