Tuesday, September 04, 2007

மன்னிக்கவும் சிநேகிதர்களே - அன்பின் சூழ்ச்சிக்கு பலியாகிட்டேன்

-முற்குறிப்பு- அண்ணை திரும்ப வந்துவிட்டதால் இந்த பதிவு சென்சிட்டிவ் ஆன பதிவாக இருக்காது என நம்புகிறேன். அண்ணை கண்டுக்காதீங்க -)

சமீபத்தில் இன்று காலையிலிருந்து வந்த போன கால்கள் அல்ல போன் கால்கள் என்னைக் கரைத்துக் குடித்து விட்டன. அதிலும் சுச்சர்லாந்திலிருந்து அந்த பெரியண்ணன் பேசிய போது கரைந்து காணாமலேயே போய் விட்டேன். இதோ உருகி இளகி இறங்கி வருகிறேன் நண்பர்களே.

உங்கள் அன்புக் கோரிக்கைகளை மனதில் கொண்டு அதற்கு மதிப்பளித்து அடிபணிந்து மீண்டும் எழுத தயாராகி விட்டான் இந்த கொழுவி. நான் விடைபெறுவதாயச் சொல்லி பதிவெழுதிய போது அழுது துயர்கொண்டெழ எனையழைத்து அழைத்தவர் ஆயிரம் பேர். அவர்களுக்கு நன்றி.

கொண்டோடி என்னை மன்னித்துக் கொள்ளும். நான் உமது பாதையிலிருந்து விலகிப் போனாலும் இன்னொரு குறுக்கு வழியால் உமக்கு முன்பே வந்து நிற்பேன்.

26 comments:

Anonymous said...

என்ன விளையாட்டிது நீர் எப்ப சொன்னீர் எழுதப்போறதில்லன்னு - ?

குழம்பிப்போய்...

கொழுவி said...

குழப்பி மன்னிக்கவும் - ஒரு தவறு நடந்து விட்டது. இது இரண்டாவதாய் போட வேண்டிய பதிவு. தவறுதலாக முதலாவதாய் வெளியிட்டு விட்டேன். முதலாவது பதிவை எழுதி இங்கே தான் எங்கோ வைத்திருந்தேன் . காணவில்லை.

TBCD said...

இது சூப்பரு...ஆன அண்னன் சொல்லி எல்லாம் திருந்தக் கூடாது...

யாருமே போன் பன்னலையின்னாக்கூட..
பெயர் சொல்ல வேண்டாம் என்று சொன்னா அந்த பதிவர்க்கு...என்று கொஞ்சம்..சேக்கனும்..

Pot"tea" kadai said...

:))))))))))))

Anonymous said...

/கொண்டோடி என்னை மன்னித்துக் கொள்ளும். நான் உமது பாதையிலிருந்து விலகிப் போனாலும் இன்னொரு குறுக்கு வழியால் உமக்கு முன்பே வந்து நிற்பேன்./

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவன்தானே கொழுவி, கொண்டோடி. தான் வரித்துக்கொண்ட நாயகனுக்காக, அவன் வெறுத்து ஒதுக்கியபோதும் எதையும் செய்யத் துணிந்து தன்னின்பம், தன்தூக்கம, தன்னலம், தன்பதிவு அனைத்தையும் துறந்து அணைத்துக்கொள்பவன்தான் உண்மையான கொழுவி என்று எமது தமிழ்ச்சமுதாயத்தின் முன்னைய கொழுவிகள் காட்டவில்லையா? அதுபோல தன்னிலிருந்து உடல்பிரிந்தாலும் உயிரை எடுக்கும் நாயகர் கொண்டோடிக்காக கொண்டோடாமலே கொழுவித்தழுவி குலாவி குலைத்திருப்பவனே கொழுவி என்று அறியாதா இவ்வலையுலகம்.

கொழுவியை இச்சமூகம் வாழ விடவில்லை. ஓடினான் ஓடினான். வலைப்பதிவின் எல்லைக்கே ஓடினான். பிறகு களைத்துப் போனதால், கால் தடுமாறக் கையைத் தொங்கப்போட்டபடி திரும்பிவந்தான். எதற்காக ஓடினான்? ஏன் வலைப்பதிவு செந்தமிழ்பேசுகிறவர்களின் பெருங்கூடாரம் என்பதற்காகவா? இல்லை இல்லை; செந்தமிழும் நாத்தழுதழுக்கக் கற்றுக் கொல்லும் கூத்தாட்டம் நிறைந்து என்பதற்காக. அதற்காகத்தான் திரும்பிவந்தான். சேற்றுக்குள்ளே இருக்கும் சுகம் பன்னிகளுக்கும் தமிழ்பொத்தானுக்கும் மட்டுமா? இல்லையே, பழக்கப்பட்டால், பசுமாட்டுக்கும் இதமல்லவா?

