Monday, April 30, 2007

இலங்கை கிபிர் விமானம் மீது இரணைமடுவில் தாக்குதல்

தமிழ்நெற் செய்தியின்படி இன்று இரணைமடுவில் தாக்குதல் நடாத்த வந்த இலங்கை கிபிர் விமானம் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள். விமானம் கருநிறப் புகை கக்கச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். புலிகளின் அதிகாரிகள் இரணைமடுப் பிரதேசத்தில் அமைந்த தமது தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
இதே வேளை கட்டுநாயாக்காவில் புறப்பட்ட விமானம் ஒன்று மீண்டும் தளம் சேரவில்லை என ஒரு செய்தி தெரிவிக்கிறது.

4 comments:

Anonymous said...

புலிகள் ராடார் வாங்குமிடத்தில் இலங்கை அரசும் வாங்கினால் புலிகளின் விமானத்தை சுட்டு விழுத்தலாம். அதை விட்டு விட்ட ஓசியாக் கிடைக்கிறது என்பதற்காக கண்டவனிடத்தில் எல்லாம் ராடார் வாங்க கூடாது

வெற்றி said...

கொழுவி,
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் இச் செய்தியை மறுத்துள்ளது. தமது விமானங்கள் எதுவும் புலிகளால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்கிறது பாதுகாப்பு அமைச்சு.

பலாலி படைத்தளம் மீது புலிகளின் வான்படை தாக்கிய போதும் முதலில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றுதான் சொன்னார்கள். அடுத்தநாள் தான், விழுந்தும் மீசையில் மண் இல்லையென்பது போல் புலிகள் தாக்கினார்கள், ஆனால் சேதம் சிறிதளவு தான் என்றார்கள்.

எத்தனை நாளைக்கு முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியும் என்று பார்ப்போம்.

Anonymous said...

ஏய்யா உதுல இந்தியாவ இழுக்கிறீர்.இருந்தாலும் உமக்க்கு பகடிதான்.மருந்தடிக்கும் விமானத்தை கண்டே இவனுகளுக்கு பேதி புடுங்குதென்டா வேறேன்னத்த சொல்லூறது.ஆனால் ஒரு சந்தோசம் இனிமேல் நவாலி சேர்ச்,செஞ்சோலை போன்ற கொடுமைகள் நடக்காது என நம்பலாம்.

Anonymous said...

தேவன் said..
தாம் கொட்டாவி விடும் கனவுகளின் பாதிப்பால் வயதுக்குரிய தம் அறிவுவளர்சியையே செருப்பால் அடிவாங்க வைத்து விடுகிறார்கள்.
தமிழ்மணத்தில் மருந்தடிக்கும் விமானம் என்றவகையான பதிவொன்றைப் பார்த்ததால் சொலிறேன்.
என்ன செய்வது எங்கள் போராட்டத்தின் வரலாற்றுக்கு இப்படி சின்னப் புள்ளதனமான பேச்சாளர் ஒன்றும் புதிசு இல்லைத்தானே.
தன் படையைப் பார்த்தாலே சிறுனீர்கழிப்பிக்கவைக்கும் புலிகளுக்கு என்று சொல்லிவைத்த றஞ்சன் வியயறட்னாவின் நகைச்சுவையை உணர்வை மிஞ்சவா போகிறது இவர்கள் பிதற்றல்கள்.