வழக்கமாய் தமிழமண அரசியற்சர்ச்சைகளினால் பல்வேறு குழுக்கள்,அணிகள், இயக்கங்கள், பேரவைகள், மன்றங்கள் மற்றும் தீவிரவாத ( ! ) இயக்கங்கள் தோன்றியுள்ள நிலையில் "ஃபீரியாக கிடைத்தால் பினாயிலை கூட குடிக்கத்தயங்காத" பால்வேறுபாடுகள் கடந்த கொலைவெறி பதிவர்களினால் பாதிக்கபட்ட இளைஞர்களினால் இவ்வியக்கம் துவங்கப்படுகிறது.
இயக்கத்தின் கொள்கை :
பதிவுவெழுதி எழுத்தாளன் ஆகிறேன் பார்' என்று மொக்கை பதிவு போட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களையும் பதிவர்களையும் பீதியைக்கிளப்பி வரும் மொக்கை பதிவர்களிடம் இருந்து காப்பாற்றுவது.
வாரம் ஒரு மொக்கை பதிவரை வலையுலகிற்கு அடையாளம் காட்டுவது
கட்டாய ஆட்சேர்ப்பு உண்டு
பெண் பதிவர்களுக்கு 51.49% இடஓதுக்கீடு வழக்குவது.
சிறுவர்களை சேர்ப்பதில்லை ( ஐ.நா வேண்டுகோளுக்கு இணங்கி)
அமைப்பின் கட்டமைப்பு
தலைவர் - தேடிக்கொண்டிருக்கிறோம்
கருத்தாலோசகர் - "மொக்கை புயல்" பாலபாரதி ( இந்த அமைப்பு விளங்கினாப்பில போலத்தான் )
தகுதி - மொக்கை என்று தனியே ஒரு இடுகையை ஓதுக்காமல் தனதெல்லாப்பதிவுகளையும் மொக்கையாகவே இடுவதால் இயற்கையாக இப்பதவி பெறுகிறார்
தெற்காசிய பொறுப்பாளர் - "தமிழ்மன குடிதா(டா)ங்கி" வரவனையான் ( ஆகத்தகுதியான நபர் )
தகுதி - சுமாரான ஒரு பதிவு போட்டுவிட்டு அதன் பின் 6 மாதம் மொக்கை பதிவுகளாக போடுவதால், பதிவுகள் மட்டுமல்ல இவருக்கு வரும் பின்னூட்டங்களும் மொக்கையாகவே இருப்பதாலும்
ஐரோப்பிய பொறுப்பாளர் - " மொக்கை ஒலி" சயந்தன் மாஸ்டர் ( முன்னாள் தென் துருவ வலைபதிவர் சங்க செயலாளர் )
தகுதி - பல மொக்கை பதிவர் தோன்றுதற்கு உந்துசக்தியாய் இருக்கிற உதாரண புருஷர்
அமெரிக்க கண்ட பொறுப்பாளர் - "அசின் புகழ்" பின்நவீன போராளி. டி.சே.தமிழன்
தகிதி - போடுவது மொக்கை பதிவு என்று "அறியாமலே" போடுவதால்
நிதி பொறுப்பாளர் - "மொக்கை மின்னல்" பொட்"டீ'க்கடை சத்தியா
தகுதி - 15 நிமிடத்தில் 40 மொக்கை பின்னுட்டம் போடும் திறனாளர்
தென்துருவ பிரிவு பொறுப்பாளர் - வசந்தன் அண்ணை
தகுதி - பதவி இறக்கப்பட்ட தெந்துருவ வலைப்பதிவர் சங்க செயலர்
குரல்தரவல்ல அதிகாரி - " மொக்கை ஒலிக்குயில்" சினேகிதி
தகுதி - தன் பதிவுகள் மொக்கை என்று தெரிந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தீ
தொழில் நுட்பத்துறை பொறுப்பாளர் - பொன்ஸ்
தகுதி - மொக்கை பதிவுகள் யாரிட்டாலும் தேடிப்போய் மொக்கை பின்னூட்டம் போடுவதால்
வழங்கல் பிரிவு - "மொக்கை நளபாகி" தூயா
தகுதி - புதிய மொக்கை சமையல் குறிப்புகளை வழங்கி மொக்கை இயக்கத்தை திக்குமுக்காட செய்வதால்
சிறப்பு தளபதிகள் :
டோண்டு - தமிழ் நாடு பின்னூட்ட சிறப்புத்தளபதி
செந்தழல் ரவி - தக்கான பீட பூமி கட்டளளத்தளபதி
கானா பிரபா - கலைத்துறை சிறப்புத்தளபதி
லக்கி - பின்னூட்ட கொமோண்டொ பிரிவு தளபதி
சுகுணா திவாகர் - பின்நவீனத்துவ கொமோண்டோ பிரிவு சிறப்புதளபதி
தமிழ்நதி - இலக்கிய அதிரடிப்படைப்பிரிவு சிறப்புத்தளபதி
சின்னக்குட்டி - ஒளிக்கலை ஆவன கிட்டங்கி காப்புத்தளபதி
லிவிங் ஸ்மைல் - மிரட்டல் பிரிவு சிறப்புதளபதி
கண்மணி - 541 ஆம் பிரிவு சிறப்புதளபதி
கற்பகம் - திராவிட பிரிவு சிறப்பு தளபதி
மலைநாடன் - சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர்
தலைவரும் உளவுப்பிரிவு தளபதியும் எந்த நேரத்திலும் அறிவிக்கபடலாம்.
