OFAB-500 ரக க்ளஸ்டர் (Cluster) குண்டுகள் ரஸ்யத்தயாரிப்பானவை. கொத்தணிக் குண்டுகள் என தமிழில் சொல்லப் படுகின்றன. பெரும் பீப்பாய் ஒன்றினுள் நூற்றுக்கணக்கான சிறு சிறு வெடிகுண்டுகளை அடைந்து அவை வானிலிருந்து வீசப்படுகின்றன. சாதாரண குண்டுகளை விட மோசமான விளைவுககைத் தரவல்ல இக்குண்டுகளை உலக அளவில் தடை செய்வது குறித்துப் பேசப்படுகிறது.
அணுகுண்டிற்கடுத்த பேரழிவு ஆயுதமானதென்னும் பின்னணியில் அதனைத் தடைசெய்வது குறித்து நாளை புதன் கிழமை 100 க்கும் அதிகமான நாடுகள் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கூடுகின்றன.
----------------------------
கடந்த சனிக் கிழமை இந்தவகையான குண்டுகளை சிங்கள அரசு தமிழர் வாழிடங்களில் வீசியிருக்கிறது. கேட்பார் யாருமில்லை ஆடடா தம்பியென்ற நிலைப்பாட்டில் தொடரும் அவர்களின் அட்டூழியத்தை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
அன்று வீசப்பட்ட அன்றைய குண்டு வீச்சில் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுமற்றனர். கீழ் வரும் படங்கள் அகோரமானவை.
உலகத்தின் பெரும் பெரும் ஊடகக் காரரே .. இந்த மக்கள் ஐந்து நட்சத்திர Hotel இல் இல்லையென்பதற்காக கண்டு கொள்ளாதிருந்து விடுவீர்களா..? 24 மணிநேரம் கூட வேண்டாம். சிறு மணித் துளிகள்.. ?
நாங்களும் மனிசர்தான்
for more news
http://tamilnet.com/art.html?catid=79&artid=27633
6 comments:
என்ன கொடுமை இது? கேட்பாரில்லையா?
யாழ்ப்பாணத்தைப் புலிகள் பிடிப்பதற்கெடுத்த முயற்சியைத் தடுத்த இந்தியா,இலங்கை அரசு போடும் குண்டுகள் தமிழ்பேசுபவர்களுக்குள்தானே போடப்படுகிறது என்றிருக்கிறது.இதையே புலிகள் சிங்களர்கள்மீது செய்தால் நான்கூடக் கேட்டுப் வைப்பேன்-இந்தியா உடனடியாகப் புலிகள்மீது நடவடிக்கை எடுக்கும்.இதுதான் அரசியல்:-(((
கொழுவி அண்ணை இந்த மாதிரி பேரழிவுக்குண்டுகளை எல்லாம் பரிசோதித்துப் பார்க்க என்ன எங்கடை அப்பாவிப் பொதுமக்களே அவையளுக்கு கிடைச்ச ஆட்கள்?? ஏன் இப்படியான் குண்டுகளைப் போட அவர்களுக்கு வேற எந்த இடமும் கிடைக்கலையோ??
படங்களை பார்க்கவே இப்படி இருக்கிறதே, பலி கொடுத்த நெஞ்சங்கள் என்ன பாடு படுமோ......இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்போது தான் வர போகிறதோ.............................................
பனிமலர்.
இத்தகைய க்ளஸ்ரர் குண்டுகள் தொடர்பான ஒரு வீடியோ விபரணம் இது. நேரமிருந்தால் பாருங்க.. :(
http://www.valary.tv/?p=485
வானில் வெடித்து குண்டுகள் மழையாய்ப் பொழிகின்றன.
இந்தமாதிரியான படங்கள் எல்லாம் ஏன் போடுறீங்கள்?
Post a Comment