Monday, June 06, 2005

எழுத்துப் பொறுக்கி குருவிகள்

தீராநதி, உயிர்மை, காலச்சுவடு, கணையாழி இதழ்களில் வருகின்ற கவிதைகளை படித்து படித்து போர் அடித்து விட்டது. வித்தியாசமான புதிய முயற்சிகளை உள்ளடக்கிய கவிதைகள் தேடி கொழுவிகள் அலைந்தனர்.

அகப்பட்டது யாழ் இணையத்திலிருந்து சில பல நல்ல இதுநாள் வரை எங்கேனும் வாசித்தறியாத நல்ல கவிதைகள்.

மாந்தோப்பு என்ற இடத்திலிருக்கின்ற குருவிகள் என்னும் அதி உன்னத கவிஞன் எழுதிய கவிதைகளை படித்த மாத்திரத்திலேயே கொழுவிக்கும் குழப்பிக்கும் பிடித்து விட்டது.

மரபுக்கவிதை புதுக்கவிதை என கவிதைகளை பலவகையாக பிரிக்கலாம். ஆனால் குருவிகளின் கவிதைகளை மொத்தம் 30 வகையான பிரிவுகளில் வேறுபடுத்தலாம். இதுவே அவரது கவிதைகளின் சிறப்பும் ஆகிறது.

அவையாவன

ஆனாக் கவிதைகள், ஆவன்னா கவிதைகள் முதலான உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாம்.

ஆனாக்கவிதைகளிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையாக தரவேண்டும் என கொழுவியும் குழப்பியும் விரும்பினாலும் நல்ல இலக்கியங்களை படிக்க காத்திருக்கும் வலை மேய்பவர்களின் ஆவல் கருதி முழுவதையும் தர எண்ணுகிறோம்.

முதலில் ஒரு வானாக் கவிதை படியுங்கள்.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!


வானாக்கவிதையின்
வனப்பிலே
வழிந்தோடிய
வளர் தமிழை (அடச் சே.. கொழுவிக்கும் குழப்பிக்கும் குருவிகளின் தாக்கம் இருக்கிறது) பருகிய நீங்கள் இனி குருவி எழுதிய ஒரு ஊனாக் கவிதை படியுங்கள்.

உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!

இனி நாங்கள் தரவிருப்பது குரவி எழுதிய ஒரு ஈனாக் கவிதை(ஈனக்கவிதை அல்ல).. ஈஈதோ..

இயற்கையை ரசித்தவன்
இன்பத்தை ருசித்தவன்
இருப்பவைக்காய் ஆசை வளர்த்தவன்
இழப்பதையே வெறுத்தவன்
இருளுக்குள் ஒளி தேடியவன்
இனிய விடியலுகாய் ஏங்கியவன்
இருப்பவர் எல்லாம் இன்பமாய் வாழ
இலட்சியம் வளர்த்தவன்
இனிய உலகுக்காய்
இனிய கனவு ரசித்தவன்
இனியவளே மலரே உன்
இதயத்தை அளந்ததும்
இயல்பை இழந்துவிட்டான்
இரவும் பகலும் உன் நினைவுகளால்
இந்து சமுத்திரமானான்
இயற்கை எங்கனும் உன்னுருவம்
இயல்பாய் வரையும் ஓவியனானான்
"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் ஒரு வரி
இயல்பாய் அறியாதவன்
இன்று வரிகளில் தேன் சொரிகிறான்.....
இப்படி இப்படி எத்தனை மாற்றங்கள்
இவை எப்படி இவனுக்குள்
இன்னும் காரணம் அறிந்ததில்லை
இதன் மாயமும் புரியவில்லை
இருப்பவை எல்லாம் இன்பமாய்
இனியவளே உன் ரசிகனாய்
இவன் காண்பதெல்லாம் சொர்க்கமாய்
இவை பிரமையும் அல்ல
இன்றைய நிஜங்களாய்
இனிய நாளைய நினைவுகளாய்
இவன் இள மனதோடு பதிவாகுது
இவையே நாளை
இவன் வரலாறாகும்...!