கொழுவியின் குறிப்பு: அண்ணை.. அமைப்புத் தொடங்கிறம். எங்களுக்கெண்டொரு இடம் கிடைக்குமட்டும் உங்கடை இடத்தை பாவிக்கட்டுமோ எண்டும் அமைப்பில பதவியொன்று தாறம் எண்டும் கேட்ட படியாலை நான் இடத்தைக் குடுத்தன். பிரசார மற்றும் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் பதவி என்று தான் சொன்னவை. ஆனா இங்கை வந்து பாத்தா எனக்கு ஒரு பதவியும் தரேல்லை.
தம்பி மாரே.. எனக்கு நீங்க தாறா பதவி வேண்டாம். நான் வைக்கிறன் எனக்கு பதவி..
கொழுவி: ஊடுருவி உள்நுழைந்து தாக்கும் தளபதி.. ( இதுக்கு உண்மையாவே நான் பொருத்தமானவன் தான் :))
24 comments:
ஆரம்பிசுட்டாருய்யா ;-)
சிரிக்கத்தானே முடியும் :)))
(இதுக்கு எதும் ஆக்க பூர்வமான விமர்சனம் வைக்கமுடியாதே ;))
அண்ணை,
இப்பிடி அமைப்புத் தொடங்கிற அறிவித்தலை விடுக்கிற இடுகையிலயாவது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதலாமே?
நிறையப் பிழைகள் கிடக்கு. திருத்திவிடுங்கோ.
ஐயோ...!என்ரை பேர் வரக்கூடாதே எண்டு வசந்தன்ரை ஊர் முருகமூர்த்தியானைக் கும்பிட்டும் பிரயோசனமில்லை. இப்பவே 'சொதி'க்கெல்லாம் பதிவு போடுறாங்கள். இனி என்னவெல்லாம் செய்வாங்களோ எண்டு ஒரே பதட்டமாக் கிடக்கு பாத்து பாத்து... அது சரி சோமியின்ரை பேரைக் காணேல்லை. அவருக்கு நாங்கள் எங்கடை வீட்டிலை ஒரு பெயர் வைச்சனாங்கள். சோகமா ஆயிட்டார் என்னண்டு கேளுங்கோ.(இதுவொரு மொக்கைப் பின்னூட்டம். யார் மனதையும் புண்படுத்துவதாக இருந்தால்... இருந்தாலென்ன? எடுக்க மாட்டேன்)
\\ஐயோ...!என்ரை பேர் வரக்கூடாதே எண்டு வசந்தன்ரை ஊர் முருகமூர்த்தியானைக் கும்பிட்டும் பிரயோசனமில்லை. \\
oh yea apa unga ooru murugan vera engaum kumbida podaro antha neratila:-)))
\\அவருக்கு நாங்கள் எங்கடை வீட்டிலை ஒரு பெயர் வைச்சனாங்கள்.\\
athu ena pear endu enaku madum sollungovan:-)
நம்மிடம் கதைக்காமல் இப்படி ஒரு அமைப்பான்னு ரோசனையிலேயே உள்ளாற வந்தன்.
இயற்கையாகவே பதவி கிடைச்சுட்டதால அமைதியா போறேன்.
கவிமட தலிவர் கவுஜர் ஆசிப் அண்னாச்சியையும், தம்பி ஆழியூரானையும் உட்டதுக்கு என் கண்டனங்கள்.
:)
பேசாம பாலபாரதிக்கு தலைவர் பதவியே கொடுத்திடலாம்ங்க...