மரமும் கொடியும்போல ஆரத்தழுவிக்கழுவி ஒன்று சேர்ந்தபின்னால், கொழுவியை எவரும் கொண்டோட முடியாது. கொண்டோடியுடன் எவரும் கொழுவமுடியாது. இது மனிதக்காதலே அல்ல. மதில்மேற்காத்தல். உர்ர்ர்ர்ர்... மியாவ்!

Anonymous said...

//அதிலும் சுச்சர்லாந்திலிருந்து அந்த பெரியண்ணன் பேசிய போது கரைந்து காணாமலேயே போய் விட்டேன். //

யாருங்க அந்த பெரிய அண்ணாச்சி..சும்மா சொல்லுங்க சார் :))

கதிர் said...

:))

Unknown said...

//கொழுவி said...
குழப்பி மன்னிக்கவும் - ஒரு தவறு நடந்து விட்டது. இது இரண்டாவதாய் போட வேண்டிய பதிவு. தவறுதலாக முதலாவதாய் வெளியிட்டு விட்டேன். முதலாவது பதிவை எழுதி இங்கே தான் எங்கோ வைத்திருந்தேன் . காணவில்லை.//
இதைப்படித்துவிட்டு நான் சிரித்த வெடிச்சிரிப்பினால் அலுவலத்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்று யாரோ இங்கேதான் எங்கேயோ எழுதிவைத்திருந்தார்கள். காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணலாமென்றால் அதையும் காணவில்லை.

மாசிலா said...

நக்கல்?

ம்...ம்...ம்...நடத்துங்க!

;-D

கொழுவி said...

திரும்பவும் சொல்லுறன்
இது இரண்டாவதாய் வரவேண்டிய பதிவு. இதற்கு முதல் ஒரு பதிவு வந்திருக்க வேண்டும். எழுதி வைத்திருந்தேன் காணவில்லை. அதனால் திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சில விசயங்கள் பின்ன முன்ன அல்லது முன்னப் பின்ன நடக்கிறது வழமைதான். கண்டுக்காதீங்க.

Sri Rangan said...

//குழப்பி மன்னிக்கவும் - ஒரு தவறு நடந்து விட்டது. இது இரண்டாவதாய் போட வேண்டிய பதிவு. தவறுதலாக முதலாவதாய் வெளியிட்டு விட்டேன். முதலாவது பதிவை எழுதி இங்கே தான் எங்கோ வைத்திருந்தேன் . காணவில்லை.//

கொழுவி,இதை வாசித்துவிட்டு நானும் சிரித்து இருமிக்கொண்டேன்(பேய்த் தண்ணி இப்போது).என் மனைவியோ "என்ன இளிப்பு என்றாள் தொல்லைக் காட்சி பார்த்தபடி".ஒரு பயல் வலைப் பதிவில் நையாண்டியாய் எழுதுகிறான்.ஆனால்,அது நகைச்சுவையாகவும் இருக்குதென்றேன்.எட பாவி! உனக்கு ஏதாவது தந்தாகவேணும்... "தமிழ்மணத்துக்கு நீ ஒரு கலகலப்புக்காரன்"எனும் மிகப் பெரிய பட்டத்தை உனக்கு தருகிறேன்.இதை வைத்துக் கடைசி காலத்தை நன்றாகச் சமாளிக்கவும்.

கொழுவி said...

//பேய்த் தண்ணி இப்போது//

நமக்கெல்லாம் தேத்தண்ணியை விட்டால் கதியேது.. ?

Anonymous said...

ஏன் உங்கை கான்கீன் கிடையாதோ?
நெடுக ஏன் தேத்தண்ணி? கான் தண்ணியும் ஒரு மா(த்)தத்துக்குக் குடிக்கலாமே ?

Anonymous said...

சிறந்த கும்மியாகிய இந்த பதிவில் பின்னூட்டங்களும் ஈழத்து தமிழில் விளையாடுகின்றன...

