Monday, June 13, 2005

அரசியலில் நமது வலைப்பதிவுகளின் செல்வாக்கு.

நாமும் ஏதோ பொழுதுபோக்காகக் கிறுக்குகிறோம், விவாதிக்கிறோம், சண்டை பிடிக்கிறோம் என்ற அளவிலேதான் வலைப்பதிவுகளை எடை போட்டு வந்தோம். நமது தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லையென்றே நானும் நினைத்திருந்தேன். ஆனால் அரசியலில் இவை பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை இப்போதுதான் அறிகிறேன். இந்த இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

அண்மையில் வலைப்பதிவுகளில் மற்றவரை வெருட்டுவதும், காலக்கெடு போடுவதும், வழக்குத்தொடுப்பதாகச் சொல்வதும் நடந்து வருகின்றது. (இதற்குள் என் பெயரும் சம்பந்தப்பட்டது சுவாரசியமானது). இதைப்பார்த்த அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்குக் கொளுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எதைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?

ஜே.வி.பி. சந்திரிகாவுக்குக் காலக்கெடு விதித்துள்ளது.
"வருகிற 15 ஆம் திகதிக்குள் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். சந்திரிக்காவுக்கான காலக்கெடு பதினைந்தாம் திகதி இரவு பன்னிரண்டு மணிவரை. இப்போதிருந்து அவருக்கான காலக்கெடு ஆரம்பிக்கிறது."
என்று சந்திரிக்காவை வெருட்டியுள்ளது. கூடவே இறையாண்மை, நல்லபெயருக்குக் களங்கம், தனித்தன்மை பற்றியெல்லாம் கதைத்துள்ளது. என்ன ஒற்றுமை பாருங்கள்.

ஏதோ ஒரு வழியில் நமது வலைப்பதிவுகள் கவனிக்கப்படுவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்படியான ஒரு செயலுக்கு நம்மை முன்னோடியாக்கிவிட்டார்களே என்று நினைத்து மறுபுறம் வேதனையாயும் இருக்கிறது. யார் கண்டது? வலைப்பதிவாளர் ஒருவரே ஜே.வி.பி. முகவராயும் இருக்கக் கூடும்.

உங்களுக்கு எப்படி இருக்கிறது அன்பர்களே?

6 comments:

மாயவரத்தான் said...

சூப்பரு. இதை பின்பற்றி விரைவிலேயே, சந்திரிகா தான் பிரபாகரன், ராஜிவ்காந்தி தான் மன்மோகன் சிங் என்பது போன்ற அரிய பல கருத்துகளும் வலைப்பூக்களைப் பார்த்து அரசியல்வாதிகள் சொல்லத் தொடங்குவார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

Anonymous said...

AnionMass எ, அனோனிமாசு சொல்வதாவது:
|தோழர் மாயவரத்தான் ரஜனிகாந்த் தான் லூஸ் மோகன் என்ற அரிய கருத்தினை மறைத்ததினை அனோனிமாசு வன்மையாகக் கண்டிக்கிறாள்|

மாயவரத்தான் said...

//அனோனிமாசு வன்மையாகக் கண்டிக்கிறாள்//

ஆக, இந்த அனோனிமாசு ஒரு 'பெண்' என்பதை தன் வாயாலேயே ஒத்துக் கொண்டிருக்கிறார்.

முகமூடி said...

// இதை பின்பற்றி விரைவிலேயே, சந்திரிகா தான் பிரபாகரன், ராஜிவ்காந்தி தான் மன்மோகன் சிங் என்பது போன்ற //

:-)))

Anonymous said...

சுவையாக இருந்தது கொழுவி.

மாயவரத்தானும் முகமூடியும் ஒன்னு. இலங்கையர்களைக் கண்டால் பிடிக்காது.

Thangamani said...

வலைப்பதிவாளர் ஒருவரே ஜே.வி.பி. முகவராயும் இருக்கக் கூடும்?

காம்ரேடுகள், தோழர்கள் அறிவார்கள்!