Monday, April 30, 2007

தமிழக மீனவர்களை புலிகள் கடத்தினார்களா? புலிகள் விளக்கம்

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.

இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை

தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.

தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானத்தைச் சுட்டு விழுத்தினர் புலிகள்

இன்று இலங்கை நேரப்படி மதியத்திற்கு சற்றுப் பின்பாக 2.30 மணியளவில் தமிழீழ வான்பரப்பில் நுழைந்து விடுதலைப் புலிகளின் வான்தளங்கள் மீது தாக்குதல் முற்பட்ட இலங்கை அரச வான்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக மிகைவேக தாக்குதல் விமானங்கள் மீது புலிகளின் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையினர் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துக் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் இலங்கை வான்கலங்கள் தமது பகுதிகளுக்குள் நுழைந்த போது புலிகளின் தானியங்கி விமான எதிர்ப்புச் சாதனங்கள் விமானத்தை நோக்கி இயங்கியதாகவும் வானில் வெடித்துப் புகை கக்கியபடி மேலெழுந்த விமானம் கடலில் விழுந்ததாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் இரணைமடு வான்பரப்பில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியிலேயே புலிகளின் விமான ஓடுபாதை உள்ளதென தெரிவிக்கப் படுகிறது.

கடந்த 5 வார காலத்தில் புலிகளின் விமானங்கள் 3 வான் தாக்குதல்களை கொழும்பு மற்றும் பலாலிப் பகுதிகளில் நடாத்தியுள்ளனர். தவிர தாக்குதல் முடிவில் பத்திரமாக தளம் திரும்பியுமுள்ளனர்.

இந்நிலையில் இன்று வான்தாக்குதல் செய்ய சென்ற அரச வான்மடை ஜெற் விமானத்தினை புலிகள் சுட்டு விழுத்தியுள்ளனர்

----

இதிலிருந்து தெரிவதானது

புலிகளிடம் நல்ல நிலையில் உள்ள ராடார்களும் நல்ல நிலையில் உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்களும் உள்ளன.

அல்லது

மருந்தடிக்கும் சிறிய இலகு ரக விமானங்களை சுடுவதிலும் பார்க்க மிகை வேகை ஜெற் விமானங்களைச் சுட்டு விழுத்துவது எளிதானது.

இலங்கை கிபிர் விமானம் மீது இரணைமடுவில் தாக்குதல்

தமிழ்நெற் செய்தியின்படி இன்று இரணைமடுவில் தாக்குதல் நடாத்த வந்த இலங்கை கிபிர் விமானம் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள். விமானம் கருநிறப் புகை கக்கச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். புலிகளின் அதிகாரிகள் இரணைமடுப் பிரதேசத்தில் அமைந்த தமது தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
இதே வேளை கட்டுநாயாக்காவில் புறப்பட்ட விமானம் ஒன்று மீண்டும் தளம் சேரவில்லை என ஒரு செய்தி தெரிவிக்கிறது.

Tuesday, April 24, 2007

கிரிக்கெட் பார்ப்பதற்காக யுத்தநிறுத்தம் - புலிகள் அறிவிப்பு

இது நக்கல் பதிவில்லை.

தற்போது நடைபெறும் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் சிறிலங்காவும் - நியூசிலாந்தும் மோதும் போட்டியை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக இன்றிரவு தாம் எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லையென விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளார்கள். இச்செய்தியை படைத்துறைப் பேச்சாளர் இராசையை இளந்திரையன் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன.

"இன்றிரவு நாங்கள் எவ்வகையான தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் நாங்களும் துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப்போகிறோம்" என்று இளந்திரையன் AFP செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளதாக செயதிகள் வந்துள்ளன.
நேற்றிரவு யாழ்ப்பாணத்தின் பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதலை நடத்தியிருந்ததும், அதில் அரசபடைக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுவதும், அதன் பெறுபேறாக வடக்கில் இராணுவமட்டத்தில் கடுமையான பதற்றம் நிலவுவதும் யாவரும் அறிந்ததே.

