Thursday, February 08, 2007

தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்

சமருக்கெல்லாம் தாய்ச்சமர் என பல ஆய்வாளர்களாலும் நோக்கப்படும் Operation Dondu என்ற பெயரிலான யுத்தம் தமிழ்மணத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. தாக்குதல் முன்னெடுப்புக்கள் வியூக அமைப்புக்கள் அனைத்து வழி தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என இருதரப்புமே மிகக் கடுமையாக மோதி வருவதனால் தமிழ்மணமே ரத்தக் களரியாக காட்சி தருகிறது.

இந்நிலையில் யுத்தத்தை தீவிர முன்னெடுப்புடன் நடத்துபவரான திரு டோண்டு அவர்கள் எனக்கு உள்ள ஒரே தெரிவு சண்டையிடுவதுதான். அதை நான் என்னால் முடிந்த அளவு செய்து விட்டு போகிறேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் தொடர்ந்தும் யுத்தம் தமிழ்மணத்தில் நடைபெறுவதங்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

மாதம் முழுமைக்கும் செய்வதற்கு தொழில் வாய்ப்புக்கள் உள்ள போதும் அவற்றைப் பின் நகர்த்தி முழு நேரத்தையும் இணையத்தில் அடகு வைத்து முழு மூச்சுடன் திரு டோண்டு களத்தில் நிற்பதாக கள முனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத நேரத்தில் தொடுக்கப்பட்ட இப் பாரிய சமருக்கு டோண்டு அவர்களின் தவறான அரசியல் நகர்வுகளே காரணம் என இணையச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இருப்பினும் பல முனைகளில் முன்னேறும் எதிராளிகளுக்கு சளைக்காமல் பதிலடிகளை திரு டோண்டு அவர்கள் செய்து வருவதாக அவரது ஆதரவு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்ட போதும் அவரது பல ஏவுகணைத் தாக்குதல்கள் புஸ்வாணமாகி கடலில் விழுவதாகவும் நேரில்க் கண்ட பலர் தெரிவித்தனர்.

சமரில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பினரிடையேயும் பலமான வெளிச் சக்தி ஒன்று அழுத்தங்களைப் பிரயோகிக்காத வரையும் யுத்தம் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

இந்த யுத்தத்தில் அப்பாவிப் பதிவர்களின் நிலை மிகக் கவலைக் கிடமாயுள்ளது. தமிழ்மணத்தில் இடப்படும் யுத்தம் சாராத வழமையான பதிவுகள் சிதறிச் சின்னாபின்னமாக்கப் படுகின்றன. நடைபெறும் யுத்தம் தன் கோரக் கரங்களை தமிழ்மணமெங்கும் விரித்துள்ளமையால் வழமையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை.

இந் நிலை தொடருமானால் யுத்தப் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை தவிர வேறு வழியில்லை என அப்பாவி குடிமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். எண்டைக்கு சண்டை நின்று நாம் என்றைக்கு பதிவு போடுவது என ஒருவர் சலித்துக் கொண்டார்.

யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.

களத்திலிருந்து கொழுவி..

Photobucket - Video and Image Hosting


53 comments:

நாமக்கல் சிபி said...

//இந் நிலை தொடருமானால் யுத்தப் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை தவிர வேறு வழியில்லை என அப்பாவி குடிமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். எண்டைக்கு சண்டை நின்று நாம் என்றைக்கு பதிவு போடுவது என ஒருவர் சலித்துக் கொண்டார்.

யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.

களத்திலிருந்து கொழுவி//

:))

நல்ல செய்தித் தொகுப்பு!

Gurusamy Thangavel said...

அருமையான நக்கல். :-) :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) அப்படியே இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்து தமிழ்ச் செய்திகளை கேட்ட மாதிரி ஒரு உணர்வு.
\\யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.//
உண்மை உண்மை.:((

சென்ஷி said...

//இந் நிலை தொடருமானால் யுத்தப் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை தவிர வேறு வழியில்லை என அப்பாவி குடிமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். எண்டைக்கு சண்டை நின்று நாம் என்றைக்கு பதிவு போடுவது என ஒருவர் சலித்துக் கொண்டார்.

யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.

களத்திலிருந்து கொழுவி//


நல்ல செய்தித் தொகுப்பு!

ரிப்பீட்டே :)))

மலைநாடான் said...

கொழுவி!

