Wednesday, February 21, 2007

விரல் சூப்பும் உணர்வுகள்.. விழிக்கக் கடவது

உணர்வுகள் என்ற போலிப்பதிவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோசத்தோடு சைவ வேளாள மனநிலையில் இருந்து விசம் கக்கும் பதிவுகளைத்தான் இடுகின்றார். மோசமான முறையில் முஸ்லிம் எதிர்ப்பு (முஸ்லீம்கள் தனி இனமாக இருப்பதில் அவருக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை) க் கொண்டு சைவச் சத்தி எடுக்கும் அவரது பதிவுகளில் அவரது கருத்துத் தளம்பல்களையோ, முரண்களையோ சுட்டிக் காட்டினாலோ, அவரது கருத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் விதமாய் எழுதினாலோ, அவர் ஒருபோதும் அதனை வெளியிடுவதில்லை.

விரல் சூப்பும் குழந்தைகள் வலைப் பதிய வருவதில் உள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்றாயினும் மொத்த ஈழத்தவரின் கருத்துக்கள் என்ற வகையில் கும்மியடிக்கும் அவரின் நச்சுக்களுக்கெதிராக சக ஈழத்தவர் என்ற வகையில் எமது மறுப்புக்களைச் சொல்வது அவசியம்.

ஆபாசமான அல்லது கருத்துக்களுடன் சம்பந்தப்படாத தனி நபர் மீதான தாக்குதல்க் கருத்துக்களை தவிர்த்தல் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் தான் மாய்ந்து மாய்ந்து கிறுக்கித் தள்ளிய எழுத்துக்களை கேள்விக்குறியாக்கி விடுமோ எனக் கருதும், அவருக்கு இருக்கின்ற உளச் சிக்கலை தோலுரிக்கும், அவரின் யாழ்ப்பாண வேளாள மனோபாவத்தை அவரின் பதிவகளிலிருந்தே சுட்டும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

புலி ஆதரவுப் போர்வையை ஒருவர் போர்த்துக் கொண்டு விட்டார் என்பதற்காக அவரை அரவணைத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் ஈழ மக்களுக்கு கொஞ்சமும் கிடையாது.

மிக அண்மையில் தனது சைவத் திமிரைக் காட்ட பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் உதாரணத்திற்கு இழுத்தபோதே இவர் இன்னொரு நிதர்சனம் .கொம் என்று புரிந்து விட்டது.

புலிகள் தமிழர் பண்டிகை என்ற முறையில் பொங்கல் கொண்டாடுவது தவிர வேறெந்த சைவப் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

புலிகள் அமைப்பில் தமிழர் பண்பாடும் சைவமும் பிரித்தே நோக்கப்படுகின்றன. புலிகளின் திருமண நிகழ்வுகளில் சைவ ஆகம விதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தாலி கூட வரவேற்கப் படுவதில்லை. மணமகனுக்கு ஒரு கைக்கடிகாரம் அணிவதும் மணமகளுக்கு ஒரு மோதிரம் அணிவதுமே பொதுமை.இது பற்றி வன்னியன் எழுதிய பதிவினை இங்கே படியுங்கள்

இவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான். ஈழத்தை வெறும் யாழ்.கொம் ஊடாகவோ உணர்வுகள்.கொம் ஊடாகவோ நிதர்சனம் .கொம் ஊடாகவோ கண்டு கொள்ளாதீர்கள். அனுபவங்கள் எழுத்துக்களை தீர்மானிக்கின்றன என்ற பீலா அவரின் அனுபவம் எத்தகையது என்பதைச் சொல்கிறது.

இப்பதிவுக்கு எதிர்வினையாக விரைவில் உணர்வுகளில், கழுவியின் கழிவுகள் என்ற பெயரில் அவர் ஒரு பதிவு எழுதலாம். ஏற்கனவே உணர்வுகள் தளத்தில் கொழுவியை கழுவி என அவர் விளித்துள்ளார்.

விசமத்தனமும், விதண்டாவாதமும் நிறைந்த, காழ்ப்புணர்வுடன், காடைத்தனத்தால் கூட்டம் சேர்க்கத் துடிக்கும், கழுவிகளின் வலைப்பதிவில் என்பெயரில் பின்னூட்டம் இடுவேனா?

