Tuesday, March 11, 2008

பொத்திக்கொண்டு போவதே புத்தி

சிலரை அலச்சியப்படுத்துவதே
நமக்கு அழகு !!

இப்படி தோழர் தமிழச்சி தன் பதிவில் தானிட்ட பின்னூட்டத்தில் தானே கைப்பட எழுதியிருக்கிறா. உண்மையில் அந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அவரது அக்கருத்து மிகச் சரியானது என இரு பின்னூட்டம் இட்டேன்.. அந்தோ பரிதாபம் - அந்த இரண்டும் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர்கள் ஏதோ கொழுவி ஆபாசமாக எழுதியிருந்ததாக தோன்றக் கூடாதல்லவா.. அது தான் இந்த வேலை வெட்டியற்ற பதிவு--

தமிழிச்சிக்கு ஒரு வேண்டுகோள் - சில பின்னூட்டங்களை வெளியிட விருப்பமில்லையென்றால் அவை உங்கள் கட்டமைக்கப்பட்ட இமேஜை கவுத்திடும் என்றால் அவற்றை வெளியிடத் தேவையில்லையே - எதற்காக வெளியிட்டுப் பின்னர் அழிக்க வேண்டும் -? :)))

அப்புறம் - முந்தாநேத்திலிருந்து வேலை வெட்டியற்றிருப்பதால் உங்கள் பதிவிற்கு வர முடிந்தது. ::)))

பொத்திக்கொண்டு போவதே புத்தி (நன்றி தமிழ்நதி) என்றறிந்திருந்தும் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும் -

3 comments:

Anonymous said...

கொழுவி,பின்னூட்டத்தைப் போட்டுவிட்டு அழிப்பது என்பது ஒரு தந்திரம்.
பின்னூட்டத்தை அனுமதித்தால் உடனே தமிழ்மணத்தில் மறுமொழியிடப்பட்ட பதிவுகளின் கீழ்க் காட்டப்படும்.அதனால்தான் பின்னூட்டத்தை அனுமதித்துவிட்டு பிறகு அழிக்கிறார்.அதில் தன் பதிவு வரவேண்டும் என்ற விருப்பத்தில்தான் தமிழச்சி இப்படிச் செய்கிறார்.அவர் ஒரு புகழ்விரும்பி என்பதனை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை :)

Anonymous said...

உந்தத் தமிழச்சியை ஏன் இன்னும் தமிழ்மணத்துல வச்சிருக்கினம் எண்டதுதான் எனக்கு விளங்கேல்ல.வீட்ட அம்மாக்கிட்ட,சகோதரங்கள்ட என்ட பதிவு தமிழ்மணத்துல வந்திருக்குது எண்டு தைரியமாக் காட்டமுடியாமக் கிடக்கு.அவயளின்ட கண்களில் உவவின்ட தலைப்புகள் பட்டிச்சினமெண்டா வீட்டை எடுத்திருக்கிற இன்டர்னெட்டுக்கும் தடை போடுவினம்.

தமிழச்சிக்கு உந்தமாதிரி எழுத்துக்கள்தான் எழுதவரும் எண்டு தெரிஞ்சபிறகும் எதுக்கு இன்னும் தமிழ்மணத்துல சேர்த்துக்கொண்டிருக்கினம்?

Anonymous said...

I would only blame you for writing comments on third-rate blogs :-)