ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள்இ பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தக் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐப்பான் நியூசிலாந்து சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைகளுடன் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் இரும்புச் சிறைக்குள் தமிழ் மக்களை சிறிலங்கா வைத்திருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவாதத்தின் போது சிறிலங்கா அரசுக்கு சார்பாகப் பேசிய பிரித்தானிய நாட்டுப் பிரிதிநிதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். அவரின் கருத்தை மறுத்துப் பேசிய சுவிற்சர்லாந்தின் ஐ.நா. பிரதிநிதி தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். பின்னர் பிரித்தானியப் பிரதிநிதியின் கருத்து நிராகரிக்கப்பட்டு சுவிற்சர்லாந்துப் பிரதிநிதியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்து பேசிய நியூசிலாந்து நாட்டுப் பிரதிநிதி தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக இருக்கின்ற போதும் அவர்கள் உறுதி குலையாதவர்களாக இருப்பதாகவும் அவர்களுக்கு மனித உரிமைகள் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதனையடுத்து ஜப்பானியப் பிரதிநிதி தமிழ் மக்களின் நியாயமான குரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு உத்தரவாதத்தை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்கா விட்டால் சிறிலங்கா அரசு மீது பாரிய பொருளாதாரத்தடையை ஜப்பான் கொண்டு வர நேரிடும் என்ற எச்சரிக்கையையும் ஜப்பானியப் பிரதிநிதி விடுத்தார்.
இனிதான் நாம் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆம் இந்தக் கண்டனத்தீர்மானத்தில் இந்தியா சிறிலங்கா அரசு சார்பான நிலையை எடுத்து சிறிலங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மதிக்கிறது என பக்கத்து நாடு பரிந்து பேசியிருக்கிறது.
நன்றி இந்தியா..
கோடி நன்றி
13 comments:
நானும் நா தழுதழுக்க, கண்ணீர் மல்க பாரத அன்னைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆமாம், மிக்க நன்றி இந்தியா!!!
எமது நன்றிகளை வெறும் வார்த்தைகளாலன்றி வழமை போல செயலிலும் காட்டுவோம்!
முக்கியமாக இந்தியா சென்று பனிக்குளிரில் முதுகு முறித்து உழைத்த டாலர், யூரோ, பிராங்க் போன்றவற்றை குமரன் சில்க் சேலைகளிலும் சரவணபவான் உணவகங்களிலும் செலவிட்டு புலம்பெயர் நாடுகளில் ஐந்து சதம் பெறாத குப்பைத் தமிழ்ப் படங்கள் பார்ப்பதிலும் செலவிடலாம்! இதன் மூலம் ஈழத்தமிழர்கள் 'சொறணை கெட்ட' தமது உணர்வுகளை வெளிப்படுத்தலாம்!!!!
//சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மதிக்கிறது என பக்கத்து நாடு பரிந்து பேசியிருக்கிறது//
:(
இன்னுமொரு வழியில் நமது நன்றியை இப்போது காட்டுகிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் குழந்தைகள் அரங்கேற்றத்திற்கு இந்திய பின்பாட்டு, நட்டுவாங்கக் கூட்டத்தை அழைத்து, முதல் வகுப்பு விமானச்சீட்டுடன் பெருந்த்தொகைப்பண "அன்பளிப்பு" மற்றும் புலம்பெயர் நாடுகளின் விலை உயர் கடைகள், அங்காடிகளில் தமது செலவில் கொள்வனவு போன்ற கூத்துகள்! விடாதீர்கள் ஈழத்தமிழர்களே காட்டுங்கள் உமது நன்றிகளை!!!!!
மெத்தப் பெரிய உபகாரம் செய்த இந்தியாவுக்கு கோடி கோடி நன்றிகள்... தந்தையர் நாடென்னும் போதிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே..
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே..
இந்திய என்ற பொதுவிலேயே தமிழர்கள் தம்மை பார்க்கின்றார்கள். மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா. சபை கண்டனம் கொண்டு வந்த பொழுது அமைதியாய் இருந்து விட்டு போயிருந்தால்கூட பரவியில்லாமல் இருந்திருக்கும். மத்தியில் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் நித்திரை செய்து கொண்டிருக்கின்றார்கள் போலிருக்கின்றது.
அனானி நண்பர்கள் (சிலர்) எனன் சொல்லவருகின்றார்கள் என்று விளங்கவில்லை. நடுவண் அரசு இன்னபிற அரசு அதிகாரங்கள் செய்வதையும் சாதாரண மக்களிற்கும் ஏன் முடிச்சு போடுகின்றார்களோ தெரியவில்லை.
