Friday, March 21, 2008

அவளா சொன்னாள்? இருக்காது.

'அப்படி அதுவும் நடக்காது' - இது அடுத்த வரி.

பதிவர் தமிழச்சியிடம் 'கவிதை எழுதும் சொவ்வறையை' வெளியிடச்சொல்லிக் கேட்டு ஓர் இடுகை எழுதியிருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள்.

எதிர்பார்த்தது போலவே 'எவண்டா சொன்னான் கவிதைன்னு'? என்று ஓரிடுகையை தமிழச்சி எழுதியிருந்தார்.

நானெழுதிய இடுகை தன்னை நக்கல் பண்ணுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட சில வசனங்களை மேற்கோளிட்டு விளக்கியுள்ளார்.
அவ்விடுகை நக்கல் செய்கிறது என்று தமிழச்சி புரிந்திருப்பது ஒருபக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் அதிர்ச்சியுமாக உள்ளது.
சரி அதைவிட்டுவிட்டு விடயத்துக்கு வருவோம்.


அவ்விடுகையிலே, தான் எழுதியது கவிதை என்று யார் சொன்னது என்று காட்டமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
சிக்கல் என்னவென்றால், நான் சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட 'சொற்கூட்டம்' (நன்றி கொழுவி: அந்தக்காலத்து கவிதன் - மஸ்ட்டூ சண்டை ஞாபகம் வருதா? பாவம், கவிஞர் மணிகண்டனும் மாட்டுப்பட்டிருந்தார்.) வெளிவந்த இடுகை, 'கவிதை / சிறுகதை' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழச்சி அச்சொற்கூட்டத்தை சிறுகதை என்று சொல்லமாட்டார் என நம்புகிறேன்.

அவ்விடுகைக்கு முன்பு அவர் எழுதிய ஒருவரியில் ஒரு சொல்லைப் போட்டு எழுதிய 'சொற்கூட்டங்களும்' இவ்வாறே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் காதலைச் சொல்லும் சொற்கூட்டங்களும் இருந்தன.
அவற்றுக்கான பின்னூட்டங்கள் 'கவிதை ரொம்ப சூப்பர்' என்ற தொனியில் வந்திருந்தபோதும்கூட, அவை கவிதையில்லை என்ற மறுப்பை அம்மணி வெளியிட்டதாக ஞாபகமில்லை.

இவையெல்லாம் சேர்ந்தே, அச்சொற்கூட்டங்களை 'கவிதை' என்று அவரே சொல்கிறார் என்று எம்மை நம்ப வைத்தன.
சரி, ஓரிடுகையை வகைப்படுத்திய முறையை வைத்து தீர்மானமாக நாம் வாதிட முடியாதுதான். வகைப்படுத்தல் எழுதியவரால் மட்டுமன்றி வேறு நபர்களாலும் செய்யக்கூடியவை என்ற நுட்பத்தையும் நாம் அறிந்தேயுள்ளோம். (ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரேமாதிரி நடப்பதிலுள்ள நிகழ்தகவைக் குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது.)

சரி.
அச்சொற்கூட்டங்களைக் 'கவிதை' என்று தவறாகக் குறிப்பிட்டதற்காக மனுஷியிட்ட வருத்தம் தெரிவித்து ஓரிடுகை எழுதுவம் எண்டு நினைச்சா, வேறோர் இடத்தில அம்மணி பிளந்து கட்டினது சிக்குப்பட்டிச்சு.

சிறில் அலெக்ஸ் எழுதின கவிதை (இதை அவரே கவிதை எண்டுதான் சொல்லிறார்) ஒண்டுக்கு தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்கிறா இப்பிடி:


//
ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//

ஆகா... ஆகா...

அதாவது 'கவிதை' எழுதத் தோன்றி எழுதுவாவாம். எங்களை மாதிரி ஆக்கள் நையாண்டி பண்ணிப் போடுவம் எண்டதுக்காக அதிலயிருந்து தப்ப, 'கிறுக்கல்கள்' எண்டு சொல்லிப் போடுவாவாம். விமர்சனங்களிலிருந்து தப்ப (அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா இல்லையா எண்டதை ஆய்வாளர் சுகுணா திவாகரிட்ட கேக்க வேணும். ;-)) இது நல்ல 'டெக்னிக்'காம்.

