Saturday, December 06, 2008

இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழரின் குமுறல்
12 comments:

கானா பிரபா said...

தொகுப்புக்கு நன்றி, முழுமையாக பார்க்க வேணும்

கானா பிரபா said...

தொகுப்புக்கு நன்றி, முழுமையாக பார்க்க வேணும்

Voice on Wings said...

பகிர்வுக்கு நன்றி. வாழ ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை...... இவைகளைக் கூட தர இயலாத / விரும்பாத நிலையில்தான் இன்று நாம் இருக்கிறோம். நீளமான மனிதச் சங்கிலிகளால் என்ன பயன்?

ஜோதிபாரதி said...

கண்ணீரை வரவழைத்தது!
தோழர் அறிவுமதி எழுதிய கவிதை தான் ஞாபகத்துக்கு வந்தது!

"படகில் ஏறினோம்
படகுகளை விற்று
இங்கே வீடு கிடைப்பதற்குள்
அங்கே நாடு கிடைத்துவிடும்
இராமேசு வரத்தில்
எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள்
குதித்துக் கரையேறுகிறோம்."

Anonymous said...

என்னத்த சொல்றது :(
இதுக்கும் நன்றி என்று சொல்லிட்டு போகவேண்டியதுதான்.

Anonymous said...

நிலையிலேயே ஆகக் கீழ்த்தரமான இழிந்த நிலையான கையறுநிலையில் இருக்கிறோம். வேறென்ன சொல்ல.. யாரைக் குற்றம் சாட்ட? தமிழ் தமிழன் தமிழினம் என்றெல்லாம் பேசி வோட்டுக்கள் வாங்கி ஆட்சியும் அதிகாரமும் சுவைக்கும் ***பயல்களின் சொக்காயைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் இருக்கிறது.

ஆத்திரமாய் இருக்கிறது ஆனால் இலக்கில்லாத ஆத்திரம்.


-சன்முகசுந்தரம்

ஈழவன் said...

எம்மவரின் சோதனைகளையும் வேதனைகளையும் யாரிடம் சொல்லி அழுவது..........

நன்றி கொழுவி.

Anonymous said...

கடமை நேரம் காரணமாக அறிந்திருந்தும் தவறவிட்டு பின்வருந்திய ஒரு நிகழ்ச்சி உங்கள் வலைப்பதிவினூடாக பார்க்க கிடைத்தது நன்றி கொழுவி

பேச்சுக்கள், அறிக்கைகள், ஆர்ப்பாட்டம், வாக்குறுதிகள், சமாதானத்துக்கான யுத்தம், நிவாரணம், உதவிகள் என்றனைத்துக்கும் அப்பால் வலிசுமந்த சாதாரண மனிதர்கள் விடியலுக்கான எதிர்பார்ப்போடு.....

அன்புடன் ஜீவன்

Anonymous said...

அருமையான பதிவு..நெஞ்சு விம்மி அழுது கொண்டே பார்க்க நேர்ந்தது.. உயிருக்கு பயந்து இந்த மக்கள் தமிழகத்தை நோக்கி பயணிப்பது..இக்கரைத் தமிழர்கள் மீது கொண்ட நம்பிக்கையினால் தானே.. அப்படி வர மக்களுக்கு "இலங்கைத் தமிழர்னா வீடு கிடையாது"ன்னு சொல்ல எப்படித் தான் மனசு வருகிறதோ.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் யார் யாரையோ வாழ வைக்கும்.. தமிழன வாழ விடாதுன்னா.. அது அக்கிரமமா இல்ல?

ஆட்காட்டி said...

கொழுவிக் கொண்டோடினாய் சரியா?பல வருடங்களுக்குப் பின் கண்ணீர் கசிந்தது. நான் நினைத்தன் இனிமேல் நான் அழ மாட்டன் என்று....

HK Arun said...

தத்தமது சூழ்நிலையையும், பொருளாதார நிலைமையும் பொருத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அகதிகளாய் விரட்டப்பட்டுள்ளோம்.

நாமும் இங்கே அகதியாகவே தற்போதும் ஹொங்கொங்கில் வசிக்கின்றோம். எம்மை இங்கே அகதி என்று எவரும் ஏளனம் செய்யவதில்லை. எமக்கு தொழில் செய்வதற்கான அனுமதி மட்டுமே மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுவர்களுக்கான கல்வி வாய்ப்பு மற்றும் பிற சலுகைகள் இங்கே மனிதாபிமானமாக கிடைக்கப்பெறுக்கின்றன. குறிப்பாக மனிதரை மனிதராக மதிக்கும் தன்மை இந்த தேசங்களில் இருக்கிறது.

ஆனால் நாம் கூறிக்கொள்ளும் எமது தொப்புள் கொடி உறவுகள் எமது துயர் நிலையை அகதி எனும் வார்த்தையால் நோகடிப்பதும், புறக்கனிப்பதும் வேதனையாக இருக்கிறது.

அந்நிய தேசத்தவர்கள் காட்டும் மனிதாபிமானம் கூட அற்றவர்களா தமிழக உறவுகள்? (எல்லோரையும் குறிப்பிடவில்லை)

HK Arun said...

இந்தியாவில் "அகதி" என்று எம்மை ஏளனமாக பார்க்கும் அதே இந்தியர்கள் இங்கே அகதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக தாமும் "அகதி" என்று அகதி அந்தஸ்து கோருவது வேடிக்கையாக உள்ளது. இந்தியர்கள் கிட்டத்தட்ட 1000 பேர், தமிழ்நாட்டு தமிழர்கள் 200 பேருக்கும் அதிகம்.