செய்தி இணைப்பு

________________
இனி கொழுவி:

கிரிக்கெட்டுக்காக போர் நிறுத்தமா?
அவங்களுக்கும் வருத்தம் தொத்தீட்டுதோ?
என்னையா நடக்கிறது வன்னியில்?
யாருக்காவது தெரியுமா?

பலாலியில் புலிகளின் விமானங்கள் இன்றும் மருந்தடித்தன..

புலிகள் தம்மிடமுள்ள வயலுக்கு மருந்தடிக்கும் விமானங்களைக் கொண்டு இன்று அதிகாலை இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி கூட்டுப்படைத் தளம் மீது மருந்தடித்துள்ளார்கள். இலங்கை இராணுவத்திற்குத் தேவையான மருந்து தான். இன்றும் ராடார்கள் செயற்படவில்லையோ என்னவோ..? யாராவது இலங்கைக்கு ஒழுங்கான ராடார்களைக் கொடுக்க முடியுமா ப்ளீஸ்..?

Monday, April 23, 2007

புலிகளின் படகுகள் மீன் பிடிக்கவா பயன்பட்டன..?

புலிகள் 90 களில் தமக்கென கடற்படையைக் கட்டியெழுப்பிய போது அவர்களிடமுள்ள படகுகளைக் கொண்டு மீன் மட்டுமே பிடிக்கலாம் என கை கொட்டிச் சிரித்தவர் பலர். சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இலங்கைக்கு இஸ்ரேலோ இந்தியாவோ அமெரிக்காவோ எவர் கொடுத்த கப்பல்களினதும் ஈழக் கடல்ப் பரப்பு மீதான நடமாட்டத்தை கட்டுப் படுத்தி வைத்திருப்பவை இந்த மீன் பிடிப் படகுகள் தான்.
பெரும் சண்டைகளின் போக்கை மாற்றியவை இந்த மீன் பிடிப் படகுகள் தான். ஈழக் கடலின் ஆழமெங்கும் துருப்பிடித்து அமிழ்ந்து கிடக்கும் இலங்கைப் போர்க்கப்பல்களின் ஆயுளை முடித்தவை இந்த மீன்பிடிப் படகுகள் தான்.


செய்தி : இந்தியா இலங்கை அரசுக்கு கடலோர ரோந்துப் படகுகளை வழங்கியுள்ளது
பாடல் : வா வா என்றே அழைக்குது கடல் அலை. வருவோம் போவோம் தடுப்பவர் யார் எமை..?

இந்தத் தமிழ் எப்படிப் புரிகிறது?

கீழே ஒருவசனம் தந்திருக்கிறேன்.
அவ்வசனத்தை நீங்கள் எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்பதைப் பின்னூட்டமாகத் தெரிவியுங்கள்.
இது எனது தமிழ்ப்புரிதலை மீள்பார்வைக்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கை.
'இயன்றவரை தமிழில்' எழுதப்பட்ட ஒருவசனம் என்போன்ற சிலருக்கு ஒருமாதிரியும், இன்னும் சிலருக்கு முற்றாக வேறுமாதிரியும் விளங்குவது ஏனென்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இனி கீழே வருவது தமிழ்மண நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் வந்த வசனம்.

இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை'




மேற்படிப் பத்தியில்,
எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.


என்றுவரும் வசனத்தின் பொருள்தான் சிக்கலைக் கொடுக்கிறது.
இதில் நான் விளங்கிக்கொள்வது:
தமிழ்மணத் திரட்டி நிர்வாகத்தில் இருப்பவர்கள் "தமது செயற்பாட்டு விவரங்களை" தார்மீகக் காரணங்களுக்காக' தாமே விரும்பினால் மட்டுமே சக வலைப்பதிவர்களுக்குத் தரலாம் என்று சொல்கிறார்கள்.
அதாவது யார்யார் திரட்டியில் என்னென்ன பணி செய்கிறார்கள், என்பது தொடர்பான விவரங்களை என்று கருதிக்கொள்ளலாம்.

இதுதான் மேற்படி வசனத்தில் என்போன்றவர்களுக்கு விளங்கிக்கொண்டது.

