Thursday, February 22, 2007

உணர்வுகள் வலைப்பதிவில் பின்னூட்டமிட

உணர்வுகள் என்ற தமி்ழ் வலைப்பதிவாளர் ஈழத்தவரின் அரசியல்சார் பதிவுகள் பலவற்றை எழுதிவருவதும் அவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
அவருடைய வலைப்பதிவில் அவர் தனக்கேற்றபடி பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக வந்துகொண்டுள்ளது. அதை அவரும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.
பொதுவாக பின்னூட்டங்களை வெளியிடவில்லையென்பது தலைபோகிற சிக்கலாக இருப்பதில்லை. ஆனால் இதுவிடயம் தொடர்பாக வன்னியன் தனது தளத்தில் எழுதியது என் கவனத்தை ஈர்த்த்து.

பின்னூட்டங்களை வெளிவிடாத சிக்கல் மிகப்பாரதூரமானது.
அப்பதிவர் ஈழத்தவரின் ஒட்டுமொத்தக் குரலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டும் கருதிக்கொண்டும்
கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான மறுப்புப்பின்னூட்டங்களை வெளிவிடாமல் தணி்க்கை செய்வது மிகக்பெரிய வன்முறை மட்டுமன்றி, ஈழத்தமிழர் அனைவரின்
சார்பாகவும் தான்சொல்வதே சரியென்று நிறுவமுயலும் ஒற்றைத்தன்மையைக் கொண்டது. இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது.

ஆம்! இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது. ஏற்கனவே அரைகுறை அறிவோடு ஈழத்தவர் பிரச்சினையை அணுகும் பதிவர்கள் (சிலர் இப்போதுதான் தொடக்கநிலையிலேயே இருக்கிறார்கள் என்பது வேறு) உணர்வுகள் போன்ற வலைப்பதிவூடாக அறிவது உண்மைக்குப் புறம்பாக அல்லது ஒற்றைத்தன்மையுடன் கூடிய விளக்கங்களையே. ஈழத்தமிழர் அரசியலில் அவ்வப்போது இடையில் குதித்து குரங்காட்டம் ஆடிவிட்டுப்போகும் நபர்களும் இப்படியானவர்களின் கூற்றுக்களை தமக்கேற்றபடி மேற்கோள்காட்டி ஏதாவது சொல்லிவிடப்போகும் நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இவ்விடயத்தில் நாங்கள் ஏனோதானோ என்றிருக்காமல் கவனமாக இருக்கவேண்டிய தேவையுள்ளது. தான்மட்டும் எழுதிக்கொண்டு தனக்குப்பிடித்த கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக்கொண்டு சரியான எதிர்வினைகளை முடக்கி வலைப்பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வரத் துடிக்கும் தனிப்பட்ட நபரொருவரின் நடவடிக்கை நேரடியாக ஈழத்தமிழர் அரசியலைத் தொடுவதால் நாங்கள் எங்கள் எதிர்வினைகளைப் பதிவாக்க வேண்டும்.

ஏற்கனவே சிலர் சொன்ன யோசனைப்படி ஓர் இடுகையை இங்கு இடுகிறேன்.
அதாவது அங்கு வெளியிடப்படாதென நினைக்கும் பின்னூட்டங்களை இவ்விடுகையில் பின்னூட்டமாகத் திரட்டுவதே அந்நோக்கம்.
அங்கு இடும் பின்னூட்டத்தை இங்கும் இடுங்கள். அங்கு அப்பின்னூட்டம் வெளியிடப்பட்டால் இங்கு அது வெளியிடப்பட வேண்டிய தேவையிருக்காது.
இங்கு வெளியிடப்படும் பின்னூட்டங்களும் 'தமிழ்மணத் திரட்டி தனது பின்னூட்டங்கள் திரட்டும் சேவையை இடைநிறுத்த ஏதுவாக இல்லாத" சந்தர்ப்பத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

பின்னூட்டமிடுவோர் கவனிக்க வேண்டியவை:
நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய உணர்வுகளின் இடுகைக்குரிய URL ஐக் குறிப்பிட்டு, அதன்கீழ் உங்கள் பின்னூட்டத்தை இடவேண்டும்.
அப்போதுதான் அப்பின்னூட்டம் எவ்விடுகைக்குரியது என்பதை மற்றவர்களால் அறியமுடியும்.
இப்படி பின்னூட்டங்கள் திரட்டும் செயற்பாடு எவ்வளவு காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கொழுவியால் தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது.

