Monday, February 05, 2007

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

கொழுவி பேரில நேற்றொரு பின்னூட்டம் பார்த்தேன்.
ம்..
யாரோ ஆரம்பித்து விட்டார்கள் எண்டது விளங்கீட்டுது. இன்றும் யோகனின் பதிவில் ஒரு கீழ்த்தரப் பின்னூட்டம் எனது பெயரில்..

அப்பிடியே தமிழ் வலைப்பதிவுகளில் உலாவினால் பெயரிலியின் பெயரிலும் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.

ஈழபாரதியின் பதிவொன்றில் வசந்தன், கானாபிரபா, தீவு ஆகியோர் பெயரிலும் இப்படியான போலிப் பின்னூட்டங்கள் வந்திருந்தன.

-/பெயரிலி.. கொழுவி.. வசந்தன்.. தீவு... கானா பிரபா இந்த வரிசையில் அடுத்ததாக டிசே மற்றும் சோமி இவர்களின் பெயர்களில் பின்னூட்டங்கள் எங்காவது வந்திருக்க வேண்டும் அல்லது வரவிருக்கின்றன.

குறிப்பிட்ட பதிவர்களுக்குள் என்ன "சீல"ம்பாய் உறவெண்டு நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட பதிவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கான தொடர்பு வசதியைத் தெரியப்படுத்தி வலைப்பதிபவர்கள். சிக்கலான சந்தேகமான பின்னூட்டங்கள் வந்தால் அவர்களுடன் தொடர்புகொண்டு பின் பிரசுரிக்கலாம்.
கொழுவிக்கான தொடர்பு முகவரி ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும் இங்கும் தருகிறேன்.
koluvi@gmail.com

தயவு செய்து பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வோர் கொஞ்சம் யோசிக்கவும்.
அப்படி யோசிக்கவும், சந்தேகம் வந்தால் மின்னஞ்சல் போட்டு தெளிவுபடுத்தவும் நேரமின்றியிருப்போர் அல்லது பஞ்சி பிடித்திருப்போர் தயவு செய்து உங்கள் வலைப்பதிவுகளுக்கு அனாமதேய பின்னூட்டும் வசதியை நீக்கிவிடுங்கள்.

இப்பிடி விளையாட்டு விளையாடுறவங்களின்ரை உணர்வுகளை நாங்கள் நல்லா புரிஞ்சு கொள்ளுறம். இதே ஆடடத்தைத் திருப்பி ஆடுவதொன்றும் பெரிய காரியமில்லை. இந்தப்பிரச்சினை வலைப்பதிவுகளில் தோன்றிய காலத்திலிருந்தே நாங்கள் வலையில் குப்பைகொட்டி வருபவர்கள்.
என்ன செய்ய?
பதிலுக்குத் தொடங்கு எண்டு மனசு அலைபாய்ந்தாலும்.. புத்தியும் மனசும் அடங்கு அடங்கு எண்டு அடக்குது.. பிழைச்சுப் போங்கோடா பொடியங்களா..

8 comments:

சின்னக்குட்டி said...

புத்தியும் மனசும் அடங்கு அடங்கு எண்டு அடக்குது.. பிழைச்சுப் போங்கோடா பொடியங்களா..

------------------

theevu said...

கொழுவி.

எனக்கும் எனது பெயரில் அதுவும் தரம் கெட்ட ஒரு பின்னூட்டம் நான் எழுதியதாக ப்ளொக்கர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்டிருந்தது.

அந்த பின்னூட்டத்தை வெளியிட்டவர்
மீதுதான் எரிச்சல் வருகிறது.

பேசாமல் ப்ளொக்கர் கணக்கை மூடிவிடலாமோ என்று கூட யோசிக்கிறேன்.

-/பெயரிலி. said...

