Monday, February 19, 2007

காதலை மறுக்கும் கூகுள்

கூகுளில் தமிழ் சொற்பிழை திருத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக சிலர் சொல்லக் கேட்டு நானும் ஓடிச் சென்று உலகத்தின் உயர் சொல்லாம் நமக்கெல்லாம் உயிர்ச் சொல்லாம் காதல் என்னும் சொல்லை தட்டச்சு செய்து சோதித்தேன்.

அந்தோ பரிதாபம். கூகுள் காதலை தவறு என்கிறது. காதலை விட்டு விட்டு காவல் தாலி ஊதல் நுதல் போன்றவையே சரி எனச் சொல்கிறது.
கடைசியாக காதலை கூகுளும் தவறு என்கிறது. தவறு என்று சொன்னாலாவது பரவாயில்லை.. உனக்கு காவல் தான் இனி என வேறு எச்சரிக்கிறது. தாலி என்பது கட்டாயத் திருமணத்தைக் குறிக்கிறதோ என்னவோ..?

சொல்லுங்க.. காதல் தப்பா
காதல் தப்பா..

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

சொற்பிழை திருத்தியை யாரேனும் "கலாச்சாரக் காவலர்கள்" உருவாக்கியிருந்திருப்பார்கள் :))

சினேகிதி said...

google purinthukolla ithu google kaathal alla athaum thaandi manitha kaathal :-)