Saturday, September 27, 2008

கரும்புலிகள் காயம் !

கிளிநொச்சியில் அமைந்திருந்த பெண் கரும்புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று மதியம் விமானப்படை விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு இரணைமடு குளக்கட்டு பகுதியில் அமைந்திருந்த முகாம் மீதே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இவ் முகாமுக்கு புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது இலங்கை அரச செய்தி!
அவர்களின் தாக்குதல் இலக்கு இச் சிறு பாலகன்தானா? இவன் எங்ஙனம் கரும்புலியாயிருந்திருக்க முடியும் ? நமது தோழர்கள் குறிப்பிடும் குழந்தைப் போராளியா இவன்?

காயங்களைப் பார்க்கும் போது எரிகாயங்களாகத் தெரிகிறது. விமானத்திலிருந்து இலங்கை இராணுவம் வீசும் குண்டுகள் என்ன என்பது குறித்து எவரும் கேட்க மாட்டார்களா? இத்தகைய எரிபொருட் குண்டுகளால் ஒட்சிசன் குறைவு அச்சூழலில் ஏற்படும் என அறிந்தேன். இதனைத் தடுத்து நிறுத்த யாருமில்லையா ? இல்லையாயின் இருக்கும் ஒரே நம்பிக்கையான புலிகளை மக்கள் நம்பத்தலைப்படுவதில் தவறேதும் உண்டா?

ஈழத்தினை ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர். சாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர் - புதுவை இரத்தினதுரை

A civilian was killed and eight, including four children, were wounded in Sri Lanka Air Force (SLAF) attack in Iraththinapuram, a suburb of Ki'linochchi town, Saturday around 12:30 p.m., Tamileelam Police said. The ICRC office, which was recently relocated from Ira'naimadu junction, is situated around 150 meters away from the bombed locality. Meanwhile, Sri Lankan defence ministry claimed that the attack was a 'precision air strike' against an LTTE target. Medical sources at Ki'linochchi hospital said an 8-month-old baby, a 9-month-old baby, and two 2-year-old children were among the wounded.

http://tamilnet.com/art.html?catid=13&artid=27042

2 comments:

Sri Rangan said...

கொழுவி,உமக்கு பிரஞ்சு,டொச்,ஆங்கிலமென மூன்று மொழிகள் தெரியுமென முன்னைய பதிவுகள் கூறுகின்றன.எனவே,இதை அம் மொழிகளில் எடுத்துவாரும்.அதாவது,இம் மொழி ஊடகங்களுக்கு எடுத்து வாரும்!!இதைப் புலிகளுக்கு அண்மைய ஊடகமான திமிழ்நெட் போட்டால் எடுபடாது.நீர் முடிந்தால் செய்யும்.அது எம் மக்களுக்குப் பிரயோசனப்படும்.என்னால் முடிந்ததை நானுஞ் செய்வேன்!தமிழில் எழுதி ஒரு மண்ணும் ஆகாதென்பது நானறிந்தவுண்மை!

ரிஷி (கடைசி பக்கம்) said...

mee too believe the same what sri rangan said.

We don't hv / not ready to use our power.