நமது குருவிகள் லேசுப்பட்ட ஆள் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தொடத் தயங்கும் விடயங்களையும் எழுத்துக்களையும் தொடுவார். பின்னே.. பாருங்கள் அவர் ஒரு பேயன்னா (பேயன் அல்ல) கவிதையும் எழுதியுள்ளார்.

பேசா மலரே
பேசினாய் முதல் வார்த்தை
பேச்சிற்கு நாலு வார்த்தை
பேதைக் குருவியிவன்
போதை தீர....!
போ... மலரே
போன காலம் மெளனத்தால்
போனதே வீணா...
பேரன்பு உனை மலரவைக்க
போனதோ வீராப்பு
போனதை எண்ணி வருந்தி
பேசினாயோ அன்பு வார்த்தை..!
பேசியது தேனினும் இனிப்பாய்
பேசாச் செவிகூடச் சுவை அறிந்து
போதை கொண்டு
பேச்சுக்கு அடிமையாகிறது....!
பேசாமல் தொடர்வாயோ
பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!
போதை எனித் தீராது
பேசியதும் இங்கினி
போகாது வீணே...!
பேதையெனினும் போதையெனினும்
போகும் அவை
பேதையிவன் மூச்சில் கலந்து...!
பேச்சின் மொழியும்
பேதையே உன் ஞாபகம் தந்து
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!

என்ன.. குருவிகளின் ஆனா ஆவன்னா கவிதைகளில் குளித்தீர்களா..? நல்ல இலக்கியங்களை படித்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டீர்களா?

மீண்டும் சந்திப்போம்.
பிற்குறிப்பு கவிதைகளின் முழு உரிமையுமும் குருவிகளுக்கே சொந்தம். ஆனாவை ஆவன்னா என்றோ ஊனாவை ஊவன்னா என்றோ மாற்ற யாருக்கும் அனுமதியில்லை.

17 comments:

Anonymous said...

கொழுவி....... வியாபாரம் நல்லா பொகுது போல :-) ம் ம்
நடத்தும்

Anonymous said...

ஆகா அற்புதமான கவிதைகள்..

Anonymous said...

கொழுவி,இந்தப்பக்கத்தில் நீர் கவனம் குவிப்பது மிக்க நன்று.இல்லையேல் வந்துவிடும் வம்பு!

HS said...

இதுவும் குருவிகளின் கவிதைதான், இதை ஏன் போட மறந்தீர்கள்?

குமுதினிப் படகேறி
உறவுகள் சென்றனர்
கரைதனை எட்டாமல்
கறைதனில் வீழ்ந்தனர்
அலைகடல் நடுவினில்
அராஜகம் நடந்தது
புத்தன் புதல்வர்கள்
கொலைவெறியாட்டம் போட்டனர்
அகிம்சை என்பது
அகத்தினில் அழிந்தது
ஆயுதம் என்பது
ஆர்ப்பரித்து எழுந்தது
திசைகள் எங்கினும்
முடிவுகள் கோரம்...!
புலிதனின் வீரத்தில்
கிளர்ந்தனர் வேங்கைகள்
அப்பாவிகள் அழித்தவன்
கலம்தனைத் தகர்த்தனர்
ஆதிக்கம் என்பது
அடங்கியே போக...!
வேங்கையின் வீரத்தில்
விடுதலைக்காய் ஏங்கினர்
வேள்விகள் தனில்
ஆயிரம் ஆயிரமாய்
உயிர்கள் உறங்கின...!
விடியல் என்பது
விலை கொடுத்த பொருளாய்
வாங்க மடியேந்தும் நிலை
இன்னும் தொடர்கதையாய்..!
முடிவுகள் என்பது
முடிவிலியாய்.....
தமிழன் குருதியென்பது
பெருகும் ஆறாய்
தீர்வுகள் மட்டும்
கேள்விக் குறியாய்...???!
காலம் என்பது
மக்களுக்காய் கனிய
தலைவன் வழியில்
காத்திருப்புத் தொடருது..!
சேதி ஒன்று வரும்
தேசம் விடிந்ததென்று
எதிர்பார்ப்பு விரைவாக
ஒற்றுமை என்பது திடமாக
கடந்ததுகள் நினைவாக்கி
வேற்றுமைகள் கலைத்துக்
கலந்திடுவோம்
இலட்சியப் பயணத்தில்
வேங்கையின் பாதையில்...!