19 comments:

Anonymous said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_21.html

//அவனது பதிவுகளைத் திருடுவோம், கூச்சல் போட்டுக் கும்மாளமிடுவோம், இங்கு இனிமேல் பதியாதவாறு செய்வோம்//

இவ்வாறு எங்குள்ளது. வீணே ஒப்பாரி வைக்க வேண்டாம்.

வலையுலகில் மட்டும் தான் வெள்ளாளம் வெள்ளமில்லையை அவதானிக்கின்றதாகச் சொல்லும் நீங்கள் ஈழத்தில் பெரும்பான்மை வெள்ளாளரின் ஆதரவு இல்லாமல் புலிகள் விடுதலையடைய முடியுமா எனச் சொல்வதிலிருந்தே உங்கள் மனநிலையைத் தோலுரித்து விட்டீர்கள்.

//தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும் வந்த சாபக் கேடுகள். //
உண்மையில் யார் சாபக்கேடு? ஈழ அரசியலில் அதன் சமூகவியலில் தவறான உங்கள் பார்வைகளுக்கு எழுதும் மறுப்புக்களை ஒளித்து வைக்கும் நீங்கள் சுத்தமுள்ளவரோ..? சுத்துமாத்துள்ளவரோ..?

(இதன் ஒரு பிரதி கொழுவிக்கும் அனுப்பப் படுகிறது.)

Anonymous said...

நல்ல முயற்சி கொழுவி, வாழ்த்துக்கள்.

bala said...

கொழுவி அய்யா..

ஏனிந்த கொலை வெறி?

பாலா

Anonymous said...

அவர் 'சிவனே'என்று இருந்திருக்கலாம். தன்னையொரு மேதாவியாக வெளிப்படுத்தப் போய் இப்படியாகிவிட்டது. தனது கருத்துப்பிழைகளை ஒத்துக்கொண்டாலாவது பரவாயில்லை. மேலும் மேலும் சாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் தாங்கமுடியவில்லை.
"வெள்ளாளர் இல்லாமல் தமிழீழம் உருவாகிவிடுமா...?"என்கிறார். சாதியமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காகவும்தான் பதினெட்டாயிரத்துச் சொச்சம் உயிர்கள் தற்கொடையாக்கப்பட்டன என்பது புரியவில்லை அவருக்கு.
கொழுவி! இது நல்ல முயற்சி. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோலவே தமிழ்மணத்தின் வரையறைகளுக்குட்பட்ட பின்னூட்டங்களைத் தேர்வதில் கவனமாயிருங்கள். எங்களுக்கு 'களம்'முக்கியம். சண்டையிட மட்டுமல்ல... ஆக்கபூர்வமாக எழுதவும் களம் வேண்டுமல்லவா...?

நண்பன் said...

ஒருவருக்கொருவர் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால், அவற்றை முடக்கிப் போட எத்தனிப்பது, அயுதமேந்திய வன்முறையை விடக் கொடுமையானது.

கருத்துகளை உணர்வுகள் திரிக்கிறார் என்னும் பட்சத்தில், உங்கள் இந்த முயற்சி, பாராட்டப்பட வேண்டியதாயிருக்கிறது.

பாராட்டுகள், தொடருங்கள்.

அன்புடன்
நண்பன்

மலைநாடான் said...

//எங்களுக்கு 'களம்'முக்கியம். சண்டையிட மட்டுமல்ல... ஆக்கபூர்வமாக எழுதவும் களம் வேண்டுமல்லவா...?//

கொழுவி!
இது முக்கியமான விடயம். ஆகவே அவதானமாகச் செயற்படுங்கள்.

சிறில் அலெக்ஸ் said...

வித்தியாசமான்அ முயற்சி.

ஜோ / Joe said...

இந்த முயற்சியை வரவேற்கிறேன்.

Anonymous said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_21.html
என்ற பதிவக்கு எழுதிய பின்னூட்டம்

ஆகக் குறைந்தது எந்த வகையயான பின்னூட்டங்களையாவது வெளியிட வேண்டுமென்ற கண்ணியம் கூட உம்மிடம் இல்லை.
பதிவுகளுக்கு சம்பந்தப் படாத பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை என்று அறிக்கை விட்டுவிட்டு இப்போது அனுமதித்திருக்கும் பின்னூட்டங்கள் பதிவுக்கு சம்பந்தமுள்ளதாகவா உள்ளது.