//இயற்கையாகவே பதவி கிடைச்சுட்டதால அமைதியா போறேன்.//
மாம்ஸ், அநியாயத்துக்கு நல்லவனா இருகீகளே உங்கள ரவுண்டுகட்டி ஆப்படிக்கிறாங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்களே
//அவருக்கு நாங்கள் எங்கடை வீட்டிலை ஒரு பெயர் வைச்சனாங்கள். சோகமா ஆயிட்டார் என்னண்டு கேளுங்கோ//
தமிழ்நதி , அந்த பெயர் உள்ளவர் "வீட்டுக்கு போகும் வழி" என்று நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலைய வாசலில் வழிகாட்டும் பலகை இருப்பது தெரியும்தானே
சூப்ப்ப்ப்ப்பர்! :)))) சிரிச்சி சிரிச்சி கண்ல தண்ணி வந்திட்டது :)
விட்டுப் போன தளபதிகள் ஆசிப் அண்ணாச்சி, ஆழியூரான், சோமி, மதி, சென்ஷி, நாமக்கல்லார் சார்பாக கண்டனங்களை நானும் பதிஞ்சிக்கிறேன்.
கொழுவி, உங்களின் "சுக்கு பக்கு கூ" ஒலிப்பதிவுக்குப் பின்னர், தலைவர் பதவிக்கு உங்களைத் தவிர வேறு யாருமே தகுதியற்றவர் என்று திடமாக நம்புகிறேன்.. என்ன சொல்கிறீர்கள்? ;)
ஒலிக்குயில் சிநேகிதியக்கா, சீக்கிரமா மறுபடி தமிழில் பின்னூட்டம் எழுதத் தொடங்குங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு..
என்னையையும் விட்டுப்புட்டீங்க. ஓ அந்த இலகா எனக்கா :-)). கொழுவி புரியுது உங்கள் மதிநுட்பம்
தமிழ்நதி said...
//அது சரி சோமியின்ரை பேரைக் காணேல்லை//
இந்த அறிவிப்பை விட்டதே அவராத்தான் இருக்கும்.
வழமையான கொழுவியின்ர ரச் இதில மிஸ்ஸிங்.
//வசந்தன்ரை ஊர் முருகமூர்த்தியானைக் //
அப்ப உங்கட ஊர் முருகமூர்த்தியான் என்னாச்சு?
//வழமையான கொழுவியின்ர ரச் இதில மிஸ்ஸிங்.//
கொழுவிக்கெண்டொரு ரச்சைக் கண்டுபிடித்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அது உண்மைதனே.. எனக்குப் பதிவு தருவதாகச் சொல்லி அமைப்பிற்கு தளத்தில் இடம் கேட்டார்கள். அவ்வளவும் தான். ஆயினும் கடிவாளம் எனது கையிலும் உள்ளது.
இயக்கத்துக்காக எதையும் செய்வேன் என்று தலைவரின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்!
அது சரி "மொக்கை" என்றால் என்ன்?
மொக்கைன்னா மொக்கை தான்...
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்-னு கேள்விப்பட்டதில்லையா?
மொக்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா கருத்துதான் தெரியவில்லை:-(
அப்படியே எனக்கு ஏதாவது போஸ்டிங் போட்டுக் கொடுத்தீங்கன்னா கழகக் கூட்டத்துக்கு ஆள் திரட்டுறதுல இருந்து சோடாபாட்டில், சைக்கிள்செயின், அரிவாள், கத்தி, கம்புன்னு அல்லாத்தையும் என் செலவுலேயே கொண்டாந்து கொடுத்திருவனே.. எதுனாச்சும் செய்யுங்கப்பா..
//மொக்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா கருத்துதான் தெரியவில்லை:-( //
அனானி,
இஞ்ச பாருங்கோ..
:))
senshe
இங்கே தமக்கும் பதவிகள் தருமாறு கேட்டவர்களின் கோரிக்கைகள் மத்திய கமிட்டிக்கு அனுப்பப் பட்டுள்ளன. அவர்கள் கூடி முடிவெடுப்பார்கள். நான் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன். வேண்டுமானால் சிபாரிசு செய்யலாம்.
:))))))
//இயக்கத்துக்காக எதையும் செய்வேன் என்று தலைவரின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்!//
அதனால்த்தானோ என்னமோ அப்பறமா தலைவர் எழும்பவேயில்ல..
பெயரை "மக்கள் ஜனநாயக மொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு" என்று பெயர் மாற்றினால் நல்லா இருக்கும்.
...
:-) கலக்கல்...
Post a Comment