Thursday, September 01, 2005

கிளின்ரன் அடித்த வங்கிக் கொள்ளை.

உங்களுக்குக் கிளின்ரனைத் தெரிந்திருக்கும். அவர் செய்த வங்கிக் கொள்ளையொன்று அண்மையில் வெளிப்பட்டுள்ளது. ஜோர் காலிம் என்பவன் கிளின்ரனோடு முன்பு ஒன்றாக வேலை செய்தவன். அதைவிட ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த நட்பு அவர்கள் வளர்ந்தபின்னும் இருந்தது. கிளின்ரன் அரச நிர்வாகத்தைச் செய்தபோதும் சாதாரண பிரஜை என்ற உறவும், ஜோர் செய்யும் தொழில் நிமித்தமான உறவும் அவர்களுக்குள் இருந்தது.

ஒருநாள் கிளின்ரனின் அந்தக் கொள்ளை அம்பலமானது. அவரின் நண்பனான ஜோர் காலிம் வங்கியொன்றை ஆயுதமுனையில் பலவந்தமாகக் கொள்ளையடித்தான். பின் பிடிபட்டுவிட்டான். இதில் ஏன் கிளின்ரன் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்று கேட்கிறீர்களா? பின்னே? அவருடைய நண்பர்(தொழில்முறை நண்பர்) செய்த பலவந்தக் கொள்ளைக்கு அவர் காரணமில்லாமற் போகமுடியுமா? இது என்ன லாஜிக் என்று கேட்டால், அது அப்படித்தான். அப்படித்தான் சொல்கிறார்கள். இந்தக் கொள்ளையை வைத்தே கிளின்ரன் கொள்ளையிட்டார் என்று தலையங்கம் தீட்டி ஊடகங்கள் கட்டுரைகள் எழுதின.

இந்த வாதத்தை இன்னும் வலுவாக்க அந்த ஊடகங்கள் (அதாவது நாங்கள்) என்ன செய்தன தெரியுமா? கிளின்ரனே பல கொள்ளைகளை நேரடியாக நடத்தினார் என்ற ஒரு கதையை அவிழ்த்துவிடுவது. கிளின்ரனை அறிந்த யாருமே இதைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்ற கவலை எங்களுக்கில்லை.(எங்கள் பெயரோடு ஒரு முனைவர் பட்டத்தையும் போட்டால் சிலர் எங்களைப் புத்திசாலிகள் என்று நினைக்கக்கூடும் என்பதற்காக அதையும் செய்தோம்) எங்களுக்குத் தேவை கிளின்ரனை எப்படியாவது மட்டந்தட்ட வேண்டும். அவ்வளவுதான்.

ஆக, கள்ளனைப் பற்றியோ, களவைப் பற்றியோ கட்டுரை எழுதாமல், நாம் யாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறோமோ அவனோடு இவன்(கள்ளன்) ஒருநாள் தேத்தண்ணி குடித்தான் என்று ஒரு கதை உருவாக்கி(அது உண்மையாகவுமிருக்கலாம்) நாம் நினைத்தவனைத் தாக்கிக் கட்டுரை வரையலாம். இதுவொரு ஊடக தர்மம். கிளின்ரன் விசயத்தில் அதுதான் நடந்தது.

குறிப்பு: கிளின்ரன் (சிலர் கள்ளன் என்றும் வாசிக்கலாம்)பற்றிப் பத்து வசனம் எழுதச் சொல்லிக் கேட்டதுக்கிணங்க, எழுதப்பட்டது இப்பதிவு.

பாத்திரங்கள் கற்பனையானவை.

6 comments:

Anonymous said...

ஆகா என்னவோ புரிகிறமாதிரி இருக்கிறதே.இதை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சு போடுவது என்றும் சொல்வார்கள்.

இளங்கோ-டிசே said...

:-)))

Anonymous said...

//எங்கள் பெயரோடு ஒரு முனைவர் பட்டத்தையும் போட்டால் சிலர் எங்களைப் புத்திசாலிகள் என்று நினைக்கக்கூடும் என்பதற்காக அதையும் செய்தோம்//

உங்கள் 'கருணை' உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

சும்மா புரியாது கொழுவி
அதன் மூலப்பிரதியையும் இணையுங்கள். :)))

கொழுவி said...

உது புரியாட்டி நானென்ன செய்யிறது.
ஒண்டைப்பற்றிப் பத்து வசனம் எழுதச்சொல்லிற கதையைச் சொல்லி எங்கட 'தளபதி' நக்கலடிச்சதை கடசிவரியாப்போட்பின்பும்,
முனைவர் பட்டம் போடுறதச் சொன்னபின்பும்
புரியாட்டி, புலிவாலுக்கும் புரொபசருக்கும் தொடுப்புக் கண்டுபிடிச்ச புரொபசர் மாரிட்டக் கேட்டுப்பாரும். கதைகதையாச் சொல்லுவினம்.

Anonymous said...

எனக்கு புரியாதெண்டு சொன்னா. புதிசா பாக்கிற ஆக்களுக்கு புரியணுமே.