கொழுவியிடம் உள்ள கண்ணியம் கூட உம்மிடம் இல்லை. இதை நீர் வெளியிட மாட்டீர் என்று தெரியும். (கொழுவியை கழுவி என்றால்த் தான் விடுவீர்) பரவாயில்ல..

Anonymous said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_21.html
பதிவுக்கு இட்ட பின்னூட்டம்:
உங்களின் வெறிக்குத் தீனிபோடும் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது நியாயமா..?
கழுவி மனநோயாளர் என வரும் பின்னூட்டங்களை அனுமதித்து உங்களுக்கு நீங்களே குழி வெட்டப் போகிறீர்கள்.

Anonymous said...

உணர்வுகள் என்ற பெயரில் எழுதும் அறிவு உணர்வு சிறிதுமற்றவரின் பக்கத்தைப் போய்ப் பாருங்கள். புதிய உளறலொன்று பதிவிடப்பட்டிருக்கிறது. எப்படியாவது வாதத்தைத் திசைதிருப்பிவிட வேண்டுமென்பதில் பெரிதும் முனைந்திருக்கிறார். மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மொழியாலும் இனத்தாலும் முஸ்லீம்கள் தமிழர்களே என்ற நமது வாதத்தைத் திசைதிருப்பி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கென்ன? அவர்கள் துரோகிகளல்லவா...? என்று புலம்பத் தொடங்கியிருக்கிறார். அவர்கள் சில பல தவறுகளை இழைத்தார்கள் என்றுதான் வரலாறு கூறுகிறது. ஆனால், அதற்காக முஸ்லீம்கள் தமிழர்கள் இல்லை என்று ஆகிவிடுமா...? அப்படிப் பார்த்தால் கிறிஸ்தவரான டக்ளஸ் தேவானந்தா,இந்துவாக இருந்து காட்டிக்கொடுத்த எத்தனையோ பேர் அவர்களெல்லோரும் தமிழர்களே அல்ல என்று கொள்ளலாமா?

மேலும், தன்னோடு வாதிடுகிறவன் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் வாய்க்கு வந்தபடி உளறியிருக்கிறார். மிதக்கும் வெளியை முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்று எண்ணிக் கும்மியடித்திருப்பதை நினைத்தால் 'ஐயோ... ஐயோ... 'என்று தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. இவருக்கு ஆறாம் அறிவு என்றொரு விடயம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இப்போது எழுந்திருக்கிறது. நீங்கள் நினைப்பது சரி... ஆறாம் அறிவு இருப்பவன் ஏன் இப்படித் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு கண் தெரியவில்லையே என்று கதறப்போகிறான்...!

Anonymous said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_22.html

//உங்களைப் போன்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரச்சனையே இது தான், 21 ஆம் நூற்றாண்டுப் பிரச்சனைகளுக்கு 2000 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் உதாரணம் காட்டுவது,//

84 இல் பிரபாகரன் ஐயரை வைத்து தாலி கட்டினதை உதாரணம் காட்டுவது சரியா..

Anonymous said...

காழ்ப்புணர்வு பின்னூட்டங்கள் இட வேண்டாம் எனச் சொல்பவர் வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைப் போய்ப்பாருங்கள்.
தலையிலடித்துக் கொள்ளத் தோன்றுகிறது.

சயந்தன் said...

உண்மையில் நான் அனுப்பிய மறுப்பினை உணர்வுகள் வெளியிட்டிருந்தாராயின் நான் இந்த விளையாட்டிற்கு வந்திருக்கத் தேவையில்லை. அதே நேரம் காழ்ப்புணர்வும் காடைத்தனமும் நிரம்பிய எனத் தொடங்கும் பதிவெதனையும் எனது வலைப்பதிவில் எழுதி அங்கேயும் ஒரு ரணகளத்தை ஆரம்பிக்கும் எண்ணம் சுட்டாலும் இல்லையென்பதால் நான் உணர்வுகளுக்கு எழுதிய எனது மறுப்புப் பின்னூட்டத்தினை இங்கும் அனுப்புகிறேன். (களங்கம் ஏற்படுத்தும் அளவுக்கு எனக்கு நற்பெயரெதுவும் கிடையாதெனினும் ;) தேவையற்ற முறையில் நான் ஒரு போடுகாலியாக (வேலி போடும் போது இடைவெளி வந்தால் இடையில் செருகும் வெறும் தடி) இருப்பதனை ஆட்சேபிக்கவே இந்த மறுப்பு. இதனை உணர்வுகள் அனுமதிக்காத அளவு இதில் என்ன காழ்ப்புணர்வும் காடைத்தனமும் இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை.