நான் நேற்றே சொல்லிப்போட்டன். நீரும் ஒரு பெரிய ஆள்தான். இல்லையெண்டா இந்தக் கடுமையான சமருக்குள்ள, துணிஞ்சு போய் களத்தில நிண்டு, கவர் ஸ்டோரி தரமுடியுமே? நல்ல ஆய்வு.

Anonymous said...

தமிழ்மணத்திற்கு ஒருவார காலம் கட்டாய விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பினால் என்ன?

அப்பாவி வலைமகன்

சின்னக்குட்டி said...

என்னதான்..தங்களுக்குள் உக்கிரமாக சண்டையிட்டு கொண்டாலும்.. இரகசிய சந்திப்புகளிலும் கொக்ரெய்ல் விருந்துகளிலும் பாசமழை பொழிந்து அரவணைத்து கொள்கிறார்களென புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றனவாம்

Anonymous said...

கொழுவி, :-)))))))
நல்ல பேரு.

டோண்டு என்னா தான் ஆடினாலும் நம்ம மக்கா பவுன்சரா போட்டு தாக்குறானுவ. பவுன்சர்ல அடிவாங்கன கங்"கூலி"ய சாப்பல் பதவிசா கய்ட்டி உட்டா மாதிரி டோண்டுவையும் தமிழ்மண கவுன்சில்ல தீர்மாணம் போட்டு வெளிய தள்ளிடலாம் இல்லைனா எல்லார்கிட்டயும் டோண்டு மாமாவ மன்னிப்பு கேக்க சொல்லுங்க அம்மான் ;-)

முடுகீ
அமுக
அவுசுதிரலேசிய கிளை
பால்ம் அய்லேண்டு
குயின்ஸ்லாந்து

கொழுவி said...

இது ஒரு நகைச்சுவைப் பதிவே தவிர என் பங்குக்கு இங்கும் ஒரு களமுனையைத் திறந்து என் HIT COUNTER ஐ ஏற வைப்பதற்காக அல்ல. (இப்பவே அது தன் பாட்டுக்கு ஏறுது. எல்லாம் டோண்டு என்ற பெயருக்குள்ள மகிமையே அன்றி வேறில்லை).

கொழுவி said...

இதற்கிடையே அப்பாவி வலைப் பதிவாஇகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வரும் முடிவற்ற இந்த யுத்தத்திற்கு எதிராக 3வது சக்தியொன்று செய்யாதே அல்லது செத்துமடி (Dont do or die) என்ற பெயரில் முறியடிப்பு எதிர்ச் சமர் ஒன்றில் ஈடுபடுவதற்கான ஆயத்த முன்னெடுப்புக்களில் இறங்கியிருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத தகவல் ஒன்று கூறுகிறது.

அமலசிங் said...

சாதீயத்தை புத்தகம் போட்டு சட்டமாக்க தெனாவெட்டு உள்ளவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே. அவர்கள் இந்த யுத்தத்தின் முடிவில் காணாமல் போய்விடுவார்கள்.

ஜோ/Joe said...

அருமையான நகைச்சுவை!

Anonymous said...

இதை பாத்திங்களா! இப்ப என்ன சொல்றீங்க????
http://kazugu.blogspot.com/2007/02/blog-post_08.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தருணத்திற்கேற்ற அருமையான நகைச்சுவை!
போர் வர்ணனை அபாரம்.
பாராட்டுக்கள்!
யோகன் பாரிஸ்

பினாத்தல் சுரேஷ் said...

கொழுவி..

கலக்கறீங்க! இது மட்டுமல்ல, வல்லவன் வீராச்சாமி விமர்சனங்கள், நேற்று நீங்கள் எழுதியது, இன்று தாய்ச்சமர்:-) உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன்:-)))

theevu said...

தீவு ,
கள முன்னரங்கினுள் நிற்க முடியாமைக்கு காரணம் ஒரு தந்திரோபாய பின் நகர்வே என்பதை தெரிவுத்துக்கொள்கிறேன்.

Anonymous said...

டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

மனித‌ன்.

Anonymous said...

தவறுதலான வெடி விபத்திலேயே முரளிமனோகர் கொல்லப் பட்டார். இதனை சிலர் தாம் தான் கொலை செய்வதாய் பொய் சொல்கின்றனர்.

கொழுவி said...

//டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள். //

குறிப்பிட்ட மனச்சாட்சியிடம் பேசுவதற்கான முயற்சிகளில் நமது இன்னொரு செய்தியாளர் முயற்சிக்கிறார். வாய்ப்புக்கள் கிடைக்கும் போது கண்டிப்பாக மனச்சாட்சியிடம் பேசி அது குறித்த செய்திகளையும் நடு நிலையுடன் தருவோம்.

