Sunday, April 26, 2009

ப.சிதம்பரமும் கோத்தபாய ராஜபக்சவும்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் 48 மணிநேரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த் பேட்டியில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. இன்னும் 24 அல்லது 48 மணி நேரத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
என தெரிவித்தார்.

இதற்கிடையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்னும் நான்கு நாட்களுக்குள் எஞ்சிய பிரதேசங்களும் கைப்பற்றப்படும் எனவும் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர் உயிரோடோ பிணமாகவோ கைப்பற்றப்படுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சியுள்ள விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்தில் இரண்டு லட்சம் மக்கள் இன்னுமிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற திங்கட்கிழமை இராணுவம் இப்பிரதேசங்களுக்குள் நுழைய எடுத்த ராணுவ நடவடிக்கையின்போது 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

1 comment:

Suresh Kumar said...

காங்கிரஸின் எண்ணம் அது தான் தேசிய தலைவரை இன்னும் சில நாட்களில் அழித்து விடலாம் பின்னர் . போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி நாங்கள் தான் போர் நிறுத்தம் செய்தோம் என வாக்கு கேட்கலாம் என நினைக்கிறது .

http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_26.html