உணர்வுகளுக்கு வணக்கம்.
இது இரண்டாவது தடவை எனது பெயரை தேவையற்ற விதத்தில் கொச்சைப் படும் வகையில் நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள்.
ஒரு தடவை நீங்களும் இத்தடவை பின்னூட்டமாகவும் இது அரங்கேறியிருக்கிறது.
ஏற்கனவே எனது பெயரினை இங்கு இழுத்தமை தொடர்பாக நான் உங்களுக்கு அனுப்பிய மடலுக்கு யாதொரு பதிலுமில்லை.

பின்னூட்டங்களில் தனிநபர் ஒருவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவற்றை பதிவர் வெளியிடுவது குறித்த அப்பதிவு தமிழ்மணத் திரட்டியில் இருந்து நீக்கப்படுமளவுக்கு விளைவுகளைக் கொண்டது.

ஏற்கனவே மனநோயாளி என்று கருத்துத் தொனிக்கும் வகையிலும் இப்போ மிருகங்கள் என்ற ரீதியிலும் என்னை விளித்து கருத்து வந்துள்ளது. தயவு செய்து குறித்த கருத்துக்களை நீக்கவும்.

இப்பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா என்ற சந்தேகத்தில் இதனை தமிழ்மண ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் பகுதிக்கும் அனுப்பியுள்ளேன். குறித்த கருத்துக்களை நீக்குவதற்கு அவர்களால் விடுக்கப்படும் கால அவகாசத்தில் நீங்கள் இவற்றை நீக்குவீர்கள் என நம்புகிறேன். நன்றி
தொடர்ந்தும் தமிழ்மணத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.

இது பற்றி தமிழ்மணத்துக்கும் தெரிவித்திருக்கிறேன். இது பற்றி எனது வலைப் பதிவில் பதிவிடும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. தொடர்ந்தும் அங்க நாய்க்குட்டி பூனைக்குட்டிப் படங்களே இடம்பெறும்..;)

Anonymous said...

அவர நெனச்சா ரொம்பப் பாவமா இருக்குங்க.. தன்னோட பதிவில வெளியிட தகுதியான பின்னூட்டங்களைத் தான் அனுமதிப்பாராம். ஆமாங்க.. அங்கே அவரு வெளியிட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்க்கும் போதே புரியிறது அவரோட தகுதி என்னான்னு..? ரொம்பப் பாவமுங்க.. விட்டுடுங்க.. அப்புறம் அழுதுடுவாரு

சித்திரைப்பூவு said...

புதுசா ஒரு பூ தொடங்கியிருக்கு பாத்தனியளே.. அதில சொன்னது படி சிலர் ஈயோட்டுகினம் தான். ஆனா அது யாரெண்டது தெரிஞ்ச விசயம் தானே.

எனக்கொரு ஜோக் நினைவுக்கு வருகுது. மேடையில முன்னுக்கு பார்வையாளராக வெறும் ரண்டு பேர் இருக்க பேசுறவர் ஆரம்பிப்பார்.
இங்கே கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வணக்கம்.

அது மாதிரித்தான் இதுவும்.

Anonymous said...

ஏனப்பனே தமிழ்மணக்காரருக்கு உங்கட போலைத் தட்டுறியள். உணர்வும் தட்டியிருப்பார். சும்மாவே விட்டிருப்பார். அவையளுக்கு இருக்கிற பிரச்சனைக்குள்ளை இந்தத்தலையிடியையும் குடுக்காதீங்கோ ராசாமார். சின்னபிள்ளையள் மாதிரி நுள்ளுறன் கிள்ளுறான் எண்டு போய் ரீச்சரிட்டைச் சொல்லுற மாதிரி... வேணுமே?

Anonymous said...

கொழுவி
உம்மைப் பெரிய ஆள் எண்டெல்லே நினைச்சன். சின்னப்பிள்ளையள் மாதிரி சண்டை பிடிக்கிறியள்.
அங்கை தான் அறிவில்லையெண்டா உமக்கும் இல்லையே.. உதுகளை விட்டெறிஞ்சு போட்டு நிலமைக்குத் திரும்பும்

Anonymous said...

கொளுவி, டோண்டு வேலை உமக்கேன் காணும். டோன் டூ.