நியோ / neo said...

கொழுவி!

அருமையான நையாண்டிப் பதிவு. தங்கள் மன அரிப்பை நக்கல் என்ற பெயரில் கக்கல் செய்துவரும் பேர்வழிகள் (வாசகம் நன்றி : ரோசா வசந்த் வாத்தி்யார்!) - இதைப் பாராயணம் செய்து நக்கல் நையாண்டி எப்படி இருக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ள்ள வேண்டும் :)

>> இதற்கிடையே அப்பாவி வலைப் பதிவாஇகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வரும் முடிவற்ற இந்த யுத்தத்திற்கு எதிராக 3வது சக்தியொன்று செய்யாதே அல்லது செத்துமடி (Dont do or die) என்ற பெயரில் முறியடிப்பு எதிர்ச் சமர் ஒன்றில் ஈடுபடுவதற்கான ஆயத்த முன்னெடுப்புக்களில் இறங்கியிருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத தகவல் ஒன்று கூறுகிறது. >>

:))))))

Anonymous said...

முரளி மனோகர் என்ற ஒரு ராணுவ வீரன் தான் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளான். இது ஒன்றும் பெரிய இழப்பல்ல. இன்னும் பல ராணுவ வீரர்கள் தங்கள் மானத்தையும் ரோசத்தையும் துச்சமென மதித்து ஆங்காங்கே களத்தில் நிற்கிறார்கள். சண்டையை யார் ஆரம்பிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். மோதித் தான் பார்ப்போமே

கொழுவி said...

வாழ்வில் ஒரு தடவையாவது என் வலைப்பதிவிற்கு ஒரே நாளில் ஆகக் குறைந்தது 50 நபராவது வரும் அந்த பொன்னான நாளை காண மாட்டேனா என ஏங்கியிருக்கிறேன். தவித்திருக்கிறேன். இன்று 400 நெருங்கும் நபர்கள் இத் தளத்திற்கு வந்துள்ளமையானது ஒரு சொல்லுக்கு இத்தனை வீரியமா என்று ஆச்சரியப் பட வைத்துள்ளது.

400 தொட உதவிய அனைத்து நண்பர்களுக்கு நன்றி ஐயா நன்றி

ஆனந்தக் கண்ணீர் பொல பொல என பொழிய கலங்கிய கண்களுடன்
Still களத்திலிருந்து கொழுவி

enRenRum-anbudan.BALA said...

கொழுவி,

One of the VERY BEST satirical postings, I have read :)))

kalakkal !

theevu said...

//இன்று 400 நெருங்கும் நபர்கள் இத் தளத்திற்கு வந்துள்ளமையானது ஒரு சொல்லுக்கு இத்தனை வீரியமா என்று ஆச்சரியப் பட வைத்துள்ளது. //
அப்படியே கூகிளாண்டவரின் விளம்பரத்தையும் போட்டீர்களானால் தொழிலதிபர் ஆகிவிடலாம்:)

dondu(#11168674346665545885) said...

Lieber Kozuvi,

Es is lange her, daß wir uns unterhalten haben. Wie geht es Ihnen und Ihrer Familie?

Mit freundlichen Grüßen,
Dondu N.Raghavan

Anonymous said...

மருத்துவ உதவிகள் தேவையா?

Anonymous said...

இதுவரை நமக்கு ஏதும் பிரயோசனமான சமாச்சாரம் கிடைக்கலையே!

போர்க்களத்திலிருந்து
வட்டமிடும் வல்லூறு

Anonymous said...

யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வரும் அப்பாவி வலைப் பதிவர்களை அரவணைக்க அன்புடன் காத்திருக்கிறோம்.

Anonymous said...

//யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வரும் அப்பாவி வலைப் பதிவர்களை அரவணைக்க அன்புடன் காத்திருக்கிறோம்//

அடப்பாவிகளா!

Unknown said...

/இந்த யுத்தத்தில் அப்பாவிப் பதிவர்களின் நிலை மிகக் கவலைக் கிடமாயுள்ளது. தமிழ்மணத்தில் இடப்படும் யுத்தம் சாராத வழமையான பதிவுகள் சிதறிச் சின்னாபின்னமாக்கப் படுகின்றன. நடைபெறும் யுத்தம் தன் கோரக் கரங்களை தமிழ்மணமெங்கும் விரித்துள்ளமையால் வழமையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை./

:))))
நல்ல நகைச்சுவை கொழுவி!!!

