Monday, June 20, 2005

வயிறு நோகச் சிரிப்பேன்.

ஆங்காங்கு அடிபட்டார்கள்;
நான் அவனில்லையென்றும்
நீ அவன்தானென்றும்.

இவங்களையும் இவள்களையும் நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பாய் வருது.
உரத்துச் சிரிக்கிறேன்.

நீதான் அவனென்றும்,
நான் அவனில்லையென்றும் சண்டைகள்.
ஐ.பி. பிடித்ததாய்ச் சொல்லி
பி.பி. ஏற சண்டை.
பிறகு வழக்குப் போட மிரட்டல்,
வழக்கம் போல பதுங்கல்.

எல்லாத்தையும் பாத்து
விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.

என்னை அவனெண்டாங்கள்,
இவனெண்டாங்கள்.
ஆரோ 'ந்தன்' எண்டாங்கள்.
பிறகு 'ந்தன்கள்' எண்டாங்கள்.
எந்தச் சுவரில் போய் முட்ட?

முட்டி முட்டி இடிப்பேன்,
சுவர் உடையுமட்டும் இடிப்பேன்
ஏனெண்டா என்ர தலையில்லத் தானே.

இவங்களையும் இவள்களையும் நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பாய் வருது.
விழுந்து விழுந்து சிரிப்பன்,
வயிறு நோக சிரிப்பன்,
வயிறு வெடிக்கச் சிரிப்பன்,
ஏனெண்டா அது என்ர வயிறில்லத் தானே.

6 comments:

ஜெயச்சந்திரன் said...

ஐயா வணக்கம். நல்லா சிரியுங்க. யாரெண்டா நமக்கு என்ன. எழுத்து நல்லா இருக்கு

ஒரு பொடிச்சி said...

அடப்பாவி!

ஒரு பொடிச்சி said...

sorry இப்பிடீ வரும்:
அட/டிப்பாவி!!!

Sri Rangan said...

கொழுவி ,நீர் தில்லானமோகனாம்பாள் படத்தில் வரும் நாகேஷ் பாத்திரத்தை இங்கு(வலைப்பதிவர்கள் மத்தியில்) செய்து வருகிறீர்!பல நேரம் சிரிக்க வைக்கிறீர்,சில நேரம் சிந்திக்க வைக்கிறீர்,இன்னும் சில வேளை மனம் நோக வைக்கிறீர்.சுவிஸில் மழை,பனி,வெய்யில் மாறி,மாறி வருகிறதோ?

கொழுவி said...

குமிழி நன்றி.
பொடிச்சி!
நீங்கள் எழுதினதுக்குக் காரணம் வேற. அதே சொற்களை வைத்து நான் எழுதியிருக்கிறன். அவ்வளவுதான்.
உந்த ஆண்பால் பெண்பால் உணர்த்தல் எண்டது ஒரு சிக்கல்தான். நீங்கள் தான் தடிப்பாக்கி உங்கட 'தடிப்ப' காட்டின ஆளாச்சே. (கொடுப்புக்குள் சிரிக்கிறது தெரியுது.;-))

சிறிரங்கன்!
உங்களை நோக வச்சது எது எண்டது தெரியும். கொள்கைகள் அல்ல சொல்லப்பட்டது. எழுத்துநடை மட்டுமே. அதுவும் மனைவியுடன்கூட பாவிப்பதாகச் சொல்லப்பட்ட நடை மட்டுமே. அதை வேறிடத்தில் பின்னூட்டமாகப்போட்டது தவறு என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
கருத்துக்களுக்கு நன்றி.

நீங்கள் சிந்திக்கவைப்பதாகச் சொல்லப்பட்ட ஒலிப்பதிவு, இன்னொரு வலைப்பக்கத்தில் செய்யப்பட்டதற்கு எதிர்வினை. சுத்த முட்டாள்தனமான, கண்டிக்கப்பட வேண்டிய ஒரு ஒலிப்பதிவு அது. அதைக் கேட்ட ஆத்திரத்தில் செய்யப்பட்டது தான் எனது அந்த ஒலிப்பதிவு.


சுவிஸ் பற்றி நான் சொல்லக்கூடாதுங்கோ. என்னைப்பற்றியிருக்கிற குழப்பங்களுக்குள்ளதான் என்ர இணைய வாழ்க்கையே இருக்கு.

dondu(#11168674346665545885) said...

Lieber Must Do,

Man sagt, daß Dein Website vorläufig gestoppt worden ist. Siehe http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html
Es freut mich, daß es nicht wahr ist.
Dein Onkel,
Dondu Raghavan