Wednesday, February 07, 2007

டோண்டு : வாங்கியதும் திருப்பிக் கொடுத்ததும்.

"நடப்பது யுத்தம்; இதில் எதுவும் நடக்கலாம்; யுத்தத்தில் நடப்பவற்றுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது."

இதைச் சொன்னவர் டோண்டு என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆனால் பல மாதங்களுக்கு முன்பு டோண்டுவைப் பார்த்து இதே வசனம் சொல்லப்பட்டது பலருக்கு ஞாபகம் வராமல் போகலாம்.

ராஜீவ் காந்தி கொலைக்காக பிரபாகரன் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று டோண்டு எழுதிய காலத்தில் இப்பதில் யாரோ ஒருவரால் அவருக்குச் சொல்லப்பட்டது.
இன்று அப்பதில் டோண்டுவால் மற்றவர்களுக்குச் சொல்லப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் நடந்தது யுத்தம். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்தி்ல்லை.
ஆனால் டோண்டு செய்வது யுத்தமா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இங்கு இவ்வொப்பீட்டைச் சொன்னது, டோண்டு செய்வது யுத்தம் என்று சொல்வதற்காகவன்று.
அப்படிச் சொன்னால், கடுகு உருட்டுவதை மலை பிரட்டுவதாக தனக்குத் தானே கற்பனை பண்ணிக்கொண்டு 'நடப்பது யுத்தம்' என்று ஸ்டண்ட் வசனம் பேசிககொண்டிருக்கும் டோண்டுவை நியாயப்படுத்துவதாக முடிந்துவிடும்.

ஒரே வசனம் இருதடவை இருவேறு தரப்பால், இருவேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டவே.

"அந்த நேரத்தில் எனக்கு இதைத்தவிர வேறு தெரிவுகளிருக்கவில்லை" என்று டோண்டு சொன்னபோதும்கூட பழைய கருத்தொன்று ஞாபகம் வந்தது.


குறிப்பு:
நடந்து கொண்டிருக்கும் டோண்டு பிரச்சினையில் எனக்கு எக்கருத்துமில்லை.
சொல்லப்போனால் டோண்டு மாற்றுப்பெயரில் எழுதியதுதான் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைக்கு மூலம் என்பதைக்கூட நான் ஒப்பவில்லை.
அடிப்படை பிரச்சினை வேறு என்றே படுகிறது.

ஆனால், டோண்டுவைப் பற்றி ஒருபதிவும் போடாதவர்களின் வலைப்பதிவுகள் தமிழ்மணத் திரட்டியில் திரட்டப்படாது என்ற கதை காதோரம் வந்தபோது (முன்பு சந்திரமுகி திரைப்படம் வந்தபோதும் இவ்வாறான ஒரு நிலைமை வந்தது) இப்பதிவை எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

2 comments:

Anonymous said...

டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

மனித‌ன்.

Anonymous said...

//உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? //

எங்களுக்கு பிராமணர்கள் பொண்ணு கொடுப்பதாக இருந்தால் கலப்பு திருமணம் செய்வோம்