Anonymous said...

Still களத்திலிருந்து கொழுவி...
அப்படியேயிருங்கள் ...
களத்திலிருந்தது Still கொழுவி
ஆகிவிடாதீர்கள் ;-)

VSK said...

சற்றுமுன் வந்த தகவல்!

த.ம. செஞ்சிலுவைச் சங்கத்தின் போர் நிறுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லையென உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று வந்துள்ளதாக "மயிலை செய்தி நிறுவனம்" ஒன்று தெரிவிக்கிறது!

வலைப்பதிவு அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று பேன்கூட்டோரக் கரை ஒதுங்கியாதாகவும் இத்தகவல் தெரிவிக்கிறது!

:))

Anonymous said...

//யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.//

இந்திய அரசு இதற்காவது தனது அமைதிப் படையை அனுப்புமா?
பல அப்பாவிப் பதிவர்கள் கொல்லப்படுவதைக் கட்டுப்படுத்துமா?

கொழுவி said...

//வலைப்பதிவு அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று பேன்கூட்டோரக் கரை ஒதுங்கியாதாகவும் இத்தகவல் தெரிவிக்கிறது! //

கண்களில் நீர் வரச் சிரித்தேன்.

Anonymous said...

//கண்களில் நீர் வரச் சிரித்தேன். //

எத்தனை டி.எம்.சி வந்தது?

Anonymous said...

//இந்திய அரசு இதற்காவது தனது அமைதிப் படையை அனுப்புமா?
பல அப்பாவிப் பதிவர்கள் கொல்லப்படுவதைக் கட்டுப்படுத்துமா?
//

இந்திய அரசு இவ்விடயத்தில் தலையிடுவதாக இல்லையாம்!

VSK said...

இறுக்கமான ஒரு சூழ்நிலையைத் தங்களது சிரிப்பு மிக்க பதிவால்[எ.பி. இல்லை!!] சற்றே இளக வைத்து, என் போன்ற ஒரு சில அகதிகளுக்கும் பின்னூட்டமிட வாய்ப்பளித்த உங்களுக்கல்லவா நன்றி சொல்ல வேண்டும், கொழுவியாரே!
:))

நாமக்கல் சிபி said...

//[எ.பி. இல்லை!!] //

எ.பி என்றால் என்ன?

Anonymous said...

அம்பி யுத்தமுன்னு பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாண்டா!நமக்கு நல்லதில்லையோனா.ஏதோ மத்தவாளை அப்படி இப்படீன்னு குத்தமுங் கொறையுஞ் சொல்லிட்டு நீயே வசமா மாட்டிண்டுட்டே!அதென்ன பேரோ கர்மம் நல்ல நேரத்திலே இதான் சாக்குன்னுப் பேரெ மாத்திண்டு சமத்தா யார்வேண்ணாலும் எந்த பேர்ல வேணும்னாலும் திவ்யமா போட்டுண்டு போங்கோன்னு சொல்லிடு.இந்த அநாவசிய அட்வைசு வேலையெல்லாம் வேணாம்.எவன் கேக்குறான்,ஆத்துலேயே கேக்கமாட்டேங்குறா.லோகத்துலே அவாவா நன்னா விசயம் தெரிஞ்சுண்டிருக்கா.முன்னெமாதிரி நாம சொல்ற்தெல்லாம் எடுபடாது.நோக்கு ஏன் மூக்குக்குமேலே கோபம் வற்ரது?ஏதாவது கண்டதை சாப்பிடரயா?அதெல்லாம் நம்ம தேகத்துக்கு ஒத்துக்குமோ.நன்னா யோசிச்சு நடந்துக்கோ.

Anonymous said...

சண்டைப் படங்கள் வந்திட்டனவா..

VSK said...

//எ.பி என்றால் என்ன? //

சி'ற'ப்பு மிக்க என்பதற்கு பதிலாய், சி'ரி'ப்பு மிக்க என்று எழுதியது [எ]ழுத்துப் [பி]ழை இல்லை எனச் சொன்னேன், சிபியாரே!

:))

Anonymous said...

முரளி மனோகர் என்ற ஒரு ராணுவ வீரன் தான் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளான். இது ஒன்றும் பெரிய இழப்பல்ல. இன்னும் பல ராணுவ வீரர்கள் தங்கள் மானத்தையும் ரோசத்தையும் துச்சமென மதித்து ஆங்காங்கே களத்தில் நிற்கிறார்கள்.

சூப்பரு

Anonymous said...