ஆனால் வேறுசிலரோ வேறுமாதிரி இதை விளங்கிக்கொள்கிறார்கள். எப்படியென்றால்,

"திரட்டி நிர்வாகம் தார்மீகக் காரணங்களுக்காக தாமே விரும்பினால், திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களின் விவரங்களை சக பதிவர்களுக்கு வெளியிடும்"

மேலே நீலநிறத்தில் இருக்கும் முறையில் விளங்கிக்கொண்டவர்களுக்கும் அதற்கும்மேலேயுள்ள முறையில் விளங்கிக்கொண்ட என்னைப்போன்றவர்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு?

மற்றவர்கள் தற்செயலாகத்தான் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால் -/பெயரிலியின் இடுகையைப் படித்தபின்னும் தொடர்ந்தும் அதேகருத்தில் இருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு எனது தமிழ்மேலேயே ஐயம் வந்துவிட்டது.
நாங்கள் கொஞ்சப்பேர்தான் தமிழைப் பிழையாகப் பயன்படுத்துகிறோமோ?

சரி, தனியே அந்த வசனத்தை மட்டும் வாசித்தறிவதில்தான் சிக்கல் என்றால் அவ்வசனம் வரும் பத்தியை (இவ்விடுகையின் தொடக்கத்தில் மேற்கோளிடப்பட்ட பத்தி) வாசித்தால் இன்னும் விளக்கம் கிடைக்கும்.

அதனால்தான் யார்யாருக்கு எப்படியெப்படி தமிழ்மண நிர்வாகத்தினரின் அறிவிப்பு வசனம் விளங்கியுள்ளது என்பதை அறிய இவ்விடுகை.
மேலே இரண்டுவிதமான புரிதல்களைத் தந்துள்ளேன். அதில் கொழுவியின் புரிதலா, மற்றவர்களின் புரிதலா உங்களுடைய புரிதல் என்பதைப் பின்னூட்டத்தில் சொன்னால்போதும். அவை இரண்டையும்விட வேறேதாவது புரிந்தால் அதையும் எழுதுங்கள்.

யார் சொன்னது மொழி தொடர்பாடலுக்கானது மட்டுமென்று?
தமிழ் மிகச்சிறந்த அரசியல் மொழியாகவும் உள்ளது.

***
இவ்விடுகையும் விளங்காமல் வழமைபோல் 'இலங்கைத் தமிழில் காமடிப் பதிவாகவே' தெரியச் சாத்தியமுள்ள சிலருக்கு, அவர்களுக்குப் புரியும்வண்ணம் ஒருவர்மூலம் மொழிபெயர்த்து இடஇருப்பதால் அதுவரை அவர்கள் பொறுமை காக்கும்படி கொழுவியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்.


****
இவ்விடுகைக்கு, 'விழிப்புணர்வு' என்ற குறிசொல் கொடுக்கப்பட்டது தற்செயலானதே. யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.

Sunday, April 22, 2007

இந்தியா புலிகளுக்கு வழங்கியுள்ள ஆயுத விபரம்

இந்தியா புலிகளுக்குக் கையளிக்கவென இலங்கை இராணுவத்தினரூடாக வழங்கியுள்ள ஆயுத விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சண்டைக் களங்களில் இவை புலிகளின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும் வரையான இடைப்பட்ட காலங்களில் இவை இலங்கை இராணுவத்தினரால் பராமரிக்கப் படுமெனவும் தெரிவிக்கப் படுகிறது. இந்த இடைப் பட்ட காலத்தில் இந்த ஆயுதங்கள் மூலமாக இலங்கை அப்பாவித் தமிழர்கள் கொல்லப் படுவார்கள் என்பது இந்திய அரச இயந்திரத்திற்கு தெரியாதென்பதனை நாம் நம்புவோமாக. இனி ஆயுத விபரங்களைப் பார்க்கலாம்.

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01 (தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படாதிருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம்)

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400 (ராடார்களை விட இவை பயன்படும்)

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

நன்றி
நன்றி
நன்றி

Monday, April 09, 2007

ஒரு நன்றிப் பதிவு

என் பதிவுகளுக்கு வந்து பார்வையிடும் படிக்கும் பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி.