இவர்கள் கூறுவதைச் செய்வது தனிப்ப்ட்டவர்களின் விருப்பம் அல்லவா (இந்தியாவுக்குப் போவதும் இந்தியாவிலிருந்து இங்கே கலைஞர்களை வரவழைப்பதும்)? அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களால்தான் இந்தியாவின் பொருளாதாரமே தங்கியிருப்பதாய் எத்தனை காலத்துக்குத்தான் எழுதித்தள்ளபோகின்றோம்? ஈழத்தமிழருக்காய் தமிழகத்து மக்கள் ஆதரவாய் இருக்கின்றார்கள் என்பதைத்தானே அங்கே நடக்கும் அண்மைக்கால நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதிகாரமுள்ள நடுவண் அரசை, அவ்வளவு இலகுவாய் மாற்றமுடியாத அரசின் வெளிவிவகாரக்கொள்கைகளை விமர்சிக்கலாமே தவிர, சாதாரண மக்களையும் அதிகார அரசையும் ஒரே மூடிக்குள் போட்டு கலக்கியடிப்ப்து எந்தவளவிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. நன்றி
(நேரங்கிடைத்தால் விரிவாய் பிற்கு)
ஆதிக்க சக்திகள் நிரம்பிய புதுடில்லி வெளிவிவகார கொள்கையின் பிற்போக்கு வாதம் இது. இது போன்ற பல பேச்சுக்களை ஐ.நா கூட்டங்களில் இந்தியா உதிர்த்திருக்கிறது. அநேகமாக இந்த கூட்டங்களில் பேசுவது தான் எதைப்பற்றி பேசுகிறோம் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாதவர்கள். இதுபோன்ற நிலையை நேரடியாக கண்டிருக்கிறேன்.
எதற்கும் எனது தாய்நாட்டிற்கு நன்றிகள்! :(
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சம்பந்தப் பட்டவர்கள் இன்னமும் ஈழத் தமிழருக்கு எதிராகவே செயற்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயற்பாடு. இதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பலப் பல.
இதற்காக, தமிழக மக்களைக் குறை சொல்லக் கூடாது. தமிழக மக்களும், தமிழக அரசும், தங்கள் அதிகாரத்திற்குட்பட்டவைகளைச் செய்கின்றார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.
அதனால் தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் நாங்கள் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டக் கூடாது.
சொ. சங்கரபாண்டி முன்பு ஒரு பதிவில் இட்ட பின்னூட்டத்தின் சுட்டி கீழே உள்ளது, படிக்கவும். இந்தியாவின் நடவடிக்கைகளைப் பற்றி தமிழர்கள் (இந்தியத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும்) அதிசயப்படும/அதிர்ச்சியுறும் நேரங்களிலெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது.
http://thamizhsasi.blogspot.com/2006/06/blog-post.html#115008397182665274
இந்தியாவுக்கு இது நல்லது அல்ல...!!
//அதிகாரமுள்ள நடுவண் அரசை, அவ்வளவு இலகுவாய் மாற்றமுடியாத அரசின் வெளிவிவகாரக்கொள்கைகளை விமர்சிக்கலாமே தவிர, சாதாரண மக்களையும் அதிகார அரசையும் ஒரே மூடிக்குள் போட்டு கலக்கியடிப்ப்து எந்தவளவிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது//
இதுவே என் எண்ணப்பாடும்.
டி.சே,
புலம்பெயர்ந்தவர்களில்தான் இந்தியப்பொருளாதாரம் தங்கியிருக்கிறது என்று சொல்வதைப் போன்றதுதான் தமிழகத்தமிழர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும்.
ஆதரவு என்பது எது?
வலையுலகிலும்சரி, தமிழ்நாட்டிலும்சரி, சிலர் மட்டுமே கத்திக்கொண்டிருக்கிறார்கள்.
(இதன் மூலம் நிசமாகவே ஆதரவு தருபவர்களைக் கொச்சைப்படுத்துவதன்று நோக்கம். எங்கள் ஈழ ஊடகங்கள் வெளிப்படுத்தும் செய்திகள் போலன்றி மிகக்குறைந்த தாக்கத்தோடும் மக்கள் எண்ணிக்கையோடும்தான் அங்கு கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கின்றன. இதை நாக.இளங்கோவனும் ஒருமுறை ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார்)
மேற்குறிப்பிட்ட அனானி சொல்லவருவது புலம்பெயர்ந்தவர்களது பொருளாதாரத்தில்தான் இந்தியா இருக்கிறது என்பதன்று என்றே நினைக்கிறேன்.
இதுவொரு தார்மீக எதிர்ப்பு என்பதையும்விட காலம்காலமாக எங்கள் மக்களிடம் புழுத்துப்போயிருக்கும் 'இந்திய மாயை' பற்றிய சாடலாகப் பார்க்கிறேன்.
அந்தச் சினம் இப்போது இந்தியா முதுகில் குத்தியதைத் தொடர்ந்து வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
அனானி -2
Post a Comment