Thursday, July 12, 2007

கிபிர் ரக விமானம் புலிகளால் சுடப்பட்டது

இலங்கை அரசின் விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக மிகையொலித் தாரை விமானம் ஒன்று வவுனியா வான்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகளால் இன்று சுடஇடு விழுத்தப்பட்டதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட விமானத்தின் உதிரிப்பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விழுந்திருக்கின்றன. விமானம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விழுந்து நொருங்கியது என மேலும் அவர் தெரிவித்தார்.

(புலிகள் எங்கு விமான எதிர்ப்பு ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அங்கு இலங்கை அரசும் வாங்கினால் பிழைத்துக்கொள்ளும். அதை விடுத்து எங்களிடம் தான் வாங்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களின் சொல்லைக் கேட்டால் உள்ளதும் இல்லாது போகும்.)


12 comments:

Mayooran said...

புலி பதுங்குவது பாய்வதற்க்குத்தான். இட்லி வடை விற்க்கும் பார்பன்கள் இதனை நம்பமாட்டார்கள்.

Anonymous said...

kozhuvi,

aaathaaaaram ???!!!

கொழுவி said...

http://www.eelampage.com/?cn=32563

வந்தியத்தேவன் said...

//(புலிகள் எங்கு விமான எதிர்ப்பு ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அங்கு இலங்கை அரசும் வாங்கினால் பிழைத்துக்கொள்ளும். அதை விடுத்து எங்களிடம் தான் வாங்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களின் சொல்லைக் கேட்டால் உள்ளதும் இல்லாது போகும்.)//
எம் கே நாராயணன் கவனிக்க.

Anonymous said...

கிழக்குப் பறி போயிட்டு. கவனத்தைத் திசைதிருப்ப கிபிர் கதை குபீரென்று வருது. புலி என்னதான் செய்யப்போகுதென்று பார்ப்பம்.

theevu said...

வாடா வாடா வாங்கிக்கோடா பாட்டு எந்தப் படத்திலை?

Anonymous said...

//கிழக்குப் பறி போயிட்டு. கவனத்தைத் திசைதிருப்ப கிபிர் கதை குபீரென்று வருது. புலி என்னதான் செய்யப்போகுதென்று பார்ப்பம். //

முதலில் உன்னுடைய பெயரில் வரவும் அனானி.

Anonymous said...

தேனிசைசெல்லப்பாவின் இந்தப்பாட்டு பொருந்தி வருமா?
http://www.eelasongs.com/content/view/54/12/

Anonymous said...

பேசாம ஒவ்வொரு கிபீரா விழுத்தினாலே பாதி சண்டை முடிந்து விடும் எத்தனை கிபீர் வாங்குவினம் ஒன்றே பலகோடிபில்லயனாமே.

கொழுவி said...

//பேசாம ஒவ்வொரு கிபீரா விழுத்தினாலே பாதி சண்டை முடிந்து விடும் எத்தனை கிபீர் வாங்குவினம் ஒன்றே பலகோடிபில்லயனாமே.//

அப்பிடி சொல்ல முடியாது. இலவசமா குடுக்கிறதுக்கும் அண்டை அயலில ஆக்கள் இருக்கினம். அதை நீங்கள் மறக்க கூடாது.

Anonymous said...

நல்ல செய்தி கொழுவி.
ஆனாலும் சின்ன சந்தேகம். சிறீலங்கா கிபிர் விமானம் சாம்பல் அல்லது சாம்பல் கலந்த நீலத்தில் இருக்கும். இங்கு பச்சையாக இருக்குதே! ஒருவேளை பஸ்ஸுக்கு நீலமும் பச்சையும் மாத்துறதுப்போல மாதேக்க விடுபட்டுப்போச்சோ????

Anonymous said...

இந்த முறை கோத்த கோமாளிகல் என்ன சொல்கிறார்கள் என பார்க்க்லாம்.