Sunday, April 08, 2007

மொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு ( MPVA )

வழக்கமாய் தமிழமண அரசியற்சர்ச்சைகளினால் பல்வேறு குழுக்கள்,அணிகள், இயக்கங்கள், பேரவைகள், மன்றங்கள் மற்றும் தீவிரவாத ( ! ) இயக்கங்கள் தோன்றியுள்ள நிலையில் "ஃபீரியாக கிடைத்தால் பினாயிலை கூட குடிக்கத்தயங்காத" பால்வேறுபாடுகள் கடந்த கொலைவெறி பதிவர்களினால் பாதிக்கபட்ட இளைஞர்களினால் இவ்வியக்கம் துவங்கப்படுகிறது.

இயக்கத்தின் கொள்கை :

பதிவுவெழுதி எழுத்தாளன் ஆகிறேன் பார்' என்று மொக்கை பதிவு போட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களையும் பதிவர்களையும் பீதியைக்கிளப்பி வரும் மொக்கை பதிவர்களிடம் இருந்து காப்பாற்றுவது.


வாரம் ஒரு மொக்கை பதிவரை வலையுலகிற்கு அடையாளம் காட்டுவது
கட்டாய ஆட்சேர்ப்பு உண்டு
பெண் பதிவர்களுக்கு 51.49% இடஓதுக்கீடு வழக்குவது.
சிறுவர்களை சேர்ப்பதில்லை ( ஐ.நா வேண்டுகோளுக்கு இணங்கி)

அமைப்பின் கட்டமைப்பு

தலைவர் - தேடிக்கொண்டிருக்கிறோம்

கருத்தாலோசகர் - "மொக்கை புயல்" பாலபாரதி ( இந்த அமைப்பு விளங்கினாப்பில போலத்தான் )

தகுதி - மொக்கை என்று தனியே ஒரு இடுகையை ஓதுக்காமல் தனதெல்லாப்பதிவுகளையும் மொக்கையாகவே இடுவதால் இயற்கையாக இப்பதவி பெறுகிறார்

தெற்காசிய பொறுப்பாளர் - "தமிழ்மன குடிதா(டா)ங்கி" வரவனையான் ( ஆகத்தகுதியான நபர் )

தகுதி - சுமாரான ஒரு பதிவு போட்டுவிட்டு அதன் பின் 6 மாதம் மொக்கை பதிவுகளாக போடுவதால், பதிவுகள் மட்டுமல்ல இவருக்கு வரும் பின்னூட்டங்களும் மொக்கையாகவே இருப்பதாலும்

ஐரோப்பிய பொறுப்பாளர் - " மொக்கை ஒலி" சயந்தன் மாஸ்டர் ( முன்னாள் தென் துருவ வலைபதிவர் சங்க செயலாளர் )

தகுதி - பல மொக்கை பதிவர் தோன்றுதற்கு உந்துசக்தியாய் இருக்கிற உதாரண புருஷர்

அமெரிக்க கண்ட பொறுப்பாளர் - "அசின் புகழ்" பின்நவீன போராளி. டி.சே.தமிழன்

தகிதி - போடுவது மொக்கை பதிவு என்று "அறியாமலே" போடுவதால்

நிதி பொறுப்பாளர் - "மொக்கை மின்னல்" பொட்"டீ'க்கடை சத்தியா

தகுதி - 15 நிமிடத்தில் 40 மொக்கை பின்னுட்டம் போடும் திறனாளர்

தென்துருவ பிரிவு பொறுப்பாளர் - வசந்தன் அண்ணை

தகுதி - பதவி இறக்கப்பட்ட தெந்துருவ வலைப்பதிவர் சங்க செயலர்

குரல்தரவல்ல அதிகாரி - " மொக்கை ஒலிக்குயில்" சினேகிதி

தகுதி - தன் பதிவுகள் மொக்கை என்று தெரிந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தீ