கொழுவி,
உதுதான் உந்த விளையாட்டொண்டும் பெரிசா மூளைய யோசிச்சுச் சுத்தவேண்டியதில்லை. இன்னும் கெட்டிக்காரன்புளுகே எட்டுநாளைக்கெண்டால், உது ரெண்டு நாளையில அடங்கும். உதிலையும் ஒரு நல்ல விசயமிருக்கு. ஆரையும் கண்டபாட்டுக்குத் திட்டிப்போட்டு நான் திட்டேல்லை புளொக்கர்மார் ஏமாத்திப்போட்டினம் எண்டும் சொல்லிப்போடலாம். அதுவும் நல்லதுக்குத்தான் ;-) உது மற்றவைக்குத்தான் தலையிடி. எப்பிடி பின்னூட்டம் போடுவன் எண்டு தெரிஞ்சவைக்குப் பிரச்சனையில்லை. தெரியாதவன் ஐயோ குய்யோவெண்டால், "ஐயா ஆளைச் சரிவரத் தெரின்சு கொள்ளாததுதான் உம்மட பிரச்சனை." ஆனா, சொந்த புளொக்கிலை உந்தப்பிரச்சனை வராமலிருக்கத்தான் இப்போதைக்குக் காட்டி, வந்தால், புளொக்கர் எக்கவுண்டோட வா இல்லாட்டி வராதை எண்டும் சொல்லிப்போட்டன். அலைஞனின் அலைகள்: குவியம் உண்மையா மனசார ஒருத்தன் எனக்குப் பின்னூட்டித்தான் ஆவன் எண்டளவுக்கு ஏதாச்சும் பதிஞ்சிருக்கிறனெண்டு நினைச்சானெண்டால், ஒரு புளொக்கர் எக்கவுண்ட் எடுத்தாச்சும் வந்து "வாழ்க, வளர்க" சொல்லாமலே போகப்போறான்? என்ன வேட்பிரஸிலை வைச்சிருக்கிறவையையும் வில்லங்கப்படுத்தி புளொக்கர் கணக்கொண்டு வைச்சிருக்கச் செய்யவேணும். புளொக்கர்காரர் உந்த நோக்கிலைதான் உள்ளால "மற்றயவை" வைச்சு விளையாடியிருக்கினமோ தெரியேல்லை.

Anonymous said...

அவங்க தானா இவிங்க..

-/பெயரிலி. said...

அவங்க தானா இவிங்க..எண்டு ஆப்பு பதிவிலயெல்லோ பின்னூட்டம் போடுவியள் ;-)

கானா பிரபா said...

ஒருவருடைய பெயரைப் பயன்படுத்திக் கருத்து எழுதுவது, எழுதுவருக்குத் தன் மேல் நம்பிக்கைத் திராணி அற்றவர் என்றே காட்டும். என் பெயரைப் பயன்படுத்தியது கண்டு மிக்க கவலை அடைந்தேன்.

கொழுவி said...

//புளொக்கர்காரர் உந்த நோக்கிலைதான் உள்ளால "மற்றயவை" வைச்சு விளையாடியிருக்கினமோ தெரியேல்லை.//
புளொக்கர் கூகுள் காரங்களின்ரையெல்லோ.. கூகுளுக்கும் மற்றவைக்கும் ஒத்துவராதெண்டு தெரியாதோ..? :)

எனக்கும் என்ர எல்லா உணர்வுகளையும் என்ர பேரில சொல்ல முடியாமல் கிடக்கு.. ஆட்டத்தை தொடங்குவமோ எண்டு பாக்கிறன்.. எதுக்கும் 22ம் திகதி வரைக்கும் அமைதி காப்பம்.. :)

Anonymous said...

//இந்த வரிசையில் அடுத்ததாக டிசே மற்றும் சோமி இவர்களின் பெயர்களில் பின்னூட்டங்கள் எங்காவது வந்திருக்க வேண்டும் அல்லது வரவிருக்கின்றன.//

இதுதானா போட்டுக் கொடுக்கிறது..?