Tuesday, November 25, 2008

எடே இந்தியா டுடே or 60 துப்பாக்கியும் புலிகளும்

வாயில கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வருகிறது. வாசகர்கள் எல்லாம் வடி கட்டின முட்டாள்கள் என்று இந்தியா டுடே நினைத்துக் கொண்டிருக்கிறது போல. ஈழ களத்தில இருந்து பிரேத்திய ரிப்போட் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள் அவர்கள். அதில இராணுவ புலிகள் ஆயுத பலத்தை பற்றி ஒரு பெட்டி செய்தி போட்டிருக்கிறார்கள். பார்த்தால் அசந்து போவீர்கள்.

அடடே முன்னணி பத்திரிகையாயிற்றே இப்படியெல்லாமா சொல்வார்கள் ? அதனால் அந்த புத்தகம் 70 களின் இறுதியில் வந்த புத்தகமா என தேடினேன். இல்லை. அது போன மாதமோ அதற்கு முதல் மாதமோ வந்ததுதான்.

அவர்களின் ஆயுத விபரங்களின் படி
புலிகளிடம் தற்போது உள்ளவை 60 துப்பாக்கிகள் தான். இராணுவத்திடம் 400 துப்பாக்கிகள்தான் என்பதும் கொடுமையான செய்திதான். ஐயா இந்த கட்டுரையை களத்திலிருந்து பிரேத்தியமாக எழுதிய கனவானே ? உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு வந்திருக்கிறீர் ?

பீரங்கிகள் இராணுவத்திடம் 200. புலிகளிடம் எதுவும் இல்லையாம். ஆட்லறியெல்லாம் எதுவென்று தெரியாதோ அவருக்கு. சுத்தம் !

இதுவரை புலிகளின் ஆட்லறிகளை அழித்ததாய் சிரிலங்கன் ஆமி கூட சொன்னதில்லை. கனவு கண்டு எழுதுகிறாரோ?

இதெல்லாம் ஒரு செய்தி பத்திரிகை ? இதெல்லாம் உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தருகிறது.. ? த்தூ..

11 comments:

கொழுவி said...

http://tamilhomeland.blogspot.com/2008/11/blog-post_25.html

Anonymous said...

இதெல்லாம் பார்த்து கொதிப்பு வரக்கூடாது.

இதுதான் indiatoday

கானா பிரபா said...

பழைய பேப்பரா? ;)

யூர்கன் க்ருகியர் said...

//உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு வந்திருக்கிறீர் ?//
ஏதாவது விஜயகாந்த் பட ஷூட்டிங்கை பார்த்து எழுதி இருப்பாரோ?

Anonymous said...

தங்கள் தலைப்பில் பொருட்குற்றம் இருக்கிறது.

எடே அல்ல டே(ய்) இந்தியா டுடே

சிக்கிமுக்கி said...

வீடணப் பிரகலாத 'சோ'மாரி இந்துராம் தினமல இந்தியாடுடேயப் பதர்கள்!

Anonymous said...

ஹி! ஹி!!

பீரங்கிக்குப் பேரீச்சம்பழம். பேரீச்சம்பழத்துக்குப் பழைய பேப்பர்.

ஹைய்

Anonymous said...

மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம்தான் என நினைக்கிறேன்.ஆட்லறிகளைத்தான் துப்பாக்கி என எழுதியுள்ளார்கள்.

துப்பாக்கி = Artillery guns

பீரங்கிகள் = Tanks

பார்க்க http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&task=view&id=18994&Itemid=1&issueid=81&limit=1&limitstart=1

இப்ப கணக்கு சரியா?

ஜோசப் பால்ராஜ் said...

அந்தகருமத்த நீங்களும் படிச்சீங்களா?
நானும் ஏதோ பிரத்யோக ரிப்போர்ட்னு போட்ருக்கானேன்னு நம்பி வாங்கிட்டு ஒரு ராத்திரி முழுசா கெட்டவார்த்தையில திட்டிக்கிட்டு இருந்தேன். படிக்கிறவன் எல்லாம் பச்சப்புள்ளைங்கன்னு நினைச்சுட்டாய்ங்க போல.

தமிழ்பித்தன் said...

இந்தியாவின் நம்பர் வன் நாளிதழ்
கூ...கூ..........

Anonymous said...

களத்துக்குப் போய்வந்த இங்கிலீசில் எழுதிய ஆள் ஒழுங்காகத்தான் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மொழிபெயர்க்கும் போதுதான் கோட்டை விட்டுவிட்டார்கள். என்ன செய்வது, ஆட்லறி, டாங்கி இதெல்லாம் தமிழ்நாட்டவனுக்கு பழக்கமில்லையே.

இது தெரியாம இந்திய டுடேய வச்சி இந்தக் கும்மி அடிக்கிறீங்க.இந்தியான்னு பெயரப் பாத்தாலே ஈழத்தவர்கள் டென்சனாயிடுறீங்க. ஏதோ நல்லயிருந்தா சரிதான்.