தொழில் நுட்பத்துறை பொறுப்பாளர் - பொன்ஸ்

தகுதி - மொக்கை பதிவுகள் யாரிட்டாலும் தேடிப்போய் மொக்கை பின்னூட்டம் போடுவதால்

வழங்கல் பிரிவு - "மொக்கை நளபாகி" தூயா

தகுதி - புதிய மொக்கை சமையல் குறிப்புகளை வழங்கி மொக்கை இயக்கத்தை திக்குமுக்காட செய்வதால்



சிறப்பு தளபதிகள் :

டோண்டு - தமிழ் நாடு பின்னூட்ட சிறப்புத்தளபதி

செந்தழல் ரவி - தக்கான பீட பூமி கட்டளளத்தளபதி

கானா பிரபா - கலைத்துறை சிறப்புத்தளபதி

லக்கி - பின்னூட்ட கொமோண்டொ பிரிவு தளபதி

சுகுணா திவாகர் - பின்நவீனத்துவ கொமோண்டோ பிரிவு சிறப்புதளபதி

தமிழ்நதி - இலக்கிய அதிரடிப்படைப்பிரிவு சிறப்புத்தளபதி

சின்னக்குட்டி - ஒளிக்கலை ஆவன கிட்டங்கி காப்புத்தளபதி

லிவிங் ஸ்மைல் - மிரட்டல் பிரிவு சிறப்புதளபதி

கண்மணி - 541 ஆம் பிரிவு சிறப்புதளபதி

கற்பகம் - திராவிட பிரிவு சிறப்பு தளபதி

மலைநாடன் - சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர்


தலைவரும் உளவுப்பிரிவு தளபதியும் எந்த நேரத்திலும் அறிவிக்கபடலாம்.

கொழுவியின் குறிப்பு: அண்ணை.. அமைப்புத் தொடங்கிறம். எங்களுக்கெண்டொரு இடம் கிடைக்குமட்டும் உங்கடை இடத்தை பாவிக்கட்டுமோ எண்டும் அமைப்பில பதவியொன்று தாறம் எண்டும் கேட்ட படியாலை நான் இடத்தைக் குடுத்தன். பிரசார மற்றும் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் பதவி என்று தான் சொன்னவை. ஆனா இங்கை வந்து பாத்தா எனக்கு ஒரு பதவியும் தரேல்லை.

தம்பி மாரே.. எனக்கு நீங்க தாறா பதவி வேண்டாம். நான் வைக்கிறன் எனக்கு பதவி..

கொழுவி: ஊடுருவி உள்நுழைந்து தாக்கும் தளபதி.. ( இதுக்கு உண்மையாவே நான் பொருத்தமானவன் தான் :))

Thursday, April 05, 2007

வாழ்த்துக்கள் வரவனையான்..

இன்று தனது -- பிறந்த தினத்தை கொண்டாடும், தொடர்ச்சியாக பல்வேறு தளங்களிலும், தமிழ்மணத்திலும் சமூகப் பணியாற்றுபவரும், அண்மையில் பாலபாரதியுடன் இணைந்து அவரின் சதிக்குப் பலியாகி, வெகு சிறப்பாக மொக்கை ஒலிப்பதிவொன்றை தமிழ்மணத்தில் வெளியிட்டு பெரும் புரட்சியை செய்தவருமான திரு வரவனையான் அவர்களை, கொழுவியின் மத்திய கமிட்டி வாழ்த்துகிறது.

இந்த நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கிப் பேருவகை அடைகின்றோம். நமது தமிழக தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளிக்கிறது.

இவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..


பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பின்குறிப்பு 2:வாழ்த்துக்களுக்கு மட்டும் வழி விடுவதனால் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி பின்னூட்டமிட மாட்டோம். மன்னிக்கவும்.

Monday, April 02, 2007

சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூ

வலையுலகில சோமிச் சித்தப்பா, சயந்தன் மாமா, வசந்தன் பெரியப்பா, கானா பிரபாத் தம்பி, மலைநாடான் தாத்தா, சிநேகிதியக்கா எல்லாரும் குரல்ப் பதிவு போடுவதனால் நானும் ஒரு குரல் பதிவு போடுகிறேன். கேட்டு விட்டு எப்பிடியிருக்கென்று சொல்லுங்க.. நன்றி வணக்கம்..