இது கூட, உவன் சீவுறவன், உவன் மீன்பிடிக்கிறவன் என்பது போல உவன் கழுவுறவன் என, மனிதரைத் தொழில் முறையில் இழிவு படுத்தி வக்கிரத்தை வெளிச்சிந்துகின்ற யாழ்ப்பாண வெள்ளாள சாதித் திமிரின் ஒரு நீட்சிதான்.

17 comments:

Anonymous said...

நியே ஒரு கிறுக்கன்
நீ அவரை பேச வந்திட்டியோ

விசர் பிடித்த ஆளப்பா நீர்

Anonymous said...

கிறுக்கிறவை தான் கிறுக்கர். அப்பிடிப் பாத்தா கொழுவி சின்னக் கிறுக்கன். உணர்வுகள் பெரிய கிறுக்கன்..

மாசிலா said...

வரவேற்கத்தக்க ஒரு நல்ல பதிவு.

சீலன் said...

அவருக்கு ரமணி யாரென்று தெரியாது. profile காட்டப்படவில்லையென்றவுடன் போலிப் பதிவர் என்கிறார். பாவம். அவருக்குப் பின்னூட்டமிடும் ரூபன் மிதுளன் மிதிலன் தூயா பிருந்தன் இவர்களெல்லாம் போலிப் பதிவர்கள் இல்லையாம். ஒரு வேளை கூலிப் பதிவர்களோ.

உணர்வுகளுக்கு பின்னூட்டமிட நீங்கள் தனியான ஒரு பக்கத்தைத் திறந்தீர்கள் என்று சொன்னால் அவர் வெளியிடுவாரா இல்லையா என்ற சிக்கல்கள் இன்றி நாம் அவருக்கு பின்னூட்டங்கள் இடலாம்.

Anonymous said...

அட போட மெண்டல்
நீயும் உன் பதிவும்
நாட்டுக்கிட்டு சாவுடா

Anonymous said...

//உணர்வுகளுக்கு பின்னூட்டமிட நீங்கள் தனியான ஒரு பக்கத்தைத் திறந்தீர்கள் என்று சொன்னால் அவர் வெளியிடுவாரா இல்லையா என்ற சிக்கல்கள் இன்றி நாம் அவருக்கு பின்னூட்டங்கள் இடலாம்.//

நல்ல யோசனை- உடனே செய்யவும். விவாதங்கள் ஒற்றைத் தன்மையின்றி மறுப்புக்களோடும் எதிர்வினையோடும் செல்ல இது உதவும்-

கொழுவி said...

//நாட்டுக்கிட்டு சாவுடா//

அது நாட்டுக்கிட்டு இல்லத் தம்பி.. நாண்டுக் கிட்டு.. தமிழை மாத்தியெழுதலாம். தப்பா எழுதக்கூடாது சரியா..

Anonymous said...

போடா நாதாறி உன்னை போல காட்டி கொடுக்கும் துரோகிகள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை, நீ ஒரு ஐயர் அதான் குல புத்தி எழுத தூண்டுது

DJ said...

கொழுவி, இந்த ஆசாமிக்கு சீரியஸாய் பதிலளித்தால் என்ன? நகைச்சுவையாக பதில் அளித்தால் என்ன....ஒரே மாதிரியே அலறிக்கொண்டிருக்கின்றார். மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று நின்று நிதானித்து பார்க்கும் பழக்கம் கிஞ்சித்தும் கிடையாது.. அடுத்த பிரச்சினை, பின்னூட்டங்கள் அனைத்தையும் அனுமதிப்பதுமில்லை.
.....
எல்லா ஒடுக்குமுறையிற்கும் ஆளாகி நிற்கும் -இப்போது கூட மெளனமாயிருக்கும்- முஸ்லிம் மக்கள் மீது ஏன் இவருக்கு இந்தளவு காழ்ப்புணர்ச்சி என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கின்றேன். தமிழ்வலைப்பதிவுலகில் காழ்ப்புணர்ச்சியையும், சாதிப்பற்றையும் விடவே விடமாடேன் என்று கட்டிப்பிடித்து அலறிக்கொண்டிருக்கும் சிலரோடு இவரையும் சேர்க்கவேண்டியதுதான்.
.....
புலத்தில் சைவக்கோபுரங்கள் எழுகின்றது என்ற 'பெருமை' வேறு. கோயில்களிலும், பாடசாலைச் சங்கங்களிலும், ஊர்ச்சங்கங்களிலும் வெள்ளாளக் கருத்துக்கள் எப்படி ஆழப்புதையுண்டு கிடக்கின்றது என்பது பற்றி எந்தக்கேள்வியுமில்லை.. முஸ்லிம்களை தமிழர்களா அராபியர்களா என்று அவர்களுக்குப் பாடம் நடத்தமுன்னர், வெள்ளாளத் திமிரோடு திரியும் புலத்தில் இருப்பவர்களையும் . -குறைந்தது ரொரண்டோவில் இருப்பவர்களை- தன்னையும் மறுபரிசீலனை செய்ய எதையாவது முதலில் எழுதட்டும்.