Anonymous said...

ஐயா ஹரி!
மேலே வடிவாகப் பாரும். வழமையாக எழுதுபவற்றை விட்டு வித்தியாசமாக எழுதும் கவிதைகளைப் போடுவதாக அர்த்தப்படுத்தும் விதத்தில்தான் முன்னுரை எழுதப்பட்டுள்ளது. மேலும், ஒரே எழுத்தை அல்லது ஒரே வகையெழுத்தைக் கொண்டு தொடங்கப்படும் வரிகளாக இருக்கும் கவிதைகளைப் போடுவதாகவே கூறப்பட்டுள்ளது. நீங்கள் தந்த கவிதை அந்த வகைக்குள் வராது என்பதால் போடவில்லை. மேலே நாங்கள் குறிப்பிட்ட வகைக்குள் வரும் குருவிகள் எழுதிய கவிதைகள் இருந்தால் தாராளமாகத் தாரும். போடுகிறோம். அல்லது நீரே பின்னூட்டமாகப் போடும்.
அதைவிட குருவிகள் எழுதிய எல்லாக் கவிதையையும் போடச்சொல்லிக் கேட்பது நியாயமில்லை. குருவிகள் மட்டுமன்றி வேறு யாராவது இப்படிக் கவிதைகளை எழுதியிருந்தால் சொல்லும் போடுகிறோம்.
அப்படிக் கவிதைகளைத் தேடிக்கொண்டுமிருக்கிறோம். இன்னும் எழுதப்படாத எழுத்துக்கள் பலவிருக்கின்றனவே. அல்லது நீங்கள் கூட முயற்சிக்கலாமே? இப்படியான முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதுமுண்டு.

Anonymous said...

ஏனுங்க ஆனாக் கவிதயில எல்லோ தொடங்கியிருக்கணும்.

Anonymous said...

//ஏனுங்க ஆனாக் கவிதயில எல்லோ தொடங்கியிருக்கணும்.//

உண்மைதான். ஆனா குருவிகள் அதில் எழுதினதாத் தெரியேலயே. இதுக்குப் பிறகாவது எழுதிறாரா பாப்பம்.

கொழுவி said...

இங்கே பெயரிடாமல் அநாமதேயமாய் எழுதியவர்கள் எல்லாம் கழுதைப் புலிகள்

Anonymous said...

இதோ பலரின் வேண்டுகளுக்கோளிற்கிணங்க குருவியின் ஆனா க் கவிதை.. மிகவும் அற்புதமான கவிதை இது.. படித்து பரவசம் அடையுங்கள்..

அகர வரிசை
அடுக்காக்கி
அன்பே
அமுதே
அழகே என்று
அடுக்கு மொழி பேசிலேன்
அன்னைக்கு அடுத்ததாய்
அகத்திலொரு
அணியாய் கொண்டேன்
அருகிருந்து நீ
அன்பு வளர்க்க - இன்று
அவதிப்படுகிறேன்..!
அழகிய மலராய்
அகிலம் வந்தாய்
அகத்திலும் வந்தாய்
அருகிருக்க மட்டும்
அனுமதி மறுக்கிறாய்
அன்பான உறவுக்கு
அவசரம் ஏனோ
அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...!
அவலம் இவன்
அன்பு தாழ் திறக்க
அவதிப்படுவது அறியாயோ
அருமலரே....!
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
அன்று அரிவரியில்
அவசரமாய் உச்சரித்தது
அர்த்தமாய் இன்று
அதிர்கிறது மனத்திடலெங்கும்..!
அது கேட்டு
அரங்கேறத் துடிக்கிறது
அன்பான குருவியதன்
அருங்கவி..!
அது ஒரு ஜீவகவி
அர்த்தமில்லா ஆயுளதை
அர்த்தமாக்க
அன்பே நீ தந்த
அன்பின் அரிச்சுவடி
அணைத்தெடுக்க
அகத்தோடு அரும்பிய
அருமலர் - நீ
அறியாமல் அலம்பிய
அரும் வரிகள்
அருமையாய்க் கோர்த்தெடுக்க
அரும்பியது
அந்தக் கவி
அகிலத்தில் அது
அடங்காது ஆயுள் வரை..!
அன்பே உன்னைப் பிரியாது
அற்புதன் இவன்
அன்புக் கவி..!
அதுவே தாங்கும்
அற்புத ஆயுள் வரி
அது தரும் என்றும் - இவன்
அன்பின் மொழி...!