அதனால் "ஈழத்தமிழ் கும்மியர் 2007" என்ற சிறப்பான பட்டத்தை உமக்களித்து பெருமைகொள்கிறோம் நாம்...!!!!!!!!!

Anonymous said...

///குழப்பி மன்னிக்கவும் - ஒரு தவறு நடந்து விட்டது. இது இரண்டாவதாய் போட வேண்டிய பதிவு. தவறுதலாக முதலாவதாய் வெளியிட்டு விட்டேன். முதலாவது பதிவை எழுதி இங்கே தான் எங்கோ வைத்திருந்தேன் . காணவில்லை.///

கடுமையாக சிரிக்கவைத்தது;...

dondu(#11168674346665545885) said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.

சரியான நேரத்துக்குத்தான் திரும்பியிருக்கீக. இன்னும் ஒரு நாள் தாமதிச்சிருந்தாலும் சரி போய் வான்னு சொல்லியிருப்பாக. அப்ப என்ன செஞ்சிருப்பீங்களாம்?

நான் சிரிச்ச சிரிப்பில் பக்கத்துல இஸ்திரி கடைக்காரன் குழந்தை பயந்து போய் அழ ஆரம்பிச்சிடுத்து.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சரியான சரவெடிப் பதிவு இது....

கலக்கறீங்க போங்க.

வரவனையான் said...

உம்ம லொள்ளுக்கு அளவில்லையா, சரி சரி வாரும் ஒழுங்காய் உருப்படியான பதிவாய் போடும்

thiru said...

:))))))

Unknown said...

இந்த வசனம் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கிறதே!

அப்பாவியாக....

Kasi Arumugam said...

கொல்றீங்களே....:-)

இன்னுமா தொலைஞ்சது கிடைக்கலே?

Anonymous said...

// இது இரண்டாவதாய் போட வேண்டிய பதிவு. தவறுதலாக முதலாவதாய் வெளியிட்டு விட்டேன். முதலாவது பதிவை எழுதி இங்கே தான் எங்கோ வைத்திருந்தேன் . காணவில்லை. //

I request thamizmanam to remove this second post until Kuzhuvi finds the first post.

Vaa.Manikandan said...

இதை வகைப்படுத்தியிருக்கீங்க பாருங்க...அறிவியல்/நுட்பம்...பட்டாசு கிளப்பல்....செத்தா எவன் அழுவான்னு கணக்கு எடுக்கிற பதிவா போட்டு போட்டு..நல்லா பொழப்பு நடத்துறாங்க..

கொண்டோடி said...

அண்ணை,
கண்ணெல்லாம் கலங்குது. நா தழுதழுக்குது. கை நடுங்குது.....
சொல்லிறதுக்கு ஒரு சொல்லும் வாயில .. சேச்சே...கையில வருதில்லை.

இது எனக்கு மட்டும்தானா? வேறு யாருக்காவது இந்த உணர்ச்சி வருதா?

-------------
செந்தழலார் தந்த பட்டம் நல்லாயிருக்கு.
ஆனாலும் மனுசன் 'இலங்கை' தமிழிலிருந்து 'ஈழ' தமிழுக்கு மாறியிருக்கிறார். இடையில 'த்' வேற வந்திருக்கு.
சந்தோசமாக் கிடக்கு.
-------------
அனானியாக வந்து பராசக்தி வசனம் பேசியவரே,
கொழுவிக்கும் கொண்டோடிக்குமான உறவு பற்றிய உங்கள் கருத்து இனிக்கிறது. ஆனாலும் எழுத்துநடையிலேயே கையொப்பத்தைப் போட்டுவிட்டு அனானியாக எழுதுவதெல்லாம் வேண்டாத வேலை. நேரடியாகவே எழுதலாமே?

Unknown said...

"""இது இரண்டாவதாய் வரவேண்டிய பதிவு. இதற்கு முதல் ஒரு பதிவு வந்திருக்க வேண்டும். எழுதி வைத்திருந்தேன் காணவில்லை. அதனால் திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறேன். """"


ha ha ha hah hah ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ah ah ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha hah hah ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ah ah ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha


Really enjoyed...... excellent...... still laughing..... paaratta enakku vaarthaikal kidaikavillai.... ezhudhi pazhakkam illai.... keep it up...

கொழுவி said...

இப்ப என்ன சொல்லிட்டன் எண்டு ஆளாளுக்கு சிரிக்கிறியள். சில விசயங்கள் முன்னைப் பின்னை நடக்கிறது தானே. சரியோ..