Thursday, November 09, 2006

அமெரிக்காவில் புலிகள் கள்ள ஓட்டு

மாற்றுக்கருத்து இணையமொன்றில் வெளிவந்த இச்செய்தியினை இங்கே இணைத்திருக்கிறேன். இதுதாம் இவர்களுடைய மாற்றுக்கருத்து வெளியிடுவதற்கான உரிமையாம்.

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வன்னிபுலி ஆதரவாளரான டேனிஸ் டேவில் 87 வீத கள்ளவாக்குகளை பெற்றுள்ளார். திருட்டுவாக்குகள் போடுவதில் கில்லாடிகளான வ.புலிகள், அமெரிக்காவிலும் அதனை நிலைநாட்ட தயங்கவில்லை. இலங்கையின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமது அடிவருடிகளான தமிழ்கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வடகிழக்கின் ஜனநாய நடைமுறையை வ.புலிகள் மறுத்ததுடன், தமது பினாமிகளை கள்ளவாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமைக்குரியவர்கள். அமெரிக்காவிலும் தமது ஆதரவாளரான டேனி டேவிஸ் என்பவரை வெற்றியீட்ட வைப்பதற்காக அங்குள்ள தமது பினாமிகள் மூலம் கள்ளவாக்கு வாங்கியை அமெரிக்காவிலும் வ.புலிகள் திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கின்றன. இவரை எதிர்த்து போட்டியிட்டவர். டேனி டேவிஸின் புலி ஆதரவு நிலைப்பாட்டினை முன்நிலைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால். வன்னிபுலிகள் தமது ஆதரவாளரை வெற்றியீட்ட வைக்கவேண்டும் என்பதற்காகவே இவ் கள்ளவாக்கு வங்கியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியதாகவும், இவ் வாக்கு வங்கியானது இலங்கையை கடந்து கனடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அங்கே தமது ஆதரவாளர்களிற்காக வ.புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தனர், அடுத்தவாரம் கனடாவின் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடவுள்ள தமது ஆதரவாளர்களான, இலகுப்பிள்ளை, சாண் தயாபரன், நீதன், தர்சிகா, லோகன் கணபதி, நடராஜ்குமார் போன்ற தமது பினாமிகளை வெற்றியீட்ட வைப்பதற்காக இவ் கள்ளவாக்குகளை இவ் முறையும் அதிகளவில் கனடாவில் புலிகள் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளமையால் கனடா அதிகாரிகள் இது விடயமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதே ஜனநாயகமாக தேர்தல் நடைபெறுவதற்கு சிறந்ததாகும் என எமது அமெரிக்கச் செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியின்ர திறத்தில அமெரிக்காவில இருந்து செய்தியாளர் வேறை! ம்.. செய்திப்படி பார்த்தால் 87 வீத வாக்குகள் பெற்று வெல்கின்ற அளவுக்கு கள்ள ஓட்டு போடும் திறமை அமெரிக்காவிலும் புலிகளுக்கு உள்ளது என்பது தான்.
செய்தி நன்றி - நெருப்பு

5 comments:

Anonymous said...

இதென்னடாப்பா பெரிய வம்பாய்ப் போச்சுது. வாற திங்கட்கிழமை யாரும் கள்ள ஓட்டு போடமுன்னர் விடிய வெள்ளனவே ஓட்டுப்போட ஓடவேண்டியதுதான் :-).

Anonymous said...

//திருட்டுவாக்குகள் போடுவதில் கில்லாடிகளான வ.புலிகள், அமெரிக்காவிலும் அதனை நிலைநாட்ட தயங்கவில்லை//

hahah very funny news.. wat a knowledge..

Anonymous said...

அந்த மட்டமான செய்தியை ஒரு பொருட்டாக மதித்த உங்களை என்னவென்று சொல்ல :)

ENNAR said...

அவ்வாறு செய்ய முடியுமா

Anonymous said...

"At 12:40 PM, ENNAR said…

அவ்வாறு செய்ய முடியுமா"

அவ்வாறு செய்யமுடியாது, ஆனால் மற்றுகருத்து இருந்தால் எழுத முடியும்.