சண்டைப் படங்கள் வந்திட்டனவா..

வீடியோவே வருகிறதாம்

Anonymous said...

Supperrr.... ராசா ராசா

புதுசா ஒரு newsம் இல்லயோ ??

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது தான் நையாண்டி ! கலக்கலா எழுதுறீங்க !

கொழுவி said...

கருத்திட்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி. பதிவிளை விட சில பின்னூட்டங்கள் மிகுந்த நகைச்சுவையாய் இருந்தன. களத்தில் மிகத் தீவிரமாய் போராடி வரும் நெருக்கடி நிலையிலும் திரு டோண்டு அவர்களும் வந்து ஜெர்மன் மொழியிலும் அளவளாவி விட்டுச் சென்றிருக்கிறார். ( அது எனக்கு முழுமையாகப் புரியவில்லையாயினும் அதனைத் தமிழில் மொழி பெயர்த்து சொல்லும் படி அவரிடம் கேட்கப் பயமாயுள்ளது. பில் வீடு தேடி வந்தால் என்ன செய்வது..?)

தவிர மொத்தமாய் 22 பின்னூட்டங்கள் வெளியிடப் படவில்லை. அவற்றை வெளியிட வேறு வலைப் பூக்கள் உள்ளன. நகைச் சுவையான ஒரு பதிவிற்கு அத்தனை கடுமையான சீரியசான பின்னூட்டங்கள் பதிவின் நோக்கத்தைக் குழப்பும். அது மட்டுமல்ல.. இந்தப் பிரச்சனையில் ஆழமாகச் செல்லும் நோக்கமும் இல்லை.

வரும் நாட்கள் சனி ஞாயிறு தினங்களாகையால் அனைத்துலகங்களிலும் அலுவலக விடுமுறையென்பதால் இந்த யுத்தம் மெதுவாகத் தணியும் என்கிறார்கள். ஆகவே இதனை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி யுத்தத்தை சம்பந்தப் பட்ட தரப்புக்கள் ஆகக் குறைந்தது அப்பாவிப் பதிவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டாவது நிறுத்த வேண்டும்.

நன்றி
களத்திலிருந்து திரும்பும்
கொழுவி

பாரதி தம்பி said...

நல்ல பகிடி...தமிழ்மணத்துக்கு ஒரு மாதத்திற்கு விடுமுறை விடலாம் என்ற கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

dondu(#11168674346665545885) said...

அன்பின் கொழுவி,
Lieber Kozuvi,

நாமப் பேசி ரொம்ப நாளாச்சு. நீங்களும் உங்கள் குடும்பமும் எப்படியிருக்கீங்க?
Es is lange her, daß wir uns unterhalten haben. Wie geht es Ihnen und Ihrer Familie?

நட்புடன் கூடிய வாழ்த்துக்களுடன்,
Mit freundlichen Grüßen,

டோண்டு ராகவன்
Dondu N.Raghavan

Anonymous said...

சமர்களத்திலிருந்து, சரித்திரமெனத் திரும்பிய எங்கள் தல கொழுவி

வாழ்க வாழ்க

எங்க அந்த ரோஜா மாலை

பொன்ஸ்~~Poorna said...

:))))

பெனாத்தலாரை இப்போது வழிமொழிந்தாலும், எப்போதோ உங்கள் பதிவைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கிவிட்டேன் :)

Anonymous said...

டோண்டு சார் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறாரே.. இப்போ அப்பாவிப் பதிவர்கள் மகிழ்ச்சியடைந்து விட்டார்களாமா..? அவர்கள் என்ன கருதுகிறார்களாம்..?

செல்லி said...

நல்ல பாட்டு கேட்கக் கேட்க நல்லயிருக்க.
செய்ர்ஹிகளும் நன்றாகத் தொகுக்கப் பட்டிருக்கு.
பகிர்ந்தமைக்கு நன்றி

Subbiah Veerappan said...

தனிமடல்
--------------------------------------

"அசத்திய பதிவுகள்" என்னும் தலைப்பில் இன்று பதிந்த பதிவில்
உங்கள் பதிவு ஒன்றையும் குறிப்ப்ட்டுள்ளேன்.
அதைப் பார்க்கவும் மற்றும் குறிப்பிட்டுள்ள பதிவுகளைப்
படித்து மகிழவும் வேண்டுகிறேன்

சுட்டி இங்கே உள்ளது:
அசத்திய பதிவுகள் - பகுதி 2 :

அன்புடன்
SP.VR.சுப்பையா