சமீபத்தில் பதிவர் சின்னக்குட்டி தமிழ்மணத்திலிருந்து சூடான இடுகைகளை நீக்க கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். பிறரின் வேண்டுகோளுக்கிணங்கி கோரிக்கை நிறைவேறாமலே அவர் தனது உண்ணா நோன்பினை இடையில் நிறுத்தியிருந்தார்.
ஆயினும் காலம் தாழ்த்தியேனும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறார் என நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது நல்ல தொடக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் மலைநாடானும் இதுகுறித்த கருத்தறியும் வாக்குப்பதிவொன்றினை ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன் பெறுபேறுகள் தெரியும் முன்னரேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் தனது வாக்களிப்பின் முடிவுகளை பொதுவில் விட அவரை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
எனினும் வரும்காலங்களில் சூடான இடுகைகளை தூக்கியமை ஜனநாயக மறுப்புச் செயல் எனவும் சரியானது எனவும் பெரும்பாலான இடுகைகள் அமையக்கூடும் எனவும் ஆனால் சூடான இடுகைகள் இல்லாத காரணத்தினால் அவை பின்னுக்கு தள்ளப்படக் கூடும் எனவும் நோக்கர்கள் நோக்குகின்றனர்.
இதற்கிடையில் வரும் சனிகிழமை வரை தனது பதிவுகளை சூடான இடுகையில் இடம்பெறச் செய்வேன் என சூளுரைத்தவரது நிலைமை குறித்து எதுவும் தெரியவரவில்லை என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அவரது அறிக்கைகள் இன்று இரவிற்குள் மீடியாக்களுக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்திகள் தொடரும்
3 comments:
அதுகுறித்த அவரது அறிக்கைகள் இன்று இரவிற்குள் மீடியாக்களுக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது//
பிந்திய செய்திகள்
அவரது அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. கொழுவியின் தீர்க்க தரிசனம் குறித்து மக்கள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர் :))
சின்னக்குட்டியின் கோரிக்கை நிறைவேறியதைத் தொடர்ந்து கொழுவி அவர்கள் எல்லாருக்கு பிரியாணி அளித்து உற்சாகமூட்டுவார் என தெரிவித்துகொள்கிறோம்.
கொழுவி/குழவி எதிர்ப்பாளர்கள் சார்பாக
"விவசாயி"
கீழே உள்ள சுட்டியையும் பார்க்கவும்
இங்கே அழுத்தி பார்க்கவும்
இங்கே அழுத்தி பார்க்கவும்
Post a Comment