Anonymous said...

குழப்பியின் தொழில் வாழ்க. நல்ல கவிதைகள் தான் அழகாய் இருக்கிறது உச்சரிப்பதற்கு.

குருவிகளின் மின்னூல் தொகுப்பு ஒன்றை பற்றி www.kavithan.yarl.net இங்கு வந்த நினைவு உள்ளது.

Anonymous said...

adadaaaa

முகமூடி said...

எனக்கு முதலில் "கொழுவி" என்றால் என்ன என்று யாராவது அர்த்தம் சொல்லவும்

கொழுவி said...

வருகை தந்ததுக்கு நன்றி முகமூடியாரே,
கொழுவியெண்டா, எல்லாரோடயும் கொழுவிக்கொண்டு திரியிறது. கொழுவுறது எண்டா சண்டைபிடிச்சுக் கொண்டு திரியிறது. மற்றாக்களோட வம்புக்குப் போறது. இத 'ராத்திறது' எண்ட சொல்லாலையும் குறிக்கலாம்.

அதாவது மற்றாக்களை வம்புக்கு இழுப்பவன் அல்லது இழுப்பவள் கொழுவி என்ற பெயரால் அறியப்படுவான்/ள்.

Anonymous said...

எங்கள் தமிழ்நாட்டுப் பாப்பார பொறம்போக்கு இனத்துக்காக ப்ரெஞ்சிலும் ஜெர்மனிலும் தமிழிலும் குரல் கொடுக்கும் கொழுவி அவர்கள் வாழ்க!

Anonymous said...

அடடடாhh பொறுக்கி குருவியை பொறம்போக்கு எண்டுறீங்களா? நொண்டி ராகவன் உங்களைத்தான். இல்லை பொறம்போக்குகளுக்காக குரல் கொடுப்பதாக சொல்லுறியள். அது தானுங்க.

இப்படிக்கு கழுதைப்புலி.

Anonymous said...

என்ன கொழுவி முதலாவது பின்னூட்டத்தை அமத்த உம்முடைய பக்கத்துக்கே வருகுது. அடடாhh. உம்முடைய பதிவுக்கு நீரே பின்னூட்டமா?. கழுதைப்புலியை கொழுவி எண்டம் சொல்லலாமோ? என்னை உமக்கு தெரியுமோ தெரியேலை. ஆனா எனக்கு உந்த கள்ள வேலையள் சரிவராது. கெட்ட கோவம் வரும் . வாழ்க உம் குலத்தொழிலான கொழுவுதல்.அல்லது கொழுவிவிடுதல்.

கொழுவி said...

ஐயா,
கடசியா எழுதின அனாமதேய அன்பரே,

நீரே 'யாரொ' என்ற பேரில் எனது வலைத்தளத்தை இணைப்புக் குடுத்துப் பின்னூட்டம் போட்டுவிட்டு, இப்போது அதையே சொல்லி இன்னொரு பின்னூட்டமா?
ஏற்கனவே இதே பெயரில் (இதே எழுத்துப்பிழையோடு) ஒருவர் பின்னூட்டங்கள் போட்டு வருகிறார். அவர் தான் அப்பின்னூட்டம் போட்டிருக்கிறார் என்று நினைத்தேன்.