இதுக்குப்பிறகு என்ன கோதாரிக்கு நான் வருத்தம் தெரிவிக்க வேணும்?
நீங்களே சொல்லுங்கோ...

=========================
"எவண்டா சொன்னான் அந்தப்பின்னூட்டம் எழுதியது நான்தானென்று? எனது பெயரில் எந்த நாதா'றி'யோ அதை எழுதிவிட்டது" என்று ஒரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து சிலவேளை வரக்கூடும்.
அப்போது எனது பதில் என்னவென்பதை முற்கூட்டியே எழுதிவிடுகிறேன்.

"எனக்குத் தெரியும் நீங்கள் அதை எழுதியிருக்க மாட்டீங்களெண்டு. அதாலதான் 'அவளா சொன்னாள்? இருக்காது" என்று தலைப்பு வைத்து இடுகையை எழுதியிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?"

=========================
சிலவேளை இப்படியொரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து வராமலேகூடப் போகலாம். அப்போது மேற்குறிப்பிட்ட 'தலைப்பு வைத்துத் தப்புதல்' முறை கேலிக்குரியதாகிவிட்டதே என உங்களில் யாராவது கேட்கலாம். அதற்கும் பதலளித்து விடுகிறேன்.

'ஐயையோ....
அதனால்தான் இவ்விடுகையின் தொடக்கத்திலேயே எழுதியிருக்கிறேன்... அப்பாடலின் இரண்டாம் வரி - இவ்விடுகையின் முதல்வரி.
==அப்படி எதுவும் நடக்காது==
நான் தீர்க்கதரிசி தானே?

========================

எதற்காக இப்பிடி முற்கூட்டியே பதில்களைத் தயார் பண்ணி வெளியிட வேணும்? எண்டு கேக்கிறியளோ?
சும்மா சும்மா ஒவ்வோர் இடுகைக்கும் பதிலிடுகை எழுதிக்கொண்டிருக்கிறதை விட முன்னமே எழுதிவிட்டா எங்களுக்கு நேரம் மிச்சம் தானே? அவைக்குக்கூட பதிலைப் பார்த்ததால எதிர்க்கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லாததால நேரம் மிச்சம்.
சும்மா சும்மா எழுதிக்கொண்டிருக்க நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...

=====================
'இதெல்லாம் எப்பிடியண்ணை?' எண்டு கேக்கிற ஆக்களுக்கு....
இன்ன இன்னார் இப்பிடித்தான் எண்டதை அறிஞ்சிருக்கிறம்.

விஜய் பாணியில் சொன்னால்,

"எவ்வளவோ கண்டுபிடிக்கிறோமாம்..
இந்தக் கண்டுகளையும் பிடிக்க மாட்டோமே?

5 comments:

வவ்வால் said...

ஓய் கொழுவி,

ரொம்ப கொழுவிட்டு பின்னாடி நீர் தழுவிட்டு போய்டுவீர் (பெண் பிள்ளையை தழுவுதென்றால் ரொம்ப இஷ்டமா இருக்குமே) இதை எல்லாம் மெய்யாலுமே நடக்கிற சண்டைனு நினைக்கிற நாங்கலாம் என்னாவுறது :-))
(இதை யார் சண்டைனு சொன்னா, அப்படித்தானே சொல்லப்போறீர்)

கொழுவி said...

ஓய் கொழுவி,//

நானில்ல நானில்ல - இது கொண்டோடி -

என்னைப் பொறுத்தவரை
பட்டது போதும் பொண்ணாலே
இதை பட்டினத்தாரும் :) சொன்னாரே

தமிழ்பித்தன் said...

அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா///

இது முறத்தால் புலி விரட்டிய மறத்தமிழ் குலத்துக்கு இழுக்கு எதுக்கும் ஒரு பகீஸ்கரிப்பை நடத்துவமே

King... said...

//ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?//

கொஞ்ச நாளைக்கு முதல் எழுதியிருந்தது...


//நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...//



?????????????

King... said...

என்னைப் பொறுத்தவரை
பட்டது போதும் பொண்ணாலே
இதை பட்டினத்தாரும் :) சொன்னாரே

???????????????