கொழுவி said...

//அட போட மெண்டல்
நீயும் உன் பதிவும்
நாட்டுக்கிட்டு சாவுடா

கிறுக்கிறவை தான் கிறுக்கர். அப்பிடிப்பாத்தா கொழுவி சின்னக் கிறுக்கன். உணர்வுகள் பெரிய கிறுக்கன்..

போடா நாதாறி உன்னை போல காட்டி கொடுக்கும் துரோகிகள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை, நீ ஒரு ஐயர் அதான் குல புத்தி எழுத தூண்டுது//

இவ்வாறான பின்னூட்டங்களைக் கூட உணர்வுகள் அனுமதிக்காமல் இருந்தால் அதில் நியாயம் உண்டு. அதை விட்டு விட்டு விவாதத்தை தனக்குத் தேவையான பக்கத்திலேயே கொண்டு செல்லும் அவரின் போக்கு ஒரு போக்குத் தான்.

சீலன் சொன்னது போல உணர்வுகள் எழுதும் பதிவுகளுக்கு பின்னூட்டங்களை வெளியிடும் பதிவொன்றை தொடங்கி அதனை நிரந்தர இணைப்பாகப் பேண உத்தேசம்.

//போடா நாதாறி உன்னை போல காட்டி கொடுக்கும் துரோகிகள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை//

இவர் உணர்வுகளை, அவரின் உள் மன அழுக்குகளை வெளியே தோலுரித்துக் காட்டியதைத் தான் காட்டிக் கொடுத்தல் என்கிறார் போலும்.

Anonymous said...

அனானியாய் வந்தெழுதும் ஆளை ஆரெண்டு தெரியுதோ

றூபன் (ரூபன் இல்லை) said...

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு

Anonymous said...

நன்றி கொழுவி
அவ்வாறான புதிய பக்கம் ஒன்றைத் திறந்து உணர்வுகளின் பதிவுகளுக்கு உங்கள் பதிவில் பின்னூட்டமிட அனுமதிப்பது அவரது கருத்துக்களுக்கான அனைத்து விதமான விவாதப் பக்கங்களையும் சீராக கொண்டு செல்ல உதவும். கருத்து ரீதியில் வன்முறைத் தன்மையுடன் செயல்ப்படும் அவரது செய்கையை முறியடிக்க அவ்வாறான ஒரு பக்கம் தேவை.

வடலிப்பனைவாத்து said...

பனங்காட்டு நரியைக் கிச்சுச்கிச்சு மூட்ட வைக்கத் தூண்டுவதை வலைத்தீநரிகள் சங்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆமா. ஜாக்கிரதை. கபதார். நரி கடிக்கும். ஊளையிடும். ஓடும். ஆமா ஜாக்கிரதை

nari said...

panankoddai nari salasalappuku anchathu

Anonymous said...

பெரும்பான்மை வெள்ளாளர்களின் ஆதரவு இல்லாமலா, தமிழீழம் விடுதலையடையும்.

என்று உணர்வுகள் உளறிக் கொட்டியிருக்கிறார். எவ்வளவோ தடுத்தும் கடைசியில பூனை வெளிய வந்திட்டுது. அவரின்ர வெள்ளாள முகமூடி கிழந்து விட்டது

Anonymous said...

//எவ்வளவோ தடுத்தும் கடைசியில பூனை வெளிய வந்திட்டுது.//

பூனை இல்லிங்கோ.. நரிங்கோ.. அதுவும் பனங்காட்டு நரிங்கோ..